சூ மந்திர காளி : ?
நான் கமெண்டுகளோட எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதை விட்டு மாமாங்கமாச்சு. அதே போல மறுமொழிக்கு மறுமொழி கொடுக்கிறதையும் விட்டுட்டன். ஒரு சிலதுக்கு நிச்சயம் தேவைப்படும்..இதோட தொடர்ச்சி நின்னுரும்னு நம்பிக்கை பிறந்தா மட்டும் ம.மொ போடறதை வழக்கமா வச்சிருக்கேன்.
இந்த தொடர்பதிவோட தலைப்புக்கு ஒரு பார்ட்டி "சரியான தலைப்பு"னு ம.மொ போட்டிருந்துச்சு. பார்த்திங்களா பத்தி பத்தியா பெரியார்லருந்து மேற்கோள் காட்டி கிழி கிழினு கிழிக்கிறதுல வர்ர எஃபெக்ட் ஒரே ஒரு வார்த்தையில வந்துருச்சு. ஐ லவ் தீஸ் டைப் ஆஃப் கமெண்ட்ஸ்.
ஓஷோ சொல்வாரு "நான் என்ன பேசனுமோ அதைத்தான் பேசிட்டிருப்பேன். தலைப்பெல்லாம் சொம்மா உளுவுளாக்காட்டிக்கு"
யத்பாவம் தத்பவதிங்கறாப்ல ஓஷோவோட எழுத்துக்களை படிச்சு படிச்சு நமக்கும் அந்த கப்பாசிட்டி வந்துட்டாப்ல கீது. என்னோட சாக்தேய சாதனைகளை சொல்றேன்னு தான் இந்த தொடர்பதிவை ஆரம்பிச்சேன். ஆனால் ஸ்ருதி கூட்டவே 4 அத்யாயம் தீர்ந்து போயிருச்சு. சரிங்கண்ணா பதிவுக்கு போயிரலாமா?
மந்த்ரோபதேசம் நடந்ததென்னவோ 2000,டிசம்பர் 23 ஆம் தேதிதான். ஆனால் சாக்தேய சாதனைகளுக்கான விதைகள் பால்யத்துலயே விதைக்கப்பட்டுட்டாப்ல இருக்கு. 1 ஆம் கிளாஸ்லருந்தே புவனேஸ்வரிங்கற க்ளாஸ் மெட் இருந்தது ஞா வருது.(1973) எங்கம்மாவுக்கு மார்ல கட்டி வந்தப்ப பார்த்து பயாப்சி பண்ணுங்கனு உசார் பண்ண கைனகாலஜிஸ்ட் பேரு புவனேஸ்வரி.(1984)
1991க்கு முந்தியே (1989க்கு பிறவு) நம்ம ஜாதகத்துல சிவசக்தியோகம் இருக்குன்னு சிவசக்தி உபாசனை ஆரம்பமாயிருச்சு.சைட் ஃபோஸ்ல சிவனும் சக்தியும் உள்ள டாலர் அணிய ப்ளான் பண்ணி ரெடிமேட் கிடைக்காம ஆஞ்சனேயர் டாலர் பின்னாடியே டை போட சொல்லி கழுத்துல போட்டதும், கவர்,லெட்டர் பேட்ல எல்லாம் அந்த லோகோவை பொறிச்சிக்கிட்டதும் ஞா வருது.
ச்சொம்மா ஃப்ளாஷ் பேக்கை சொல்லிக்கினிருந்தா கடுப்பாகத்தான் செய்யும். அதனால இந்த சாதனைகளோட லேட்டஸ்ட் விளைவு என்னனு பார்ப்போம்.
கடந்த 10 மாசமா ஆக்னேயத்துல பெரிய வேப்பமரம் இருக்கிற சிதிலமான ஓட்டுவீட்ல குடியிருந்ததும் .. இந்த மழைக்கு எங்கே விழுந்து தொலைச்சுரப்போவுதோனு அவசர அடியா தேடிய இந்த சூப்பர் வீடு கிடைச்சதும்தான்.
மந்த்ரோபதேசம் நடந்த புதுசுல நானா சில கஸ்டம்ஸ் வச்சுக்கிட்டேனு சொல்லியிருந்தேனில்லையா.அதுல மஞ்ச தண்ணியோட வேப்பிலையையும் சொல்லனும்.
நாம என்னதான் நாமர்தா வேலைகள் செய்துக்கிட்டு இருந்தாலும் மாடியில தனியறை கொடுத்துத்தான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரிதான் அப்பா வச்சிருந்தாரு. அதுல கூட அட்டாச்ட் எல்லாம் கிடையாது.( 1984 டு 1991)
இப்ப உள்ளது மாதிரியான வசதிகள் கொண்ட வீட்ல என் லைஃப் டைம்ல எப்பயும் குடியிருந்ததில்லை. இத்தனைக்கும் வாடகை ஜஸ்ட் ரூ900 தான் வாட்டர் சார்ஜஸ் ரூ 300.ஆனால் சொம்மா சொல்ல கூடாது தூள். ஒரு வராண்டா,அதையொட்டி சமையலறை, பெரிய ஹால், அதையடுத்து பெட் ரூம், அதையொட்டி அட்டாச்ட். ஒவ்வொரு அறையிலயும் பரண், சுவத்துல மானாவாரியா அலமாரிங்க அட ஷோ கேஸ் கூட இருக்குன்னா பார்த்துக்கங்களேன்.
கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சுவத்துக்கு இடுப்புயரத்துக்கு பச்சை அடிப்பாய்ங்களே அது மாதிரி இங்கன மெருன். இதையெல்லாம் ஏன் லிஸ்ட் அவுட் பண்றேன்னா..
நம்ம ஜாதகத்துல வீக் சுக்கிரன். ஏதோ சந்திரனோட சேர்ந்து சமாகமனம் பெற்றதால மதியம் 3 மணிக்கு சோறு, ராத்திரி 12 மணிக்கு டிஃபனுன்னு தரார். ட்ரஸ் விஷயமும் இப்படித்தான்.
தினத்தந்தில நிருபரா இருக்கிறச்ச சொந்த பத்திரிக்கை,ஜோதிஷம், கன்ஸ்யூமர் டிஸ்ப்யூட்ஸுனு பத்துவழில பணம் வர்ர காலத்துல கூட நான் இருந்த வீட்டுக்கு பவர் கிடையாது.
அடுத்து வந்த வீட்ல எலி ராஜ்ஜியம். தெரு லெவலுக்கே ஃப்ளோரிங். தாளி வீட்ல படுத்தா ஃப்ளாட்ஃபாரத்துல படுத்திருக்கிறாப்லயே ஒரு ஃபீலிங் வரும்.
அதுக்கடுத்து வந்ததுதான் வேப்பமரத்து வீடு. வாஸ்து ரீதியில பார்த்தா நொந்து போயிருவிங்க. தெற்கு வாசல். அதுலயும் பக்கா நைருதிலதான் கேட். கிழக்கெல்லாம் கட்டிடம். மேற்கெல்லாம் காலியிடம். அகட விகடம்தான்.
ஆக்சுவலா இந்த வாஸ்துல 6 மாசம் குடியிருந்தா குடும்பத்தலைவன் காலி. அடுத்த 6 மாசத்துல தலைவி காலி. அடுத்த 6 மாசத்துல தலைவாரிசு காலி. உள்ளதெல்லாம் ஓடிப்போயிரனும்.
இந்த எஃபெக்டெல்லாம் வீட்டு ஓனருக்கு 100 சதவீதம் ஒர்க் அவுட் ஆகியிருக்கு. இதுக்கு முன்னாடி குடியிருந்தவுகளுக்கு ஆகியிருக்கு. ஆனால் நமக்கு மட்டும் பேப்பே. இங்கதான் ஆத்தா நிக்கறா.. ஆத்தரை நிக்க வைக்கிறா.
மேலும் பழங்காலத்து ஓட்டு வீடு பக்கத்து போர்ஷன் விழுந்தே கிடக்க தேள்,பூரான் எல்லாம் லாட்ஜு வைத்தியர் மாதிரி ரெகுலர் விசிட். குடைக்குள் மழை மாதிரி வீட்டுக்குள் மழை. இத்தனை இம்சை இருந்தாலும், இத்தனை களேபரத்துக்கிடையிலயும் வேப்பமரத்துல கேம்ப் அடிச்சிருந்த ஆத்தாளோட அருளால பொருள் எல்லாம் வந்து சேர்ந்தது. ( மூனு டிவி பாஸ் - ஒன்னை விதவையான என் மைத்துனிக்கு இரவல் கொடுத்திருக்கேன்) . வைட் அண்ட் ப்ளாக்ல வந்துட்டிருந்த மாதமிருமுறை கலராச்சு. டோட்டல் இன்வெஸ்ட்மென்ட் அதுவரை அஞ்சாயிரம்னா கலருக்கு வந்ததும் 15 ஆயிரமாச்சு. வீட்டுக்கே நெட் கனெக்சன் வாங்கினேன். என் மகள் பீரோ வாங்கினா. 2.5 கொடுத்து எலக் ட்ரிக் ஸ்டவ் வாங்கினா. இன்னம் என்னென்னவோ கண்ட கசுமாலத்தையெல்லாம் வாங்கி சேர்த்தாய்ங்க.
தீபாவளியன்னைக்கு என் ஃப்ரெண்டு லட்சுமி பூஜை பண்றது வழக்கம். அவன் திவாலாகி ஊரை விட்டு ஓடிப்போயி வந்தப்ப மொதல் பூஜைக்கு நான் தான் கூட மாட இருந்தேன்.(2003)
அதோட 2010ல கூப்டான். போனேன். தாத்தா காலத்துல ஜாதிக்காய் பெட்டில காலண்டர் லட்சுமிய ( சிட்டிங்) ஒட்டி வச்சிருப்பாய்ங்க. அதுக்குத்தான் 10 ஆயிரம் ரூ டெக்கரெஷன்.
இந்த தாட்டி.." லட்சுமிய நிக்க வைக்கலாம்பான்னேன்" சாதில செட்டியாரா இருந்தாலும் தில்லு துரை. வச்சுத்தான் பார்ப்பமேன்னான். நெட்ல டவுன்லோட் பண்ணி ஃபோட்டோ ப்ரிண்ட் போட்டு பூஜை .
ஒரு அரை லி. பெட்ரோல் எரிச்சு அங்கன இங்கன சுத்தியிருப்பேன். தட்ஸால். ஷாட் கட் பண்ணா 3 ஆவது நாள் இந்த வசந்த மாளிகை.
சுக்கிரன் கிருக காரகன். சுக்கிரனுக்குரிய அதி தேவதை லட்சுமி.
இதுக்கு நான் கொடுக்கிற விளக்கம் என்னன்னா கர்ப காலம் பத்து மாசம். ஆத்தா வேப்பமரத்து நிழல்ல 10 மாசம் அல்லாட வச்சு , என் கருமத்தையெல்லாம் ஒழிச்சி கொடுத்த பரிசு இது.
மந்திரோபதேசம் நடந்து சரியா 10 வருஷம் முடியற நேரத்துல சினிமா செட் மாதிரி ஒரு வீடு. வீடுங்கறது உங்க மனசோட நீட்சினு சொல்லியிருக்கேன். வே ஆஃப் திங்கிங்கே மாறிரும். இதான் வாஸ்துவுக்கு அடிப்படை.
ஆத்தாளோட நமக்கேற்பட்ட உறவு -அதிலான திருப்பங்கள் எல்லாத்தையும் சொல்லனும்னா 10 வருஷ கதைய சொல்லனும். நான் 2000 டு 2010 ன்னு லாங் ஜம்ப் அடிச்சுட்டன்.
நோ ப்ராப்ளம் நாளைலருந்து வரிசையா பார்ப்போம். "விஜயவாடா நித்யானந்தம்"னு காதுல சொன்னது.. "கொலுசு சத்தம் கேட்டது" தன்னோட என்ட்ரியை அக்கம்பக்கத்து போர்ஷன்ஸ்ல பெரிய ஜாமானா தள்ளி சத்தம் பண்ணி தெரிவிக்கிறது, சூல மேடைக்கு எதிர் வாசல்லயே நம்மை குடி வச்சது.. நூத்துக்கணக்கான அற்புதம்லாம் நடந்தது வாத்யாரே..
எல்லாத்தயும் சொல்லத்தான் போறேன்..