Saturday, June 28, 2014

வலையுலக லேட்டஸ்ட் ட்ரென்ட்: 10 கேள்விகள்

அண்ணே வணக்கம்ணே !

வலை உலகத்துல லேட்டஸ்ட் ட்ரென்ட் ஒரு பத்து கேள்விக்கு பதில் சொல்றதுதான். இதும் பின்னாடி இருக்கிற மனோதத்துவம் ரெம்ப சிம்பிள். உங்க ஈகோவை திருப்தி படுத்தறது.

உங்களை பத்தி சொல்லிக்க உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறது. ம்..எல்லாம் தெரிஞ்சும் ட்ரென்ட்ல இருக்கனுமேன்னு நானும் பதில் கொடுத்து தொலைச்சிருக்கன்,

 1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

நூறாவது பிறந்த நாளா? ஹ.. இப்பமே ரெம்ப போரடிக்குது.கடுப்படிக்குது. ஒரு வாய்ப்புகிடைச்சா ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ அமல் படுத்திட்டு உலகத்தோட பார்வையிலருந்தே மறைஞ்சுருவன்.

(மினிமம் கியாரண்டியா நம்ம படைப்புகளை 4 மொழியிலயும் -ஆ.இ.200 ஐ 22 மொழிகள்ளயும் மொழி பெயர்த்து வெளியிட்டுட்டாலே போதும் கழண்டுக்க தயார்)

லோட் லோடா ஐரன் ஸ்க்ராப் வரவழைச்சுக்கிட்டு ஜி.டி நாயுடு வேலைகளை செய்யவச்சுக்கிட்டு நிம்மதியா வாழ்வேன்

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நாடு கிடக்கிற கிடப்புக்கு எதை பத்தியும் கவலைப்படாம அடுத்தவன் பாக்கெட்லருந்து நாலணாவை எப்படி சுட்டுரலாம்னு ப்ளான் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழறது எப்படின்னு 

3.கடைசியாகச் சிரித்தது எப்போது? எதற்காக?
சிரிப்பொலி,ஆதித்யா மற்றும் சில சானல்களின் காமெடிக்களின் உபயத்தில் முக்கியமா வடிவேலு உபயத்துல சிரிச்சுக்கிட்டே இருக்கன்.

 4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
லேப்டாப்ல பேட்டரி பேக் அப் இருக்கிற வரை வேலை .அது முடிஞ்சு போனா ஊர்பஞ்சாயத்துதேன்.

 5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
சொல்லியாச்சு. லைஃப்ல சக்ஸஸ் ஃபார்முலா ஒன்னுதான் "மானம் ,ஈனம்,சூடு,சுரணை எல்லாத்தையும் விட்டுரனும்" ஆனால் பர்மனென்டா விட்டுட்டா நம்மை படைச்ச கடவுளுக்கே அவமானம். எல்லா கதவும் மூடிக்கிட்டப்போ எமர்ஜென்சி கேட்டா இதை யூஸ் பண்ணுங்க.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
அமெரிக்காவுக்கு யுத்த தளவாடங்கள் தவிர்த்து வேற எதாச்சும் சோர்ஸ் ஆஃப் ரெவின்யூ உருவாக்குவேன்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் கடந்த காலத்திடம் . கடந்த காலத்தில் இந்த சிச்சுவேஷன் வந்தப்போ என்ன செய்தனோ அதுக்கு நேர் எதிரிடையா ஒர்க் அவுட் பண்ணுவன். புத்தம் புதுசா பிரச்சினை வந்துட்டா? லாஜிக்கை வச்சு நானே பைசல் பண்ணிருவன்.
தொழில் நுட்பம்னா மட்டும் எனக்கு ஆரு மேல நம்பிக்கை இருக்கே அவிக கேட்பேன்.

 8.உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
பரப்பினாருங்களே.. அப்பம் இலவச ஜோதிட ஆலோசனைக்கு ஜாதகம் அனுப்பின பார்ட்டி பலன் அனுப்ப கொஞ்சம் போல தாமதமாயிருச்சுங்கற கடுப்புல செமர்த்தியா பரப்பினாரு. ஃபேக் ஐடில்லாம் கிரியேட் பண்ணி சாக்கடை கமெண்ட் எல்லாம் போட்டு நாறடிச்சாரு. இன்னைக்கு நாம இருக்கம். அந்த பார்ட்டி இருக்கா இல்லையான்னு தெரியல. மொதல்ல நமக்குள்ள இருந்த ரஜோ குணம் சிலும்ப கொஞ்ச நாள் மல்லு கட்டி பார்த்துட்டு தூ போ அம்பாளே பார்த்துப்பான்னு விட்டுட்டன். இனியும் இதையே செய்வேன்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
இதோட வாழ்க்கை முடிஞ்சுரல. இன்னம் எவ்வளவோ இருக்கு. சீக்கிரமா மனச தேத்திக்க. நிறைய சவால்கள் காத்திருக்கு.
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
டிஃப்ரன்டா ஒன்னும் கிடையாது. என் வேலைய நான் தொடர்வேன்.