Wednesday, November 3, 2010

ஹாஜரகாய் கா ஜிக்கா

ஏதோ ஒரு படத்துல ல்தகா சைஆ இருக்கானு விஜய் கேட்பாரு.குட்டிங்க தலையை பிச்சிக்கும். இந்த ஹாஜரகாய் கா ஜிக்காவும் அந்த சாதின்னு நினைச்சுரப்போறிங்க பாஸ். இது சுத்த சைவம். இருந்தாலும் அந்த டீன் ஏஜ்ல  நம்ம மத்தில செலாவணில இருந்த ஒக்காபுலரி, கோட் நேம் ( பத்தாம் நெம்பர்,ஸ்பேடு ,மாஞ்சாலருந்து டீலக்ஸ்,சூப்பர் டீலக்ஸுனு எக்கச்சக்கம்)

1967ல பிறந்த நான் பிறக்கறச்சயே வெள்ளை தாடியோட பிறந்திருக்க முடியாதில்லையா? 1991 வரை அப்படி ஒரு கூத்துக்கும் நம்ம லைஃப்ல இடமிருந்தது.

எத்தனை வயசுல லவ் பண்ண ஆரம்பிச்சிங்கனு கேப்பிக அதிருக்கும் 1977ல. ஆங் ச்சொம்மா விடாதிங்க தலை.. அப்ப என்ன வயசு பத்திருக்குமா.. நாலாங்கிளாஸ் படிச்சிக்கிட்டிருந்திருப்பிக. அப்ப போயி லவ்வாவது இன்னொன்னாவதுனு கேப்பிக.

இல்லை பாஸ் நெஜம் தான். சீக்கிரம ஆரம்பிச்சதால தான் சீக்கிரம் அலுத்துப்போச்சு போல.1986லருந்தே  கேள்விகள் ஆரம்பமாயிருச்சுங்கண்ணா.ஆமா அதென்ன ஹாஜரகாய் கா ஜிக்கா இப்பயாச்சும் சொல்லலாம்லியானு கேட்கறிங்க மிடிமாலமா திரிஞ்ச காலத்துல பேட்ச்ல ஹாய் ஹலோங்கறமாதிரி தான் இதுவும். நாம ஹாஜரகாய்னா எதிராளி ஜிக்காம்பான்.

லவ் பத்தி சுகுமார்ஜி போட்ட பதிவு இதையெல்லாம் ஞா படுத்தி இப்படி ஒரு பதிவை போட வச்சுருச்சுண்ணே.

//கண்களை தொலைத்தால் காதல் கிடைக்கும்//ங்கறாரு சுகுமார்ஜி.  "கொஞ்சி சிரித்தாள் என்  நெஞ்சை பறித்தாள்"னு சினிமா கவிஞர் எழுதுவார். என்னமோ பச்சை பசேல்னு இருக்குமாமேனு காதல் கரை பக்கம் ஒதுங்கினா  ஒரே ரத்தக்களறியா கிடக்கு.

இதயத்தை துளைச்சிட்டாங்கறாய்ங்க, என்ன ஆயுதத்தை உபயோகிச்சாங்கனு கேட்டா பார்வையாம்.. கண்களாம். இன்னாபா இது கூத்தா கீது.

இதுல பார்வையாலே கொல்றாங்கற கம்ப்ளெயிண்ட் வேற. எல்லாம் கிரைமாவே கிடக்குப்பா. , இதுல கண்ணை வச்சு  கண்ணை கொள்ளையடிக்கிறது, நெஞ்சை திருடறது மாதிரி மொள்ளமாரி வேலையெல்லாம் கூட உண்டு.

அப்பபோ அந்தம்மா ஜெயிலர் வேலை கூட பார்ப்பாய்ங்க. (சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்),  காதல் உலகமே தனி. சுடுகாட்டுக்கபாறம் சமத்துவம் கொலுவிருக்கிறது அங்கனதான்.  காதல்னு இறங்கிட்டா ஞானியும் முட்டாளாயிர்ரான். லாஜிக் இல்லாத உலகம் இது .பொருளோட விலையெல்லாம் படக்குனு படக்குனு எகிறிக்கும். ( குண்டு மல்லி ,குச்சி ஐஸ் உட்பட)

ஆன்மீகத்தை டீன் ஏஜர் சீந்தவே மாட்டான். ஆனால் காதலை பத்தி சொன்னா பல்லு போன கிழவாடியும் கிளுகிளுப்பா கேட்பான். ஏன்? இவன் ( டீன் ஏஜர்)  தான் கிழவாடியாகவே போறதில்லைனு நம்பறான். அவன் (கிழவாடி)  தான் காதலிச்ச காலம் இளமை பூத்துக்குலுங்குன காலம். சக்தி ஊற்றா சீறிக்கிளம்பின காலம், நெஞ்சம்ல்லாம் எதிர்காலம் பற்றின நம்பிக்கையோ கனவு ஓவர் ஃப்ளோ ஆன காலம்  திரும்பவே  போறதில்லைன்னு   உணர்ந்துக்கிட்டான்.

அதானலதான் ஆன்மீகத்தை டீன் ஏஜர் சீந்தவே மாட்டான். ஆனால் காதலை பத்தி சொன்னா பல்லு போன கிழவாடியும் கிளுகிளுப்பா கேட்பான்.

சுகுமார்ஜி " காதலை தொலைத்தால் மோட்சம் கிடைக்கும்"ங்கறார். இதை கொஞ்சம் ரோசிப்போம். ( ரெம்ப ரோசிக்க வைக்கிறாய்ங்கப்பா) .

மோட்சம்னா விடுதலை. ஜனன மரண சக்கரத்துலருந்து விடுதலை. இது கிடைக்கனும்னா உங்க கணக்குல கர்மம் இருக்கக்கூடாது. கர்மத்தை தொலைக்கனும்னா கர்ம வினைய அனுபவிக்கனும். இதை அனுபவிக்க வைக்கிறதுல  காதலிகள் தான் எக்ஸ்பெர்ட்ஸ்.

தாளி கொஞ்சம் போல காஞ்சானா இருந்திங்கனா ஏதோ படத்துல வடிவேலுவை பண்றாப்ல செப்டிக் டாங்கை க்ளீன் பண்ண வச்சுருவாளுங்க .சரிப்பா காதலி இருந்தா  நாறடிச்சு கர்மம் தொலைப்பா மோட்சம் கிடைக்கும்ங்கறே. பாயிண்ட் ஓகே அப்போ சுகுமார்ஜி சொன்னது (" காதலை தொலைத்தால் மோட்சம் கிடைக்கும்" )
தப்பானுட்டு கேப்பிக .

இல்லை பாஸ்! அவர் சொன்னதும் கரெக்டுதான்.உங்க காதல் உண்மையான காதலா இருந்து காதலுக்காக அ காதலிக்காக ( அவிக வீட்டுக்காரருக்காக இல்லிங்கண்ணா) காதலையே தொலைச்சிங்கனு வைங்க உங்க உயிரோட எக்ஸெடென்ஷனான அந்த காதல் சாகிறப்ப உங்களுக்குள்ளயும் ஏதோ செத்துப்போகுது .

ஈகோ எகிறிப்போகுது. ஆத்ம சாக்ஷாத்காரமே கிடைச்சாலும் கிடைக்கலாம். அப்போ மோட்சம் கியாரண்டி தானே.

//இப்பொழுதெல்லாம் கவிதை வாசித்தால் நான் ஏதோ புதன் கிரகத்தில் வசிப்பதான மயக்கம் ஏற்படுகிறது... எனக்கு இந்த புவியிலேயே நிறைய வேலைகள் இருக்கின்றது.//

ஹய்யா சுகுமார்ஜிக்கு வயசாயிருச்சுங்கோ.மூளையில ஏதோ சப்டிவிசன்ஸ் இருக்காம். ஒரு டிவிஷன் கணக்கு,இரசாயணம்,துரோகம், சுய நலத்தை வச்சிருக்க, இன்னொரு டிவிசன் தாய்,தாய் நாடு, கவிதை, இலக்கியம் இத்யாதிய வச்சிருக்காம்.

இந்த ரெண்டு டிவிசனும் தராசு தட்டுமாதிரியாம். குறள் படிக்காத்தால முள்ளு நேர நிக்காதாம். அது அந்தப்பக்கம் சாயுமா இந்தப்பக்கம் சாயுமாங்கறது ஆளாளுக்கு மாறுபடும். அதே போல வயசு வயசுக்கும் மாறுபடும்போல.

//எப்போதாவது என் நண்பரோடு விவாதம் நடத்துவதுண்டு//
ஹி ஹி நான் மட்டும் எப்பவும் என்னோடயே

//"எல்லா காதலுக்கும் அடிப்படை; சுயநலமும், ஆக்கிரமிப்பும் தான்"//
இங்கே நான் முரண் படறேன், 

நம்ம சித்தாந்தம் ஞா இருக்கில்லா? அமீபா - செல் காப்பி - பல்லுயிர் - குரங்கு-மனிதன் - ஒரே உடல்ல ஒரே உயிரா இருந்த ஞா -அன்னைக்கு ஒரே உயிரா இந்ததால காலம்-  நேரம் -உறவு-பிரிவு- அபத்திரம்- கம்யூனிகேஷன் இப்படி எந்த பிரச்சினையும் இல்லாத நிச்சிந்தையான நிலை - அதை திரும்பப்பெறும் வேட்கை- ஒரே உடல் ஒரே உயிர் என்ற நிலை -  செல் காப்பி +  ஜீன்ஸ் மூலமா இது ஒவ்வொரு உயிரோட அடிமனசுக்கும் ப்ளாண்ட் ஆகி ஸ்ப்ரெட்  ஆகி இருக்கும்னு நினைக்கிறேன்.

இதுதான் மனிதனோட ஒவ்வொருசெயலுக்கு பின்னாடியும் கொல்லுதல் ,கொல்லப்படுதல்ங்கற இச்சையை ஒளிச்சு வச்சிருக்கோ என்னவோ? (உடலோட இணையறது காங்கிரஸ் கட்சி கோஷ்டிகளை இணைக்கிற மாதிரி கஷ்டமான வேலையில்லையா? - உடல்களை உதிர்த்துட்டா ச்சோ ஈஸிங்கற தாட். சனம் பிணத்துக்கு ( மாமிசம்)  அலையறத கூட இதுக்கு ஆதாரமா கொள்ளலாம்.

ஈருடல் ஓருயிரா மாற  உடலுறவு( சில நிமிசமாகிலும்) ,கர்பம் (சில மாசமாகிலும்) உதவும்ங்கற சப் கான்ஷியல் தாட்டும் காதலுக்கு ஒரு காரணமா இருக்கலாம். அவன் கைகொடுத்துட்டான்னா சமுதாயத்துல செருப்படி வாங்கனும்னு அந்த பெண்ணுக்கு தெரிஞ்சும் ஏன் திறந்து காட்டறா ( நான் மனசுல உள்ள காதலை சொன்னேன் பாஸ்!) ஈருடல் ஓருயிராகற துடிப்புத்தான் இதுக்கு காரணமா இருக்கும்.

அவளோட அம்மாவ பார்த்தாலே இவனுக்கு பத்திக்கிட்டு வரும். அவளும் அந்த வயசு வரும்போது அவ அம்மாவ போலத்தான் மாறுவானு தெரியாதா?

அவனோட அப்பாவை பார்த்தாலே இவளுக்கு பத்திக்கிட்டு வரும். அவன்மும் அந்த வயசு வரும்போது அவனோட  அப்பாவ போலத்தான் மாறுவானு தெரியாதா?

அப்பாறம் என்னாத்த லவ்வு?

இந்த படைப்பு விசாலமானது. இங்கன மனித உயிர்தான் அனாதையா கிடக்கு. மத்த உயிர் எல்லாம் இணைஞ்சிருந்தாலும் இவன் தான் ஈகோ காரணமா தீவாகி கிடக்கான். இவனுக்கு இன்செக்யூரிட்டி - இவன் உசுராத்தான் இருக்கானான்னு இவனுக்கு சந்தேகம் - அதை நினைவுப்படுத்திக்கத்தான் லவ் பண்றான்.

நீங்க உசுரோடத்தான் இருக்கிங்களாங்கற சந்தேகத்தை உங்களுக்குள்ள உருவாக்கிர்ர அளவுக்கு லைஃப்ல யந்திரத்தன்மை அதிகரிச்சுருச்சு பாஸ்.அதானாலதான் தான் உசுரோட இருக்கிற மேட்டரை தனக்கு கன்ஃபார்ம் பண்ண ஒரு பார்ட்டி தேவைப்படுது. அதுக்குத்தான் லவ்ஸ் பண்றான். சரவணபவன் அண்ணாச்சியெல்லாம் லவ்ஸ் பண்ண இதைவிட வேற காரணம் என்னவா இருக்கும்?

//1, அன்பு ஆவேசம் கொண்ட நிலைகள் வெளிப்பாடு காதல்.//

ப்ரெய்ன்ல லெஃப்ட் டிவிசனின் வேலை  இது

//2, மனம் சார்ந்த தேவையும், உடல் சார்ந்த தேவையும்.//

வெறும் உடல் சார்ந்த தேவைன்னா எஸ்கேப்பிஸ்டுங்க  தன் கையே தனக்குதவினு வாழ்ந்துருவாய்ங்க பாஸ். அட்வெஞ்சரஸா இருக்கிறவன் இரவு ராணிகளின் வேட்டையில இறங்கிருவான். செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கா குறைச்சல்? உடல் சார்ந்த தேவைங்கறது உபரி -இலவச இணைப்பு மாதிரி . மனம் சார்ந்த தேவைதான் காதலுக்கு காரணம்.

ஆனால் ஒன்னு பாஸ் சனம் பலரகம். மயில்கறியே சாப்பிடற பார்ட்டியெல்லாம் இருக்கு. வெறுமனே உடலளவுல  வாழ்ந்துர்ர சனத்துக்கு வேணம்னா நீங்க சொன்ன பாய்ண்ட் ஓகே

//3, எனக்கான ஆளுமைக்கு நீதான் சரியான பொண்ணு.
4, எனக்கான ஆளுமைக்கு நீதான் சரியான பையன்.//

ஓஷோ இதை வித்யாசமா சொல்றாரு. தவறான முனைதான் உடனே கவருதாம்

5, மிக முழுவதுமான முற்றிவிட்ட ஆர்வக்கோளாறு. (இருபாலருக்கும்)

//ஆர்வக்கோளாறுன்னா ரெண்டு பாலாருமே ( எந்த வயசுலயும்) அரை குறை - பயாலஜிக்கலாவே  - ஆணில் பெண் தன்மை -பெண்ணில் ஆண் தன்மை - ஷார்ட்டேஜ் ப்ராப்ளம்-  அரைக்குடம் நிச்சயம் தளும்பும். தங்களையே முழுக்க தெரிஞ்சுக்க முடியாத  கடுப்புல தாளி "பலானதை" கூட தெரிஞ்சிக்கிடலைன்னா எப்படிங்கற எரிச்சலா,இர்ரிடேஷனாத்தான்  நான் பார்க்கிறேன்

//6, எல்லாரும் செய்யும் போது, நமக்கென்ன? (இருபாலருக்கும்)//
இது ஐ.பி போடற , க்ரெடிட் கார்ட் வாங்கற மேட்டர்ல ஒர்க் அவுட் ஆகலாம். ஆனால் காதலை பொறுத்தவரை காதலிக்கிறவனோட உடல்ல,அசைவுல, முகத்துல,கண்ல ஒரு வித பளபளப்பு,  நான் உயிர்ப்போட இருக்கேன் பாருங்கற அறிவிப்பு, உடலளவுலயோ ,உயிரளவுலயோ இன்னொரு உயிரோட இணையப்போறென் பாரு இனி எனக்கு  காலம்-  நேரம் -உறவு-பிரிவு- அபத்திரம்- கம்யூனிகேஷன் இப்படி எந்த பிரச்சினையும் கிடையாதுங்கற அறிவிப்பு  தெரியும். ஒவ்வொரு பையனுக்கு, ஒவ்வொரு பெண்ணுக்கும் கனலா இருக்கிற ல்தகா சைஆ வை இது தூண்டி தீயா வளர்க்குதுனு வேணம்னா சொல்லலாம்.

எச்சரிக்கை:
காதலிக்கற ஆசைங்கறத விட காதலிக்கப்படனுங்கற ஆசை தான் அவிகளை உந்துது. ஆனால் யாரோ ஒருத்தருக்காச்சும் காதலிக்க தெரிஞ்சாதான்  அடுத்தவராச்சும் காதலிக்கப்படற சுகத்தை பெற முடியும். அதானாலதான் நிறைய காதல் டப்பாக்குள்ளயே சுருண்டுருது.


//7, திட்டமில்லாத எதிர்கால, நிசப்தமான நம்பிக்கையின் வெளிப்பாடு. (!?)//

இதுக்கு கண்ணை மூடிக்கினு  ஜே போடறேன் பாஸ்.இதுக்கு காரணம் சக்தியின் ஊற்று மற்றும் வாழ்க்கை சிக்கல்களை பற்றிய அறியாமை

//8, வெறுமனே பொழுதைக்களிக்கும் மனோநிலை.//

சக்தி ஊற்றெடுக்கும் போது அதை ஏதோ ஒரு விஷயத்துல எங்கேஜ் பண்ணனும். இல்லாட்டி தான் உருவான கலத்தை  நாறடிச்சுரும்.  நாம யூத்துக்கு என்னெல்லாம் பண்ணக்கூடாதுனு தான் பாடம் படிச்சு  கடுப்பேத்தறமே தவிர இதை செய்யலாம்,அதை செய்யலாம்னு கோடி காட்டறதே கிடையாது. பொழுதை கழிக்கும் நிலைங்கறத விட உயிரின் அடிப்படை உணர்வான பரவுதலுக்கான உந்துதல், சக்தியின் வெளிப்பாடுங்கலாம்.

இங்கே எவருக்கும் இந்த நிகழ்காலம் சம்மதமில்லே. இந்த சமுதாயம் சம்மதமில்லை.கொலைகாரன் கூட குறிப்பிட்ட ஆசாமி இல்லைன்னா சமுதாயம் பெட்டராயிரும்னுதான் போட்டுத்தள்ளிர்ரானாம்.

நிகழ்காலத்தை மறக்க செய்யப்படும் முயற்சினு வேணம்னா சொல்லலாம்.  நிகழ்காலம் & சமூகத்திற்கெதிரான கண்டன தீர்மானம்னு சொல்லலாம். செக்யூரிட்டிய ஒதுக்கித்தள்ற புரட்சி (தற்கொலை முயற்சி)ன்னும் சொல்லலாம்

//9, ஆர்ப்பாட்டமான மறைமுக பால் எழுச்சி.//

பால் எழுச்சிக்கு காரணமே இன்செக்யூரிட்டிதான்.  அவிகவிக இன உறுப்போட வடிவத்தால வர்ர பிரச்சினை இது. பார்க்க இன உறுப்பும் கேரக்டரும் என்ற பழம்பதிவு.


10, சமுதாய அங்கீகாரத்தேவை

சமுதாயம்னு ஒட்டு மொத்தமா சொல்லாதிங்க பாஸ். சர்க்கிள்னு வேணம்னா சொல்லுங்க.*யூத் சர்க்கிள். சமுதாயத்தை லீட் பண்ற, இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பார்ட்டிகள்ள கிழவாடிங்க தான் சாஸ்தி. அவனவன் வாழ்க்கை போராட்டத்துல  ஜெயிச்சு நிக்கறதுக்குள்ள வழுக்கை, தொந்தி பிருஷ்டமெல்லாம் வாங்கிர்ரான். அவன் பார்வையில காதல்ங்கறது கிரைம் . அவனால முடியாதே அதான். இவிக லீட் பண்ற சொசைட்டில காதலால அங்கீகாரம் கிடைக்கும்ங்கறது கனவு. வேணம்னா காதலன் சினிமாட்டிக்கா காசு புரட்டிட்டா அதுக்காக அரைமனதான  அங்கீகாரம் கிடைச்சா கிடைக்கலாம்.

//"வாழ்ந்தவன், வாழ்ந்து கொண்டிருப்பவனை பொறாமையோடுதான் எதிர்கொள்வான், அதிலும் காதலிக்காதவன்" //

வாழ்ந்தவன்னு மொட்டையா சொல்லக்கூடாது பாஸ்!  வாழ்க்கை கடலின் ஓரமா சங்கு பொறுக்கிக்கிட்டிருந்தவனு சொல்லனும் தலை ! அவன் தான் வாழ்ந்து கொண்டிருப்பவனை பொறாமையோடுதான் எதிர்கொள்வான்,

காதலிக்காதவன்னா ஒலகத்துலயே கிடையாதே ..சரியா காதலிக்காதவன்னு வேணம்னா சொல்லலாம் துரை !

//இந்த தலைப்பில் எழுதும் போதும் ஒருவர் சொன்னார், "ஹோட்டலில் எப்படி   தோசை   சுடுறாங்கன்னு தெரிஞ்சா என்னைக்குமே, எங்கயுமே தோசை சாப்பிடமாட்டீங்க, தம்பி" என்றார்.
ருசி இருக்கும் போது...?//

சுகுமார்ஜி.. வழக்கமான பஞ்சை கொண்டு உங்களுக்கு பதிலளிக்கிறேன்.

நட்பு புனிதமானது நண்பர்கள் தான் அதை நாஸ்தி பண்ணிர்ராய்ங்க.

இணையம்  உபயோகமானது. சில நாசமுத்து போனவிகதான் அதை உபத்திரவமாக்கிர்ராய்ங்க.

காதலும் அப்படித்தான் பாஸு.. காதலர்கள் தான் அதை கலீஜு பண்ணிர்ராய்ங்க.

இந்த படைப்புல எல்லாமே டாப்பு. மன்சன் தான் டூப்பு ( ஜஸ்ட் இந்த ஈகோனால டூப்பாயிட்டான் ..இல்லைன்னா மன்சனும் டாப்பு தான்..

ரெம்ப ரோசிக்க வச்சிட்டிங்க.. அரை பாயிட்டு சிகரட்டு காலி. ஒரு கட்டு பூபால் பீடி சாம்பல்.

வாழ்த்துக்கள்.