Monday, January 3, 2011

ஹலோ எடிட்டருங்களா? உங்களுக்கு தான் இந்த 10 கேள்விகள்

1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா? விளம்பரம் தந்தா எந்த பிக்காலி,முடிச்சவிக்கய பத்தி வேணம்னாலும் செய்தி போடுவிங்களா?

சமீபத்துல கல்கில பால் தினகரன் & கோவை பத்தி வரிஞ்சு வரிஞ்சு எழுதியிருந்தாய்ங்க. இதன் பின்னணில கூட இதே ஒப்பந்தம்தான் இருக்கும் போல.

ஆனந்த விகடன்ல ஒரு காலத்துல இந்த சாதி விளம்பரம் வெளியிட சங்கராச்சாரி வருத்தம் தெரிவிச்சதும் வாசன் நிறுத்திட்டாராம்..

இப்ப இருக்கிற கேடு கெட்ட நிலைல ஆதிசங்கரரே வந்து சொன்னாலும் நிறுத்தமுடியாது.


2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?

உ.ம் : ஆட்டுக்காரன், காய் கறிகாரன், 24% வட்டி ஆஃபர் பண்ணி போர்டை திருப்பிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிங்க


3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை ( சாணி பேப்பர்)  சலுகை விலையில் தருகிறது. ஆனால் எந்த மேஜர்  பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. சலுகை விலையில்  அரசு தந்த பேப்பரை ப்ளாக்ல  வித்துர்ரிங்களா?


4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?


5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு  எஸ்.எம்.எஸ் அனுப்ப எத்தனை செலவாகும்? ( ஒரு ரூபாயா? நாலஞ்சு ரூபாயா? அப்படி  செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?

6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளை கூட திருப்பி அனுப்பினதா தகவலே இல்லையே.. நீங்க அரசோட சிகப்பு நாடாத்தனத்தை பத்தியும், மனுக்கள் குறித்த பாராமுகத்தையும் கிழிக்கிறிங்க இது எந்த அளவுக்கு நியாயம்?



7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?


8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?


9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண‌ பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே.( உ.ம் விசு, எஸ்.வி.சேகர், சுப்பிரமணியம் சுவாமி) .பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திர‌னோட காசை  வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?


10.உங்கள் அச்சுப்பதிப்பிலும்  வலை தளத்திலும் சந்தேகாஸ்பதமான விளம்பரங்கள் எல்லாம் வெளி வருகின்றன. உ.ம் ஆண்மை பெருக்கம், குறி வளர்ச்சி,எய்ட்ஸ், இதெல்லாம் சட்டப்படியே குற்றம்னு தெரியாதா?