ஆமாங்கண்ணா. காந்திக்கும் நேரு குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்திரா ஃபெரோஸ் லவ்ஸ் மேட்டர்ல பிரச்சினை வந்தப்போ காந்தி ஃபெரோசை தத்து எடுத்துக்கிட்டாரு. அதனால ஃபெரோஸ் பேரோட காந்தி பேர் ஒட்டிக்கிச்சு. இந்திரா ஃபெரோஸ் காந்தியோட மனைவிங்கற ஹோதால காந்தி பேரை சேர்த்துக்கிட்டாய்ங்க. ஆனால் கொஞ்ச காலத்துலயே ஃபெரோஸுக்கு, இந்திராவுக்கு ஒத்துவரலை. கழண்டு கிட்டாய்ங்க. இந்திரா அப்பாவோடதான் வாழ்ந்தார்.
என்னதான் சட்டப்படி விவாகரத்து வாங்கலைன்னாலும் இந்திரா தன் கணவரோட வாழலைங்கறது மறைக்க முடியாத அக்மார்க் சரித்திர உண்மை. தாளி புருசன் மட்டும் வேணா புருசனோட சர் நேம் மட்டும் வேணுமா?
வாணி கமலை மணந்தா "வாணி கமல்" கமலை பிரிஞ்ச்சுட்டா .. வெறும் வாணிதேன்.இந்த விதிப்படி பார்த்தா காந்தி பேரை சேர்த்துக்க இந்திராவே அன்ஃபிட். இதுல ராஜீவ்,சஞ்சய், சோனியா,மேனகாவுக்கெல்லாம் காந்தி பேரை சேர்த்துக்க என்ன தகுதி இருக்கு?
சரி இன்ஸ்பிரேஷன்ங்கற கோணத்துல பார்த்தாலும் கனக சுப்புரத்தினம் பாரதி தாசனா மாறினார் .. பாரதிக்கு தாசனாவே வாழ்ந்தார்.
இந்த கூட்டத்துக்கு காந்தி பேரை சேர்த்துக்க என்ன தகுதியிருக்கு?