அண்ணே வணக்கம்ணே !
பதிவுலகத்துக்கு வந்து 11 வருசம் ஆகுது ( 200,ஜூலை,31) ஓரளவுக்கு பேர் சொல்ல ஆரம்பிச்சும் பல காலம் ஆகுது ( 2009,மே) ஆனாலும் இந்த மேட்டரை டச் பண்ணவே இல்லை. எதைத்தான் விட்டுவச்சிருக்கம்.அதனால இதையும் இன்னைக்கு தோரஹா பண்ணிருவம்.அதாவது ஜாதகத்தில்
/கோசாரத்தில் எந்த கிரகம் கொல்லும் ,எந்த கிரகம் நன்மையை செய்யும்னு இப்பம் பார்த்துருவம்.
கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் / லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் இருக்கு. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ங்க அனுபவத்துல இதான் சரியா வருதுன்னு பல தடவை சொல்லியிருக்கேன். ஏனோ எந்த லக்னத்துக்கு எந்த கிரகம் நன்மை தரும் -தீமை தரும்ங்கற மேட்டருக்குள்ள மட்டும் போகவே இல்லை. அதை இப்ப பார்த்துரலாம்.
அதுக்கு மிந்தி ஒரு விஷயம் லக்னம் முதற்கொண்டு எண்ணும்போது 2,3,7,8,12 ஆம் பாவங்கள் மாரகஸ்தானங்கள்னு சொல்றாய்ங்க. மாரகம்னா தெரியும்ல. மரணம். ஜோதிடப்படி மரணம் -சிறை -அவப்பேர் -ஐ.பி போடறது -அண்டர் கிரவுண்ட் போறது இது எல்லாமே சமம் தான்.
இவை 2,3,7,8,12 பாவ காரகத்வத்தால நடக்க அதிகமான வாய்ப்பிருக்கு.அதனாலதேன் இவற்றை மாரகஸ்தானம்னு சொல்லிவச்சாய்ங்க.
2.தனஸ்தானம்:
சத்யம் ராமலிங்கராஜூவை உள்ளே அனுப்பினது இந்த கொடுக்கல் வாங்கல் மேட்டருதேன். வராத லாபத்தை வந்ததா காட்டி தில்லாலங்கடி பண்ணாரு ஞா இருக்குல்ல.
2 : வாக்குஸ்தானம்:
வை.கோ ,சீமான்லாம் சகட்டு மேனிக்கு பேசித்தானே உள்ளாற போனாய்ங்க
2.குடும்பஸ்தானம்:
கனிமொழியை செயிலுக்கு அனுப்பினது குடும்பம்தானே
3.சகோதர ஸ்தானம்:
நிறைய அரசியல்வாதிங்க தாங்கள் நேரிடையா செய்யமுடியாத மேட்டரையெல்லாம் சகோதரர்களை வச்சு செய்றது ஃபேஷன். அப்பாறம் ஆப்படிச்சுக்கறதும் ரொட்டீன். உ.ம் ஆற்காடு வீராசாமி , ஆந்திராபக்கம் வந்தா எங்க சி.எம் கிரண்
3.தைரிய ஸ்தானம்:
அஞ்சுவதஞ்சுதல் அறிவுடைமைங்கற பஞ்சை மறந்துட்டு "வேணம்னா இந்திராகாந்திக்கு விதவை பென்ஷன் தரோம் வரச்சொல்லுங்க"ன்னுட்டு எமர்ஜென்ஸி காலத்துல பல்பு வாங்கினவுகளை கேளுங்க.விவரமா சொல்வாய்ங்க.
7.களத்ர ஸ்தானம்: (ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்)
ராஜீவ் கெட்டது நண்பர்களாலே,ஜெ கெடப்போறது நண்பியாலே, என்.டி.ஆர் கெட்டது காதலாலே, கலைஞர் கெட்டது பார்ட்னராலே (கலைஞரும் -எம்.ஜி.ஆரும் எதை எதையோ ஷேர் பண்ணிக்குவாய்ங்களாமே -அப்பம் பார்ட்னர்ஸ்தானே)
8.ஆயுள் பாவம்:
வெல்ல முடியாத ,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சத்ரு, தீராத ரோகம், தீர்க்கமுடியாத ருணம்(கடன்),சிறைப் படுதல், மஞ்சள் கடிதாசு கொடுத்தல்,அடிமையாதல்,மேஜர் விபத்து, ஆப்பரேஷன்,மர்மஸ்தானம் இதை எல்லாம் காட்டும் இடம் ஆயுள்பாவம். இதுகளால கெட்டவுக மஸ்தா பேரு கீறாய்ங்க. வேணம்னா ஒரு லிஸ்டை நீங்களே ப்ரிப்பேர் பண்ணுங்க.
12.விரயபாவம்:
ஆனமுதலில் அதிகம் செலவானால் பாட்டு தெரியுமா? வரவு எட்டணா செலவு பத்தணா பழமொழி தெரியுமா? ஸ்ரீ தேவி திவாலாகி /கணவரையும் திவாலாக்கின கதை தெரியுமா? ப்யூட்டி பார்லருக்கே கோடிகளை செலவழிச்சாய்ங்களாம். லேட்டஸ்ட் உதாரணம் விஜய் மால்யா.
ஆகவே இந்த பாவங்கள்/பாவாதிபதிகள் கெடுவது,பலகீனப்படுவது நெல்லது பாஸ்.
1.மேஷம்:
சூரியன் ,குரு நன்மை செய்யும் கிரகங்கள்.ஆனால் இவர்களுக்கு சனியோட தொடர்பு ஏற்பட்டால் பல்பு தேன். சூரிய,சனி சேர்க்கை தொடர்பு ஏற்பட்டா கால்ஷிய குறைபாட்டால் வரும் பிரச்சினைகள் வரலாம், மேலும் இது அப்பாவுக்கும் அப்பாவுடனான உறவுக்கும் நல்லதில்லை, குரு சனி சேர்க்கை ஏற்பட்டா வயிறு இதயம் பிரச்சினைய கொடுக்கும்.ஜாதகர் பெரியாரிஸ்டா மாறும் வரை வறுமை தனிமை வாரிசின்மை எல்லாம் வாட்டும்.
சூரிய குரு சேர்க்கை யோகத்தை தரும். 5க்கதிபதியான சூரியன் 9 க்கு அதிபதியான குருவோட சேரும்போது குரு மங்கி போயிருவாரு. அதாவது பல மேட்டர்ல அப்பாவை பீட்பண்ணிருவிங்கன்னு அருத்தம். ( நிபந்தனை: சேர்க்கையில ரெண்டு பேருக்கும் ஓரளவுக்காவது பலம் இருக்கனும் - இந்த சேர்க்கை 6,8,12 போன்ற துஸ்தானங்களில் ஏற்பட்டிருக்கக்கூடாது)
புதன்,சுக்கிரன்,சனி பாபிகள். சனி ,புதன் மாரகர்கள். ரெண்டாம் பாவாதிபதியானாலும் சுக்கிரன் டிக்கெட் போடமாட்டாரு. சனி புதன் போட்டுருவாய்ங்க. இவிக மாரக ஸ்தானங்களான 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கொப்பான கெண்டம்.
எப்டி எப்டின்னு கேப்பிக.சொல்றேன். மேஷ லக்னத்துக்கு சனி 10,11 க்கு அதிபதி புதன் 3,6 க்கு அதிபதி.
உதாரணமா சனி 2 ஆவது இடத்துல நின்னா அவரு லாபஸ்தானாதிபதிங்கறதால வீண் பேச்சு (அதுவும் நம்ம ப்ளாகோட பேரு மாதிரி பட்டவர்த்தனமா நிர்வாண உண்மைகளை பேசி ரெட் கார்டு வாங்கலாம், அல்லது ரெண்டு ஃபேமிலின்னு ட்ரபுள் கொடுக்கலாம்.அல்லது அவர் ஜீவனஸ்தானாதிபதிங்கறதால ச்சொம்மா பேசிக்கிட்டிருந்தா போதும் அதான் நம்ம வேலைங்கற மென்டாலிட்டி வந்துரலாம்.அல்லது தன் தொழில் ரகசியங்களை கூட உளறிக்கொட்டி தனக்குத்தானே ஆப்பு வச்சுக்கலாம்.பொதுவாவே சனி ரெண்டுல நின்னா ஆப்புதேன். ( நம்ம கேஸையே பார்க்கறிங்கள்ள - சனி 3 க்கு பெயர்ந்தும் அப்பப்போ தடுக்குது) மேலும் பேமெண்ட் எல்லாம் டிலே ஆகும்.குடும்பத்துல ஒரு விதமான சோம்பல் -வறுமை நிலை இருக்கலாம்.( கிருஷ்ணா ! திருத்தியாச்சு.ஓகேவா )
இப்படியே 3,7,8,12 ல சனி இருந்தா என்னெல்லாம் தீமை நடக்கும்னு கெஸ் பண்ணிப்பாருங்க. கமெண்டா போட்டாலும் ஓகே.
2.ரிஷபம்:
சூரியனும்,சனியும் நல்லவர்கள். சனி நெல்லவருன்னா லாஜிக் இருக்கு .( 9-10 க்கு அதிபதிங்கறதால) சூரியன் எப்படி நல்லவருனு கேப்பிக.சொல்றேன். இவரு நாலுக்கு அதிபதி. வித்யாஸ்தானாதிபதி. சூரியன் உதிச்ச பிற்பாடு கயிறா பாம்பாங்கற சந்தேகமே வராதுல்லியா.அதைப்போல இவிகளோட அறிவு சூரியனை போல பிரகாசிக்கும்.அந்த வெளிச்சத்துல நெல்லது -கெட்டதுல்லாம் பக்காவா புரிஞ்சி சாலாக்கா நடந்துப்பாய்ங்க.
சனி யோக காரகன். சந்திரனும் வியாழனும் ,சுக்கிரனும் பாபிகள். இது இன்னாடா இது அக்குறும்பா இருக்குது. லக்னாதிபதியே பாபியான்னு கேப்பிக.
சுக்கிரன்னா கில்மா. லக்னம்னா மனம்,உடல் பார்ட்டியோட உடல் ,மனம் பூரா கில்மா மயமா இருந்தா முன்னேற்றம் பாதிக்கப்படுமா இல்லியா?மேலும் சுக்கிரன் 6 க்கு அதிபதி. அதுனாலதேன் சுக்ரன் பாபின்னு சொல்லிப்புட்டாங்கோ.
மேலும் சந்திரன் ஏன் பாபி? சந்திரன் 3 ஆமிடத்துக்கு அதிபதியாறாரு. மூணுங்கறது மாரகஸ்தானமாச்சே .அதனால பாபி. மேலும் சந்திரன் நிலையில்லாத கிரகம். 3ங்கறது தைரியஸ்தானம். தைரியம் பர்மனன்டா இருந்தாலே மவனுங்க பல்பு குடுத்துர்ரானுங்கோ. இதுல சந்திரன் அப்பப்போ லீவு போட்டுட்டா பேதியாயிரும்ல.குரு ஏன் பாவின்னா இவரு அஷ்டமாதிபத்யம் வாங்கிக்கிறாரே.அதனாலதேன்.
சந்திரன் குரு செவ் மாரகர்கள்.புதன் கொல்லார். வியாழன் முதலானோர் கொல்வர். 2,3,7,8,12 பாவங்களில் பாபி/மாரகர்கள் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.
குறிப்பு:
மேஷம் ரிஷபம் லக்னங்களுக்கு விளக்கியதை போல மத்த ராசிகளுக்கும் விளக்க ஆசைதான்.ஆனால் பவர் கட் நேரம் நெருங்குதே. அதனால அடக்கி வாசிக்கிறேன்.
3.மிதுனம்:
சூரியன்,செவ்,குரு கொடிய பாபிகள்.குரு செவ் சேர்க்கை நல்லதில்லை.( நோட் திஸ் பாய்ண்ட் . குரு செவ் சேர்க்கையை பொத்தாம் பொதுவா குருமங்கள யோகம்னு ஊத்தி விட்டுருவாய்ங்க. நம்பாதிங்க) சுக்கிரன் யோககாரகர்.. சந்திரன் தனபாவாதிபதியானாலும் மாரகம் கொடுக்கமாட்டார். சூரியன்,செவ்,குரு 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் ஏற்படும்.
4.கடகம்:
குரு,செவ் சுபர்கள், செவ் யோககாரகன். செவ்வாயும் குருவும் சேர்ந்தால் யோகம்.சூரியன் கொல்லான்.சுக்கிரன்,புதன் பாபிகள்.புத சுக்கிரன் சனி மாரகர்கள். இவர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.
5.சிம்மம்:
சூரியன் செவ் சுபர்கள்.புதன்,சுக்கிரன் பாபிகள்.செவ் சுக்கிரன் யோககாரகர்கள். ஆனால் செவ் சுக்கிரன் கூடியிருந்தால் தீயபலன். சனி சுக்கிரன் மாரகர்கள்.புதன் கொல்லான். மாரகர்கள் மாரகஸ்தானமாகிய 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.
6.கன்னி:
சுக்கிர,சனி சுபர்கள், சந்திரன் செவ் குரு பாபிகள்.புத சுக்கிரர்கள் யோககாரகர். இவர்கள் கூடினால் யோகம். சந்திரன்,செவ்,குரு மாரகர்கள்.சுக்கிரன் தனபாவாதிபதியானுலும் கொல்லார். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.
7.துலா:
சனி,புத,சுக்கிரன் சுபர்கள்.சூரி,செவ்,குரு பாபி.சந்திர,புதர்கள் யோககாரகர்கள் இவர்கள் கூடினால் யோகம்.சூரியன்,குரு மாரகர்கள். செவ் சப்தமாதிபதியானாலும் கொல்லான். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் தருவார்.
8.விருச்சிகம்:
சூரியன்,சந்திரன்,குரு சுபர்கள்,செவ் ,புத ,சுக்கிரன் பாபிகள்.( செவ் லக்னாதிபதியானாலும் பாவிங்கறாய்ங்க.ஏன்னு கேப்பிக. செவ் யுத்த காரகர். வாழ்க்கையில எப்பயோ ஒரு தாட்டி ஃபைட் பண்ணா பரவால்லை. வாழ்க்கை முச்சூடும் போராடினா நாஸ்திதானே)
சூரி,சந்திரர்கள் யோககாரகர்கள். இவர்கள் கூடினால் யோகம். ( சந்திரனால் வரும் யோகம் என்பதால் நிலைத்த ,நீடித்த பலன் கிடைக்காது.) புதன்,செவ்,சுக்கிரன் மாரகர்கள். குரு சனி கொல்லார்.புதன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.
9.தனுசு:
சூரிய,செவ் சுபர். சுக்கிரன் ஒருவனே பாபி. சூரியனும் புதனும் கூடினால் யோகம். (இது எப்டி ஒர்க் அவுட் ஆகும்? சூரியன் 9 க்கு அதிபதி. புதன் 7 ,10 க்கு அதிபதி - 9+10 அதிபதிகள் சேரும்போது தர்ம கர்மாதிபதி யோகம் வரும் போல..ஆனால் இந்த யோகம் ஒர்க் அவுட் ஆகிற விஷயத்துல நமக்கு சில சம்சயங்கள் உண்டு) சுக்கிரன் புதன் மாரகர்கள். சந்திரன் ,சனி கொல்லார்.சுக்கிரன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.
10.மகரம்:
செவ் புதன் சுக்கிரன் சுபர்கள்.சந்திரன் குரு பாபிகள்.சுக்கிரன் ஒருவனே யோககாரகன்.சுக்கிரனும் புதனும் கூடினால் ராஜயோகம். சூரி,சனி கொல்லார்.சந்திரன் வியாழன் மாரகர்கள்.2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.
11.கும்பம்:
சுக்கிரன் புதன் சனி சுபர்கள். சந்திரன் செவ் குரு பாபிகள்.சுக்கிரன் யோககாரகன். சுக்கிரன் செவ் கூடினால் யோகம்.( சுக்கிர செவ் சேர்க்கைய பற்றி தனி சாப்டரே இருக்குங்கோ - அதையும் ஒரு மூச்சு படிச்சுருங்க -கும்ப லக்னத்துக்கு மட்டும் ஓரளவு நன்மைய தந்தாலும் அவிகளுக்கும் சேர்த்து ஆப்படிக்க கூடிய கிரக ஸ்திதி இது ) குரு தனபாவாதிபதியானாலும் கொல்லான்.சந்திரன் செவ் கூடினால் யோகம்.சந்திரன் செவ் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.
12.மீனம்:
சந்திரன் செவ் சுபர். சூரியன் புதன் சுக்கிரன் புதன் சனி பாவிகள்.செவ் குரு யோககாரகர்கள்.செவ்வாய் குரு கூடினால் யோகம் சூரியன் புதன் சுக்கிரன் சனி மாரகர்கள்.செவ் கொல்லார்.சூரியன் முதலானவர்கள் கொல்வார்கள் .மாரகர்கள் (செவ் தவிர) 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.
எச்சரிக்கை:
(இந்த விதிகளை ஜாதகத்துக்கு ,தசாபுக்திகளுக்கு மட்டுமில்லே கோசாரத்துக்கும் அப்ளை பண்ணலாம்.ஆக்யுரேட் ரிசல்ட் கடிக்கும். அடச்சே கிடைக்கும். இந்த விதிகளை கோசாரத்துக்கு அப்ளை பண்ணும்போது ராசியை அடிப்படையா வச்சுக்கறது நல்லது . ராசியாதிபதி-லக்னாதிபதிகளுக்கிடையில் பரிவர்த்தனம் அ ரெண்டுபேருமே ஆட்சி ,உச்சம் மாதிரி அமைப்புகள் உங்க ஜாதகத்துல இருந்தா சிண்டை பிச்சுக்க வேண்டியதுதான். ஆனால் உங்க அனுபவப்படி ராசி வேலை செய்யுதா லக்னம் வேலை செய்யுதான்னு கண்டுக்கிடலாம்.கவலை வேண்டாம்)