திருமணமே ஆண்மை குறைவுக்கு ஆதி மூலம். இதுல தாளி ஒரே சாதில கண்ணாலம் கட்டி கட்டி ஃபிசிக் ,ஆண்மை எல்லாமே ஃபணால். 13 அ 14ல செக்ஸுக்கு தயாரானவனுக்கு 30க்கு மேலத்தான் கண்ணாலம். தாளி அதுக்குள்ள பேட்டரி வீகககி, ஒய்ரிங் எல்லாம் மெல்ட் ஆகி கிடக்கும்.
ஆண்மையின் சிகரமா உள்ளவன் கட்டாந்தரையில கூட கில்மால தூள் கிளப்புவான். அதில்லாதவன் எனக்கு எவனாச்சும் பகத்து டோரை தட்டினா கூட படக்குனு விழுந்துருதும்பான். அல்லது ஏசி இல்லைன்னா நம்மால ஆவறதில்லம்பான் . டபுள் காட், தனி பெட் ரூம், அட்டாச்ட் எல்லாமே "முடியாத "குறைய ஃபில் அப் பண்ணத்தான்.
ஆண்மை நிறைஞ்சவன் எப்பவும் நிறைவா உணர்வான். அவனோட செக்ஸ் பார்ட்னரும் அப்படியே. எப்போ செக்ஸ் பவர் விழ ஆரம்பிக்குதோ தன் குறைய ஈடுகட்ட வெளிப்பக்கமா தன் பார்வைய திருப்பறான்.
இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர் .அதான் கிரியேட்டிவ் பவர். செக்ஸ் பவர் ஃப்யூஸ் ஆனதும் படைப்பாற்றல் குறைஞ்சு போச்சு. தன் படைப்பு சக்தியை பணம் மூலமா நிறைவு செய்துக்க ட்ரை பண்றான். (பணத்தாலயும் படைக்க முடியும். ஆனால் நம்மாளு ஓஞ்சு ,தேஞ்சு போயி இருக்கிறதால ரெடிமேடுக்கு தாவிர்ரான்.
அட கட்டிலை எடுத்துக்கங்களேன்...தாளி அதுலயும் ரெடிமேட். இப்படி சனம் பேட்டரி வீக் ஆகி ,குறையா உணர்ந்து, அதை நிறைவு செய்ய ஸ்தூல பொருட்களை வாங்கி குவிக்க ஆரம்பிக்க பணம் தேவைப்படுது. மெஜாரிட்டி வர்கம் இப்படி இருக்கிறதால மனித உடல்ல ரத்தம் மாதிரி தங்கு தடையில்லாம சுத்தி வரவேண்டிய பணம் முடங்கி போவுது. டெட் ஆகுது.
யூத் "அது"இல்லாத குறைக்கு ஆல்ட்டர்னேட்டிவ்க்கு செலவழிக்க (அன் ப்ரொடக்டிவ்) , மிடில் ஏஜ்ட் பீப்புள் அது இருந்தும் அதை எடுத்துக்க முடியாத குறைக்கு ஆல்ட்டர்னேட்டிவ்ஸுக்கு இறங்க, அந்த ஸ்தூல பொருட்களையும் தாங்களே உருவாக்கிற முயற்சி மிரட்ட ரெடிமேடுக்கு இறங்க உலகமே பணம் பணம்னு பேத்த ஆரம்பிச்சுருச்சு.
கிடைச்சத ஆவியாக்கிர்ரானுவ. அது கிடைக்கனுமேனு ஆவி சோர அலையறானுவ. மொத்தத்துல பணம் குறித்த சரியான புரிதல் இல்லாமத்தான் சனம் இப்படி அல்லாடுதுனு ஒரு சம்சயம். அதுக்காக பணம் குறித்த என் புரிதலை பதிவாக்குறேன்.
1.பணம் ரத்தம் போன்றது.அது சமுதாயம் என்ற உடலில் தங்கு தடையின்றி சுற்றிவரவேண்டும். அது உறைந்தாலோ, சுண்டினாலோபிரச்சினைதான்.
2.பணம் எப்படிப்பட்ட முட்டாளையும் அறிவாளியாக்கக்கூடிய அற்புத மூலிகை. எனவே முட்டாள்களுக்கே பணம் அதிகம் தேவைப்படுகிறது
3.பணம் ஊமையை பேச வைக்கும். குருடனை பார்க்க வைக்கும்.முடவனையும் நமக்காய் கைத்தட்ட வைக்கும். நொண்டியை கூட நமக்காய் ஓடிவரவைக்கும்
4.பணம்.. எந்த மொழியினருக்கும் புரியக்கூடிய உலகப்பொதுமொழி.
5. மனிதன் ஒரு ஈ பணம் தேன் நிறைந்த பாத்திரம். .அதன் உதட்டின் மேல் நின்று லேசாய் உறிஞ்சினால் பிரச்சினையில்லை. அதில் குதித்தால் இறக்கை நனைந்து ஒட்டி சாக வேண்டியதுதான்.
6 பணம் ஆக்சிஜனை விட மதிப்பு மிகுந்தது. பணத்தை கொண்டு ஆக்சிஜனையும் வாங்கலாமே..
7.பணத்தை கொண்டு காலம்,தூரத்தை வெல்ல முடிவது மனித குலத்தின் அதிர்ஷ்டம். ஆனால் அதே பணத்தை கொண்டு தான் இதயங்களையும் வெல்ல முடியும் என்பது துரதிர்ஷ்டம்.
8.பணம்...அதற்கான தேவையுடன் அதை ஈட்ட முனைபவனுக்கு கானல் நீர். அதற்கான தேவையின்றி முயல்பவனுக்கு ஆற்று நீர்
9. பணத்துக்கு ஈகோ அதிகம். எவன் தன் ஈகோவுக்காக அதை செலவழிக்கிறானோ அவனிடமிருந்து கழண்டு கொள்ளும்.
10 பணம் சுய கவுரவத்துடன் வாழ வகை செய்யும்.ஆனால் அதை ஈட்ட பலி கொடுக்க வேண்டியதும் சுய கவுரவத்தைதான்.
11. பணம் .. குறைவாக இருந்தால் வெளிச்சம் தரும் வீட்டு விளக்கு அளவுக்கு அதிகமானால் வீட்டை சாம்பலாக்கும் காட்டுத்தீ
12.பணம் புல்லெட் போன்றது. ட்ரிக்கரை அழுத்திய பின் அதன் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறோம். வெடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கியை விட குறி வைக்கப்பட்ட துப்பாக்கிக்கே ஆணையிடும் அதிகாரம் அதிகம்
தொடரும்)