நிச்சயமா இந்த பதிவை நீங்க ஸ்க்ரால் பண்ணிருவிங்கனு தெரியும். ஆனால் ஒன்னுங்கண்ணணா இதை படிக்கலைன்னா நஷ்டம் உங்களுக்குதேன். ஏன்னா காங்கிரஸு த. நாட்ல கூட கீதுல்ல. இந்த பிக்காலிங்களுக்கு காந்தி காலத்துலருந்தே ஒரே புத்தி.ஏன் காந்திக்கே இந்த புத்தி இருந்தது. சுபாஷ் சந்திரபோஸ் கட்சி தலைவரா கட்சி தேர்தல்ல நின்னப்ப அவருக்கு போட்டியா நின்ன பார்ட்டிய இவர் என் வேட்பாளர் .இவர் வெற்றி என் வெற்றி, இவர் தோல்வி என் தோல்வினு காந்தி தாத்தாவே சொன்னாராம்.
இன்னா நடந்தது? சுபாஷ் எலக்ட் ஆயிட்டாரு. ஒடனே காந்தி ஏரி மேல கோச்சுக்கின கதையா பில்டப் தர சுபாஷ் போங்கடாங்கொய்யாலனு ராஜினாமா பண்ணிட்டு தேசிய ராணுவம் ஏற்படுத்த பூட்டாரு.
தாளி சுபாஷ் மட்டும் கட்சிதலைவரா தொடர்ந்திருந்தா இந்தியாவோட தலை எழுத்தே மாறியிருக்கும். காங்கிரஸ் கட்சியோட வரலாறை 4 எபிசோடா பிரிக்கலாம் நேரு ரெஜிம், இந்திரா ரெஜிம்,ராஜீவ் ரெஜிம், சோனியா ரெஜிம்.
நேரு ஷோ மேன்.தனக்கிருந்த நாடு தழுவிய இமேஜையும், தாத்தா கிட்டே தனக்கிருந்த நெருக்கத்தையும் வச்சே கிழவாடிகளை இருட்டடிப்பு செய்து சமாளிச்சுட்டாரு (காந்தி தாத்தா கோட்சேவோட குண்டை வாங்கிக்கறதுக்கு மிந்தியே வல்லப் பாய் படேலுக்கும் நேருவுக்கும் பஞ்சாயத்து பண்ணியிருந்தா இந்திய வரலாறே திசை திரும்பியிருக்கும்.
ஒரு டமாஸு: எங்கனயோ படிச்சேன். கட்சிக்கு யங் லீடர்ஷிப் தேவைனு மோதிலால் நேரு சொன்னா அது நேருவை குறிக்கும். இதே வசனத்தை நேரு சொன்னா இந்திராவை குறிக்கும். இந்திரா சொன்னா ராஜீவை குறிக்கும்,சோனியா சொன்னா ராகுலை குறிக்கும். அடங்கொக்காமக்கா!
நேருவும் தில்லில உட்கார்ந்துதான் ஆட்சி பண்ணாரு. பல தடைகளை மீறி மக்கள் கருத்து லேசா அவர் காதுக்குள்ள கசியவாவது வாய்ப்பிருந்தது. அவரும் ஏதோ ஒரு சால்சாப்பு சொல்லி அஜீஸ்மென்ட் ஃபார்முலால போய்க்கினிருந்தார்.
உ.ம் : 1 இந்தி திணிப்பு. தமிழர்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியா தொடரும்.
உ.ம் : 2 தெலுங்கானா இணைப்பு . இது கட்டாய கல்யாணம் மாதிரி எப்பவாச்சும் டைவர்ஸ் வாங்கிக்கிரலாம்.
இந்திரா ரெஜிம்ல பார்த்திங்கன்னா அவிகளுக்கும் இன்செக்யூரிட்டி, கிழவாடிகளுக்கும் இன்செக்யூரிட்டி. ரெண்டு தரப்புமே வீக் . எப்படியோ அடிச்சு பிடிச்சு வங்கிகள் தேசீயமயம், தாழ்த்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடுன்னு இந்திரா தன்னை காபந்து பண்ணிக்கிட்டாய்ங்க.
ஈகோங்கறது ஆருக்கு அதிகம்னா எவன் இன் செக்யூரிட்டில இருக்கானோ,எவன் வீக்கா இருக்கானோ அவனுக்கு தேன் ஈகோ அதிகம். தாழ்வு மனப்பான்மை எப்ப வேணம்னா ஓவர் கான்ஃபிடன்ஸா மாறும். அப்படி இந்திரா மாறி சில சோமாறிங்க பேச்சை கேட்டுக்கிட்டு ஆந்திரால இல்லாத ஆட்டம்லாம் போட்டுது. என்.டி.ஆர் வந்தாரு ஆப்பு வச்சாரு.
இந்திராவுக்கு சந்திராசாமி, திரேந்திரபிரம்மசாரி மாதிரி ராஜீவுக்கும் ஒரு கிச்சன் கேபினட். எல்லா ஆஃபீஸ்லயும் ஒரு டப்பா (கம்ப்யூட்டர்) வச்சுட்டா தேசம் சுபிட்சமாயிரும்னு ஏத்திவிட்டாய்ங்க. ஆந்திரா மேட்டர்ல அவரும் கோட்டை விட்டாரு.
சோனியாம்மா ரெஜிமுக்கு வந்தா.. அவிக இந்த பூனையும் பால் குடிக்குமானு இருந்தாய்ங்க. இல்லேங்கலை. எதுவரைக்கும்? மத்தில யு.பி.ஏ அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கிற வரை.
தாளி ஒய்.எஸ்.ஆர் எல்லாம் நேரு மாதிரி ஷோ மேன் கிடையாது. சரிஸ்மா கிடையாது. அக்மார்க் லோ பட்ஜெட் டப்பிங் சினிமா ஹீரோ மாதிரி. என்.டி.ஆரை எதிர்த்தும் அரசியல் பண்ணாரு. சந்திரபாபுவை எதிர்த்தும் அரசியல் பண்ணாரு.
சந்திரபாபு காலத்துல அவர் காட்டின பூச்சிய பார்த்து பேதியாகி காங்கிரஸ் கட்சி கிழவாடிங்கல்லாம் நேட்டிவ் விலேஜ்ல விவசாயம் பார்க்க பூட்டானுங்க. இல்லே ஃபாரீன் பேரன்ங்க வீட்டுக்கு ரெஸ்டுக்கு பூட்டானுங்க.
ஆனால் ஒய்.எஸ்.1999 எலக்சன்ல கொடுத்த தேர்தல் வாக்குறுதியையே மறுபடி குடுத்தாரு ( விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்) . 1600 கிமீ பாதயாத்திரை செய்தாரு. பெராலிஸிஸ் ஸ்ட்ரோக் வந்து பெட் ரிடன் ஆ இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தன் ரத்தத்தை தடவி மசாஜ் பண்ணி உயிரூட்டினாரு.
அப்பல்லாம் சோனியாஜி சோனியாஜியா தான் இருந்தாய்ங்க. எப்போ மத்தில யு.பி.ஏ அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைச்சதோ அங்கன இந்திராஜீயா மாற ஆரம்பிச்சுட்டாய்ங்க.
ஒய்.எஸ் சாகாம இருந்திருந்தாலும் அவரையும் ஒரு ரோசய்யாவாக்க கட்டாயம் ட்ரை பண்ணியிருப்பாய்ங்க. ரெட்டி காங்கிரஸ் மறுபடி வந்திருக்கும். ஆனால் அவர் பண்ண புண்ணியம் கௌரவமா போய் சேர்ந்துட்டாரு.
சாதாரணமா ஒரு கட்சி சட்டமன்ற தேர்தல்ல போட்டியிட்டு,மெஜாரிட்டி சீட்ஸ்ல செயிச்சா சட்டமன்ற கட்சி கூட்டத்தை கூட்டி வாக்கெடுக்கனும். ஆனால் காங்கிரஸ்ல மட்டும் முதல்வரை நியமிக்க தலைமைக்கு (சோனியாவுக்கு) அதிகாரம் கொடுத்து ஒரு தீர்மானம் போடுவாய்ங்க. தில்லிலருந்து சீல்ட் கவர் அனுப்புவாய்ங்க. அதுல முதல்வர் பேர் இருக்கும்.
ஒய்.எஸ் ஐ சி.எம்மா எலக்ட் பண்ணதும் இதே மெத்தட்லதான். ஆனால் சீல்ட் கவர்ல ஒய்.எஸ்.பேர் இல்லைன்னா என்ன நடக்கும்னு தில்லிக்கு தெரியும். ஒய்.எஸ்.போய் சேர்ந்த பிறவு 152 எம்.எல்.ஏங்களோட சப்போர்ட் இருந்தும் ரோசய்யாவை ப்ரப்போஸ் பண்ணச்சொல்லி ஜகனை கட்டாயப்படுத்தினாய்ங்க. ஜகனும் காண்டு மாதிரி ப்ரப்போஸ் பண்ணாரு.
தாத்தா நிலைமை ரெம்ப மோசம். ஒன் பாத்ரூம் போகனும்னா கூட சோனியா மேடத்தை ஒரு பேச்சு கேட்டுக்க வேண்டிய நிலை. சரி தாத்தாவால சமாளிக்க முடியலைன்னு கிரண்குமார் ரெட்டிய கொண்டு வந்தாய்ங்க. ஜகன் தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சி கூத்தாடி ப்ரப்போஸ் பண்ண வச்சிருந்தா டிசம்பர் 31 வரைக்காச்சும் காலம் வெண்ணையா ஓடியிருக்கும் ( கிருஷ்ணா கமிஷன் ரிபோர்ட் வர்ரவரை).
அதையும் செய்யலை. சாட்சில ஏதோ அனலட்டிகல்ல் எஸ்ஸே வந்ததை பார்த்து இர்ரிடேட் ஆகி சோனியாம்மா ஜகனுக்கு ஆப்பு வைக்கனுங்கற ஆத்திரத்துல சிரஞ்சீவிக்கு ப்ராக்கெட் போட்டாய்ங்க.டெப்புட்டி சி.எம்., 6 மந்திரி பதவி வரை பேரம் பேசினாய்ங்க. கிரணை களமிறக்கினாய்ங்க. எல்லாத்துக்கும் மேல ஒய்.எஸ். சகோதரர் விவேகானந்த ரெட்டிக்கு அமைச்சர் வடைய வச்சு கூண்டுல அடைக்க பார்த்தாய்ங்க.
ஜகனும், அவரோட அம்மாவும் தங்கம் எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்கு ராஜினாமா செய்துட்டாய்ங்க. அப்பாறம் பார்க்கனுமே கூத்தை . விவேகானந்த ரெட்டி மந்திரி பதவியும் வேணா ஒரு மசுரும் வேணானுட்டாரு. சிரஞ்சீவி மந்திரி சபைல சேரப்போறதில்லைனு அறிவிச்சுட்டாரு.
காங்கிரஸ் எம்.எல்.ஏங்க ராஜினாமா பண்ணாதிங்க. இந்த அரசு எங்க அப்பாவோட அரசு . இது கவிழக்கூடாதுனு ஜகன் அறிவிச்சுட்டாரு. ஆனால் எம்.எல்.ஏக்கள் தவிர 10,000 பேர் ஜகனுக்கு ஆதரவா கட்சி, மற்றும் இதர பதவிகளுக்கு ராஜினாமா பண்ணியிருக்காய்ங்க.
மொதல்ல 30 பேரோட மந்திரி பட்டியல் தயாரிச்சாய்ங்க. அப்பாறம் பதவி கிடைக்காதவன்லாம் ஜகனோட போயிரப்போறான்னுட்டு அதை 11+1 ஆ குறைச்சாய்ங்க.
விரிவாக்கத்துல பதவி கிடைக்கும்னு ஜொள்ளு விட்டுக்கினு வெய்ட் பண்ணுவாய்ங்கனு ஸ்கெட்ச். ஜூன் ஜூலைல உள்ளாட்சி தேர்தல்கள் வரப்போவுது. அப்ப பார்க்கனும் கூத்தை..
லேட்டஸ்ட்:
ஜகன் கடப்பாவை அடுத்துள்ள இடுப்புல பாயால இருக்காரு. கடப்பா ஹைதராபாத் தேசீய நெடுஞ்சாலையே மக்கள்,வாகன வெள்ளத்தால் திணறுது. நாளைக்கு புதுக்கட்சி அறிவிக்கப்போறாருனு ஹஞ்ச்.