தாய்மொழியின் அடிப்படை இலக்கணம் நமக்கு ஜீன் வழியாவே வந்துருதுன்னு எங்கயோ படிச்சேன். குழந்தை கருவில் இருக்கும்போதே சொல் -பொருள் -வார்த்தை,வாக்கிய அமைப்புல்லாம் ஃபைனலஸ் ஆயிரும் போல.
நம்ம வாக்கிய அமைப்புகள்ள 99.99 சதவீதம் ஆக்டிவ் வாய்ஸாவே இருக்கும். ( இதுக்கு தமிழ்ல என்ன?)
உ.ம்: கலைஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டினார்
இதை பாசிவ் வாய்ஸுக்கு மாத்தினா அண்ணா நூற்றாண்டு நூலகம் கலைஞரால் கட்டப்பட்டது.
எனக்கென்னமோ இந்த ரெண்டு வாய்ஸுமே ஈகோயிஸ்டிக்கா இருக்குன்னுதான் தோனுது. மனித குலமே ஈகோயிஸ்டிக் தான். வாய்ஸும் அப்படித்தானே இழவெடுக்கும்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் கலைஞரை கொண்டு தன்னை கட்டிக்கொண்டதுன்னு நான் சொன்னா பைத்தியக்காரத்தனமா நினைப்பிங்க. கால வெள்ளத்தின் ஓட்டத்தை - அதிலான சம்பவ கோர்வைகளை பார்க்கும் போது நான் சொன்னதுதான் கரெக்டுன்னு தோனுது. Read More