Thursday, December 6, 2012

சுய அறிமுகம்: சித்தூர் முருகேசன்

வலைப்பூ: நிர்வாண உண்மைகள்
வலைதளம்: அனுபவஜோதிடம்
என்னைப்பற்றி:
"என்னை" என்று ஒருமையில் ஆரம்பிக்கவே தயக்கமா இருக்கு.  நம்ம எழுத்துல எதுனா மேட்டர் இருந்தா அது  "அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்" .மொக்கையெல்லாம் நம்ம ஈகோவோட லீலை.

1967 ல பிறந்த நாம 20 வருசம் க்ளீன் ஸ்லேட். சனங்க என்னென்னமோ எழுதி நாறடிச்சாய்ங்க. 1987 லருந்து 20 வருசம் நிருத்யோகம்,வறுமை,அவமானங்கள் எல்லாம் ஆணியால கிர் கிர்ருன்னு கிறுக்கியாச்சு. ஆளவந்தான் கமல் மாதிரி நமக்குள்ள ரெண்டு கேரக்டர் இருக்கு.

நெகட்டிவ் கேரக்டரை  முடிஞ்சவரை தர்மயுத்தம் ரஜினி மாதிரி சங்கிலியில கட்டி வச்சுருக்கம். சனம் சங்கிலியை அவுத்து விட்டுட்டுத்தேன் மறுவேலைன்னு செயல்பட்டாலும் கடுப்புல @ தேர் ஆப்சென்ஸ்  கெட்ட வார்த்தையா கொட்டினாலும் அவிக நேர வந்தாலோ - செயல்னு வந்தாலோ பாசிட்டிவ் அப்ரோச் தேன்.

அம்புலிமாமா காலத்துலருந்து நம்மை ஹீரோ கேரக்டரோட இணைச்சுத்தான் கற்பனை. விபத்து போல இடையில 20 வருசம் தவிர்த்து நமக்கு ஹீரோ ரோலே கிடைச்சுது.

இருவது வருசம் நாறின சமயம் தான் நாம ரியல் ஹீரோவா இருந்தம்னு இடையிலயே புரிஞ்சிக்கிட்டதால தற்கொலையிலருந்து தப்பிச்சம். ஹீரோ குறித்த புரிதல் ஏற்பட்டதும் விபத்து தான். ஒரு காலத்துல ஹீரோன்னா முழங்கால் வரை ஷூ ,  ஜெர்க்கின் போட்டு ,லியோ டாய் மிஷின் கன்னோட டப டப டபன்னு சுடறவன்னு நினைச்சிருந்தம்.

சீக்கிரமே "HERO IS ONE WHO LAY DOWN HIS LIFE FOR HIS PEOPLE. "ங்கற மேட்டர் ஸ்பார்க் ஆயிருச்சு. தப்பிச்சம்.

இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வா நாம வடிவமைச்ச ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டமும் -அதுக்காவ நாம கொடுத்த உழைப்பும் இந்தியாவோட பிரச்சினையை தீர்த்ததோ இல்லையோ  நமக்கு மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் வராம காப்பாத்திருச்சு.

"வெற்றி பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம்
வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தைகுளிர் வணக்கம்"

என்று கவிதைல்லாம் எழுதியிருக்கம். ஆனால் இப்பம் " நான் தான்டா என் மனசுக்கு ராஜா"ன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கம். நல்ல வேளையா நம்ம வாழ்க்கையில வெளிச்சம் கண்ட பிறகே நம்ம எழுத்துக்களும் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சது.

கமல் சொல்வாரு " நாங்க யாருன்னு எங்களுக்கு தெரியும்" - பேசிக்கலா நாம எப்படியா கொத்த குழப்ப கேஸு, பேதி கேஸுன்னு தெரியும்.   நமக்கு தில்லை கொடுக்கிறது  நம்ம கொள்கை. கொள்கை இல்லைன்னா நம்ம பொளப்பே பரம தக்கை. ட்ராஃபிக் கான்ஸ்டபிளை ஃபேஸ் பண்ற சாலாக்கு கூட இல்லாத பார்ட்டி நாம.

கொள்கைன்னு வந்தா தூக்குக்கயித்துக்கும் ரெடி. அதுசரி கொள்கை கொள்கைன்னு மொக்கை போடறே. உன் கொள்கைதான் என்னன்னு கேப்பிக சொல்றேன்.

இந்த நாடும் -நாட்டு மக்களும் கொஞ்சமே மாத்தி யோசிச்சா இன்னம் கொஞ்சம் பெட்டரா மாறலாம். உலக வாழ்க்கையிலயே ஆயிரம் சிக்கல் - புவ்வாவுக்கே லாட்டரி -இதுல தேடல் எல்லாம் லக்சரி. அதனால மொதல்ல அல்லாருக்கும் உசுருக்கு பாதுகாப்பு -  உணவு -உடை -இருப்பிடம் -செக்ஸ் கிடைக்கனும். இதெல்லாம் கிடைக்க கவுரதையான வேலை -வெட்டி. இதுக்காவ எதையாவது செய்யனும்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் போட்டாலும் -அதன் அமலுக்காவ சி.எம் மேலயே கேஸை போட்டாலும் பணம் பணம் பணம் தொடர் எழுதினாலும் -கில்மா பதிவுகளே போட்டாலும் -சோசிய பரிகாரங்கள் அடிச்சாலும் எல்லாத்துக்கும் அடிப்படை இந்த மக்கள் இன்னம் கொஞ்சம் பெட்டரா வாழனும்ங்கறதுதேன்.

தாங்கள் இந்த தமிழ் இணையத்தில் எப்போது வந்தீர்கள்:

சரிய்யா சொன்னா 2000,ஜூலை ,31 ஆம் தேதி வந்தேன்.

யார் உங்களுக்கு தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து வைத்தார்கள்?
ஏதோ தமிழ் பத்திரிக்கையில படிச்சதுதான். கல்கியில தான்னு ஞா.

எப்போது நீங்கள் தனியாக ஒரு வலைதளம் தொடங்குனீர்கள்?
2011,பிப்ரவரியில துவங்கினேன்.

அந்த வலைதள பெயருக்கு பின்னால் உள்ள சுவராசியமான விசயங்கள்:

வலைப்பூ:

மொதல்ல கவிதைங்கற பேர்ல வலைப்பூ துவங்க ட்ரை பண்ணேன். நாட் அவெய்லபிள். நாம பிறந்த தேதி 07. அதனால கவிதை07 ங்கற பேர்ல வலைப்பூ துவங்கியாச்சு.

கிராம ஊழியன் என்ற பெயரில் பத்திரிக்கை வாங்கி இலக்கிய புரட்சியை அரங்கேற்றியதை போல கவிதைங்கற பேர்ல வலைப்பூ துவங்கி  சகட்டுமேனிக்கு  எல்லாத்தையும் காய்ச்ச ஆரம்பிச்சோம். ஹிட்ஸ் புட்டுக்கிற சமயத்துல அதை தூக்கி நிறுத்த அப்பப்போ கில்மா மேட்டரை ஊறுகாய் கணக்கா தொட்டுக்கறதும் உண்டு.

இதெல்லாத்துக்கும்  பொதுவா ஒரு பேர் வேணமேன்னு ரோசிச்சதுல ஸ்பார்க் ஆனதுதேன் நிர்வாண உண்மைகள்.

பேர் வைக்கும் போது நம்ம மைண்ட்ல  ஒன்னம் கிடையாது. ப்ளாக் பத்திக்கிட்ட பிறவு அனலைஸ் பண்ணதுல கவி = கபி - குரங்கு ( நாம ஆஞ்சனேயரோட கடைசி பெஞ்ச்  சிஷ்யனாச்சே) ஆங்கிலத்துல "தை"ங்கறதை THAI னுட்டு எழுதறோம்.ஆத்தா போட்டுக்கொடுத்த ரூட்டுன்னு கேட்ச் பண்ணியாச்சு.

வலைதளம்: அனுபவஜோதிடம்

நமக்கு ஆயிரம் வேலை தெரியும். எதுக்கும் தயார்.ஆனால் சனம் உள்ளூரைப்போலவே நம்ம ஜோதிட கட்டுரைகளுக்கு பெருசா ரெஸ்பாண்ட் ஆக ஆரம்பிச்சாய்ங்க.

சென்னையை சேர்ந்த திரு சரண் இலவசமா சைட் வச்சு தரேன்னாரு. இல்லையில்லை டொமைனுக்கு மட்டுமாவது காசு வாங்கிக்கிட்டே ஆகனும்னு அடம்பிடிச்சு ஆரம்பிச்சோம்.

ஜோதிடத்துல எத்தனையோ கிளைகள் ,முறைகள் இருக்கு.ஆனால் அனுபவத்துல எது ஒர்க் அவுட் ஆகுதோ அதான் ஃபைனல்ங்கறது நம்ம அனுபவம். ஜோதிட விதிகளை நம்ம அனுபவத்துல புடம் போட்டே தர்ரது வழக்கம்.

அதனால அனுபவஜோதிடம்னு பேரை வச்சோம்.

தங்கள் பார்வையில் தமிழ் இணையம் எப்படி இருந்தது?:

நாம வெளியூரு. மெயின் ஸ்ட்ரீம்ல போறதில்லை. ஒரே ஒரு தாட்டி ஓம்கார் சுவாமிகள் மரம் சிடியை ரீட் பண்ணி கன்டென்டுக்கு ஏத்தாப்ல ரெஸ்பாண்ட் ஆகும்னு எழுத - நாம ஒரு கமெண்டை போட -அதை அவர் நீக்க  அப்பத்தேன் கொஞ்ச நாளு மெயின் ஸ்ட்ரீம்ல வந்தோம்.

அதனால எப்படி இருந்ததுன்னு நாம சொல்றது நியாயமா இருக்காது.

இப்போது எப்படி இருக்கின்றது?:

இதை பற்றி வேணம்னா குத்துமதிப்பா சொல்லலாம். சிலர் ஒரே ஒரு மேட்டர்ல ரெம்ப ஆத்தன்டிக்கேட்டடா தீசிஸ் மாதிரி எழுதறாய்ங்க. வசதி இருந்தா அவிகளுக்கு ஃபெல்லோஷிப்பே கொடுப்பேன்.

இன்னும் சிலர் மேம்போக்கா எழுதினாலும் பொறுப்பா எழுதறாய்ங்க. ஆனால் பலரும் கேப் ஃபில்லிங் மாதிரி செய்திகளை ரீ ப்ரொட்யூஸ் பண்றது - சினிமா -கில்மான்னு தேங்கிப்போயிருக்காய்ங்க. சோசிய பதிவுகளை பத்தி நாம  எதுவும் சொல்லப்படாது.ஏன்னா நாமளும்  ஆட்டத்துல இருக்கம்ல.

நாம என்ட்ரி கொடுத்த புதுசுல திரட்டிகள்ள  தமிழ்மணம் தேன் மோனோப்பலி. தமிழ்மணம் பத்தி மொதல்ல நமக்கு சொன்னது கோவி.கண்ணன் தேன்.

இடையில பிரபாகரன் சாகவில்லைன்னு  ஒரு  பதிவு போட்டு தொலைச்சம்.  அப்பம் கலைஞர் ரெம்ப " நலல பிள்ளை"யா இருந்தாரு.எதுக்கு வில்லங்கம்னு த.ம வுல  கழட்டி விட்டுட்டாய்ங்க.

2009 ல ரீ என்ட்ரி கொடுத்தப்ப கச்சா முச்சான்னு திரட்டிகள். தமிழ்மணம் காரவுக தாங்களே நம்ம வலைப்பூவை இணைச்சுக்கிட்டாய்ங்க. திரட்டிகளில்  பல வந்த வேகத்திலயே மறைஞ்சு போயிட்டாலும் நமக்கு ஹிட்ஸ் கொடுக்கிறது தமிழ்வெளி,தமிழ்10,உலவு தேன்.

மறுபடி தமிழ்மணம் ஜோதிட பதிவுகள் எழுதக்கூடாதுன்னு நிபந்தனை விதிக்க நாம அதை மீற தடை பண்ணிட்டாய்ங்க. இருந்தாலும் மேற்படி திரட்டிகள் உபயத்துல வண்டி அதே வேகத்துல ஓடிக்கிட்டே இருக்கு.

தமிழ் இணையம் எதிர்காலத்தில்எப்படி இருக்கப் போகின்றது?

தமிழ் இணையத்துல ஆரெல்லாம் காசுபார்க்கிறாய்ங்கன்னு நமுக்கு தெரியாது. வெறுமனே ஹிட்ஸுக்காகவே நிறைய இறங்கி எழுதறாய்ங்க. எதிர்காலத்துல காசு பணம் புரண்டா சொல்லவே தேவையில்லை.

நம்மை பொருத்தவரை ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மூலமா  ஹானரோரியம் கணக்கா ஒரு தொகை வந்துருது. இதனால இன்னம் கொஞ்சம் பொறுப்பு கூடுது. நெருப்பா எழுதலின்னாலும் பொறுப்பா எழுதறதா ஒரு கருத்தும் இருக்கு.

எழுதும் போதும் எழுதிய பின்பும் உங்கள் மனோநிலை எப்படி உள்ளது?
எழுதும் போது ஒரு இனிய உடலுறவு போலும் -எழுதிய பின்பு கன்னிகழிந்த  குமரி போலும் உணர்கிறேன்.

பதிவுலகின் மூலம் தாங்கள் அடைந்த உறவுகள், தகவல்கள், மேன்மைகள்:
உண்மைய சொன்னா  இணையம் தான் நமக்கு அன்ன தாதா. தினத்தந்தியில ரூ... ஆயிரம் சம்பளத்துல இருந்தும் அதை விட்டுப்போட்டுட்டம்னா புரிஞ்சுக்கலாம்.

உறவுகள்னா நூத்துக்கணக்கா சொல்லலாம். வயசு வேற 40+ ஆயிருச்சா படக்குன்னு ஞா வந்து தொலைக்கிறதில்லை. தகவல்கள் ? நம்ம வலைப்பூவையும் ,தளத்தையும் நம்ம எழுத்தையும் ப்ரவுஸ் பண்ணா லட்சம் தகவல்கள் .எல்லாத்தையும் இல்லின்னாலும் பேர்பாதிக்கு தந்தது இணையமும்  இணையவழி உறவுகளும் தான்.

மேன்மைகள்:
ஃபிசசிக்கலா சொன்னா நம்ம பொளப்பு ஏறினா ரயிலு  இறங்கினா ஜெயிலுன்னு தேன் இருந்தது. நம்ம லைஃபுக்கு மினிமம் கியாரண்டியே இணையம் தான். ஆரம்பத்துல  நிலா சாரல்,அந்திமழை, முத்துக்கமலம்
இணைய தளங்களில் நம்ம எழுத்து வெளியானது முதல் நாம வெளியடறதா அறிவிச்சதும் நம்ம ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கு 419 பேர் முன் பதிவு செய்தது வரை பல மேன்மைகளை சொல்லனும்.

அம்மன் சத நாமாவளி கையடக்க பதிப்பை இலவசமாக வினியோகிக்க தெலுங்குல வெளியிட உள்ளதாய் முக நூலில்  சொல்ல அது தமிழ்லயா தெலுங்குலயான்னு பார்க்காம  இன்று ஆயிரம் மறு நாள் ரூ.10 ஆயிரம் நன்கொடை  கிடைக்கப்பெற்றது மேன்மைன்னா இதையும் கணக்குல வச்சுக்கங்க.