இன்னா பாஸ் ஜோசியரா இருந்துக்கிட்டு எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கிறிங்களேனு கேப்பிக. இதுலயும் சோசியம் வருது தலை. மருத்துவம் -ஜோசியம் ரெண்டுக்கும் புதன் தான் அதிபதி. மேலும் ஜாதகத்துல 6 ஆவது இடம் கடன்,நோய்,விரோதங்களை காட்டும். இந்த இடம் காலியா இருந்தா நல்லது . இந்த பாவாதிபதி 8 அ 12ல நின்னா நல்லது. அந்த இடத்துல இவருக்கு பலமில்லாம இருந்தா இன்னம் நல்லது.
இது ஜஸ்ட் உங்க ஜாதகப்படி . கோசாரத்துல எடுத்துக்கிட்டா எப்பயும் ஏதோ ஒரு கிரகம் 6 ல மாட்டித்தான் தீரும், ஆறுக்கதிபதி பலம் பெறலாம். அல்லது 8,12 தவிர வேறு இடத்துல வரலாம். அப்ப ரோகம் வந்துதான் தீரும். அந்த கிரகத்தை பொருத்து அந்த கிரகத்தின் காரகத்வம் தொடர்பான ரோகம் வரும்.
நோய்ங்கறதே உங்க பாடி ஹெல்த்தியா இருக்குங்கறதுக்கு ஒரு அடையாளம் தான். பாடில நடக்கிறது ரெண்டு காரியம் . அசிமிலேஷன்,எலிமினேஷன். அசிமிலேஷன்னா ஆக்சிஜனை சுவாசிக்கிறது,லாலா ( தண்ணீர் பாஸ்) குடிக்கிறது, புவ்வா திங்கறது எலிமினேஷனுன்னா கார்பண்டை ஆக்சைடை வெளிய விடறது, மூச்சா போறது,கக்கா போறது.
இந்த காரியம்லாம் பக்காவா நடந்தா நோயே வராது. ஆனால் எப்படியா கொத்த ஹெல்தி பாடியிலயும் தினசரி கொஞ்சம் போல மஷ்டு சேர்ந்துக்கிட்டே தான் இருக்கும்.
காரணம் :
நம்ம சுவாசம் ஆழமா இருக்கிறதில்லை (சிந்தனை வேகம், சிந்தனை போக்கை பொருத்து சுவாசமும் மாறும்) காத்துல பொல்யூஷன் இருக்கலாம். தாளி சிக்னல்ல ரெண்டு நிமிசம் நின்னா போதும் லங்ஸுல ஒட்டடை தான்.
தண்ணி சுத்தமானதா இல்லாம இருக்கலாம். போதுமான அளவு குடிக்காம இருக்கலாம். (முக்கியமா பெண்கள் இவிகளுக்கு பப்ளிக் யூரினல்ஸ் இல்லாததால மூச்சா போற தொல்லைய அவாய்ட் பண்ண லாலாவே குடிக்க மாட்டாய்ங்க)
அடுத்தது புவ்வா. வேளையறிந்து,வேலையறிந்து ,பசியறிந்து சாப்பிடனும்.கலப்புணவா இருக்கனும். ஃபைபர் இருக்கனும் ( நார் சத்து) உப்பு காரம் ,புளி,இனிப்பு குறைவா இருக்கனும்.
பச்சையா தின்னா 100% சேஃப். வேக வச்சு சாப்பிட்டா 80% சேஃப். தாளிச்சா 60% சேஃப். வதக்கினா 40% ,எண்ணெயில பொறிச்சா தாளி அது விசம். அதுலயும் கையேந்தி பவன் கஸ்மால எண்ணெயில பொறிச்சிருந்தா கடுமையான விஷம். ஆலாலம் உண்ட ஈஸ்வரனே அதை விழுங்க கஷ்டப்படனும். ( சைட்ல குவார்ட்டர் இருந்தாதான் ட்ரை பண்ணலாம்)
வேளையறிஞ்சு சாப்பிடறதுன்னா என்ன? நம்ம பாடியெல்லாம் சோலார் பேட்டரி மாதிரி . நமக்கு சார்ஜ் கிடைக்கிறது சூரியன்லருந்துதான். சூரியன் மறைஞ்சா நமக்கும் பேட்டரி லோவாயிரும்.
பகல் பொழுது இருக்கக்கூடிய ஈகோ,தன்னம்பிக்கை,கொள்கை பிடிப்பு ( சதைபிடிப்பு இல்லிங்கோ) சமூகம் பற்றின அச்சம்லாம் சந்திரன் உதிச்சதுமே ஃபணாலாயிரும். சந்திரன் மனோகாரகன். மனசு சஞ்சலமானது. சபலம் நிறைஞ்சது.
சூரியன் மறைஞ்சதுமே பேட்டரி வீக்காயிரும். பயாலஜிக்கல் க்ளாக் ஸ்லோவாயிரும். அந்த நேரத்துல லாலா (தண்ணீ)வோட ,மசாலா ,பெருந்தீனின்னு இறங்கினா டோட்டல் பாடி செட்டப் திணற ஆரம்பிக்கும்.
எனக்கப்படி இல்லைன்னு நீங்க சொல்லலாம். ( நிறைய பேருக்கும் இதான் ஃபீலிங்.ஆனா இது பழக்க தோஷம் ) மனிதன் பின்னோக்கியே கூட நடக்கலாம் அதுக்கு பயிற்சி தேவை. ஒரே கால்ல கூட நடக்கலாம். அதுக்கு பயிற்சி தேவை. இதைவிட ரெண்டு காலால முன்னோக்கி நடக்கிறது எத்தனை சிம்பிள். எந்த அளவுக்கு எஃபிஷியன்ஸி அதிகரிக்கும்னு நினைச்சு பாருங்க.
எளிதில் செரிக்கக்கூடிய, குடலை துன்புறுத்தாத, எளிதில் வெளியேறக்கூடிய உணவை நம்ம வேலைக்கேற்ற உணவை சரியான வேளையில், மிதமான சூட்டில் , நல்ல மன நிலையில் நல்ல கம்பெனியோட நல்ல பார்ட்டி பரிமாற தின்னா கிடைக்கிற ஆரோக்கியமே வேற.
இதெல்லாம் நடக்கிற காரியமில்லை. அதனாலதான் இத்தீனி காம்ப்ளிகேஷன்ஸ். போதுமான உணவு கிடைக்காம செத்தவுகளை விட அளவுக்கு அதிகமான தீனிய தின்னு செத்தவுக தான் சாஸ்தி.
கொஞ்சமா திங்கறது,கொறிக்கறது,பசியில்லாம திங்கறது இப்படி நந்தூர்னி , நாமர்தா வேலைல்லாம் பண்ணிக்கிட்டே இருந்தாலும் இளமை ஊஞ்சலாடறவரை , ஆளு ஓடியாடற வரை சமாளிக்கலாம் ( 3ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல் மாதிரி) . ரத்தம் யோசிக்காம ஓடறத விட்டுட்டு நின்னு ரோசிக்கறச்ச பல்ப் மாட்டிக்கிது.
என் ஏஜ் க்ரூப்ல ஏறக்குறைய எல்லாருமே தொந்தி ,பிருஷ்டம், ஷுகருன்னு செட்டிலாயிட்டாய்ங்க. உட்காந்து வேலை செய்யறது சாஸ்தியாயிட்டதால லைஃப் ஓரளவு க்ளாக் வைசா ஓடறதால நமக்கு ஒடம்பு கொஞ்சம் போல பூசினாப்ல இருக்கிறது நெஜம் தான்.
இதை ஓவர் லுக் பண்ணத்தான் 20X30 ல மல்ட்டிகலர்ல ரெண்டு காலண்டர் போடறதுனு டிசைட் பண்ணி ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கேன். டோட்டல் பட்ஜெட் ஒரு லட்ச ரூபா. 5 ஆயிரம் + 5 ஆயிரம் காலண்டர் . கையிலருந்து பத்து பைசா செலவழிக்காம கடைசி பைசா வரை ஸ்பான்சரர்ஸை பிடிச்சாகனும். ( பேய்க்கு வேலை கொடுத்த மாதிரி) காக்கா மாதிரி சுத்தி சுத்தி மாடிப்படியெல்லாம் இந்திராகாந்தி ரேஞ்சுல ஏறிட்டிருக்கன் அதுவேற விசயம்.
இதுவரை சொன்ன மேற்சொன்ன தவறுகளால பாடி செட்டப், ஃபங்க்ஷனிங்கே தாறுமாறாயிரும். உடல் இயக்கத்தில் என்னென்னமோ கோளாறுகள் எல்லாம் வரும்.
உ.ம்: நாக்குல மாவு படியறது, ருசி தெரியாமை, பசியின்மை, வாயு கோளாறு, வயித்துவலி, வயித்துல எரிச்சல், எதுக்களிப்பு, மலச்சிக்கல், ஆசனகடுப்பு, பைல்ஸ்
இந்த பிரச்சினையெல்லாம் நோய் இல்லை. பாடி ஃபன்ங்க்ஷனிங்ல கோளாறு இருக்குனு காட்டற சிம்ப்டம்ஸ். இதுக்கான காரணம் என்ன? அசிமிலேஷன்,எலிமினேஷன்ல நடந்த குழப்பம். மேற்சொன்ன பிரச்சினைகள்ளாம் வந்த பிறவாச்சும் "ஏன் ஏன் ஏன்" வடிவேலு ரேஞ்சுல கேள்வி கேட்காம டாகடர் சொன்ன மருந்து மாயத்தை எல்லாம் விழுங்கி வைக்கிறோம்.
எந்த டாக்டராச்சும் நோய்க்கான காரணங்களை சொல்லி அதையெல்லாம் அவாய்ட் பண்ண சொல்லியிருக்காரா சொல்லுங்க மேற்கொண்டு இந்த மருந்து மாயங்கள் பண்ற கூத்தை அடுத்த பதிவுல பார்ப்போம்