Friday, December 30, 2011

இசை பிரியர்களின் "கொலை வெறி"


பரிசில் கேட்டு
பாவலர் செல்வார்
பாராளும் மன்னர் அவை தனுக்கே

பாடல் கேட்டு அன்னை வந்தாள்
பாவலன் எனது குடிலினுக்கே

எமக்கிடை நிகழ்ந்த சம்வாதம்
நாளை உமக்கே ஒரு வேதம்

பாவலன்:

அன்னையே வா..
அற்பன் எனை தேடி
கற்பகம் வருவதா?

( இந்த ரேஞ்சுலயே இதை கொண்டு போனா போடா பொங்கின்னுட்டு கழண்டுக்குவிங்க..அதனால நம்ம ஸ்டைலுக்கு வந்துர்ரன்)

நான்:
வா.. தாயீ.. திடீர்னு தே.சீனிவாசன் படத்துல பெருமாள் மாதிரி விசிட் அடிச்சிருக்கே.. நான் ஏதும் பெருசா பாக்கி கீக்கின்னு கூட சொல்ல முடியாதே..

அவள்:
ஒன்னுமில்லைப்பா நீ அப்பப்போ நம்மை வச்சு கவிதைல்லாம் எழுதுவியே.. இடையில சுத்தமா நிப்பாட்டிட்டாப்ல இருக்கு?

நான்:
முள்ளை முள்ளால எடுத்த பிற்காடு ரெண்டையும் தூக்கி போட்டுரனும்னு சொல்வாய்ங்க.அப்படி வறுமைங்கற முள்ளை எடுக்க ஒன்னை முள்ளா உபயோகிச்சேன். முள்ளை எடுத்தாச்சு.அதான் உன்னையும் வீசிட்டன் போல ..என்னருந்தாலும் நானும் மன்சன் தானே..

அவள்:
என்னப்பா இது உன்னாட்டம் கவிஞர்ங்க எல்லாம் நான் தேவன் இறைவன்னு பந்தாவா எழுதிக்குவிப்பிக. நானும் .மன்சந்தானே ங்கறே

நான்:
யம்மாடி.. கண்ணதாசன் கூட எனக்கு மரணமில்லைன்னு எழுதினாரு.. ஆனால் இன்னைக்கு தமிழ் கூறு நல்லுலகே கொலைவெறியில தானே அலையுது.. அப்பம் கண்ணதாசனுக்கும் மரணம் வந்துட்டாப்ல தானே..

அவள்:
இன்னா ஆச்சு மகனே ..எம்.எஸ்.உதயமூர்த்திக்கே தன்னம்பிக்கைய இரவல் கொடுக்கிற பார்ட்டி நீ .அப்படியா கொத்தது நீயே இப்டி பேசலாமா?

நான்:
கொலை வெறி தலைக்கேறின சமயமும் கண்ணதாசனை தமிழ் மனம் மறக்காது. பத்து நாளைக்கப்புறம் கொலை வெறியை நினைக்காதுன்னு கவர் பண்ணி பேசலாம்.ஆனால் இந்த பத்து நாள் கண்ணதாசனுக்கு இறப்புங்கறது யதார்த்தமில்லியா?

அவள்:
நான் ஏதோ ஒரு பாட்டு வாங்கிக்கினு போயிக்கலாம்னு வந்தேன்.. உன் மூடு சரியில்லை போல இருக்கு. நான் கழண்டுக்கறேன்.

நான்:
ஹய்யோ ஹய்யோ.. பத்து வருசம் போனா நான் எழுதற இந்த தமிழையே பேச ஆளில்லை,எழுத ஆளில்லை. படிக்க ஆளில்லை இதுல புராதன தமிழ்ல நான் பாடி என்ன ஆகப்போகுது. ஆளை விடு தாயி..

அவள்:
பார்த்தயா இரும்பை காய்ச்சறாப்ல இத்தனை காச்சியும் உன் திமிர் போகலியே..

நான்:
ஆத்தா.. பாட்டுங்கறது ஓட்டுலருந்து பழம்புளி மாதிரி கழண்டு வரனும். புளியங்காயை நசுக்கினா என்னாகும்..

அவள்:
அப்போ உனக்கு எட்டு இடமும் குளிர்ந்திருந்தாதான் பாடுவேங்கறே..

நான்:
நான் அப்படி சொல்லலே. என் தமிழை தட்டி தரம் பார்த்து அதன் உரம் கண்டு வரம் கொடுக்க நீ மட்டும் இருந்தா போதாது..தரணியில தமிழ் தழைக்கனும். அப்பம் பாடினா ஒரு அருத்தம் இருக்கும்.

அவள்:
மகனே.. கால சக்கரம் வட்டமா சுழலும்.சரித்திரம் ஒரு பைத்தியம் மாதிரி .ஒரே மேட்டரை மறுபடி மறுபடி சொல்லும். வெய்ட் அண்ட் சீ..

நான்:
நம்ம ஃபிலாசஃபியே லைஃப் ஈஸ் வெய்ட்டிங் - என்பது தான்.காத்திருக்கிறதுல எனக்கு ஒன்னும் அப்ஜக்சன் இல்லை.

அவள்:
அப்பம் பாட்டு இல்லேங்கறே..

நான்:
ஆமா தாயீ .. நீ கம்ப்யூட்டரை நாஸ்தி பண்ணி - காலண்டர் மேட்டரை சொதப்பி - ரெக்கார்டிங்குக்கு உபயோகிக்கிற மொபைலை மொக்கை பண்ணி என்னென்னமோ செய்து பார்த்தே. ஆனாலும் பாட்டு வரலை..

நான் இந்த நாட்டை - என் மொழியை - தருமத்தை - நியாயத்தை - காலைல அஞ்சு மணிக்கு எழுந்து சோறாக்கி வேலைக்கு போயி ஆறின சோத்தை தின்னு - கூலி வாங்கி -அரிசி வாங்கி -புளி வாங்கி சமைக்கிறாளே அந்த சித்தாளை கூட உன் உருவமாத்தான் பார்க்கிறேன்.

இதையெல்லாம் ஒரு ரேஞ்சுக்கு கொண்டு வந்த பிற்காடு பாட்டு என்ன பாட்டு காவியமே தீட்டிருவம்ல.. வெய்ட் அண்ட் சீ..