அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்குத்தேன் பழைய ஃபார்முக்கு வந்து நவகிரகங்களுடன் பேட்டியை தொடர முடிஞ்சது. அதுக்குள்ளயே இந்த வில்லங்க பதிவு.
சில்லறை வர்த்தகத்துல அன்னிய முதலீட்டை கண்டிக்கிற எல்லாருமே ரீட்டெய்லர்ஸை சமூக சேவகர்கள் ரேஞ்சுக்கு பேசறாய்ங்க.
இன்னைக்கு அரிசி விக்கிற விலையில பாதி ஜஸ்ட் 50 சதவீதம் நெல்லை விளைவிச்ச விவசாயிக்கு போயிருந்தா விவசாயிகள் தற்கொலை செய்துக்கற நிலை ஏன் வரப்போகுது? மத்த சரக்குகளோட மேட்டர்லயும் இதேதான் நிலைமை.
இதுக்கு என்ன தீர்வு? விவசாயிகள் கூட்டுறவு பண்ணை விவசாய முறைக்கு மாறனும். அவிகளே அறுத்து -அவிகளே போரடிச்சு -அவிகளே அரிசியாக்கி அவிகளே விக்கனும். ( இதெல்லாம் நடக்கிற விஷயமா?)
தனியொரு நாடாரோ,பாயோ,செட்டியாரோ தன் ஒரு குடும்பத்தை போஷிக்க ரவுண்ட் தி க்ளாக் உழைச்சா அதையாவது புரிஞ்சுக்கலாம். (இதுக்கான லைசென்ஸையே பத்துவருசத்துக்கு மட்டும் தரனுங்கறது நம்ம கொள்கை. ஒழுங்கு மரியாதையா பொளப்பை மட்டும் பார்த்தா பத்து வருசத்துல குடும்பத்தை தூக்கி நிறுத்தி - நிம்மதியா ரிட்டையர்ட் லைஃப் லீட் பண்ணலாம்)
ஆனால் நாளுக்கு நாள் பெருகி வரும் கன்ஸ்யூமரிசம் காரணமா தேவைகள் பெருகிக்கிட்டே போகுது. வெறுமனே நாற்காலியை தேய்க்கிற ஐஏஎஸ் ரேஞ்சுல லைஃபை எஞ்ஜாய் பண்ணனும்னு நினைக்கிறாய்ங்க. அந்த ரேஞ்சுலயே ஹவுசிங் லோன் போட்டு வீடு கட்டறாய்ங்க. அந்த ரேஞ்சுலயே கார் வாங்கறாய்ங்க. அந்த ரேஞ்சுலயே நோய் வாய்படறாய்ங்க. ஈசி மணி மேலான கவர்ச்சியில தலைமுறை தலைமுறையா வியாபாரத்தை தொடர்ராய்ங்க.
சோல் ட்ரேடர் முறையிலயே இதான் நிலை. இதுல நாலு பேரா சேர்ந்து பத்து பேரை வச்சு வேலை வாங்கற யாவாரம் எந்த ரேஞ்சுல இருக்கும்னு பார்த்துக்கங்க. சூப்பர் பஜார் கதையெல்லாம் உங்களுக்கே கொஞ்சமாச்சும் உறைச்சிருக்கும்.
சனத்துக்கு உள்ள இன்னொரு பிரமை என்னன்னா வால் மார்ட் வந்தா ஹை குவாலிட்டி கிடைக்கும்ங்கறது. ஸ்டார் ஹோட்டல்ல ஒரு நா வேலை செய்த அனுபவத்துல பார்த்தது. லைம்ல உப்பு சரியா போச்சா பார்க்க சுட்டுவிரலை விட்டு நக்கி பார்க்கிறதைதான். உப்பு பத்தலின்னா இன்னொரு தாட்டி உப்பு போட்டு நக்கறான். சீல்ட் குளிர் பான பாட்டில்ல கரப்பான் பூச்சி வரலியா என்ன?
விலை வாசி ஏறுது விலை வாசி ஏறுதுன்னா உற்பத்தியாளனுக்கு நாலணா உற்பத்தி செலவு ஏறினா அவன் எட்டணா கூட்டறான். டீலர் ஒரு எட்டணா, ஹோல் சேல் காரன் ஒரு எட்டணா ஏத்த ரீட்டெய்ல் காரன் ஒரு ரூவா -ரெண்டு ரூவான்னு கூட்டிர்ரான்
ரீடெய்லரோட லாபமே அவன் எந்தளவுக்கு அடிமாட்டு விலைக்கு சரக்கு பிடிக்கிறாங்கறதை பொருத்துதான் நிர்ணயிக்கப்படுது. இங்கன நஷ்டபடறது உற்பத்தியாளன்.லாபப்படறது ரீடெய்லன். பேக்கு மாதிரி முழிக்கிறது ? நாமதேன்.
விவசாயி விவசாயத்தை கடன்ல தான் ஆரம்பிக்கிறான். தான் விளைவிச்சதை டவுனுக்கு கொண்டு வர்ரதுக்குள்ளயே தாவு தீர்ந்துருது. அவன் அன்னைக்கே வித்தாகனும். ஆனால் யாவாரிக்கு அப்படியில்லை. வச்சு வித்துக்கலாம். விவசாயி மாலையே காசு பார்த்து (ஊரு) வீடு திரும்பனும். இந்த சின்ன வீக் பாய்ண்டை வச்சுக்கிட்டு பகல் கொள்ளை அடிக்கிறாய்ங்க.
சரி ஒளியட்டும் வரியையாச்சும் ஒழுங்கா கட்டறானா ? இல்லை. இவனுக்கு வரி ஏய்க்க கத்துக்கொடுக்க ஒரு பெரிய நெட் ஒர்க்கே இருக்கு.
இதுவாச்சும் பரவால்லை. மேற்படி சில்லறை வர்த்தகன் இந்தியாவுலயே வாழறான். வாழ்வான்.அவனுக்கு சமூகத்தோட தயவு தேவைப்படுது. சம்பளக்காரனுக்கு அக்கவுண்ட்ல தரான். பெரிய நோட்டுக்கு சில்லறை இல்லின்னா வரப்போ தாங்கங்கறான். பிள்ளை,குட்டிக்கு காது குத்து,கல்யாணம்,பிள்ளை பேறு வந்தா இங்கயே செலவழிக்கிறான்.
அவனண்டை போன பணம் இன்னொரு சந்தர்ப்பத்துல சமூகத்துக்குள்ள பாயுது. மேலும் அவன் இந்திய வங்கிகள்ளயே சேமிக்கிறான். இந்தியாவுலயே வீடு,வாசல் வாங்கறான். இவன் சிதறிக்கிடக்கிறான்.
யூனியன்லாம் ச்சொம்மா . யூனியன்ல பந்த அறிவிச்சா ஷட்டரை சின்னதா திறந்து யாவாரம் செய்துர்ரான். உற்பத்தி பொருளை விக்கிறவனுக்கு ஆயிரம் சாய்ஸ். வாங்கறவனுக்கும் ஆயிரம் சாய்ஸ்.
இவனால ரெம்ப நாளைக்கு ஸ்டாக் வைக்க முடியாது. எலிதொல்லை,பூச்சித்தொல்லையிலருந்து -முதலீட்டு மீதான வட்டி உசந்துருங்கறது வரை ஆயிரம் பிரச்சினை.
அன்னிய முதலீடு வந்தா என்ன ஆகும்? நாம புதுசா கற்பனை பண்ணவேண்டியதோ? ஊகிக்க வேண்டியதோ ஒன்னுமே இல்லை. வால்மார்ட்டோட சரித்திரத்தை பார்த்தா போதும்.உலக நாடுகள்ள வால்மார்ட்டோட லீலைகளை பார்த்த நாடு எதுவா இருந்தாலும் மூடு - ஓடுங்கறான். அதுல வேலை பார்த்தவன்லாம் ஊர்வலம் போறான்.
வால் மார்ட் தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பிச்ச பிறவு காந்தி தாத்தா கணக்கா யாராவது ஒரு தாத்தா வந்து "ஆரும் வால் மார்ட்ல வாங்காதிங்க"ன்னு ரவுசு பண்ணாலும் கு.பட்சம் 3 மாசம் அதிக பட்சம் 1 வருசம் கடை திறந்து காத்து வாங்குவான். நம்ம ஊரு மீடியாவுக்கு ஒரே வாரத்துல போரடிச்சுரும். போராட்டம் சைடு வாங்கிரும்.
செட்டியார், நாடார் ,பாய் எல்லாம் ஒரு நோட்டீஸுக்கே பயந்துக்குவாய்ங்க.கன்ஸ்யூமரையோ -கன்ஸ்யூமர் கோர்ட்டையோ, கமர்ஷியல் டாக்ஸ் ஆஃபீசையோ தேடி சரணடைஞ்சுருவாய்ங்க.
வால்மார்ட் காரன் கிட்டே இதுக்குன்னே லீகல் செல் இருக்கும். சிதம்பரம் சாரோட வொய்ஃப் மாதிரி ஆயிரம் பேரை சம்பளத்துக்கு வச்சுக்குவான். ஒங்கப்பனுக்கும் பேப்பே ..ஒங்க தாத்தனுக்கும் பேபே தான்.
சொந்த கட்டடத்துல செமை கெத்தா ஆரம்பிப்பான். கடைக்கு பக்கத்துல மூச்சா போனா கூட
என்கவுண்டர் பண்ண வச்சிருவான். இதுல குடிசை பகுதி, பொதுக்கழிப்பிடம்லாம் இருந்தா என்னாகும்னு இமேஜின் பண்ணிக்கங்க.
பிலிடிங்,பெய்ன்டிங்,கார்ப்பென்டரிங்,இன்டீரியர் எல்லாத்துக்கும் காண்ட்ராக்ட் விட்டுருவான். ( நம்மாளு ஒருத்தன்னா ஒருத்தன் கூட நேரடியா காலணா வேலை வாங்க முடியாது) சப் காண்ட் ராக்டர் கிட்டெ சப் காண்ட்ராக்ட் எடுத்து அடிமாட்டு விலைக்கு செய்ய வேண்டியதுதான். ஒரு அண்ணாச்சியையோ,ஒரு பாயையோ, ஒரு செட்டியாரையோ ஏமாத்தற மாதிரில்லாம் ஏமாத்த முடியாது.
வேலைக்கு ஆள் எடுப்பான். எம்.பி.ஏ ,சாஃப்ட் வேர் இஞ்சினீர் எல்லாம் வால்மார்ட் பள பளப்பை பார்த்து அப்ளை பண்ணி கொத்தடிமை கணக்கா நாயடி பட வேண்டியதுதான்.
அடுத்தது கொள் முதல். கம்பெனி ஆளு ஜாமொரின் கிட்டே வந்து கிடங்கு கட்ட அனுமதி கேட்ட கணக்கா பதவிசா விவசாயி கிட்டே விலை பேசுவான். வாங்குவான்.அடுத்த வருச கொள்முதலுக்கு அக்ரிமென்ட் போடுவான்.
மக்காசோளம்னா கோயம்பேடு மார்க்கெட் போல பொடிசு ,சிறுசு,பெருசுன்னு கிரேடிங் இருக்காது. தங்கம் நிறுத்த கணக்கா இருக்கோனம். இல்லேன்னா விலை பாதியா குறையும். குறைஞ்சாலும் பரவால்லை. ஒரு வேளை வானம் பொய்ச்சு போச்சுன்னா ?
நம்ம ஊருல எல்லாம் இந்த மேரி மேட்டர்ல விவசாயி கிட்டே போடற அக்ரிமென்ட்ல சாஸ்தி கம்மி ஆயிருச்சுன்னா அடுத்த வெள்ளாமையில அஜீஸ் பண்ணிக்குவாய்ங்க. வால்மார்ட் என்னா பண்ணுவான் ஆருக்கு தெரியும்?
ஒரம் தரேன், விதை தரேன்னு ஆரம்பிக்கலாம். ஒரு கட்டத்துல என் கிட்டதான் ஒரம் வாங்கனும்னு கட்டாயப்படுத்தலாம். நம்ம விவசாயி ப்ரீச் ஆஃப் அக்ரிமென்ட்டுன்னா அவன் கிட்டே லாயர்கள் கூட்டமே இருக்கும். அவன் ப்ரீச் ஆஃப் அக்ரிமென்டுன்னா விவசாயி எங்கன போறது?
நம்ம மக்களுக்கு உள்ளூர் சரக்குன்னா எட்டி , வெளியூர் சரக்குன்னா சர்க்கரை கட்டியாச்சே. இந்த வீக் பாய்ண்டை அவன் கெட்டியா பிடிச்சு கொண்டு வந்து குமிச்சுட்டான்னா உள்ளூர் சரக்கையெல்லாம் குப்பையில கொட்டறதா? அதை விளைவிச்சவன் கதி என்ன?
லார்ஜ் ஸ்கேல்ல பண்றதால குறைஞ்ச விலையில தருவாங்கறாங்க. இது ஒன்னு மட்டும் நிச்சயம். தேன் நிலவு முடியறவரை - மத்த கடைக்காரன்லாம் சிட்டியில உள்ளவன் டவுனுக்கு,டவுன்ல உள்ளவன் கிராமத்துக்கு ஊரு நாட்டை பார்க்க ஓடிப்போயிர்ர வரை தருவான்.
அதுக்கப்பாறம் ? கொய்யால .. சந்து முனையில டூ வீலர்ல நின்னுக்கிட்டே கொத்து மல்லி வாங்கறதெல்லாம் கனவாயிரும்.பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு சப்போட்டா வாங்கறதெல்லாம் மலயேறிரும்.
அங்காடடித்தெரு கணக்கா கடை தான் ஜொலிக்கும். உள்ளாற வேலை பார்க்கிறவன் வாழ்க்கையெல்லாம் இருண்டுக்கும்.
அந்த கடுப்புல - அவசரத்துக்கு வாங்கப்போன நம்மை கொழுப்பெடுத்து வர்ரானுவடாங்கற ஃபீலிங் அவிகளுக்கு வர - நாம தேய்க்க கொடுக்கிற டெபிட் கார்ட்,கிரெடிட் கார்ட்ல வேலை கொடுத்துட்டா என்னாவும்?
லோக்கல்ல ஒரு கார்ப்பரேட்டர், ஒரு லோக்கல் எம்.எல்.ஏவை சரி பண்ணிக்கிட்டே அவனவன் என்னென்னமோ ஆட்டம் போடறான். என்னென்னமோ அழிச்சாடியம் பண்றான்.
தாளி ..மூலஸ்தானத்தையே கைக்குள்ள வச்சிருக்கிற வால்மார்ட் காரன் என்ன பண்ண மாட்டான்? ரோசிங்க நைனா..
# டவுட்டு
இதை எதிர்க்கிறோம்னுட்டு பம்மாத்து காட்டிட்டு வாக் அவுட் பண்ணவுகளுக்கும், ஆதரிக்கிறோம்னு ஆதரிச்சவுகளுக்கு என்னா தகிரியங்கறிங்க? ஒரு வேளை அடுத்த தேர்தல்ல வால்மார்ட் ஷேர் ஹோல்டர்ஸ் மட்டும் ஓட்டுப்போடுவாய்ங்களோ?