Tuesday, December 25, 2012

நவகிரகங்களுடன் பேட்டி: செவ்வாய்

அண்ணே வணக்கம்ணே !

நவகிரகங்களுடன் பேட்டி தொடர்ல சூ,சந்  ஓவர். இன்னைக்கு செவ்வாய். தினசரி ஒருத்தருக்கு அவிகளோட எதிர்காலம் குறித்த 10 கேள்விகளுக்கு இலவசமா பதில் தரப்போறோம். இது ஜனவரி  1 முதல் 100 நாளைக்கு அமல்ல இருக்கும். இதுக்கு என்ன பண்றது ஏது பண்றது தெரியனும்னா பக்கத்துல உள்ள விட்ஜெட்டை க்ளிக் பண்ணுங்க. விட்ஜெட்னா என்னானு தெரியலியா? இங்கே க்ளிக் பண்ணுங்க.

பதிவுக்கு போயிரலாமா?

செவ்வாய் 2012 டிசம்பர் 19 முதல் 2013  ஜனவரி 25 வரைக்கும்  மகரத்துல தன் உச்ச ராசியில உட்கார்ந்திருப்பாரு. இவரை பேட்டி எடுக்கனும்னா  நாமளும் மகரத்துக்கு போக வேண்டியதுதான்.

நான்:வணக்கம் சார் !
செவ்: வணக்கம்.  வாய்யா ! என்னடா இன்னம் ஆளை காணோமேன்னு நினைச்சேன் வந்துட்ட. திங்க் ஆப் எ டெவில் மாதிரி ..

நான்:
பாஸூ .. நமக்கு அன்னதாதாவே நீங்க தானே .. உங்களை விட்டுர முடியுமா என்ன?

செவ்:
ஓஹோ ..ஜீவனாதிபதின்னு சொல்றியா? சரி நான் கொடுக்கிற தொழில் அமைப்பை சொல்லு பார்க்கலாம்.ஒரே வார்த்தையில சொல்லனும்.

நான்:
தர்கத்துக்கு இடமுள்ள எல்லா தொழிலுக்கு உங்க பலம் தேவையாச்சே தலை.. இந்த முட்டாள் உலகம் எல்லாத்துலயும் தர்கத்தை தானே தேடுது ஷேர் மார்க்கெட் உள்பட.

செவ்:
அப்போ தர்கம் தேவைப்படாத இடத்துல என் பலம் உதவாதுங்கறியா?

நான்:
இல்லையா பின்னே..

செவ்:
செல்லம் ! வாளை தூக்கி வீச தெரிஞ்சவனுக்கு  அதை தூக்கி வீசவும் தெரியுமில்லை. தர்கத்தை முழுக்க அறிஞ்சவனுக்கு அதை தூக்கி வீசறதும் ஈஸிதானே .  அரை குறைங்கதான் நடுக்கத்துல  கக்கா போறச்ச கூட கத்தி வச்சுக்கிட்டிருக்கும்.

நான்:
அப்போ .. நீங்க ஆல் இன் ஆல் அழகுராஜாங்கறிங்க..

செவ்:
லேசா மாத்தி சொல்லு. என்னோட பலம் உள்ளவன் ஆல் இன் ஆல் அழகுராஜா..

நான்:
நம்முது கடகலக்னம். ஜாதகத்துல  நாலாமிடத்துல நின்னிருக்கிங்க.  ஜீவனாதிபதி 4 ல் நின்று 4 க்கு அதிபதி 2 ல  நின்னா நிட்சேப யோகம்னு எங்கயோ படிச்சன். அதாவது  புதையல் எடுக்கனுமாம். அங்கங்கே புதையல் எடுக்க க்ரூப்பா அலையறானுவ . எனக்கு மட்டும் அந்த எண்ணமே அருவறுப்பா இருக்கே ஏன் பாஸூ..

செவ்:
என்னை கிண்டி விட்டு மேட்டர் வரவழைக்க பார்க்கிறே..நடக்கட்டும் நடக்கட்டும்.  ஜீவனம்ங்கறது பொளப்பை காட்டற இடம் . 4ங்கறது வித்யாஸ்தானம் . அதாவது உன் பொளப்பே லெர்னிங். ச்சொம்மா படிச்சுக்கிட்டே இருந்தா கண்ணு தான்  டப்ஸாகும். முதுகு வலிக்கும். பைல்ஸ் வரும். படிச்சதை செரிச்சுக்கிட்டு வாயா வார்த்தையா நாலு பேருக்கு சொன்னா தானே நாலு காசு பார்க்கலாம்.  அதனாலதேன் 10 க்கு அதிபதி 4 ல நின்னு  அதுக்கு அதிபதி  2 ல நின்னா புதையல் யோகம்னு சொல்லியிருக்காய்ங்க.

நான்:
அது சரி 4 ங்கறது தாய்,வீடு,வாகனம் இத்யாதிய கூட காட்டுதில்லியா?  அந்த மேட்டர்ல ஏன் ஒர்க் அவுட் ஆகலை?

செவ்:
கொய்யால ஒங்க வீடே உன் அம்மா பேர்ல தானே இருந்தது. அதை வித்து உன் ஷேரா கொடுத்த லட்சத்து ரெண்டாயிரத்தை நாசமாக்கினதை மறந்துட்டியா?

நான்:
ஓ இப்படி வரிங்களா? வந்தது ஓகே.அது ஏன் நாசமா போச்சு?

செவ்:
நான் 4 ஆமிடத்துல நின்னா தரித்திரயோகம்னு ஒரு விதி இருக்குல்ல. அதான்

நான்:
என்ன பாஸூ .. 4 ஆமிடத்துல செவ் இருந்தா (விஷய ஞான) புதையல் எடுக்கனுங்கறிங்க.அப்பாறம் பார்த்தா தரித்திர யோகம்ங்கறிங்க? குழப்பமா இருக்கே.

செவ்:
கண்ணா .. 4ங்கறது வித்யாஸ்தானம். நான் தர்க்கத்துக்கு அதிபதி . எல்லா வித்தைகளுக்கும் தர்கம் தான் அடிப்படை . அதனால  விஷய ஞானத்துல புலி ஆயிட்டே. பையில பைசா இருக்கிறச்ச நீ எத்தீனி மேட்டரை தெரிஞ்சுக்கிட்டே. வவுத்துல பசி இருக்கிறச்ச எத்தீனி மேட்டரை தெரிஞ்சுக்கிட்டே கணக்கு போட்டு பாரு.. கும்பி காஞ்சாதான் மேட்டர் உள்ள போகும் அம்பீ !

நான்:
இப்படி வர்ரிங்க .ஓகே ஓகே.. உலக ஞான விஷயங்கள்ள தர்க்கம் ஓகே. 120 வயசு கிழவாடில்லாம் ஆன்மீகத்தோட சில்லி வேரை பிடிச்சு சிங்கியடிச்சுக்கிட்டிருக்காய்ங்க.ஆனால் நமக்கு மட்டும் அசால்ட்டா ஆணிவேரே மாட்டிக்கிச்சே .ஆன்மீகத்துல தர்க்கமே கிடையாதில்லியா? இது எப்படி சாத்தியமாச்சு?

செவ்:
நாலாமிடத்துல நான் மட்டுமா இருக்கேன். என்னோட கேதுவும் இருக்காரில்லை. கேதுதானே ஞானகாரகம் -மோட்ச காரகன்.

நான்:
அது சரி நீங்க 3,6,10,11 தவிர எங்கன இருந்தாலும் தோஷம்ங்கறாய்ங்க. அப்போ நாலாமிடத்துல நீங்க இருந்தா  தோஷத்தை தானே தரனும். அது எப்படி ஆன்மீகம் -லௌகீகம்னு ரெண்டு மேட்டர்லயும் நன்மைய தந்திருக்கிங்க?

செவ்:
நைனா ..சினிமா ஷூட்டிங்ல லைட்ஸ் ஆன் பண்ணதும் வெறும் வெளிச்சம் மட்டுமா வருது. சூடு கூட பரவுதில்லை.  அப்படித்தேன் இதுவும். 4ங்கறது தாயை காட்டற பாவம். அம்மாவுக்கு உன்னோட 17 வயசுலயே டிக்கெட் போட்டுட்டம்.

4 ங்கறது வித்யா ஸ்தானம் 20 வயசுல படிப்பு க்ளோஸு. ஒடம்பெல்லாம் ப்ரெய்னனை வச்சிருந்தாலும் ஹால் டிக்கெட்டை காணாம போக்கி ஆப்படிச்சமா இல்லியா?

4ங்கறது வீட்டை காட்டற இடம் . 24 வயசுலயே ஒன்னை வீட்டை விட்டு வெளியேத்தி அங்காடி நாயா அலைய விட்டமில்லை. வாடகை வீடுகள்ள அல்லாடினியா இல்லியா?  3 நாள்லயெல்லாம் வீட்டை மாத்தியிருக்க இல்லியா? 30 வயசுல ஏகமா வீட்டை ஆட்டைய போட்டுட்டம். அதை வித்து வந்த பணத்தை கூட எரிச்சுட்டமில்லை. மேசை நாற்காலில்லாம் கூட வித்து தின்னிருக்கல்லியா? இதான் தோஷம்.

நான்:
அது சரி.. அப்பம் செவ்வாயோட கேது சேர்ந்தா தோஷம் பரிகாரங்கறாய்ங்களே..

செவ்:
கண்ணா .. நீ மட்டுமில்லை. நாட்ல நிறைய பேரு தோஷ பரிகாரம்னா தோஷத்தை காக்கா தூக்கிட்டு போயிரும்னு நினைக்கிறாய்ங்க. தோஷம்னா டேமேஜஸ். பரிகாரம்னா டெமரேஜஸ். தமிழ்ல சொன்னா தோஷம்ங்கறது நஷ்டம். பரிகாரம்ங்கறது நஷ்ட ஈடு. ஒன்னையே எடுத்துக்க அம்மாவுக்கு டிக்கெட் போட்டம் . ஆனால் ஆத்தா அந்த இடத்தை ஃபில் அப் பண்றாள். வீட்டை காலி பண்ணிட்டம். இந்திய நாடு என் வீடுங்கற ரேஞ்சுக்கு ஒன்னை  கொண்டு வந்துட்டம் . அடுத்து வாகனம்னா பாரதி சொன்னாப்ல ஞான ரதத்தோட ஸ்டீரிங்கையே கையில கொடுத்துட்டம் .  கூட கேது மட்டுமில்லாம இருந்திருந்தா போனதை நினைச்சே நாறியிருப்பே. கூட கேது இருந்ததால எது போனாலும் - இதை பாலன்ஸ் பண்ண  எதுவரும்னு கெஸ் பண்ண ஆரம்பிச்சுட்ட.

சுந்தர சைதன்யானந்தா சொல்றாப்ல கடவுள் எதையாச்சும் கொடுத்தா பிரசாதம் -எடுத்துக்கிட்டா காணிக்கைங்கற மன நிலைக்கு வந்துட்ட. இதுக்கு மிஞ்சின பரிகாரம் என்னா வேணம்ங்கறே..

(செவ்வாயுடன் பேட்டி தொடரும்)