Tuesday, December 11, 2012

நவகிரகங்களுடன் பேட்டி: சந்திரன்

அண்ணே வணக்கம்ணே !

நீங்க நம்ம கிட்டே என்ன எதிர்ப்பார்க்கிறிங்க? நமக்கு புவ்வாவுக்கு வழி பண்றது எது ? எல்லாமே நெல்லா தெரியும்.

ஆனாலும் இன்னைக்கு நாம ரசினி காந்தை கேட்டாப்ல  நாளைக்கு நம்மை ஒரு பார்ட்டி கேள்வி கேட்டுரக்கூடாதேங்கற பயத்துல - அட கேட்டாலும் சால்ஜாப்பு சொல்லிக்கலாம்னு வைங்க. இந்த மனசாட்சி மனசாட்சின்னு ஒன்னு இருக்கே . இது பொஞ்சாதியை விட மோசம்.

ஒரு டிடிஹெச் ஐ வச்சு பொஞ்சாதி வாயை அடைச்சுரலாம்.ஆனால் இந்த மனசாட்சி? ஊஹூம்.. நாம தூங்கப்போறதே விடியல்லதேன்.அப்பமும் தூங்க விடமாட்டேங்குதுண்ணே.

அதனாலதேன்  அப்பப்போ ட்ராக் மாறி ரஜினி,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றியெல்லாம் எழுத வேண்டியதா இருக்கு.

அதே சமயம் நாம ஏதோ சனங்க மேல அக்கறையோட இதெல்லாம் பண்றோம்னு நினைச்சா அதுவும் தப்பு. ஆத்தாளுக்கும் நமக்கும் ஒரு அக்ரிமென்ட் "ஆத்தா .. நீ என்னை பார்த்துக்க - நான் இவிக மேட்டரை பைசல் பண்றேன்"

அடுத்து இம்மாம் அறிவையும் சுய நலத்துக்கு பயன்படுத்தினம்னு வைங்க கருமம் தேன் வந்து சேரும் . போன சன்மத்துல என்னா கருமம் பண்ணமோ இந்த சன்மத்துல 14 வருச வனவாசம் மாட்டிக்கிச்சு. ஊர் வேலை செய்தம்னு வைங்களேன் கருமம் தொலையும்.

அவ்ளதானே தவிர சனங்க மேல நமுக்கு அக்கறைல்லாம் கிடையவே கிடையாது. அதுவும் தன்னை தனக்கு மேல உள்ளவன் சுரண்ட சுரண்ட -  தனக்கு கீழே உள்ளவனை தான் சுரண்டற சனம்னா நமுக்கு எந்தவித சாஃப்ட் கார்னரும் கிடையாது.

மொக்கை ஓவராயிருச்சுல்ல . இதோ  மெயின் ட்ராக்குக்கு வந்துட்டன். நவகிரகங்களுடன் பேட்டி இந்த பதிவில்  தொடருது. சூரியன் ஓவர். இன்னைக்கு சந்திரன். சந்திரன்னு அடிச்சதுமே கவிதை பொங்குது.

சந்திரனோ நீ மந்திரனோ
மந்திரமே போல்
எம் மனம் மாற்றும் மாயாவி

எண்ணம் போல் மனம் என்றார் சான்றோர்
மனம் ஒரு குரங்கென்றார் ஆன்றோர்

எண்ணம் ஒரு விதையானால்
மனம் அதை ஏற்கும் நிலமாமே

நின் பலம் பொருத்தே மனம்
மனதின் வலு பொருத்தே கிளை விடும்  எண்ணம்

எண்ணங்கள் விரிந்திடில் மனம் அது  மாறும்
அதற்கும் தேவை நின் பலம்.

மனம் ஒரு குரங்கென்றார்.
எம் மனமாளும் மன்னவன் நீ ..

ஒரு  நாளில் சாரம் மாறி -அதற்குள்
இரு சோடி பாதம் மாறி

எம் மனதை மாற்றி மாற்றி
அதற்கே குரங்கெனும் பெயர் தந்தாய்.

இதே ரேஞ்சுல நாற்பது பக்கம் அடிச்சுரலாம் போல ஊற்று பொங்குது. கவிதை பிறப்பது மனதில் . சந்திரன் தான் மனோகாரனாச்சே.

இருந்தாலும்  இந்த சேதி அல்லாரையும் ரீச் ஆவுறதுக்காவ நம்ம நடைக்கே திரும்பிர்ரன்.

சந்திரன் பெண் கிரகம் என்பதை மனதில் வைக்கவும். ஆனால் நாம பாட்டுக்கு கலாய்க்க மாதர் சங்கம் காரவுக எதுனா புகார் பண்ணிட்டா வம்பு.அதனால சந்திரனை ஆணாகவே ட்ரீட் பண்ணி இன்டர்வ்யூவை முடிச்சுர உத்தேசம்.

நான்:
குட் மார்னிங் தாத்தா !
 சந்திரன்:
மானுடனே.. நாங்க அமுதம் சீப்பி குடிக்கிறவுக. சீப்பா தாத்தாங்கறே..

நான்:
கொஞ்சம் பொறுமையா இருந்தா உறவு முறையை விளக்கமா சொல்றேன்.

சந்திரன்:
சொல்லித்தொலை

நான்:
தாத்தா.. லெச்சுமிக்கு பிரம்ம தேவர் மகன் முறை. விஷ்ணுவோட ஹிப்லருந்து தான் பிரம்மா வந்தாராம்ல.  நான் கலைமகளோட மவன். கலைமகளுக்கு மாமி லெச்சுமி.  மம்மிக்கு மாமியார் எனக்கு பாட்டி முறை. . லெச்சுமிக்கு நீ எல்டர் ப்ரதர். அப்ப நீங்க  தாத்தா  இல்லாம வேற என்னவாம்?

சந்திரன்:
அடங்கொய்யால .. 45 வருச குப்பைய மண்டையில சேர்த்து வச்சிருக்கிற நீ யூத்து .  ரெண்டே கால் நாளைக்கு ஒரு தடவை ஓ.எஸ் ஐ அப்கிரேட் பண்ணி - 14 நாளைக்கு ஒரு தடவை  ஹார்ட் டிஸ்கை ஃபார்மட் அடிச்சுக்கிற  நான் கிழவாடி .ஒனக்கு தாத்தாவா?

நான்:
ஹார்ட் டிஸ்கு ஒன்னுதானே தாத்தா ..

சந்திரன்:
த பாரு . உன் வழிக்கே வந்துர்ரன் .அப்பன் மவனுக்கு இடையில வேணம்னா ஈகோ ப்ராப்ளம் இருக்கலாம். தாத்தா பேரனுக்கு இடையில ஃப்ரெண்ட்ஷிப் தான் இருக்கும். என்னை ஃப்ரெண்டா ட்ரீட் பண்ணி பேசறாப்ல இருந்தா பேட்டி இல்லின்னா சர்தான் போடீ..

நான்:
தாத்.. சாரி.. ஃப்ரெண்ட் !  .. இதுக்கே கோவிச்சுக்கிட்டா எப்டி.. பேட்டி நிச்சயம் தேவை. கேள்விகளளை கேட்கட்டுமா?

சந்திரன்:
கேள்.ஆனால் ஒரு நிபந்தனை பதில்  நாளைக்குத்தேன்.

நான்:
என்னைக்கோ எப்படியோ  பதில் தருவிங்கல்ல.. கேட்டுர்ரன்

1.கடலுக்கும் உங்களுக்கும் என்ன லிங்க்?

2.ஹ்யூமன் பாடியில உள்ள நுரையீரலுக்கும் உங்களுக்கும் இருக்கிற கனெக்சனுக்கு அடிப்படை என்ன?

3.உங்களுக்கு மனோகாரகன்னு ஏன் பேர் வந்தது?

4.பப்ளிக் சப்போர்ட்டுக்கு உங்க பலம் தேவைங்கறாய்ங்களே  அது ஏன்?

5.சந்தையிலருந்து - மேரேஜ் ஹால் வரை ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள இடங்களுக்கு நீங்கதேன் இன்சார்ஜாம்? இதுல உள்ள லாஜிக் என்ன?

6.உங்களுக்கு எந்த கிரகமும் பகையில்லைங்கறாய்ங்களே அது இன்னா கணக்கு?

7.பிரமுகர்களின் மனைவிகளுக்கு நீங்க தான் அதிபதியாம் இதுக்கு என்ன காரணம்?
8. தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுக்கெல்லாம் உங்க பலம் அத்யாவசியம்ங்கறாய்ங்க. இதன் பின்னான தர்க்கம் என்ன?
9.மனம் , நுரையீரல், சிறு நீரகம் இந்த மூன்றுக்கும்  உங்களூக்கும் இடையிலான தொடர்பு என்ன?
10.காதல்ல உங்க ரோல் என்ன?
11. சஞ்சலத்துக்கு நீங்கதேன் காரகமாம். சஞ்சலத்தால நன்மையா தீமையா?
12. படகு, கப்பல்,கடல்  பயணம் இதுக்கும் உங்களுக்கும் என்ன லிங்கு?
13.அழுகும் பொருட்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
14.சந்திர பலம் உள்ளவன் எப்படி இருப்பான்?
15.இல்லாதவன் எப்படி இருப்பான்?
16.சந்திர காரகம் கொண்ட பெண் எப்படி இருப்பாள்?

குறிப்பு:
கேள்வி நான் மட்டும் கேட்கனம்னு  இல்லை. நீங்களும் கேட்கலாம். அடிச்சு விடுங்க.

எச்சரிக்கை:
அண்ணே ..நம்ம லோக்கல் ஆட் மேகசின் சார்பில் டெய்லி காலண்டர் போடப்போறோம். அதுவும் 1+1 .கமர்ஷியல் ஒன்னு ,பொலிட்டிக்கல் ஒன்னு. இது இல்லாம காண்ட் ராக்ட்  அடிப்படையில யாவாரிங்களுக்கு தனியே போட்டு தரப்போறோம். முன்னது இரண்டும்  நேரடி இலவச வினியோகம்.பின்னதை பார்ட்டிக்கு கொடுத்துர அவிக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துருவாய்ங்க./
இந்த டீட்டெய்ல் எல்லாம் தந்தது  டிசம்பர் 15 வரை இப்படி அரைகுறை பதிவா தான் வரும்னு சொல்லத்தேன். உடுங்க ஜூட்டு.கடமை அழைக்குது..