Sunday, November 7, 2010

சூ மந்திரக்காளி: 2

"ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா"ன்னு கவிஞர் தோராயமா எதுகை மோனைக்காக எழுதி  வச்சுட்டாரு.

உண்மையில பார்க்க்கப்போனா மூளையில உள்ள  நியூரான்ஸை மணலளவு பெருசாக்கினாலும் அடி முட்டாள் தலைல உள்ள நியூரான்ஸ் கூட ஒரு லோடுக்காகுமாம்.

அப்ப அறிவாளிங்க? ( நாம இந்த கேட்டகிரில இல்லிங்கண்ணா)

என்னடா ஒரு பக்கம் கௌதம புத்தர் ரேஞ்சுல  நீயே உன் ஒளியாய் இருனு  உபதேசிச்சிட்டிருந்த பார்ட்டி திடீர்னு ராம நாராயணன் சினிமா ரேஞ்சுக்கு பீலா விட ஆரம்பிச்சுருச்சுன்னு நினைச்சிருப்பிங்க.

ஆனா என்ன பண்றதுங்கண்ணா ஒரு தெலுங்கு  கவிதையில  நானே எழுதின மாதிரி

"வாழ்க்கை அத்யாயங்களில் தர்கம் தரிசனம் தந்தால்
என் அகந்தை  குளிர்கிறது.

அது தகர்ந்தாலோ என் சிந்தை குளிர்கிறது"

ஓகே மொக்கை போதும் மேட்டருக்கு வந்துர்ரன்.

கடந்த பதிவுல சாக்தேய சாதனைங்கற கேட்டகிரில நான் சொன்னதெல்லாம் ஏதோ ஒரு மந்திரத்தை ஜபிச்சதுதான்.

ஆனா அதுக்கே சில பல அற்புதங்கள் நடந்ததா கடைசி பத்தில கோடி காட்டியிருந்தேன்.

1.நம்ம மந்திர சக்திக்கு (?) வழில உள்ள மரத்து கிளிங்கல்லாம் வராம்பாரு வராம்பாருன்னு தங்களுக்குள்ள கம்யூனிக்கேட் பண்ணிக்கிட்டது,

- இப்ப சொல்லுமா? பார்க்க வரலாமானு சிலர் கேப்பிக. என்ன பண்றது தலை.. என் லைஃபே ஒரு டி.வி. ப்ரோகிராம் மாதிரி.ரிமோட் மட்டும் யார் கையிலயோ? படக்கு படக்குனு சானல் எகிறும்.  வந்ததை பதிவு தான் பண்ணி வைக்கமுடியுமே அதை கூட   நீங்க பார்க்க முடியாது. மேலும்  நினைச்சப்பல்லாம் சானல் மாத்தவும் முடியாது.

ஒவ்வொரு லைன் அப்பும் காதலியின் 1,116 ஆவது முத்தம் மாதிரி உறைக்காம போயிருதா நானும் கண்டுக்கிடாம விட்டுர்ரன். அந்த உணர்வு மையமே மரத்துப்போவுது. இவ்ள ஏன் அதை ரிகலெக்ட் பண்ணி சொல்லலாம்னா கூட சூடு ஆறிப்போவுது.

நூஸ்ஃபியர்ங்கற வார்த்தைய கேள்விப்படிருப்பிங்கனு நினைக்கிறேன்.  பஞ்ச பூதங்களால ஏற்படற சூழலை அட்மாஸ்ஃபியர்ங்கறோம். அது மாதிரி மனிதனோட எண்ணை அலைகளால் ஏற்படும் சூழலுக்கான வார்த்தை இது. இது மாறும்போது அகந்தை நிறைந்த மனிதர்களை வெறுக்கும் அ  நியூட்ரலா இருந்துரக்கூடிய ஜீவராசிகள் குஜிலி ஆகி குதூகலிச்சு குரல் கொடுக்கறதெல்லாம் சகஜம் பாஸ்.
நான் சொல்ற அகந்தைங்கறது ஜஸ்ட் ஈகோ மட்டுமில்லை இந்த படைப்புலருந்து தன்னை வேறா நினைக்கிற "சுயம்" உட்பட. இது ரெண்டும் எகிறிப்போனா அட்லீஸ்ட் சைடு கட்டினாலே அற்புதங்கள் நடக்குது வாத்யாரே.

அஸ்கு புஸ்கு ஆஃப்டர் ஆல் ஒரு மந்திரம் நூஸ்ஃபியரை மாத்திருமானு கேப்பிக.

மந்திரத்தோட சக்தி ஒரு பக்கம்னா நம்ம ஜீவியசரித்திரம் ஒரு பக்கம் ஒர்க் அவுட் பண்ணிருச்சுங்கண்ணா.

மந்திரத்துல கூட அந்த அளவுக்கு சரக்கு இல்லிங்கண்ணா மந்திரங்களுக்கு முந்தி ஆம்,ஹ்ரீம்,க்ரோம் அது இதுன்னு வருதே அதுகளை பீஜாக்ஷரம்ங்கறாய்ங்க. இதை பத்தி சுருக்கமா பார்ப்போம்.

அன்னையின்  சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவங்கறது இதன் அர்த்தம்

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்யுது.



எழுத்தோடு"ம்" சேரும்போது என்னாத்த அற்புதம் நடந்துரும்னு கேப்பிக

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவுங்கறது படிக்க அசூயையா இருந்தாலும் உண்மைதானே

ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்குங்கறாய்ங்க. வாய் "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுது.இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில்  நடக்குது. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடையுது.

அங்கே  பாம்பு வ‌டிவ‌த்துல  உற‌க்க‌ நிலையில் உள்ள‌தா யோக‌ நூல்க‌ள் சொல்ற  குண்டலி எ  யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர  குண்டலி மேல் நோக்கி  நகர ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்படுது

குண்ட‌லி  மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்னு கேப்பிக? ஏற்கெனவே ஒரு தாட்டி எழுதின மேட்டர்தான். இருந்தாலும் புது பார்ட்டிங்களுக்காக இந்த பார்ட்டை பதிவோட இறுதில தந்திருக்கேன்.

அது சரி குண்டலி யோகால்லாம் பல பிறவிகளுக்கு தொடரக்கூடிய ப்ராசஸாச்சே. அதெப்படி சில மாசங்கள்ளயே நூஸ்ஃபியர் எட்செட்ராவை எல்லாம் க்ரியேட் பண்ற ரேஞ்சுக்கு போயிருச்சுனு கேப்பிக.

மேற்சொன்ன‌ கிடு கிடு முன்னேற்ற‌த்துக்கு பெரிய்ய ஃப்ளாஷ் பேக் இருக்குங்கண்ணா.

பால்யத்துல சுக்கிர தசை வேற மாட்டிக்கிச்சா செம பேஜாராயிருச்சுப்பா .பார்ட்டி துரத்துன துரத்துல ஜெய் ஹனுமான் சீரியல் தனமா சாதனை ஆரம்பம். கொஞ்சம் நின்னு நிதானிச்சு பார்த்தா நம்ம ஆஞ்சனேயருக்கு ஒரு வீக் பாயிண்ட் இருக்கிறது தெரிய வந்தது. அதாவது ராம நாமம் எங்கே சொல்லப்பட்டா அங்கே இவர் ஆஜராம். ஸோ ராம நாம ஜெபம் ஸ்டார்ட். அதுவும் ஆஞ்சனேயர் ஸ்டைல்ல " ராம்" ( இதுவே நாமம் இதுவே பீஜம்னு டூ இன் ஒன்னா ஒர்க் அவுட் ஆயிருச்சு) + கிழவாடிங்க ஸ்டைல்ல "ராமா "

ராமாங்கற வார்த்தைல ஒரு சூட்சுமம். இதிலான முதலெழுத்து (ரா) ஹரா என்ற சிவன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. இதிலான இரண்டாம் எழுத்து (மா) உமா என்ற அம்மன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. ( கருத்து உபயம் : ராம கிருஷ்ண பரமஹம்சர்)


இப்படியாக மேற்படி கிடு கிடு முன்னேற்றத்துக்கு  துணை நின்னது  ராம‌ நாம‌ம் தான்.( 1986)

முக்திக்கான ப்ராசஸ்:
ஒரு பிறவி முழுக்க பஞ்சாக்ஷரி ஜபிச்சா தான் அடுத்த ஜன்மத்துல ராம நாமம் ஜெபிக்க தகுதி ஏற்படும். அந்த ஜன்மம் முழுக்க ராம நாமம் ஜெபிச்சா அடுத்த ஜன்மத்துல ஆத்தாளை அணுகற ஆர்வம் ஏற்படுமாம்.

டபுள் ப்ரமோஷன்:
நம்ம ஜாதகத்துல சூரிய,சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகளில் இருப்பதோடு பரிவர்த்தனமும் பெற்றதால் இது சிவசக்தியோகம் என்று சில காலம் பஞ்சாக்ஷரி ஜபித்ததுண்டு. அது ராமா என்று ஜபிக்கும் தகுதி தர ராமா ராமா என்ற என் ஜபம் சிவ சக்திகளை மனம் இளக செய்ய 3 ஜன்மங்களுக்கான ப்ராசஸ் 13 வருடங்களில் முடிந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனின் ஹ்ரீங்கார பீஜத்தை ஜெபிக்கும் அதிர்ஷ்டம் ஏற்பட்டது. அதுவும் ப்ரணவம், வித்யா பீஜம், லட்சுமி பீஜம் ,சூரிய பீஜம்/ ஹரி பீஜம், மற்றும் காளி பீஜங்களுடன் ஜெபிக்கவே அது எக்குத்தப்பாக ஒர்க் அவுட் ஆகி ஆத்தா ஆவாஹனம் ஆகி , அந்த பவரை சமாளிக்க முடியாம பாடி காட்பாடி ஆகி ஷீரடி சாய்பாபா கணக்காய் 7 வருடங்களுக்கு பிச்சை எடுக்கவே வைத்துவிட்டது. அதற்கு பின் ப்ளாக் அண்ட் வைட் படமெல்லாம் ஈஸ்ட்மென் கலராகி இப்போ செம கலக்கு கலக்குது.

பதிவின் இடையில் சொன்ன படி குண்டலி விழித்தல் மேலெழுதல் இத்யாதி நடக்கறச்ச ஏற்பட கூடிய மாற்றங்கள்:

இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/

குண்டலி மூலாதாரத்தில் விழிப்படைந்தால்:

சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.

குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும். பந்தாடும்.
அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.


ச‌ஹ‌ஸ்ரார‌ம்:
இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.


(கடைசி ஐட்டம்  மட்டும்  இன்னும் அனுபவமாகலிங்கண்ணா .  குண்டலி மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், விசுத்தி எல்லாம் தாண்டி ஆக்னா சக்கரத்துல உட்கார்ந்து உட்கார்ந்த இடத்துல கண்டமேனிக்கு காரியம் நடந்துக்கிட்டிருக்கு. இடையில் தான் பழிக்கு பழி - பைசா பொறுக்கறதுனு கொஞ்சம் பின்னடைவு. அதையும் இன்னொரு ரவுண்ட்ல பிக் அப் பண்ணிருவம்லே)

(தொடரும்)