அண்ணே வணக்கம்ணே !
இந்த படைப்புலயே உன் மனசை விட உசந்த வஸ்து கிடையாது. ஒருவேளை ஏதாச்சும் வஸ்து உன் மனசை விட உசந்ததா தோனினா உன் மனசு வீக்காயிருக்குன்னு அர்த்தம்.
மேற்படி ஸ்டேட்மெண்ட் நம்மோடது இல்லிங்ணா .விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஒருத்தன் ஒருத்தியை லவ் பண்றான்னா என்ன அர்த்தம். இவன் லைஃப்ல அவளும் இருந்தாதான் இவன் லைஃப் பூரணமாகும்னு நினைக்கிறான்.
ஒரு கோணத்துல பார்த்தா இவன் லைஃப் அரைகுறையா இருக்கு. அவள் வந்தா அது முழுசாகும்னு ஃபீல் பண்றான். அவள் உசந்த வஸ்துவா தெரியறான்னா என்ன அர்த்தம் இவன் மைண்ட் வீக்காயிருக்குனு அர்த்தம்.
லவ் பண்ற பார்ட்டியெல்லாம் வீக் மைண்டடுன்னு சொல்லலை. ஆனால் வீக் மைண்டட் சனம் கூட லவ் பண்றாய்ங்க. இவிகளால தான் பிரச்சினையே வருது.
இவன் கடேசி வரை வீக் மைண்டடாவே இருந்துட்டா பரவால்லை. இடையில மேற்சொன்ன விவேகானந்தர் ஸ்டேட்மெண்ட் இவனுக்குள்ள ஸ்பார்க் ஆயிருச்சுன்னு வைங்க. அப்பம் அந்த காதலி இவனோட கடந்த கால பலகீனத்தை ஞா படுத்தி இம்சை கொடுக்க ஆரம்பிச்சுருவாள்
மேலும் லவ்ங்கறது ஆப்போசிட்ஸ் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர்ங்கற தியரிப்படி தான் உருவாகுது. கருப்பா கீறவன் - சேப்பா கீறவளுக்கு ஜொள்ளு உடுவான். ஒல்லியா கீறவன் ஹார்லிக்ஸ் பேபிக்கு நூல் விடுவான்.
இனம் இனத்தோடு சேர்ந்தா போரடிக்கும் அவ்ளதேன்.ஆனால் இமிசை இருக்காது. தவறான முனைகள் - எதிரெதிர் குணாம்சங்களுடையவர்களுக்கிடையில் ஏற்படும் காதல் ஆரம்ப காலத்துல ரெம்ப த்ரில்லா இருக்கும்.
இளமை ஊஞ்சலாடும் வரை - ங்கொய்யால எங்க போகப்போறா எல்லாம் நம்ம சைஸுக்கு கிரைண்ட் பண்ணி ஏத்திவிட்டுரமாட்டேங்கற எண்ணம் இருக்கும்.
ஆனால் இளமை ஊஞ்சலோட வேகம் குறையும் போது " இன்னாடா இது பெரி எழவாப்போச்சு. இவளோட இன்னும் எத்தீனி காலத்துக்கு மாரடிக்கனுமோ" னு தோணிரும்.
மனித உடல் எளிமையானது. அப்பாவி. அன் எஜுக்கேட்டட். இதுக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசறதெல்லாம் தெரியாது. என்னதான் கூரைக்குள்ள வசிச்சு கூடுதல் ரோமங்களை இழந்திருந்தாலும் - உடல் உழைப்பு குறைய குறைய சைஸு சின்னதா பொயிருந்தாலும் மனித உடல் பழைய நியூஸ் பேப்பர் மாதிரி காட்டுமிராண்டி காலத்துலயே நின்னுருச்சு. நோ அப்டேஷன்
ஆனால் மனித மனம் காம்ப்ளிக்கேட்டட்.- அடப்பாவி வேலைகளையெல்லாம் அசால்ட்டா செய்துட்டு அப்பாவி மாதிரி பில்டப் கொடுக்கும். நாம படிக்கிற அரைகுறை -எடக்கு மடக்கு படிப்பு -கேட்பு எல்லாமே இதுல ஃபீட் ஆகி கிடக்கு - உள்ளே ஒன்னை வச்சு -வெளிய ஒன்னை பேசறதுல அரசியல் வாதியை விட மோசமானது.
தன்னோட காட்டுமிராண்டி காலத்து பதிப்பு ஒன்னை கவருக்குள்ள போட்டு வச்சுக்கிட்டு அப்டேட்டட் பதிப்பை மட்டும் எக்சிபிட் பண்ணிக்கிட்டு ரெம்ப ஜாலாக்கா மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு வருது.
மனசுல எந்த அளவு காம்ப்ளிக்கேஷன்ஸ் அதிகமாகுதோ அந்த அளவுக்கு அது கொஞ்சம் போல அதிர்ச்சி -ஏமாற்றம் இத்யாதிக்கு இம்யூன் ஆகலாம்.
ஆனால் பாவம் இந்த அப்பாவி உடல் திருவிழாவுல காணாம போன கொயந்தை மாதிரி அல்லாடி போயிருது.
மனப்போராட்டங்கள் மனித உடலை -அதுவும் செக்ஸ் பவரை சட்டுனு பாதிச்சுருது. அது எப்படின்னு அடுத்த பதிவுல இன்னம் கொஞ்சம் விவரமா பார்ப்போம்.
Showing posts with label காதலர்கள். Show all posts
Showing posts with label காதலர்கள். Show all posts
Thursday, June 30, 2011
Wednesday, June 29, 2011
காதலித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா :2

நாரத பக்தி சூத்திரத்துல சொல்றாப்ல (எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான பக்தி உண்டாம்) எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான காதல் இருக்கு.
எதையுமே ஒரு சித்தாந்தத்துக்குள்ள அடைக்க கூடாதுங்கறது நம்ம சித்தாந்தம். ஆனால் என்ன பண்றது கடல் நீரை கூட ஒரு டெஸ்ட் ட்யூப்ல அடைச்சு அதை ஷூட் பண்ணி யு ட்யூப்ல விட்டாத்தான் பார்ப்போம்னு சனம் சொல்லுது.
அதனாலதான் நம்ம பாலிசிக்கு விரோதமா காதலை மொதல்ல சித்தாந்தப்படுத்தறேன். அப்பாறம் காதலித்தால் செக்ஸ் பவர் எப்படி கோவிந்தா ஆகும்னு சொல்றேன்.
காதலை பற்றி மட்டுமில்லே. ஒட்டு மொத்த படைப்பை -மனிதர்களை -உலகத்தை பிரிஞ்சிக்கிடனும்னா ஒரு அடிப்படை உண்மைய புரிஞ்சுக்கனும்.
*எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்கஜீவியான அமீபா.
*அது செல் காப்பியிங்க் மூலமா பல்கி பெருகியது
*காப்பியிங் எர்ரர் மூலமா புது ஜீவராசிகள்
*ஒரே செல் -ஒரே உயிர்-ஒரே உடலா இருந்தப்ப காலம்-தூரம்-இன் செக்யூரிட்டி-கம்யூனிகேஷன் ப்ராப்ளம் எதுவுமில்லை
*பல உடலா இருக்கிறச்ச எல்லா இழவும் ஆரம்பிச்சுருச்சு
*செல் காப்பியிங் காரணமா ஓருடல் ஓருயிரா இருந்த இனிய ஞாபகங்கள் மனித மூளைவரை வந்துவிட்டன.
*மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு ஆரம்பமாயிருச்சு
*இந்த இணைப்புக்கு தடை உடல் தாங்கற அப்செஷன் வந்துருச்சு
(இங்கு நம்ம சித்தாந்தம் முடியுது -சைக்காலஜி ஆரம்பிக்குது)
*உயிர்களின் எல்லா செயல்களுக்கும் (மனிதன் உட்பட) பின்னணியில் இருப்பது கொல்லும் -கொல்லப்படும் இச்சையே
*கற்காலத்தில் இது ஸ்தூலமா நிறைவேறிட்டு இருந்தது
*சஞ்சார வாசத்துலயும் நாட் பேட்
*ஸ்திரவாசத்துல இது குறைய ஆரம்பிச்சது
*இதுக்கு செக்சை ஒரு சிறந்த வழியா மனித மனம் அங்கீகரிச்சுருச்சு
*ஆற அமர செக்ஸில் இறங்க அதுல பெண்தான் பவர் ஃபுல்னு தெரிஞ்சுருச்சு -மேலும் சொத்தா மாறிய விளை நிலம் -அது தன் வாரிசுக்கே சேரனுங்கற துடிப்பு -காரணமா தனக்கே தனக்குன்னு ஒரு பெண் வேணும்ங்கற நிலை வந்துருச்சு.
அந்த தனக்கே தனக்கான பெண்ணுக்கான தேடலுக்கான துடிப்புத்தான் காதல்.
மேலும் மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு செக்ஸ்ல ஓரளவு - கொஞ்சம் நேரமாச்சும் நிறைவேறுது
செக்ஸ்ல கொல்லும் -கொல்லப்படும் இச்சை ஓரளவு நிறைவேறுது.
உடைச்சு சொன்னா ஆணுக்கு விந்து வெளியேறும் வரை கொல்லும் இச்சையும் விந்து வெளியேறிய பின் கொல்லப்படும் இச்சையும் நிறைவேறுது.
பெண்ணை பொருத்தவரை உச்சம் என்பது ரேரஸ்ட் ஆஃப் தி ரேரா இருக்கு. அதனால அவனுக்கு விந்து வெளியேறும் வரை இவளின் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. அவனுக்கு விந்து வெளியேறிய பின் இவளது கொல்லும் இச்சை நிறைவேறுது.
இந்த இழவெல்லாம் மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்ட். இதுக்கான பைலட் ப்ராஜக்டுதான் காதல்.
சோகம் என்னன்னா ஓருயிர் பல்லுயிரா மாறினாலும் எல்லா உயிரும் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. அந்த இணைப்பை உணர முடியாம ஈகோ தடுக்குது. ஈகோவை விட்டொழிச்சா உயிர்களிடையிலான இணைப்பை உள்ளபடி உணரலாம்.
ஆனால் ஆன்மாவை ஈகோ மூடி ஈகோவே ஆன்மா - ஈகோவே தான் என்ற மாயா உருவாகிவிட்டது.( நன்றி:ஓஷோ)
ஈகோ சுமக்கமுடியாத பாரமாயிருச்சு. அதை கழட்டி வைக்கிற இடமா மனசு காதலை நினைக்குது. அதனாலதான் காதலிக்கிறாய்ங்க.
இதான் காதல் கத்திரிக்காயோட செனெரியோ.
இப்பம் காதல்ல எத்தனை வகை இருக்குன்னு ஒரு குன்ஸா பார்ப்போம்:
1.தன் மீதான காதலால தன்னை காதலிக்கவும் ஒருத்தி வேணம்ங்கற ஈகோவால காதலிக்கிற காதல்
2.ஈகோவை சுமக்கமுடியாம ஆருக்காகவாச்சும் இந்த 'பாரத்தை" கொஞ்சம் போல இறக்கிவச்சா நல்லாருக்குமேங்கற எண்ணத்துல வர்ர காதல்
3.இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸால - தனிமை உணர்வால - சுய பரிதாபம் - தன்னவர்களால் நிராகரிக்கப்பட்ட உணர்வால வர்ர காதல்
4.தாய் மீதான காதலால் - தாயால் தள்ளி வைக்கப்பட்டு - தாய்க்கு மாற்றாக ஒரு பெண்ணை தேடும் காதல்
5.காமத்தை அங்கீகரித்து - அது குறித்த குற்ற உணர்வு ஏதுமின்றி - நேர்மையாய் அதை நிறைவேற்றிக்கொள்ள செய்யும் காதல்
6.காமத்தை ஓவர் லுக் செய்ய செக்ஸ் அப்பீலே இல்லாத சேப்பாக் கிரிக்கெட் கிரவுண்ட் தனமான சோடாபுட்டி பெண்ணை காதலிக்கும் காதல்
7.பிஞ்சிலே பழுத்து அல்லது மெச்சூர்ட் மைண்ட் காரணமாக தன் தந்தைக்கு நகலாக மாறி பெரிய மனுஷத்தனமாக விளையாட்டுத்தனம் மிக்க பெண்ணை காதலிக்கும் காதல்
8. தானும் முதலியார் -அவளும் முதலியார் - அவிகளுக்கு சினிமா தியேட்டருங்க இருக்கு -தங்களுக்கு சினிமா டிஸ்ட் ரிப்யூஷன் இருக்குன்னு கணக்கு போட்டு காதலிக்கு காதல்
9. யதார்த்த வாழ்க்கை நரகமாக இருக்க நிலத்தில் கால் பாவாத பிரதேசத்தில் சஞ்சரிக்க - சொந்த நரகத்தை மறக்க செய்யும் எஸ்கேப்பிஸ்ட் காதல்
10.சம்மதிச்சா செக்ஸ் இல்லாங்காட்டி தெய்வீகக்காதல்ங்கற சந்தர்ப்ப வாத காதல்
11.காதலிப்போம் - எல்லாம் கை கூடி வந்தா கண்ணாலமும் கட்டிக்குவோம் -இல்லாட்டி ஆருக்கு எங்கன போட்டுவச்சிருக்கோ அப்படியே நடக்கட்டும்ங்கற வேதாந்த காதல்
இப்படி நூத்துக்கணக்கான காதல்கள் நாட்ல இருக்கு. ங்கொய்யால இந்த காதல்கள் சைவமோ அசைவமோ க்ளைமேக்ஸுல கில்மான்னு ஒன்னு நிச்சயம் உண்டு.
மேட்டர் இன்னாடான்னா லவ்வுன்னு இறங்கி லந்து பண்ணிக்கிட்டிருந்தா பேட்டரி வீக் ஆயிருதுங்ணா .. அது ஏன் எப்படி எந்த் அளவுக்குங்கறதை அடுத்த பதிவுல பார்ப்போம்.
ஜோதிடம் என்ன சொல்லுது:
ஜாதகத்துல களத்திர காரகன் , களத்திர பாவாதிபதி ,இவிக நின்ன ராசியாதிபதிகள் இதுல ஆரு வலிமை பெற்று - லக்னாத் சுபர்களா இருந்து அவிக ரூட்ல -அவிக காரகத்வமுள்ள பெண்ணை லவ்வினா பிரச்சினை இல்லை.
அதுக்கு மாறா மேற்சொன்ன களத்திர காரகன் , களத்திர பாவாதிபதி ,இவிக நின்ன ராசியாதிபதிகள் இதுல ஆரு வலிமை இழந்து - லக்னாத் பாபிகளா இருந்து அவிக ரூட்ல -அவிக காரகத்வமுள்ள பெண்ணை லவ்வினா
பேட்டரி அவுட்டுதேன். (கண்ணாலமே கட்டினாலும் பல்பு வாங்க வேண்டியதுதேன்)
அனுபவத்துல பார்க்கும் போது லவ் பண்ற பார்ட்டியெல்லாம் எந்த கிரகம் தனக்கு ஆப்பு வைக்க பைனாகுலர்ல வாட்ச் பண்ணிக்கிட்டிருக்கோ அந்த கிரகத்தோட காரகத்வமுள்ள பெண்ணைத்தேன் லவ் பண்ண ஆரம்பிக்கிறான்.
காதலில் வெற்றி விதிக்கப்பட்டுள்ள ஜாதகன் லவ் பண்ணாமயே கூட இருந்துரலாம். ஆனால் காதலால காயடிக்கப்படனும்னு இருக்கிற பார்ட்டி மட்டும் நிச்சயம் லவ் பண்றான். இம்சைய அனுபவிக்கிறான்.
ஓகே இதுல தொட்டு காட்டின காதல் வகைகள் ஒவ்வொன்னையும் அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுப்போம்.
எந்தெந்த காதல்ல பேட்டரி அவுட்டாயிரும். எந்தெந்த காதலால பேட்டரி வீக்காயிரும்ங்கறதை எல்லாம் விலாவாரியா பார்ப்போம். டோன்ட் ஒர்ரி..
Tuesday, June 28, 2011
காத்லித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா!
அண்ணே வணக்கம்ணே ..
இன்னைக்கு ஒரு மாறுதலுக்கு ச்சொம்மா கடலை போடலாம் வாங்க !
என்னதான் நாட்டு நிலைமை முதல் - சனங்கள்ள சோசியத்தை பத்தின விழிப்புணர்வு வரை கவலைக்கிடமா இருந்தாலும் எப்பப்பாரு சீரியசா ..ரோசிச்சு ரோசிச்சு மண்டை காய்ஞ்சுப்போச்சு. மெகாசீரியல் ஓடற ஹால் மாதிரி டல் ஆயிருது. அதான் ச்சொம்மா கடலை போடலாம்னு ஒரு உத்தேசம்.
இதுக்கு காரகர் சுக்கிரன் விகட ,வினோத பரிகாச பிரசங்க பிரியம். ச்சொம்மா பேசிக்கிட்டே இருந்துட்டா சுக்கிர பலம்லாம் இதுல செலவாகி கில்மா பின் தங்கிரும். காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஏசி ரெஸ்டாரண்டை அவாய்ட் பண்ணிருங்க -சோடியா டூ வீலர்ல அலையறதை விட்டுருங்க - ஜங்க் ஃபுட், பேக்ட் ஃபுட், கூல் ட்ரிங்ஸ்,சினிமா மாதிரி இழவையெல்லாம் விட்டுருங்க . இதெல்லாமே சுக்கிர காரகம் தேன்.
தப்பித்தவறி காதலிச்ச பார்ட்டியையே கண்ணாலம் பண்ணவேண்டி வந்தா மேற்படி மேட்டர்களோட விளைவா பேட்டரி வீக் ஆயிரும். இப்பல்லாம் கில்மாவுல வீக்காயிருந்தா குட்டிங்க உடனே விவாகாரத்துக்கு அப்ளை பண்ணிர்ராய்ங்களாம்.
குஷ்டம் வந்தவன் அவில் ஃபைவ் விழுங்கறான். கடப்பாறைய விழுங்கினவன் சுக்கு கஷாயம் சாப்பிடறான். அதென்னமோ நமக்கு சில்லியா சில்லி வேர்களை பிடிச்சு தொங்கற வித்தை கை வரலிங்ணா. அசால்ட்டா ஆணிவேரை புடிச்சுர்ரோம் .சனத்துக்கு கிலியடிச்சுருது. ஆப்பு வச்சிர்ராய்ங்க.
மொதல்ல கடலை -அப்பாறம் ஆப்பை பத்தி பார்ப்போம். அதுக்கு மிந்தி நேத்திக்கு நீங்க படிச்ச (ஏறக்குறைய 1094 பேர் இரவு 11.30 நிலவரம்) நவீனபரிகாரம் தொடர் 2000 வருடத்தில் ஆன்மீகம் மாத இதழ்ல துவங்கி ரெண்டு மூனு அத்யாயத்துல நிறுத்தப்பட்டதை சொல்லியே ஆகனும்.
நாம பிடிச்சதென்னவோ ஆணிவேர். அசால்ட்டா அசைக்க "அவாளோட" பழைய பொய்கள் எல்லாம் பல்லிளிக்க ஆரம்பிச்சுருச்சு.பொயப்பு கெட்டுப்போற நிலைமை வந்துருச்சு. ஆப்பு வச்சிட்டாய்ங்க.
கடலை:
வேர்கடலை விக்கிறவுகளை பார்த்திருப்பிங்க. எப்பமோ வறுத்து பொட்டலம் போட்டு வச்சிருப்பாய்ங்க. ஆனால் ச்சொம்மா சொம்மா ஜல்லி கரண்டிய வாணலில தட்டி சத்தம் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. அது விளம்பரத்துக்கு.
ஆனால் அசலான மேட்டரை விட்டுட்டு/காரியத்தை விட்டுட்டு வெட்டிப்பேச்சு பேசறதுக்கு கடலை போடறதுனு ஆரு பேரு வச்சாய்ங்க?
ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்.
ஆப்பு:
மரத்தை கோடாரியில பிளக்க சின்னதா பிளவு வரும் ( ஒரே அர்த்தங்ணா - ரெட்டைன்னாலே நமக்கு பிடிக்காது - தப்பான அர்த்தம்லாம் நம்ம அகராதியில கடியாது) அதுல ஒரு மரத்துண்டை வச்சு அடிப்பாய்ங்க. மரம் பிளக்கும். அந்த மரத்துண்டுக்குத்தேன் ஆப்புன்னு பேரு. இதை எங்க அடிச்சா வலிக்கும்னு "பின்"னாடி கூட சொல்லமாட்டேங்ணா
நேத்து பதிவா போட்ட மேட்டரு கொடவுன்ல கிடந்த மேட்டருங்ணா. அந்த நாள்ள மேக்சிமம் 400 பேர் தான் படிச்சிருப்பாய்ங்க. இப்பம் ஆயிரம் தாண்டிருச்சே. மேட்டரா மாத்தி ரோசிக்க(ச்சு) சொல்ற மேட்டர் சனம் பின்னி பெடலெடுப்பாய்ங்க. பெரீ டிஸ்கசன்லாம் நடக்கும்னு நினைச்சேன். நிறைய விளக்கம்லாம் தரலாம்னு வெயிட்டிங். ஆனால் "மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படலை"
இதை ரெண்டுவிதமா புரிஞ்சிக்கிடலாம். ஒன்னு குளவி கொட்டி கொட்டி பூச்சிகளை குளவியா மாத்தினாப்ல உங்க மைண்ட்ஸையெல்லாம் என் எழுத்துக்கள் ஏற்கெனவே ட்யூன் பண்ணியிருக்கனும். அல்லது ஆரோ ஒரு பத்தாறு போட்ட கமெண்ட் தான் சனங்க கருத்தோ என்னமோ ("பினாத்தலுக்கும் அளவு வேணும்")
கடலை போடலாம் வாங்கனு தலைப்புல கூப்டாலும் டீன் ஏஜ்ல கூட கடலை போடறது நம்ம சரித்திரத்துல கிடையாதுங்ணா.
நாம என்ன செய்தாலும் அதனோட முடிவான லட்சியம் நம்ம லட்சியமாத்தான் இருக்கும். நம்ம லட்சியம் (ஆப்பரேஷன் இந்தியா 2000) தெரியும்ல.
ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனேங்கறாப்ல என் மனசு லட்சியத்துலயே நிக்குது. ( கால் வலிக்கப்போவுதுனு ஆருப்பா நக்கலடிக்கிறது?)
சமீபத்துல கலாம் அய்யாவோட மெயிலுக்கும் / விசயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்களோட மெயிலுக்கும் , தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கும் ஆ. இந்தியா 2000 திட்டத்தின் சுருக்கத்தை அனுப்பினேன்.
பதில் வரவே வராதுனு தெரியும். இதெல்லாம் தெரிஞ்சே செய்யற லொள்ளு. ம்னமே அதை விட்டுத்தள்ளு.
கிரகங்கள் மனிதர்களை / மனிதர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துதுன்னு இத்தீனி நாளூ சொல்லிக்கிட்டிருந்தோம். ஒரு கட்டத்துல நவகிரக பாதிப்புகளை குறைப்பது எப்படின்னும் இன்னொரு கட்டத்துல நவகிரகங்களிடமிருந்து விடுதலைன்னும் தொடர் பதிவு போட்ட பார்ட்டி நாம.
இந்த க்ஷணம் என்ன தோணுதுன்னா நாம என்னதான் பரிகாரம், விடுதலைன்னு வாய்ல வவுத்துல அடிச்சிக்கிட்டாலும் சனம் கிரகங்கள் காலால கால்பந்தாய் உதைப்படறதை எண்ணி அவிக வருந்தவும் போறதில்லை திருந்தவும் போறதில்லை. நாம எதுக்கு ச்சொம்மா நை நைன்னு அடிச்சு சுஸ்தாகனும்.பேசாம "தொழிலை" கவனிக்கலாமேனு தோணுதுங்ணா..
இதுல ஒரு லாபம் என்னன்னா .. சனம் தங்களோட வில்லை ( Will) உபயோகிச்சு நம்மை முடக்க பார்க்க பார்க்க ஆத்தாளுக்கு கோவம் பொத்துக்கினு வந்து "பெரீ பெரீ சமாசாரத்தை எல்லாம் அசால்ட்டா தூக்கி கொடுத்துக்கினு கீறா"
இவிக வில் ( Will) என்ன ராமன் கை வில்லா? ங்கொய்யால ராம பாணத்தையே டுபுக்காக்கின ராம நாமம்ங்கற ஆயுதம் நம்ம கையில கீது.
பிட்டா புடிங்க:
இன்னைக்கு இளைய தலைமுறை அசால்ட்டா உபயோகிக்கிற பல வார்த்தைகளோட அசலான அர்த்தம் விபரீதமா இருக்குங்ணா. உ.ம் ஆப்பு
என்ன ஒரு ஆறுதல்னா பண விஷயத்துல க்ளியரா இருக்காய்ங்க. என்ன ஒரு பயம்னா கிரைமுக்கு கூட தயங்க மாட்டேங்கறாய்ங்க.அந்த காலத்துல வீட்டு ஏழுமலையான் உண்டி - அம்மாவோட சீர்வரிசையை சேர்ந்த வெள்ளி டம்ளர்களோட நம்ம கிரைம் நின்னுருச்சுங்ணா.
நமக்கும் வயசு ஆகுது. ச்சொம்மா கண்டவுகளை வம்புக்கிழுத்து அவிக வவுத்தெறிச்சலை ஏன் கொட்டிக்கனும்னும் தோணுது. தாளி வழக்கு போடுவான்/டாக்சி அனுப்புவாங்கறதுக்கெல்லாம் பயப்படற கேஸ் நாம இல்லிங்ணா.
பெட்டைபுலம்பல் மாதிரி புலம்புவாய்ங்க போல.அதெல்லாம் டெலிபதில வந்து ரெம்ப டார்ச்சர் பண்ணுது. எது எப்படியோ ஜாதகங்க வந்துக்கிட்டே இருக்கு. ரவுண்ட் தி க்ளாக் ஒர்க் அவுட் பண்ணாலும் "முடியலிங்ணா" அதனால வர்ர மாசம் 7 ஆம் தேதிவரை ஆரும் ஜாதகம் அனுப்பாம இருந்தா உள்ளதை பைசல் பண்ண வசதியா இருக்கும்.
நம்ம வலைதளத்துல பதிவு போடறவுக ஃப்யூச்சர்ட் ஐட்டமா போட்டா பொருத்தமான படத்தை ஃப்யூச்சர்ட் இமேஜா பொடுங்ணா.
பாண்டியண்ணன் எப்பத்தேன் பதிவு சைஸ்ல கமெண்ட் போடறத விட்டு பதிவு போட ஆரம்பிக்கப்போறாரு கேட்டு சொல்லுங்ணா..
அப்பாறம் சமச்சீர்கல்வி ஆய்வு கமிட்டி உறுப்பினர் ஒருத்தரு தங்களோட நிறுவன ஆசிரியருக்கு சம்பளம் சரியா கொடுக்காத வழக்குல இருக்காராமே நெஜமா ஆருப்பா அது?
பிரதமர் நாளை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறாராம். வாரா வாரம் சந்திப்பாராமே.. (அய்யய்யோ அப்ப இனிமே வாரா வாரம் பல ஊழல்கள் வெடிக்கப்போவுதா?)
பொதுக்கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷிய குழு உறுப்பினர்கள் (காங்கிரஸ்) நக்கலடிச்சு சிரிச்சாய்ங்களாமே?
"நல்ல தீர்ப்பை உலகம் கூறும் நாள் வரும்போது அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது"
ராகுல் காந்தி எப்ப பிரதமராக போறாரு? தாளி ராகுல் பிரதமராகனும் - முன் கூட்டி தேர்தலுக்கு போகனும். காங்கிரஸ் போண்டியாகனும்.
ங்கொய்யால நேரு குடும்பத்துல இருந்து நாய்குட்டி வந்தா போதும் ஜெயிச்சுரலாம்னு நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையற காங்கிரஸ் கிழவாடிகளுக்கு டெப்பாசிட் கூட கிடைக்கக்கூடாது.
Friday, November 5, 2010
நம்ம ப்ளாகை நயனதாரா படிக்கிறாங்கங்கோ..
27/10/2010 தேதியிட்ட ஆனந்த விகடன்ல இன் பாக்ஸ் பகுதியில (பக்கம் 46) நயனதாரா பத்தி வந்த துணுக்கை பார்த்தா அப்படித்தான் தோணுது." காதலர்கள் தோற்றுப்போகலாம். காதல் தோற்பது இல்லை" என ஃபீலிங் மெசேஜ்களாக நண்பர்களுக்கு அனுப்பிக்கிட்டிருக்காய்ங்களாம். ஹாஜராகாய் ஜிக்காங்கற தலைப்புல நாம போட்ட பதிவுல " காதல் புனிதமானது . காதலர்கள் துரோகம் செய்யலாம்னு எழுதியிருந்தது ஞா இருக்கா பாஸ்!
நான் வீட்டோட கனெக்சன் வாங்கறதுக்கு முந்தி மத்தவுக ப்ளாக்ஸை படிக்கிறது ரெம்ப குறைச்சல். ஆனால் சமீப காலமா அக்கம்பத்து பேட்டைகள்ள ஒதுங்கறதால ஒரு சிலது கண்ல படுது.
சிலர் ட்விட்டர்ல போட வேண்டிய சைஸ்ல பதிவே போட்டுர்ராய்ங்க. சிலர்னா இன்னம் மோசம் நக்கலடிக்கவே பதிவு போடறாய்ங்க அதுவும் நம்ம தமிழி சினிமா நடிகைகளோட உடையளவுல.
ஆனானப்பட்ட சுஜாதாவே ஒர் ஸ்க்ரீன் அளவுக்கு எழுதினா போதும்னு சொல்லியிருக்காரு. ஆனா சனம் ட்விட்டர்,எஸ்.எம்.எஸ் ரேஞ்சுல பதிவு போட்டு கடுப்படிக்கிறாய்ங்க.
நம்மை மாதிரி பக்கம் பக்கமா எழுதச்சொல்லலே. அட்லீஸ் ஒரு ப்ளேட் பானி பூரி அளவுக்காச்சும் எழுதலாம்லியா?
"பலான மேட்டர்ல" அப்படி சுருக்கமா முடிச்சு முடிச்சு எல்லா மேட்டர்லயும் அதே பழக்கம் வந்துட்டாப்ல இருக்கு.
தீபாவளி வாழ்த்து சொன்னவுகளுக்கு நன்றி. நமக்கென்னங்கண்ணா தீபாவளி. பட்டாசு கொளுத்தலாம்னா உதறுது ,ஸ்வீட் சாப்பிடலாம்னா ராத்திரி ரெண்டு தாட்டி அதிகமா மூச்சா போயிட்டா ஷுகரானு உதறல், புதுதுணி போடலாம்னா
கண்ணாலமான புதுசுல ஒரு பேண்ட் பத்து ரூபா ஒரு ஷர்ட் அஞ்சு ரூபானு வித்து வயித்தை நிரப்பின காலம் ஞா வந்துருது.
என்ன தீபாவளியோ என்னமோ? ( ஹும்..வயசாயிருச்சு) கூடிய சீக்கிரம் நம்ம ஸ்டைல்ல ஒரு ஃபுல் மீல்ஸ் சைஸ்ல ஒரு பதிவோட வரேங்கண்ணா
எச்சரிக்கை:
சில அறிவாளிகள் ஆ.வி வெளி வந்த தேதியென்ன நீ பதிவு போட்ட தேதி என்னன்னு க்ராஸ் பண்ணுவாய்ங்க. அவிகளுக்கு தெரியாது பாவம்.. நம்ம வயசு 43 . ஒரே விஷயத்தை ரிப்பீட்டு பண்றது கிழவாடிகளோட கல்யாணகுணம். தமிழ் ஓவியா ஷீர்டி பத்தி போட்ட பதிவுக்கான கமெண்ட்லயும் இதே மேட்டரை சொல்லியிருக்கேன். அதுக்கு பல வருஷம் முந்தியிலிருந்தே நம்ம பஞ்ச் டயலாக் இது.
இப்போ சொல்லுங்க நம்ம ப்ளாகை நயன தாரா படிச்சிருப்பாய்ங்களா அ அந்த துணுக்கை எழுதின பார்ட்டி படிச்சிருக்குமா?

Wednesday, November 3, 2010
ஹாஜரகாய் கா ஜிக்கா
ஏதோ ஒரு படத்துல ல்தகா சைஆ இருக்கானு விஜய் கேட்பாரு.குட்டிங்க தலையை பிச்சிக்கும். இந்த ஹாஜரகாய் கா ஜிக்காவும் அந்த சாதின்னு நினைச்சுரப்போறிங்க பாஸ். இது சுத்த சைவம். இருந்தாலும் அந்த டீன் ஏஜ்ல நம்ம மத்தில செலாவணில இருந்த ஒக்காபுலரி, கோட் நேம் ( பத்தாம் நெம்பர்,ஸ்பேடு ,மாஞ்சாலருந்து டீலக்ஸ்,சூப்பர் டீலக்ஸுனு எக்கச்சக்கம்)
1967ல பிறந்த நான் பிறக்கறச்சயே வெள்ளை தாடியோட பிறந்திருக்க முடியாதில்லையா? 1991 வரை அப்படி ஒரு கூத்துக்கும் நம்ம லைஃப்ல இடமிருந்தது.
எத்தனை வயசுல லவ் பண்ண ஆரம்பிச்சிங்கனு கேப்பிக அதிருக்கும் 1977ல. ஆங் ச்சொம்மா விடாதிங்க தலை.. அப்ப என்ன வயசு பத்திருக்குமா.. நாலாங்கிளாஸ் படிச்சிக்கிட்டிருந்திருப்பிக. அப்ப போயி லவ்வாவது இன்னொன்னாவதுனு கேப்பிக.
இல்லை பாஸ் நெஜம் தான். சீக்கிரம ஆரம்பிச்சதால தான் சீக்கிரம் அலுத்துப்போச்சு போல.1986லருந்தே கேள்விகள் ஆரம்பமாயிருச்சுங்கண்ணா.ஆமா அதென்ன ஹாஜரகாய் கா ஜிக்கா இப்பயாச்சும் சொல்லலாம்லியானு கேட்கறிங்க மிடிமாலமா திரிஞ்ச காலத்துல பேட்ச்ல ஹாய் ஹலோங்கறமாதிரி தான் இதுவும். நாம ஹாஜரகாய்னா எதிராளி ஜிக்காம்பான்.
லவ் பத்தி சுகுமார்ஜி போட்ட பதிவு இதையெல்லாம் ஞா படுத்தி இப்படி ஒரு பதிவை போட வச்சுருச்சுண்ணே.
//கண்களை தொலைத்தால் காதல் கிடைக்கும்//ங்கறாரு சுகுமார்ஜி. "கொஞ்சி சிரித்தாள் என் நெஞ்சை பறித்தாள்"னு சினிமா கவிஞர் எழுதுவார். என்னமோ பச்சை பசேல்னு இருக்குமாமேனு காதல் கரை பக்கம் ஒதுங்கினா ஒரே ரத்தக்களறியா கிடக்கு.
இதயத்தை துளைச்சிட்டாங்கறாய்ங்க, என்ன ஆயுதத்தை உபயோகிச்சாங்கனு கேட்டா பார்வையாம்.. கண்களாம். இன்னாபா இது கூத்தா கீது.
இதுல பார்வையாலே கொல்றாங்கற கம்ப்ளெயிண்ட் வேற. எல்லாம் கிரைமாவே கிடக்குப்பா. , இதுல கண்ணை வச்சு கண்ணை கொள்ளையடிக்கிறது, நெஞ்சை திருடறது மாதிரி மொள்ளமாரி வேலையெல்லாம் கூட உண்டு.
அப்பபோ அந்தம்மா ஜெயிலர் வேலை கூட பார்ப்பாய்ங்க. (சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்), காதல் உலகமே தனி. சுடுகாட்டுக்கபாறம் சமத்துவம் கொலுவிருக்கிறது அங்கனதான். காதல்னு இறங்கிட்டா ஞானியும் முட்டாளாயிர்ரான். லாஜிக் இல்லாத உலகம் இது .பொருளோட விலையெல்லாம் படக்குனு படக்குனு எகிறிக்கும். ( குண்டு மல்லி ,குச்சி ஐஸ் உட்பட)
ஆன்மீகத்தை டீன் ஏஜர் சீந்தவே மாட்டான். ஆனால் காதலை பத்தி சொன்னா பல்லு போன கிழவாடியும் கிளுகிளுப்பா கேட்பான். ஏன்? இவன் ( டீன் ஏஜர்) தான் கிழவாடியாகவே போறதில்லைனு நம்பறான். அவன் (கிழவாடி) தான் காதலிச்ச காலம் இளமை பூத்துக்குலுங்குன காலம். சக்தி ஊற்றா சீறிக்கிளம்பின காலம், நெஞ்சம்ல்லாம் எதிர்காலம் பற்றின நம்பிக்கையோ கனவு ஓவர் ஃப்ளோ ஆன காலம் திரும்பவே போறதில்லைன்னு உணர்ந்துக்கிட்டான்.
அதானலதான் ஆன்மீகத்தை டீன் ஏஜர் சீந்தவே மாட்டான். ஆனால் காதலை பத்தி சொன்னா பல்லு போன கிழவாடியும் கிளுகிளுப்பா கேட்பான்.
சுகுமார்ஜி " காதலை தொலைத்தால் மோட்சம் கிடைக்கும்"ங்கறார். இதை கொஞ்சம் ரோசிப்போம். ( ரெம்ப ரோசிக்க வைக்கிறாய்ங்கப்பா) .
மோட்சம்னா விடுதலை. ஜனன மரண சக்கரத்துலருந்து விடுதலை. இது கிடைக்கனும்னா உங்க கணக்குல கர்மம் இருக்கக்கூடாது. கர்மத்தை தொலைக்கனும்னா கர்ம வினைய அனுபவிக்கனும். இதை அனுபவிக்க வைக்கிறதுல காதலிகள் தான் எக்ஸ்பெர்ட்ஸ்.
தாளி கொஞ்சம் போல காஞ்சானா இருந்திங்கனா ஏதோ படத்துல வடிவேலுவை பண்றாப்ல செப்டிக் டாங்கை க்ளீன் பண்ண வச்சுருவாளுங்க .சரிப்பா காதலி இருந்தா நாறடிச்சு கர்மம் தொலைப்பா மோட்சம் கிடைக்கும்ங்கறே. பாயிண்ட் ஓகே அப்போ சுகுமார்ஜி சொன்னது (" காதலை தொலைத்தால் மோட்சம் கிடைக்கும்" )
தப்பானுட்டு கேப்பிக .
இல்லை பாஸ்! அவர் சொன்னதும் கரெக்டுதான்.உங்க காதல் உண்மையான காதலா இருந்து காதலுக்காக அ காதலிக்காக ( அவிக வீட்டுக்காரருக்காக இல்லிங்கண்ணா) காதலையே தொலைச்சிங்கனு வைங்க உங்க உயிரோட எக்ஸெடென்ஷனான அந்த காதல் சாகிறப்ப உங்களுக்குள்ளயும் ஏதோ செத்துப்போகுது .
ஈகோ எகிறிப்போகுது. ஆத்ம சாக்ஷாத்காரமே கிடைச்சாலும் கிடைக்கலாம். அப்போ மோட்சம் கியாரண்டி தானே.
//இப்பொழுதெல்லாம் கவிதை வாசித்தால் நான் ஏதோ புதன் கிரகத்தில் வசிப்பதான மயக்கம் ஏற்படுகிறது... எனக்கு இந்த புவியிலேயே நிறைய வேலைகள் இருக்கின்றது.//
ஹய்யா சுகுமார்ஜிக்கு வயசாயிருச்சுங்கோ.மூளையில ஏதோ சப்டிவிசன்ஸ் இருக்காம். ஒரு டிவிஷன் கணக்கு,இரசாயணம்,துரோகம், சுய நலத்தை வச்சிருக்க, இன்னொரு டிவிசன் தாய்,தாய் நாடு, கவிதை, இலக்கியம் இத்யாதிய வச்சிருக்காம்.
இந்த ரெண்டு டிவிசனும் தராசு தட்டுமாதிரியாம். குறள் படிக்காத்தால முள்ளு நேர நிக்காதாம். அது அந்தப்பக்கம் சாயுமா இந்தப்பக்கம் சாயுமாங்கறது ஆளாளுக்கு மாறுபடும். அதே போல வயசு வயசுக்கும் மாறுபடும்போல.
//எப்போதாவது என் நண்பரோடு விவாதம் நடத்துவதுண்டு//
ஹி ஹி நான் மட்டும் எப்பவும் என்னோடயே
//"எல்லா காதலுக்கும் அடிப்படை; சுயநலமும், ஆக்கிரமிப்பும் தான்"//
இங்கே நான் முரண் படறேன்,
நம்ம சித்தாந்தம் ஞா இருக்கில்லா? அமீபா - செல் காப்பி - பல்லுயிர் - குரங்கு-மனிதன் - ஒரே உடல்ல ஒரே உயிரா இருந்த ஞா -அன்னைக்கு ஒரே உயிரா இந்ததால காலம்- நேரம் -உறவு-பிரிவு- அபத்திரம்- கம்யூனிகேஷன் இப்படி எந்த பிரச்சினையும் இல்லாத நிச்சிந்தையான நிலை - அதை திரும்பப்பெறும் வேட்கை- ஒரே உடல் ஒரே உயிர் என்ற நிலை - செல் காப்பி + ஜீன்ஸ் மூலமா இது ஒவ்வொரு உயிரோட அடிமனசுக்கும் ப்ளாண்ட் ஆகி ஸ்ப்ரெட் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன்.
இதுதான் மனிதனோட ஒவ்வொருசெயலுக்கு பின்னாடியும் கொல்லுதல் ,கொல்லப்படுதல்ங்கற இச்சையை ஒளிச்சு வச்சிருக்கோ என்னவோ? (உடலோட இணையறது காங்கிரஸ் கட்சி கோஷ்டிகளை இணைக்கிற மாதிரி கஷ்டமான வேலையில்லையா? - உடல்களை உதிர்த்துட்டா ச்சோ ஈஸிங்கற தாட். சனம் பிணத்துக்கு ( மாமிசம்) அலையறத கூட இதுக்கு ஆதாரமா கொள்ளலாம்.
ஈருடல் ஓருயிரா மாற உடலுறவு( சில நிமிசமாகிலும்) ,கர்பம் (சில மாசமாகிலும்) உதவும்ங்கற சப் கான்ஷியல் தாட்டும் காதலுக்கு ஒரு காரணமா இருக்கலாம். அவன் கைகொடுத்துட்டான்னா சமுதாயத்துல செருப்படி வாங்கனும்னு அந்த பெண்ணுக்கு தெரிஞ்சும் ஏன் திறந்து காட்டறா ( நான் மனசுல உள்ள காதலை சொன்னேன் பாஸ்!) ஈருடல் ஓருயிராகற துடிப்புத்தான் இதுக்கு காரணமா இருக்கும்.
அவளோட அம்மாவ பார்த்தாலே இவனுக்கு பத்திக்கிட்டு வரும். அவளும் அந்த வயசு வரும்போது அவ அம்மாவ போலத்தான் மாறுவானு தெரியாதா?
அவனோட அப்பாவை பார்த்தாலே இவளுக்கு பத்திக்கிட்டு வரும். அவன்மும் அந்த வயசு வரும்போது அவனோட அப்பாவ போலத்தான் மாறுவானு தெரியாதா?
அப்பாறம் என்னாத்த லவ்வு?
இந்த படைப்பு விசாலமானது. இங்கன மனித உயிர்தான் அனாதையா கிடக்கு. மத்த உயிர் எல்லாம் இணைஞ்சிருந்தாலும் இவன் தான் ஈகோ காரணமா தீவாகி கிடக்கான். இவனுக்கு இன்செக்யூரிட்டி - இவன் உசுராத்தான் இருக்கானான்னு இவனுக்கு சந்தேகம் - அதை நினைவுப்படுத்திக்கத்தான் லவ் பண்றான்.
நீங்க உசுரோடத்தான் இருக்கிங்களாங்கற சந்தேகத்தை உங்களுக்குள்ள உருவாக்கிர்ர அளவுக்கு லைஃப்ல யந்திரத்தன்மை அதிகரிச்சுருச்சு பாஸ்.அதானாலதான் தான் உசுரோட இருக்கிற மேட்டரை தனக்கு கன்ஃபார்ம் பண்ண ஒரு பார்ட்டி தேவைப்படுது. அதுக்குத்தான் லவ்ஸ் பண்றான். சரவணபவன் அண்ணாச்சியெல்லாம் லவ்ஸ் பண்ண இதைவிட வேற காரணம் என்னவா இருக்கும்?
//1, அன்பு ஆவேசம் கொண்ட நிலைகள் வெளிப்பாடு காதல்.//
ப்ரெய்ன்ல லெஃப்ட் டிவிசனின் வேலை இது
//2, மனம் சார்ந்த தேவையும், உடல் சார்ந்த தேவையும்.//
வெறும் உடல் சார்ந்த தேவைன்னா எஸ்கேப்பிஸ்டுங்க தன் கையே தனக்குதவினு வாழ்ந்துருவாய்ங்க பாஸ். அட்வெஞ்சரஸா இருக்கிறவன் இரவு ராணிகளின் வேட்டையில இறங்கிருவான். செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கா குறைச்சல்? உடல் சார்ந்த தேவைங்கறது உபரி -இலவச இணைப்பு மாதிரி . மனம் சார்ந்த தேவைதான் காதலுக்கு காரணம்.
ஆனால் ஒன்னு பாஸ் சனம் பலரகம். மயில்கறியே சாப்பிடற பார்ட்டியெல்லாம் இருக்கு. வெறுமனே உடலளவுல வாழ்ந்துர்ர சனத்துக்கு வேணம்னா நீங்க சொன்ன பாய்ண்ட் ஓகே
//3, எனக்கான ஆளுமைக்கு நீதான் சரியான பொண்ணு.
4, எனக்கான ஆளுமைக்கு நீதான் சரியான பையன்.//
ஓஷோ இதை வித்யாசமா சொல்றாரு. தவறான முனைதான் உடனே கவருதாம்
5, மிக முழுவதுமான முற்றிவிட்ட ஆர்வக்கோளாறு. (இருபாலருக்கும்)
//ஆர்வக்கோளாறுன்னா ரெண்டு பாலாருமே ( எந்த வயசுலயும்) அரை குறை - பயாலஜிக்கலாவே - ஆணில் பெண் தன்மை -பெண்ணில் ஆண் தன்மை - ஷார்ட்டேஜ் ப்ராப்ளம்- அரைக்குடம் நிச்சயம் தளும்பும். தங்களையே முழுக்க தெரிஞ்சுக்க முடியாத கடுப்புல தாளி "பலானதை" கூட தெரிஞ்சிக்கிடலைன்னா எப்படிங்கற எரிச்சலா,இர்ரிடேஷனாத்தான் நான் பார்க்கிறேன்
//6, எல்லாரும் செய்யும் போது, நமக்கென்ன? (இருபாலருக்கும்)//
இது ஐ.பி போடற , க்ரெடிட் கார்ட் வாங்கற மேட்டர்ல ஒர்க் அவுட் ஆகலாம். ஆனால் காதலை பொறுத்தவரை காதலிக்கிறவனோட உடல்ல,அசைவுல, முகத்துல,கண்ல ஒரு வித பளபளப்பு, நான் உயிர்ப்போட இருக்கேன் பாருங்கற அறிவிப்பு, உடலளவுலயோ ,உயிரளவுலயோ இன்னொரு உயிரோட இணையப்போறென் பாரு இனி எனக்கு காலம்- நேரம் -உறவு-பிரிவு- அபத்திரம்- கம்யூனிகேஷன் இப்படி எந்த பிரச்சினையும் கிடையாதுங்கற அறிவிப்பு தெரியும். ஒவ்வொரு பையனுக்கு, ஒவ்வொரு பெண்ணுக்கும் கனலா இருக்கிற ல்தகா சைஆ வை இது தூண்டி தீயா வளர்க்குதுனு வேணம்னா சொல்லலாம்.
எச்சரிக்கை:
காதலிக்கற ஆசைங்கறத விட காதலிக்கப்படனுங்கற ஆசை தான் அவிகளை உந்துது. ஆனால் யாரோ ஒருத்தருக்காச்சும் காதலிக்க தெரிஞ்சாதான் அடுத்தவராச்சும் காதலிக்கப்படற சுகத்தை பெற முடியும். அதானாலதான் நிறைய காதல் டப்பாக்குள்ளயே சுருண்டுருது.
//7, திட்டமில்லாத எதிர்கால, நிசப்தமான நம்பிக்கையின் வெளிப்பாடு. (!?)//
இதுக்கு கண்ணை மூடிக்கினு ஜே போடறேன் பாஸ்.இதுக்கு காரணம் சக்தியின் ஊற்று மற்றும் வாழ்க்கை சிக்கல்களை பற்றிய அறியாமை
//8, வெறுமனே பொழுதைக்களிக்கும் மனோநிலை.//
சக்தி ஊற்றெடுக்கும் போது அதை ஏதோ ஒரு விஷயத்துல எங்கேஜ் பண்ணனும். இல்லாட்டி தான் உருவான கலத்தை நாறடிச்சுரும். நாம யூத்துக்கு என்னெல்லாம் பண்ணக்கூடாதுனு தான் பாடம் படிச்சு கடுப்பேத்தறமே தவிர இதை செய்யலாம்,அதை செய்யலாம்னு கோடி காட்டறதே கிடையாது. பொழுதை கழிக்கும் நிலைங்கறத விட உயிரின் அடிப்படை உணர்வான பரவுதலுக்கான உந்துதல், சக்தியின் வெளிப்பாடுங்கலாம்.
இங்கே எவருக்கும் இந்த நிகழ்காலம் சம்மதமில்லே. இந்த சமுதாயம் சம்மதமில்லை.கொலைகாரன் கூட குறிப்பிட்ட ஆசாமி இல்லைன்னா சமுதாயம் பெட்டராயிரும்னுதான் போட்டுத்தள்ளிர்ரானாம்.
நிகழ்காலத்தை மறக்க செய்யப்படும் முயற்சினு வேணம்னா சொல்லலாம். நிகழ்காலம் & சமூகத்திற்கெதிரான கண்டன தீர்மானம்னு சொல்லலாம். செக்யூரிட்டிய ஒதுக்கித்தள்ற புரட்சி (தற்கொலை முயற்சி)ன்னும் சொல்லலாம்
//9, ஆர்ப்பாட்டமான மறைமுக பால் எழுச்சி.//
பால் எழுச்சிக்கு காரணமே இன்செக்யூரிட்டிதான். அவிகவிக இன உறுப்போட வடிவத்தால வர்ர பிரச்சினை இது. பார்க்க இன உறுப்பும் கேரக்டரும் என்ற பழம்பதிவு.
10, சமுதாய அங்கீகாரத்தேவை
சமுதாயம்னு ஒட்டு மொத்தமா சொல்லாதிங்க பாஸ். சர்க்கிள்னு வேணம்னா சொல்லுங்க.*யூத் சர்க்கிள். சமுதாயத்தை லீட் பண்ற, இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பார்ட்டிகள்ள கிழவாடிங்க தான் சாஸ்தி. அவனவன் வாழ்க்கை போராட்டத்துல ஜெயிச்சு நிக்கறதுக்குள்ள வழுக்கை, தொந்தி பிருஷ்டமெல்லாம் வாங்கிர்ரான். அவன் பார்வையில காதல்ங்கறது கிரைம் . அவனால முடியாதே அதான். இவிக லீட் பண்ற சொசைட்டில காதலால அங்கீகாரம் கிடைக்கும்ங்கறது கனவு. வேணம்னா காதலன் சினிமாட்டிக்கா காசு புரட்டிட்டா அதுக்காக அரைமனதான அங்கீகாரம் கிடைச்சா கிடைக்கலாம்.
//"வாழ்ந்தவன், வாழ்ந்து கொண்டிருப்பவனை பொறாமையோடுதான் எதிர்கொள்வான், அதிலும் காதலிக்காதவன்" //
வாழ்ந்தவன்னு மொட்டையா சொல்லக்கூடாது பாஸ்! வாழ்க்கை கடலின் ஓரமா சங்கு பொறுக்கிக்கிட்டிருந்தவனு சொல்லனும் தலை ! அவன் தான் வாழ்ந்து கொண்டிருப்பவனை பொறாமையோடுதான் எதிர்கொள்வான்,
காதலிக்காதவன்னா ஒலகத்துலயே கிடையாதே ..சரியா காதலிக்காதவன்னு வேணம்னா சொல்லலாம் துரை !
//இந்த தலைப்பில் எழுதும் போதும் ஒருவர் சொன்னார், "ஹோட்டலில் எப்படி தோசை சுடுறாங்கன்னு தெரிஞ்சா என்னைக்குமே, எங்கயுமே தோசை சாப்பிடமாட்டீங்க, தம்பி" என்றார்.
ருசி இருக்கும் போது...?//
சுகுமார்ஜி.. வழக்கமான பஞ்சை கொண்டு உங்களுக்கு பதிலளிக்கிறேன்.
நட்பு புனிதமானது நண்பர்கள் தான் அதை நாஸ்தி பண்ணிர்ராய்ங்க.
இணையம் உபயோகமானது. சில நாசமுத்து போனவிகதான் அதை உபத்திரவமாக்கிர்ராய்ங்க.
காதலும் அப்படித்தான் பாஸு.. காதலர்கள் தான் அதை கலீஜு பண்ணிர்ராய்ங்க.
இந்த படைப்புல எல்லாமே டாப்பு. மன்சன் தான் டூப்பு ( ஜஸ்ட் இந்த ஈகோனால டூப்பாயிட்டான் ..இல்லைன்னா மன்சனும் டாப்பு தான்..
ரெம்ப ரோசிக்க வச்சிட்டிங்க.. அரை பாயிட்டு சிகரட்டு காலி. ஒரு கட்டு பூபால் பீடி சாம்பல்.
வாழ்த்துக்கள்.

Subscribe to:
Posts (Atom)