Saturday, November 6, 2010

ச்சூ மந்திரகாளி : இது நாத்திகர்களுக்கான பதிவல்ல

அண்ணே வணக்கம்ணே,
சில பல காலத்துக்கு முந்தி என்னோட சாக்தேய சாதனைய ஷேர் பண்ணிக்கலாம்னு அவள்ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு அம்போனு விட்டுட்டன். உங்களுக்கு மேற்படி பதிவோட அவுட் லைன் கூட மறந்தே போயிருக்கும்னு நினைக்கிறேன். அதனால இங்கன அழுத்தி அதை ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

அதனோட கடைசி பாராவ பாருங்க.

//அந்த ஆளு ஏதும் சாங்கியம் சம்பிரதாயம்லாம் சொல்லலை. நானா சிலது ஏற்படுத்திக்கிட்டேன். சிலது காலப்போக்குல சேர்ந்துக்குச்சு. மந்திரம், மந்திரத்துக்குரிய மகராசி, எல்லா (ரு) மா சேர்ந்து என்னெல்லாம் நடத்தி வச்சாய்ங்கனு வரப்போற பதிவுகள்ள விவரிக்கிறேன். ஒரு ஆன்மீக பயணத்துக்கு தயாராயிருங்க. உடு ஜூட் //

பெருசா ஒன்னுமில்லை சக்தி உபாசனை ஆரம்பிச்சதும் கோபம் கொஞ்சம் அதிகமாயிருச்சு.( ஏற்கெனவே நமக்கு 'மனுஷனுக்கு' வராப்ல வரும்.) "செல்லாவிடத்து சினந்தீது"ன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரே. தாளி ..காசு பணமில்லாத அந்த காலத்துல கோபப்பட்டா  நம்ம பிழைப்புத்தான் நாறிப்போவும். மேலும் உஷ்ண கோளாறுகள் அதிகமாச்சு .

சரி ஆத்தா சான்னித்தியத்தாலதான் இதெல்லாம் நடக்குதுன்னு நானே ஒரு கணக்கு போட்டு ஆத்தாளை சாந்தப்படுத்த ஒரு கிளாஸ்ல மஞ்சத்தண்ணி வைக்க ஆரம்பிச்சேன்.

இந்த மேட்டர்ல ஆத்தா தன் மொதல்  திருவிளையாடலை காட்டினா. எங்கப்பன் அல்சர் பார்ட்டி எனக்கும் அல்சர் வந்துரும்ங்கற உள்ளுணர்வோ அ ஜன்ம குரு உச்சமாகி பிராமண நாக்கை கொடுத்துட்டாரோ அ செயின் ஸ்மோக்கர்ங்கற காரணத்தால நாக்கு மேல இருந்த கவரேஜ் எல்லாம் போய் காரம் அதிகமா தெரிய ஆரம்பிச்சுட்டதாலயோ காரம்ங்கறதை விலக்க ஆரம்பிச்சு வீரவன்னியத்திருமகளான என் மனைவியே "அய்யராத்து" சமையலுக்கு பழக்கப்பட்டுட்டா.

இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்துல திடீர்னு சாப்பாட்ல காரம் அதிகமாகி நாக்குல மூக்குல தண்ணி கொட்ட ஆரம்பிச்சா என்னனு நினைக்கிறது. எத்தனைதாட்டி தான் பொஞ்சாதிய வார்ன் பண்றது?

ஒரு நாள் ஏதோ ஸ்பார்க் ஆச்சு. ஆத்தாளுக்கு கலக்கி வச்ச மஞ்ச தண்ணிய ஒரு துளி வாய்ல விட்டு பார்த்தேன் சால்னா மாதிரி அப்படி ஒரு காரம் . படுபாவிங்க மிளகாயை அரைச்ச மிஷின்ல ஒடனே மஞ்சளை போட்டு அரைச்சாப்ல இருக்கு.

மஞ்ச தூளை மாத்தினேன். மறு நாள்ள இருந்து சமையல் ஓகே.

அப்பாறம் நம்ம மந்திர சக்திக்கு (?) வழில உள்ள மரத்து கிளிங்கல்லாம் வராம்பாரு வராம்பாருன்னு தங்களுக்குள்ள கம்யூனிக்கேட் பண்ணிக்கிட்டது,

சுக முனிவர் (கிளி மூஞ்சி) கிளி ரூபத்துல வீட்டுக்குள்ளாற வந்து கேம்ப் போட்டது.( புவனேஸ்வரி அம்மனோட அந்தப்புரத்துக்குள்ள போற கப்பாசிட்டி ஒரு ஆஞ்சனேயருக்கு அப்பாறம் சுக மகரிஷிக்குத்தேன் உண்டாம்)

மீடியம் மூலமா ஃப்யூச்சர்ல என்டர் ஆனப்ப ஒரு மியூசியத்துல பெரிய வாள்  அதுமேல நம்ம பேரு பொறிச்சிருந்தது மாதிரி மேட்டர்லாம் அடுத்தடுத்த பதிவுல சொல்றேங்கண்ணா