Showing posts with label செல்வம் சேர. Show all posts
Showing posts with label செல்வம் சேர. Show all posts

Monday, November 7, 2011

பொருளாதார முடக்கத்துக்கு பளிச் பரிகாரங்கள்


அண்ணே வணக்கம்ணே !
இந்த வலைப்பூ/வலைதளத்தில் உள்ள பதிவுகள் ஒரு புஸ்தவமா கிடைச்சா நல்லாருக்குமே - இந்த ஆளு சோசியத்தை எது மாதிரியும் இல்லாம புதுமாதிரியா சொல்றானே இந்தாளுகிட்ட நம்ம ஜாதகத்தை ஒரு தாட்டி காட்டிரனும்பாங்கற எண்ணம் உள்ளவரானால் இந்த பதிவை ஆற அமர படிங்க.

அப்படியல்லாது பொருளாதார முடக்கத்துக்கு பரிகாரம் எங்கய்யானு உணர்ச்சி வசப்படற பார்ட்டியா இருந்தா இந்த பதிவோட கடேசியில ஒரு ப்ளேயர் இருக்கும். அதுல ப்ளே பட்டனை அழுத்தி பரிகாரங்களை கேட்டுக்கிட்டு கழண்டுக்கங்க.

உங்களோட நெட் கனெக்சன் ஸ்லோவா இருக்கும்னா இங்கே அழுத்தி டவுன்லோட் பண்ணி கேட்டுக்கோங்க

சோசியங்கறது கடல். நம்ம கிட்டே இருக்கிறது ஒரு சின்ன டெஸ்ட் ட்யூப் நிறைய அந்த கடல் நீர் மட்டும் தேன் .அதுல கொஞ்சம் லாஜிக்,கொஞ்சம் பகுத்தறிவு,கொஞ்சம் மனிதம்லாம் போட்டு வச்சிருக்கம்.

அப்பப்போ தெரியாத்தனமா கடந்த பிறவிகளில் நாம தேடி வச்ச பூர்வ புண்ணியம் + சமகால எம்.ஜி.ஆர் வேலைகள் காரணமா அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் அந்த டெஸ்ட் ட்யூப்ல தெறிச்சுருதா. சனம் ஆகா ஓகோங்கறாய்ங்க. (அதையெல்லாம் நாம காதுல போட்டுக்கறதில்லை - நாம யாருன்னு நமக்கு தெரியும்ல)

இத்துனூண்டு சரக்கை வச்சுக்கிட்டு புஸ்தவம் போட நினைக்கலாமான்னு ஒரு கில்ட்டி. ஆனால் பலர் " நீங்க எழுதின புஸ்தவங்க எங்கன கிடைக்கும்" " நீங்க ஏன் உங்க ஆராய்ச்சி+அனுபவத்தை புஸ்தவமா எழுதக்கூடாது?" நீங்க ஏன் உங்க பதிவுகளை தொகுத்து புஸ்தவமா போடக்கூடாது" ன்னு மெயில் மூலமா விஜாரிச்சுக்கிட்டே இருக்காய்ங்க.

ரஜினி, கமல் 50 விழாவுல சொன்னாப்ல இன்னைக்கு ஃபீல்டுல இருக்கிற சோதிடப்புலிகள் சோதிடத்துல இதுவரை தொடாததை தொட்டாத்தான் கொஞ்சத்துக்கு கொஞ்சமாச்சும் பேர் சொல்லமுடியும்.அது நமக்கு தெரியும்.

அதனாலதேன் ஜாதகம் இல்லாமயே தங்கள் நிலையை வைத்து -தங்கள் வாழ்வின் போக்கை வைத்து தங்கள் ஜாதகத்துல எந்த கிரகம் வீக் ,அதுக்கு என்ன பரிகாரம்னு தெரிஞ்சிக்க ஒரு புஸ்தவம் எழுதினா என்னன்னு ஒரு ஸ்பார்க்.

காசு போட்டு நம்ம புஸ்தவத்தை வாங்கினவுக தாங்கள் புஸ்தவத்துக்காக செலவழிச்ச காசை போல குறைஞ்சது ஆயிரம் மடங்காவது சம்பாதிக்க தேவையான டிப்ஸை நாம கொடுத்தாகனும். இது ஒரு சவால்.

சமீப காலமா பொருளாதார முடக்கத்துக்கு என்னெல்லாம் காரணமா இருக்கக்கூடும்னு ஒரு பட்டியலை போட்டு ( சாபங்கள்/தோஷங்கள்) பரிகாரங்களை பொளந்து கட்டிக்கிட்டிருக்கம். ஆரம்ப காலத்துல கதிரவன், தேவி,ஆரூடம், ராஜரிஷி, ஜோதிட பூமி ,ஆன்மீகம் போன்ற இதழ்களில் சோதிட உலகிற்கு நம்மோட கான்ட்ரிப்யூஷனான நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்களை டச் பண்ணியிருக்கம்.

உபரியா ஜோதிட பூமியில அனைவருக்கும் தனயோகம்னு (ஜோதிட ரீதியா -ஜாதகத்தை வச்சு மட்டும் ஒர்க் அவுட் பண்றாப்ல ஒரு தொடர்கட்டுரையும் எழுதியிருக்கம்.

மேலும் நம்ம வலைப்பூ,வலைதளங்கள்ள ஜோதிடம் தொடர்பாக நிறைய்ய ஆய்வு கட்டுரைகள் எழுதியிருக்கம்.

எல்லாத்தையும் தொகுத்து - டெலிகிராம் கணக்கா ட்ரிம் பண்ணி "அனுபவ ஜோதிடம்"ங்கற தலைப்புல - ஒரு புஸ்தவம் வெளியிடலாமேனு உத்தேசம்.

ஹார்ட் போர்ட் -மல்ட்டி கலர் ரேப்பர் போட்டு -பத்து ஃபாரம் நல்ல பேப்பர்ல ப்ரிண்ட் பண்ணி -பின்னிங் -பைண்டிங் -கட்டிங் -ட்ரான்ஸ்போர்ட் -கூரியர்-போஸ்டல் செலவெல்லாம் முடிக்கனும்னா ஆயிரம் பிரதிக்கு - இன்னைக்கிருக்கிற விலை வாசிக்கு ரூ.50,000 ஆகும்னு ப்ரஸ்ல உத்தாரா சொன்னாய்ங்க.
அப்போ ஒரு பிரதியோட அடக்க விலை ரூ.50 மட்டுமே.

ஆனால் இப்படி புஸ்தவத்தை ரூ 50 க்கு வித்தா ஜா.ரா மாதிரி ஆளெல்லாம் வாங்கி ஊரை ஏமாத்த ஆரம்பிச்சுருவாய்ங்க. அதனால புஸ்தவத்தோட விலைய குறைஞ்ச பட்சம் ரூ.250 ஆ ஃபிக்ஸ் பண்ணனும்.

அதே நேரம் அம்பது ரூவா அடக்கமுள்ள பொருளை இரு நூற்று அம்பது ரூவாய்க்கு வித்தா நாம ஏற்கெனவே நம்ம பதிவுகள்ள சொல்லியிருக்காப்ல குஷ்டம் தான் வரும். ( விரைவாதம்லாம் உபரி)

அதனால ஆன்லைன் ஜோதிட ஆலோசனையையும் இந்த புஸ்தவத்தையும் மெர்ஜ் பண்ணலாம்னு நினைக்கிறேன். நமக்கு ஆன்லைன் ஜோதிட ஆலோசனை கட்டணமா சனம் ரூ.250 தந்துக்கிட்டிருக்காய்ங்க. ( ஆன்லைன்ல இது டெட் சீப் போல - கூட்டம் அம்முது -ரவுண்ட் தி க்ளாக் வேலை செய்தாலும் முடிய..லை )

ஒரு ஜாதகத்துக்கு பொதுப்பலன் -பரிகாரம் -தசாபுக்தி பலன்னு 3 ஆடியோ ஃபைல் அனுப்பவேண்டியிருக்கு. நம்ம அறிவுப்பு அப்படி.( வாக்குல சனி)

இப்பம் சனி 3 க்கு வந்துட்டதால தில்லுதுரையாக இந்த அறிவிப்பை வெளியிட திட்டம்.

1.ஆன் லைன் ஜோதிட ஆலோசனையில் இனி ஒரு ஜாதகத்துக்கு பத்து கேள்விகளுக்கு (துணைக்கேள்விகள் உட்பட) விரிவான பதில் (மட்டுமே) அளிக்கப்படும். கட்டணம் மட்டும் அதே ரூ.250 தான்.

2.ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பெறுபவர்களுக்கு "அனுபவஜோதிடம்" நூல் இலவசம். ஆலோசனை கட்டணத்தை வங்கி கணக்கில் செலுத்தும் போதே பதிவு தபால்/கூரியர் செலவை ( நெல்லா விஜாரிச்சு) சேர்த்து கட்டிரனும்.

3.புஸ்தவம் தமிழர் திருநாளான பொங்கலன்று ரிலீஸ்.

நிபந்தனை:
1.பொங்கல் திரு நாளுக்கு முன் தினம் வரை ஆன்லைன் ஜோதிட ஆலோசனைக்காக வங்கிக்கணக்கில் கட்டணம்+கூரியர்/பதிவு தபால் செலவை செலுத்துபவர்களுக்கு மட்டுமே நூல் இலவசமாக அனுப்பப்படும்
( மெயில்ல பர்த் டீட்டெய்ல்ஸ், தபால் முகவரி தெரிவிக்க மறந்துராதிங்க)

2.அப்போதைக்கே ஜாதகங்கள் குவிந்து விட்டிருக்கும் என்பதால் தமிழ் வருடப்பிறப்பு வரை ஆன் லைன் ஜோதிட ஆலோசனை நிறுத்தப்படும்.

(இந்த அறிவிப்பை நவம்பர் 17 முதல் அமல்படுத்த எண்ணம். இது குறித்த உங்கள் கருத்தை உடனே தெரிவிக்கவும்)

Wednesday, November 2, 2011

அல்லாருக்கும் சில்லறை புரள டிப்ஸ்

அண்ணே வணக்கம்ணே !

நீங்க எந்த துறையில ,எந்த பிரிவுல செயல்பட்டுக்கிட்டிருந்தாலும் உங்களுக்கு சில்லறை சகட்டு மேனிக்கு புரள சில டிப்ஸ் எல்லாம் தர உத்தேசம்.

பதிவுக்கு போறதுக்கு மிந்தி விளம்பர இடைவேளை கணக்கா நம்ம ப்ளாக்/சைட்ஸோட ஹிட்ஸை காட்டும் படங்களை வச்சிருக்கன். ஜஸ்ட் ஒரு க்லான்ஸ் பார்த்துருங்கண்ணா. ( இம்மாம் பேரு படிக்கிறாய்ங்கன்னா மேட்டர் கீற ஆசாமிதாம்பான்னு ஒரு நம்பிக்கை வரும்ல. அந்த நம்பிக்கையே பலனை அதிகரிக்கும்ல அதுக்குத்தேன்)









உங்களில் சிலருக்கு தொழில் முடக்கம் , கொடுக்கல் வாங்கலில் சிக்கல், வீண் விரயங்கள், நஷ்டம், அரசாங்கத்தால் ,லோக்கல் தாதாக்களால்,போலீஸால் தொல்லைனு இருக்க பல காரணங்கள் இருக்கு. அந்த காரணங்களை கீழே பட்டியல் போடப்போறேன். இந்த அம்சங்கள் உங்க விஷயத்துல எந்த அளவுக்கு இருக்குன்னு நோட் பண்ணி வச்சுக்கங்க. அல்லாத்தையும் பைசல் பண்ணிருவம்ல.



வாஸ்து காரணங்கள்:

1.தெற்கு,மேற்கு திசைகளில் தெரு /பள்ளம்/இந்த திசைகளில் மனை குறைவது

2.கிழக்கு,வடக்கு திசைகளில் மேடு, ( ஐ மீன் கன்ஸ்ட்ரக்சன்)

3.திக்குகள் குறைவது,அளவுக்கு மீறி வளர்வது. (ஈசான்யம் வளரலாம். எவ்ளோ தெரீமா? மிளகாய் விரை அளவுக்குத்தேன் வளரனும்)

4. நைருதியில் ,ஆக்னேயத்தில் பள்ளம் / சாக்கடை நீர் இந்த மூலைகள் வழியே வெளியே செல்வது, இந்த திசைகளில் தலைவாசல் இருப்பது , ஈசான்யத்தில் மேடு /செப்டிக் டாங்க், வாயு மூலையில் பள்ளம், இந்த திசையில் ஷட்டர்/கதவு இருப்பது


சாபங்கள்:

1.அப்பா ,அம்மா வழி உறவில் ( சித்தப்பா,பெரியப்பா/ சித்தி,பெரியம்மா) அகால மரணம் ( ஐ மீன் 40 வயசுக்குள்ள மரணம்) துர்மரணம் ( ஐ மீன் விபத்து,தற்கொலை,கொலை)

2.உங்களுக்கு முந்தைய தலைமுறை/ உங்கள் தலைமுறையில் அங்கஹீனம் கொண்டவர்கள் பிறப்பது / பெரிய விபத்து/தீ விபத்தில் சிக்குவது /துர்மரணம் அடைவது.

3.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் திருமணத்துக்கு முன்பே இறப்பது/ஒருவருக்கு ஒன்றுக்கு மேல் திருமணங்கள் ,சின்ன வீடு எக்ஸ்ட்ரா

4.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் வாரிசின்றி போவது - பக்கவாதம் போன்ற வியாதிகள் வந்து பிறர்கையை எதிர்பார்த்து வாழ வேண்டி வருவது

5.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் தோல் வியாதிகள் , விரைவாதம்,புத்திகுழப்பம்,பெண்கள் என்றால் அண்டம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுவது.

தோஷங்கள்:

1.அப்பாவை பிரிவது -அப்பாவுடன் வெட்டுப்பழி -கொலைப்பழி

2.தாயுடன் விரோதம் - தாயை பிரிவது -மன அழுத்தம் - நுரையீரல்/சிறு நீரகம் தொடர்பான வியாதி

3.ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள்

4.ஒல்லி பீச்சான் போல இருப்பது / நீர் உடம்பு -குடி,சூது ஆகியவற்றில் அதிக விருப்பம் -ஷேர் மார்க்கெட்/சட்டவிரோத செயல்களில் ஈடுபாடு

5.இதய படபடப்பு -வயிறு தொடர்பான நோய்கள் , ஞா மறதி , திருமண தாமதம், வாரிசின்மை


இன்ன பிற அறிகுறிகள்:

1.முடிவெடுக்க திணறுவது - எடுப்பார் கை பிள்ளையாக இருப்பது - தூங்கி வழிவது -வர வேண்டியது வர்ரதுக்குள்ளயே ஒத்தைக்கு ரெட்டையா செலவுக்கு திட்டமிடுவது.

2.சோசியரு இப்பம் நேரம் நல்லாருக்குன்னு சொன்ன காலத்துலயே நோய்கள், விரோதங்கள்,வழக்கு வில்லங்கங்கள்.

3.சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டாப்ல சொந்த ஐடியாலயே தானும் கெட்டு தன்னை சேர்ந்தவுகளை ,தன்னை நம்பி வந்தவுகளையும் நாற வச்சுர்ரது.

4.ஊரு,உலகத்தை ,சாதி சனத்தை எதிர்த்து கண்ணாலம் கட்டி பொஞ்சாதியாலயே அவதிப்படறது


உங்க தொழில்,வியாபார,உத்யோக முடக்கத்துக்கும் மேற்படி காரணங்களுக்கும் என்ன சம்பந்தமுன்னு கேப்பிக. சொல்லுவம்ல. அப்படியே முடக்கதை முடக்கவும் அயனான பரிகாரங்கள் அடுத்த பதிவுல.. உடு ஜூட்.