வளைவு, நெளிவு, உருண்டு, திரண்டிருத்தல்
ஒரு ஆணாக இருக்கும் ஒருவனுக்கு பெண்ணை பிடிக்கும். (சிலருக்கு ஆணை பிடிக்கும்... அது அப்புறம் பார்க்கலாம்) எந்த ஆணின் மனதிலும் ஒரு பெண் இருப்பாள்.. அது போன்ற, அந்த திட்ட அறிக்கைக்கு உட்பட்ட பெண்களை மட்டுமே பிடிக்கும்.
இதற்கு மாறான பெண்கள் நிலை நான் அறியாதது. ஓஷோ சொன்னது போல் ஒரு ஆண் பெண்ணாக மாற உலகம் ஒரு மருந்து கண்டு பிடிக்குமெயனால் அதை உட்கொள்ளும் இரண்டாவது நபராக நானிருப்பேன். அப்பொழுதுதான் பெண்கள் உலகம் எனக்கு அறிய வரும்.
வளைவு, நெளிவு, உருண்டு, திரண்டிருத்தல்... அப்படின்னா என்னவா? வீட்டு தொல்லைகாட்சியில் மானாட, மயிலாட பார்த்ததில்லையா?
முன் சுருக்கம் போதும்...
ஒரு பெண்ணை ஒருவன் பார்க்கும் பொழுதே, அந்த பெண் அவனின் நோக்கத்தை அறிந்து கொள்கிறாள். ஆணின் கண்கள் அலைந்தால் ஒரு பெண்ணும் அவனை நெருங்கமாட்டாள். முகத்தை பாராமல்... அதிலும் கண்களை பாராது பேசுபவனையும் அவள் தூரவைப்பாள்.
அப்படி அவர்கள் அன்பை பெற என்ன செய்ய வேண்டும்? பக்குவம் பெற வேண்டும்... எப்படி?
ஒரு ஓவியனாக பார்த்து பழகவேண்டும். ஓவியகல்லூரியில் பாடங்களிருக்கும்... ஒரு நிர்வாண மாடல் அமர்ந்தோ, நின்றோ இருக்க மாணவ, மாணவர்கள் அவர்களின் உடலை படித்து, கைகளில் வருவித்து காகிதத்தில் பதிவார்கள். அந்த அறை மிகுந்த அமைதியாக, கோவில் போல காட்சியளிக்கும். இந்த மாணவ, மாணவர்கள் போலான பார்வை அவசியம்.
இந்த குறியீடுகளை பாருங்கள்...
இந்த குறியீடுகளில் ஒரு பெண்ணை உணர்ந்தால் உங்களுக்கு அத்தகைய பார்வை இருக்கிறது... இல்லையானால் நீங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
இப்பொழுது கவனியுங்கள்...
உருண்டு, திரண்டிருத்தல்... இந்த வார்த்தை கண்ணதாசன் வரிகளில் கிடைத்தது...
“வளைந்து நெளிந்து செல்லும், உருண்டு, திரண்டிருக்கும் வடிவங்கள் உண்டு... ”
இந்த பாடலின் சரணத்தில் அருமையான செய்தி இருக்கிறது...அது...
“எத்தனை கிண்ணத்தில் இட்டாலும், மது அத்தனையும் சுவை ஒன்றாகும்...இத்தனை கிண்ணத்தில் பேதமில்லை... உன் சிந்தையிலேதான் பேதமடா”
ஆனால்... இப்பொழுது இதெல்லாம் மாற்றம் அடைந்து விட்டது... திரைப்படங்களும், கணிணியும், கை பேசிகளும் ஆண், பெண் தூரத்தை குறைத்து விட்டன. எந்த வயதாக இருப்பினும்...
எல்லோருமே பருவத்தின் விளிம்பில் இருப்பதாக ஒரு மயக்கம்.
ரொம்ப போதையிலிருப்பவனுக்கு ஊறுகாய் கிடைத்தால்... விரலையா கடிப்பான்?
(கவனிக்க: ஓவியங்கள் என்னுடையவை... அனுமதி பெறவும்...)
.