Sunday, November 7, 2010

மனைவியின் தங்கையை தேடும் நாய்கள்

மனைவியின் தங்கையை தேடும் நாய்கள்

ஒரு அரைகிறுக்குதனமான அதாவது... முன்னேற முடியாமல்... தன் பூர்வீக தன்மை இழந்து, மண் பாதையும், பனையோலை குடிசையும், டிஷ் டிவியும், செல்போனும், பெப்ஸி, கோலாவுமாக கிடந்து அல்லாடும் கிராமத்தின் வழியே இருந்த நிறுத்தத்தில் பேருந்து நின்றது...

ஒரு இளைஞன், ஒரு பெண், ஒரு குமரி... நல்ல கூட்டதினூடே ஏறினர்.

“ஹேய்... இந்த பக்கம் நில்லுடி... ஹேய்... நீ இப்படி வா”

தலை தூக்கி பார்க்கிறேன். ஒரு புது மணப்பெண்... அருகில் கணவன்... இன்னொருத்தி மணப்பெண்ணின் சகோதரி... முகம் ஒற்றுமை இருந்தது.

“ஹேய்... அங்கன கொஞ்சம் எடமிருக்குடி... அங்க போயிவேனா ஒக்காறேன்”

“இல்லீங்க... இங்கனயே இருக்கேன்...”

“ஆமா... என் கூடவே நில்லு...”

மணப்பெண் முகம் கலவரமானது... அவன் தொடர்ந்தான்...

“போடி.. அங்கன போய் பிரீயா உட்காரேன்”

அவள் தன் தங்கையை தள்ளிக்கொண்டு ஒரு ஓர இருக்கையில் அமர்ந்தாள். அவள் அமர்ந்த இடத்திலிருந்து, இவன் எதும் பேசினால்... பேருந்து இரைச்சலில் எதும் அவளுக்கு கேட்காது. அவனும், அந்த தங்கையும் என் இருக்கையின் வலது புறமாக நிற்க... அவர்களின் கைகள் என் முன்னிருக்கை மேலும், என் இருக்கையின் பின்புறத்திலும் இருந்தது.

இங்கே... இவன் ஆரம்பித்தான்... கடலை வாசம் ஆரம்பித்தது...

“நாம போயி சேர்ரதுக்கு எவ்வளோ நேரமாகுன்னு நினைக்கிற...”

“ரெண்டு மணி நேரமாகும்...”

“போடி... இந்த பஸ்ஸு போறதுக்கே ரெண்டு மணி நேரமாகும்... அங்க இருந்து ஒன்ற மணி நேரம்... தெரியுமா?”

“ஓ”

“இந்த சுவீட்லாம் கொண்டு வந்தீல... சாப்டலாம்ல...”

“ம்..ம்..”

அவன் பேருந்தின் கூட்டத்தினை பயன்படுத்தி அவளுக்கருகில், அவன் நின்ற விதம்... அந்த தங்கச்சியை சூடு படுத்திருக்குமோ என்னவோ... தலையை குனிந்தபடி நின்றிருந்தாள்... நான் அந்த மணப்பெண்ணை பார்க்க... அவள் சாலையோரங்களை பார்த்தபடி... சும்மா இவர்களை பார்த்து புன்னகைத்து வைத்தாள்...

எனக்கு DTS ல் பின்பக்கமாக வளையல் சிணுங்கல் இடக்காதிலும், வலக்காதிலும் அலைபாய்ந்தது...

பேருந்து அவனை மட்டும் நல்லா ஆட்டிவிட்டதாக கருதினேன்... அவ்வப்போது தடுமாறாமல் இருப்பதற்க்காக... அவளின் வலது தோளை இறுக்க பிடித்துக்கொண்டான். நான் தலையிலடித்துக்கொண்டேன்... (டேய்... போதும்டா... சாமி...) கடலை வாசம் ஆளை தூக்கியது...

அடுத்த அரைமணியில் வந்த நிறுத்தத்தில் சிலர் இறங்க... மணப்பெண்...

“ஏங்க... இங்க வாங்களேன்...”

“ஒங்க அக்கா... விடவே மாட்டாளாடி” இவன்

மீண்டும் வலது தோளை இறுக்க பிடித்துக்கொண்டே அந்த இருக்கைகள் நோக்கி தள்ளிக்கொண்டு(?!) போனான். அவனும், அவன் மனைவியுமாக ஒரு இருக்கையின் ஓரத்திலும், அந்த பெண் எதிர் இருக்கையின் ஓரத்திலும் அமர, மீண்டும் அவன் கடலைபோட ஆரம்பித்தான்... அந்த மணப்பெண் எதும் பேசாது... இவர்களிருவரையும் மாறி, மாறி பார்த்தவாறே இருந்தாள்.
பயண களைப்பிலும், இதுவரை கவனித்தாலும் மேற்க்கொண்டு காண சகிக்காமல் நான் கண் மூடி தியானிக்க ஆரம்பித்தேன்... (வழக்கமாக பயணத்தின் பொழுது...)

ஆனால்...

1) காய்ந்து போனவனுக்கு பொண்டாட்டி சுகம் கிடைத்து விட்டது...
2) கூடவே இலவச இணைப்பு...
3) பொண்டாட்டி பழகி விட்டாள்... இன்னொரு புதுசு எப்படியிருக்கும்...
4) ரொம்ப கடினமில்லை... சுலபமாக கவிழ்த்து விடலாம்...
5) வயது குறைவு... பயன் படுத்திக்கலாம்
6) யாரும் தப்பா நினைக்க வாய்ப்பில்லை

மனம் கணக்கு போட்டுக்கொண்டிருக்க... நான் விழித்தேன்...
ப...நா... கோவிலுக்கு போனவன் ____ நினைத்த மாதிரி இந்த நாயை நான் யோசித்துக்கொண்டிருக்கிறேனே...