Sunday, November 14, 2010

"ஏக் மார், தோ துக்டா" பதிவுக்கு எதிர்வினை

சுகுமார்ஜி அவர்களே,
முன்னமொருதரம் உ.வ பட்டு நீ..............ளமான கமெண்ட் போட முயன்று வில்லங்கமாகி அது காத்தா போயிருச்சு. அதனால உசாரய்யா உசாருன்னு தனிப்பதிவே ரெடி பண்றேன். உங்க "ஏக் மார், தோ துக்டா" பதிவுக்கு எதிர்வினையா.

உங்க கருத்துக்களுக்கு எதிரான என்  கருத்துக்கள் நம்மிடையிலான நட்பை பாதித்துவிடும் என்று எண்ணுமத்தனை முட்டாள் நானாய் இருந்தாலும் நீங்க அப்படியில்லை தானே.

//ஆத்திகம், நாத்திகமான பெரியாரோடு சம்மந்தமான வார்த்தைகள் வேண்டாம்... //
ஆன்மீகத்துல கடவுள் எவ்ள முக்கியமோ பெரியாரும் அவ்ளோ முக்கியம்னு நான் நினைக்கிறேன். கவுண்டர் பார்ட்டுனு சனங்க நினைக்கலாம். ஆனால் நான் பெரியாரையே ஒரு அவதாரமாதான் நினைக்கிறேன்.  நீங்க சொல்ற பாய்யிண்டையெல்லாம் சனம் ஃபாலோ பண்ணி ஆன்மீகத்துல உச்சிக்கு போயிட்டா அங்கன பெரியாரை பார்க்கலாங்கறது என் கருத்து

//இறைவனை நம்ப மறுப்பவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை...  “ஏதோ ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்திலும், நம்முள்ளும் இருக்கிறது//

பாஸ்! ஓஷோ ஒரு பாய்ண்ட் சொல்லியிருக்காரு. நாம பேசிக்கற சக்தி/ குண்டலி/ சக்கரங்கள் எல்லாம் கிடையவே கிடையாதாம் சாதனை காரணமா உருவாகுதாம். நீங்க எல்லாரையும் ஒரு பேட்டையில சேர்க்க ட்ரை பண்றிங்க. (எனக்கும் இந்த நப்பாசை உண்டு)

ஆனா சனத்துல பல ரகம் உண்டு. சிலர் உடலளவுல வாழ்ந்து முடிச்சுர்ராய்ங்க, சிலர் மன அளவுலயே அல்லாடி முடிஞ்சுர்ராய்ங்க ,சிலர் புத்து அளவுலயே நோண்டி நுங்கெடுத்து கழிஞ்சுர்ராய்ங்க. சக்தி இருக்குதுங்கறதை அவன் உணராதவரை இல்லேனு தான் அர்த்தம்.

//நிருபிக்கபட்டால் ஏற்றுக்கொள்ள தயார் என்பதெல்லாம் வேடிக்கைத்தனம். அதுவோ, இதுவோ மனிதனால் ஏற்படுத்திக்கொண்ட கணக்குகளில் அடங்குவதில்லை.//

இங்க நாத்திகவாதி கழண்டுக்கறான்..தாளி பல ஆயிரக்கணக்கான கோடி ரூ சொத்துக்களை நிர்வகிக்கிற மடாதிபதிங்கல்லாம் ஒன்னு சேர்ந்து நிரூபிக்கலாமில்லயா ( அவிகளுக்குத்தான் கிழவிகளை தடவவும், வாடகை கொலையாளிகளை அமர்த்தவுமே நேரம் போதலயே


//ஆனால் ஆசாமியான தன்னை சாமி என்று சொல்லுபவனை, ஏமாற்றுபவனை கழுவிலேற்றலாம்.//

என்ன பாஸ் இந்த பிக்காலிகளுக்காக ஒரு மரத்தை வெட்டி , சீவி,எண்ணெய் பூசு கலீஜு பண்ணிக்கினு சனம் இவிகளை சுத்தமா கழட்டி விட்டா போதும் எல்லாரும் பை.ஆஸ்பத்திரில வந்து சேர்ந்துருவாய்ங்க.

//அந்த சக்தியை நோக்கிய (யா இல்லை) பாதையில் இரண்டு வழிகள்.
ஒன்று வழிபாடு,
இரண்டு தன் வழிபாடு. //

ஓஷோவின் மறைந்திருக்கும் மர்மங்கள் படிச்சுபாருங்க. விக்கிரக ஆராதனைய பத்தி கொளுத்தி போடறாரு .அப்படியே தீபாவளிதான். அதை வச்சு பார்த்தா ஒரே வழிபாடுதான் .. தன் வழிபாடு


//அது கோவில், குளம், சடங்கு, மந்திரம், யாகம், நம்பிக்கை...//

// இது தியானம்... //

Ref:மறைந்திருக்கும் மர்மங்கள்

//எனக்குத்தெரிந்தவரையில் இரண்டையுமே வழிமொழிந்தவர்கள் சித்தர்கள்தான். உனக்கு எது முடியுமோ அது...//

ஓஷோ இன்னா சொல்றாருன்னா ( பல்லை கடிக்காதிங்க பாஸ்! சித்தூர்ல கேட்குது) உன்னால எது முடியலையோ அதான் உன் பாதை - ரிவர்ஸ் எஃபெக்ட்

//சடங்குகளின் உண்மை நிலை... தளர்ந்திருப்பதால் முதலானது இப்பொழுது கேலிக்குரியதாக மாறுகிறது.//

காதலியின் அழகை காதலன் கண் கொண்டு பார்க்கனும். இறைவனின் மகிமையை பக்தனின் மனம் கொண்டு பார்க்கனும். பக்தி கூட காதல் மாதிரிதான். நாம என்ன பை.தனம் பண்றோங்கறது முக்கியமில்லை. நாம எந்த பா(B)வத்தோட செய்றோங்கறதுதான் முக்கியம்.


//சித்தர் தியானமோ நிரூபணம் வேண்டுவதால் ஏற்றுக்கொள்ள ஆர்வமில்லை.//

இப்போ ஈஷா யோகானு கூட்டம் அம்முதே நிரூபணம் இல்லாமயா ? தலை சனம் அல்ப சந்தோஷிங்க. ஒரு சிப்பில கடல் நீரை முகர்ந்து இதாண்டா கடல்னா நம்பிருவாய்ங்க. அதை மொண்டுதர்ர தேஜஸ் கூட இன்னைக்கிருக்கிற காட் மென்ஸுக்கு இல்லை அதான் பிரச்சினை

//இரண்டிலும் விருப்பமுள்ளவருக்கோ, விளக்கம் தர ஆசானில்லை. கடல் நீரில் இனிப்பைத் தேடுவதாக இருக்கிறது. சந்தர்ப்பவாதிகள் மக்களை ஏமாற்றி, மூளையையும், கற்பையும் சுரண்டிவிடுகிறார்கள். //

கத்துக்க தேவை ஆசானில்லை.கத்துக்கனுங்கற வெறி. அதுதான் ஆசானை லபக்கிக்கிட்டு வருது

//மேயிற மாட்டை, நக்குற மாடு கெடுத்ததாக ஒரு சொலவடை உண்டு... அது போல, பக்தியிலும், தியானத்திலும் இருப்பவனை மறுதலிப்பவன் விடுவதே இல்லை.//

இங்கே நான் முரண்படறேன். எந்த நாத்திகனுக்கு தன் நாத்திகம் மேல சந்தேகம் இருக்கோ அவன் தான் இந்த வேலைய செய்வான்.

எந்த ஆத்திகனுக்கு  தன் ஆத்திகம் மேல சந்தேகம் இருக்கோ அவன் தான் நாத்திகவாதியால டிஸ்டர்ப் ஆவான்

//தன் சகதியை எதிராளிக்கும் பூசி மகிழும் சந்தோஷம்.//

இதை ரெண்டு தரப்புக்கும் சொல்லுங்க. பூசி மகிழும் என்பதை விட தன் சகதியை தானே முகர்ந்து பார்க்கும்னு சொல்லலாம்

//வழிபாடுகளை பொறுத்தவரை... வழிகாட்டி தேவையில்லை.//

என் அனுபவப்படி எதுக்குமே தேவையில்லை பாஸ்.. எல்லாத்துக்கும் வழிகாட்டி இயற்கை. இயற்கை எல்லா சனத்தையும் தன்ல ஐக்கியப்படுத்திக்கத்தான் பார்க்குது. என்ன சனம் கொஞ்சம் லேட். லேட் (அமரர்) ஆன பிற்பாடுதான் ஐக்கியமாவேனு லொள்ளு பண்றாய்ங்க

//உனக்கு எந்த தெய்வமோ அதே... அது ஆசியாவின் உயர்ந்த கோபுர வழியிலிருந்தாலும் சரி, இல்லை மொட்டை கோபுர வழியிலிருந்தாலும் சரி. அது முதன்மையான நம்பிக்கையின் அடிப்படையானது.//

இன்னா பாஸ்! கரண்ட் உண்மைன்னா நம்பிக்கையில்லாம ப்ளக் பாய்ண்ட்ல கை வச்சா கூட ஷாக் அடிக்கனும்ல


முறையான பிரணாயாமம்... இட, வல சுவாச வழியே காற்றை சுவாசித்தல்... இரண்டிற்குமிடையே ஒரு கணம் நிறுத்துதல்... இந்த நிறுத்தல் காற்றை சூடாக்கி, மூலாதாரம் நோக்கி நகர்ந்து குண்டலியை உசுப்பேற்றும்...

" நான் என்ன நினைக்கிறேன்னா நீங்க சொல்ற முறையான பிராணயாமம் தானாவே அமையறதுதான் பெஸ்ட் சாய்ஸ்னு நினைக்கிறேன்.

மழைக்காக யாகம் பண்றாய்ங்களே அதனோட கான்செப்ட் என்ன தெரியுமா?  மழை வர்ரதுக்கு முந்தி இயற்கையில ஏற்படக்கூடிய காட்சிகள் ( கார் மேகம் - யாகப்புகை) த்வனிகளை( சத்தங்கள் - அதே மூடிலான மந்திரங்கள்)  ஏற்படுத்தின மழை வந்துரும்.

பிராணயாமம் மேட்டர்லயும் இதே தலைகீழ்புத்தி வேலை செய்யுதோனு சந்தேகம்.
பிராணயாமம்ங்கறது பை ப்ராடக்ட். அது ரா மெட்டீரியலில்லியோனு சம்சயம்.

//அப்பொ... வழிபாடு பண்ணா இதெல்லாம் நடக்காதா?
நடக்கும்... அமெரிக்காவிற்கு விமானத்தில் போவதற்கும், கப்பலில் போவதற்குமான வித்தியாசம்தான்.//

இல்லை பாஸ்! பல கேஸ்ல இது ஆமை முயல் கதையானதை என் அனுபவத்துல பார்த்திருக்கேன்

என்னடா முருகேசன் வரிக்கு வரி வரிப்புலி கணக்கா கிழிக்கிறாரேனு நினைச்சுராதிங்க. ரெண்டு கார்ப்பரேஷன் குப்பை லாரி மோதிக்கிட்டா குப்பை தான் சிதறும்.

நாமதான் ரிசர்வ் பேங்க் கண்டெயினர் கணக்கா இருக்கோமே ..கட்டு கட்டா சிதறட்டும் சனங்களோட ஆன்மீக வறுமை ஒழியட்டும்.

நான் புரிஞ்சிக்கிட்ட கடவுளை படிச்சு அந்த பார்ட்டிய புரிஞ்சிக்காட்டாலும்  என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க.