Showing posts with label பாலபாடம். Show all posts
Showing posts with label பாலபாடம். Show all posts

Thursday, November 10, 2011

ஜோதிடராக ஆசையா? இன்றே இப்போதே ஆகலாம்


அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடராக ஆசையா நான் வெளியடப்போற புஸ்தவத்தை வாங்கிக்கங்கனு சன் பிக்சர்ஸ்/டிவி கணக்கா ப்ரமோட் பண்ண இந்த பதிவை போடலை. சமீபத்துல ஜோதிட பால பாடம்னு ஒன்னை துவங்கி திராட்டுல விட்டுட்டம்.

அந்த ரூட்ல ஒரு நாட் கிடைச்சது. கன்டின்யூ பண்றோம். தட்ஸால். உபரி தகவல் என்னன்னா இந்த மேட்டர் எல்லாம் நம்ம புஸ்தவத்துல பாய்ண்ட் டு பாய்ண்ட் வரப்போகுது.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. ஆயிரம் புஸ்தவம் படிச்சா வர்ர தெளிவு ஒரு நூறு ஜாதகத்தை பார்த்தா வந்துரும். அதுக்கு சில அடிப்படைகளாவது தெரியனும்ல. எனவே இந்த ஜோதிடராக ஆசையா வரிசையில வரப்போற ஆடியோ பதிவுகளை தொடர்ந்து கேளுங்க.

பதிவை கேட்க கீழ்காணும் ப்ளேயர்ல உள்ள ப்ளே பட்டனை அழுத்துங்க. நெட்ஸ்பீட் இல்லாதவுக டவுன் லோட் பண்ணிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க.

Sunday, September 4, 2011

ஜோதிட பாலபாடம்: ஆடியோ (3)


அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னம் கடகம்னு ஆரம்பிச்சா சித்தூருக்கு பஸ்ஸை விஜாரிக்க ஆரம்பிச்சுருவிங்க.( வேற எதுக்கு கடுப்புல தேடிப்பிடிச்சு ஒதை கொடுக்கத்தான்) ஆனால் என்ன பண்றது நடப்பு லக்னத்தை ஞா படுத்துதே. ஜோதிட பால பாடம் துணுக்கா -டெக்ஸ்டா ஆரம்பிச்சு ஆடியோவா அவதாரம் எடுத்து இன்னைக்கு 3 ஆவது நாள்.(மழை எப்படி ஆரம்பமாகுமோ அப்படி- கடகத்துக்கு அதிபதி சந்திரன் -அவர் ஜலகாரகன்)

தாளி .. வார்த்தையில முழுக்க கொண்டு வரமுடியலியே தவிர செவ்வாயை பற்றி மட்டும் ஒரு செமினாரே நடத்திரலாம் போல இருக்கு. சரிங்ணா ஆடியோ பாடம் தானே .வருது வருது இந்த "லேகியம் விக்கிற கணக்கா எழுதினதே அதை பத்தித்தானே..

வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க. கருத்து மழைக்கு கமெண்ட் மழை நிச்சயம்தானே .

Monday, August 29, 2011

ஜோதிட பாலபாடம்: 11


இரண்டுக்கு அதிபதி 12 ல்:
தாராளமாக பேச தயங்குவீர்கள் அல்ல து சொல்ல நினைத்தது ஒன்றாய் இருக்க சொல்வது வேறு ஒன்றாய் முடியும்.குடும்பத்தை பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். கண்பார்வை மங்கலாகலாம். வீண் விரயங்கள் ஏற்படும்.
10க்கு அதிபதி 11ல் அ பத்து பதினொன்று அதிபதிகள் இணைந்து சுபபலமாதல்:
ஒரே நேரத்தில் இரண்டு தொழில்களில் ஈடுபடலாம்.
கேது சுபபலமாகி ஜீவன பாவத்துடன் தொடர்பு கொண்டால்:
எந்த தொழிலில் இறங்கினாலும் அதில் மாடர்ன் டெக்னிக்ஸ், லேட்டஸ்ட் இன்னோவேசன்ஸை உபயோகிப்பிங்க. வெளி நாட்டு தொடர்பிருக்கும்.
3 ல் சுக்கிரன் அ கேந்திர சுக்கிரன் (7 அ 10) :
செக்ஸ் மீதான அதீத ஈடுபாட்டால் விரைவில் அதன் மீதுள்ள கவர்ச்சியை இழத்தல் கூட நடக்கலாம். நீங்க செய்றிங்களோ இல்லையோ அதைபத்தி நிறைய யோசிப்பிங்க. நிறைய பேசவும் செய்யலாம். இங்கே ஒரு சின்ன ரகசியத்தை சொல்லனும் யாரெல்லாம் அதை பத்தி நிறைய யோசிக்கிறாய்ங்களோ ,பேசறாய்ங்களோ அவிக சீக்கிரம் அது மேல இருக்கிற கவர்ச்சியை இழந்துருவாங்க காதல் ,கல்யாணம் வகையிலும் அதிருப்திகள் ஏற்படும். பொருந்தா காதல், காதல் திருமணம், கலாட்டா கல்யாணம்,மனைவியுடன் தகராறுகள் , பெண்களால், விவகாரம் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.
லக்னாதிபதி விரயத்தில் அ விரயாதிபதி லக்னத்தில்:
உங்க யோசனைகள் உங்களுக்கு பயன்படாது. பிறர் விஷயத்துல ஒர்க் அவுட் ஆகும்.
செவ் சுபபலமாகி லக்னத்தில் /ஐந்தில் :
நீங்க ஜஸ்ட் ஒரு சோல்ட்ஜர் தான். உங்களை உரிய பாதையில செலுத்த ஒரு கமாண்டர் ஒரு அட்வைசர் தேவை.
6க்கு அதிபதி 10ல் :
தொழில் வியாபாரத்துல கடன் ஏற்படலாம். போட்டி இருக்கலாம், விரோதம் வரலாம். பயப்படாதிங்க. இறுதி வெற்றி உங்களுக்கே. சற்று தாமதமாகவேனும் சதுர்ஜயம்,ருண விமுக்தி, ரோக நிவர்த்தி கிடைக்கும்.
7 ஆமிடத்துடன் சுக்கிரன் தொடர்பு கொண்டால்( இருந்தாலும்):
தென் கிழக்கு திசைல இருந்து வரலாம். அவிக வீட்ல பெண் ஜனத்தொகை அதிகமா இருக்கலாம். ஏரியா பேர் கூட பொம்பள பேரா இருக்கும். துர்கா காலனி எட்ஸெட் ரா. அவிக வாழ்க்கைல ( வீட்டு எண்,கிராஸ் நெம்பர்,பிறந்த தேதி முதலியன) 6 ஆம் நெம்பர் ரொம்பவே விளையாடியிருக்கும்.
பழம், பூ,லட்சுமி, தொடர்பான பேர் கொண்டவுகளா இருப்பாங்க. அழகிய தோற்றம், அழகியல் உணர்வு உள்ளவங்க. கலைத்துறைல ஈடுபாடு இருக்கும்.
பத்தில் சந்திரன் :
வெறும் இரண்டே கால் நாட்களில் 20 வருடங்களுக்கும் தீராத பிரச்சினையை க்ரியேட் செய்துவிடுவார். அதே நேரம் 20 வருடங்களாய் தீராத பிரச்சினையை வெறும் இரண்டே கால் நாட்களில் தீர்த்துவிடுவார்.
2ல் சந்திரன்:
தன் இரண்டே கால் நாள் வருமானத்திலிருந்தே ஒரு சொத்தை வாங்கினாலும் ஆச்சரிய பட முடியாது. அதே சமயம் சொத்தை விற்று தின்றபடி காலத்தை ஓட்டினாலும் ஆச்சரிய பட முடியாது.
லக்னாதிபதி+ரோகாதிபதி:
கடனை முதலாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டால் சக்ஸஸ் ஆகலாம்.
தனுசு லக்ன்ம:
இவரது மைண்ட் செட்டை புரிந்து கொள்வது கடினம். வயிற்றுக்கு கூட தாரளமாக செலவழிக்காது சேமிப்பை மேற்கொள்வார். அந்த சேமிப்பில் இருந்து சொத்து வாங்குவார். ஆனால் வாழ் நாள் பூரா சொத்து வாங்குதல், அதன் மீது விவகாரங்களை எதிர்கொள்ளுதலிலேயே இவர் நேரம் செலவழிந்து போகும். இவர் இருக்கும் இடத்தில் வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது. முக்கியமாய் பூனை . (முடி உதிர்க்கும் எந்த பிராணியும் வேண்டாம்)
இவர் மீது தந்தையின் இம்பாக்ட் அதிகம். தந்தை மகன் உறவை மீறி எல்லா தொழில்,வியாபார விஷயங்களிலும் கலந்து வேலை செய்யும் வாய்ப்பு உள்ள

லக்னம் ரிஷபமாகி லக்னத்தில் சனி:
அதே போல் 9/10 க்கு அதிபதியான சனி லக்னத்தில் நின்று டெக்னிக்கல் ப்ரெயின், புண்ணாக்கிலிருந்து கூட எண்ணெய் எடுக்கும் அத்தனை சாலாக்கை தந்திருந்தாலும் சொத்து சேர்க்கும் யோகத்தை தந்தாலும் அவர் ஏழையும் பார்த்து மனைவியாரின் உடல்,மன நலன் ,அவருடனான தங்கள் ஒற்றுமையையும் பாதிக்கிற நிலையில் உள்ளார். எனவே சனி தொடர்பான தொழில், மனிதர்களையும் தவிர்ப்பது நல்லது.
சர்ப்ப தோஷம் உள்ளவர்கள்:
4,13,22 , 7,16,25 எண்கள் தேதிகளை தவிர்க்கவும்.
இரண்டில் செவ்வாய்:
இது தனபாவம் என்பதால் வீண் விரயம், வாக்குஸ்தானம் என்பதால் எதிராளியை இர்ரிட்டேட் செய்யும் பேச்சு, நேத்திர ஸ்தானம் என்பதால் கண்களுக்கு ,வாய்,தொண்டைக்கு பாதிப்பு ஏற்படும்.குடும்பஸ்தானம் என்பதால் குடும்பத்திலும் கலகம் பெருகும்.
பரிகாரம்:
முருகன் மூலமந்திரத்தை வாய் விட்டு ஜெபித்தல் . யுத்தம் தொடர்பான சினிமாக்களை டிவிடியில் பார்த்தல். கழுத்தில் வேல், சூலம் போன்ற ஆயுதம் பொறித்த டாலர் அணிதல்.
முருகன் மூல மந்திரம்:
ஓம் சௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ
(Om sowm sarahanabhava sreem hreem kleem klowm sowm namaha
4ல் சனி :
இது குடும்ப வறுமையை, வீட்டின் பாழடைந்த தன்மையை காட்டும். வீட்டை புதுப்பித்தால் ஏழ்மை வரும். இதை தவிர்க்க புதுப்பித்த பிறகு ஹாலில் விவசாயம் தொடர்பான சீனரியை வால் பேப்பராக ஒட்டவும்.ஆனால் தாய்க்கு தீர்காயுவை தரும் (ஆனால் அவருக்கு கால் தொடர்பான தொல்லையையும் தரும்) படிப்பில் தடை, வாகன யோகம், ஆனாலும் சிறு விபத்து ஒன்றும் நிகழலாம்,
4ல் சந்திரன்:
அடிக்கடி வீடு மாறுதல் அ வீட்டு நிதி நிலை மாறுதலை காட்டும். தாயின் உடல் ,மன நிலையிலும் எவ்ரி டூ இயர்ஸுக்கு பெரும் மாற்றம் தெரியும். வாகன விசயத்திலும் பெரும் ஏற்ற இறக்கம் இருக்கும்.
7ல் புதன்:
இது ஜாதகரின் நடத்தை குறைவை காட்டுகிறது (பெண்கள் விஷயத்தில்) தோல் அண்டம் தொடர்பான பிரச்சினயையும் தரலாம்.

Sunday, August 28, 2011

ஜோதிட பாலபாடம்: 10


4 ஆம் பாவாதிபதி ஐந்தில்/ ஐந்தாம் பாவாதிபதி 4 ல் :
தங்கள் அம்மா பற்றிய சங்கதியை சொன்னால் நக்கலாக சிரிப்பீர்களோ என்னவோ? ஏன் என்றால் கடந்த ஜன்மத்திலும் அவரே தங்கள் அம்மாவா இருந்திருக்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம்.
ஆதாரம் 1:
அவர் இன்ஃப்ளுயன்ஸ் இதர குழந்தைகளை விட அதிகமாக தங்கள் மீது இருக்கலாம்.
ஆதாரம்2:
அவரை பற்றி ஒருவித அலட்சியபாவம் இருக்கும். ( காலேஜ்ல சேர்ந்த புதுசுல வாங்கின பழைய செல்ஃபோனை இப்போ பார்த்தா மாதிரி ஒரு ஃபீலிங்)
அவரது மரணத்துக்கு பிறகும் அவர் குறித்த நினைவுகள், விவகாரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர் தரப்பு வில்லங்கமுள்ள சொத்து அல்லது ரீ சேல் மதிப்பற்ற சொத்து தொடரலாம். அல்லது அவர் தரப்பு உறவினர்கள் குறைந்த பட்சம் அவரது தோழிகளின் தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

7க்கு அதிபதி 7 ல் ஆட்சி பெற்றால்:
நண்பன்/காதலி /மனைவியின் இன்ஃப்ளுயன்ஸ் அதிகம்.

8க்கு அதிபதி 4 ல்:
தாயை ஸ்தூலமாகவோ மன அளவிலோ பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். சிறு வாகன விபத்து / தொழிலகம் அல்லது குடியிருப்பில் சிறு விபத்துக்கு வாய்ப்பிருக்கிறது. உயிர் பிரிவதும் வீட்டிலேயே இருக்கலாம். சிலர் விஷயத்தில் வீடு கை மாறிவிடும்.

9க்கு அதிபதி -4ல் :
தாயே தந்தையை போலோ அல்லது தந்தையே தாயை போலோ தங்களை வளர்த்திருக்கலாம்.

4 ல் புதன் சுபபலம் பெற்றால்:
தாய்மாமன் அ மாமனார் சொந்தஊரில் செட்டிலாகவே வாய்ப்புள்ளது. அது கூட பஜார் தெரு, மக்கள் கூடிக்களிக்கும் இடத்தை ஒட்டி வீடு அமைய வாய்ப்புள்ளது. வீட்டில் தோட்டம் நிச்சயம். அது பிரபல பெருமாள் கோவில் உள்ள ஊராகவோ அ வியாபாரத்துக்கு முக்கியமான ஊராகவோ இருக்கலாம்.

ஜாதகத்தில் புதன் சுபபலமானால் .அதிர்ஷ்டம் தருவன:
எண்: 5
தேதி: 5,14,23
நிறம்: பச்சை
கடவுள்:பெருமாள்
கல்: ஜாதி பச்சை ( இடது சிறுவிரலில் அணியவும்)
ஏரியா: பஜார் தெரு, சந்தை, பீச் (மக்கள் கூடுமிடம்)
சாதி: வைசியர்கள், வியாபாரிகள்,ஏஜெண்ட்ஸ்,டீலர்
மனிதர்கள்: மருத்துவர்கள், ஆடிட்டர்கள்,ஜோதிடர்கள்

குரு+சந்திரன்:
இவர் தம் தகுதிக்கு (அதிர்ஷ்டம்) எள்ளளவும் தொடர்பில்லாத வாழ்வை 14 வருடம் வாழவேண்டியிருக்கும். அது எப்போது துவங்கியது என்பதை அவரே தம் அனுபவத்தில் இருந்து கணிக்கவேண்டும்.

ஐந்தில் சுக்கிரன் சுபபலமானால்:
மகாலட்சுமி போன்ற பெண் குழந்தைகள் பிறக்கும். அது நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட், கலர் சென்ஸ் உள்ளவராக வளரும் . அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் போன்ற தொழில்களை துவங்கி நடத்தலாம். மேலும் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகம், துறைகளும் லாபம் தரும்.பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியனவும் அனுகூலம் தரும்.

லக்னம் அ ராசி மகரமானால்:
பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள கர்ம யோகம் இவருக்கு ரொம்பவே பொருத்தம். அந்தந்த நேரத்துக்கு தன் உழைப்பின் பலன் எங்கே போகிறது என்று கேள்வி எழுப்புவாரே தவிர பிறகு கண்டு கொள்ளமாட்டார். உடல் நலம் ஒத்துழைக்காவிட்டாலும் வேலை செய்து கொண்டே இருக்க விரும்புவார்.

4 -7 பாவங்களுக்கு ஒரே கிரகம் அதிபதியாக இருந்தால்: (இது எந்த லக்னத்துக்கு ஒர்க் அவுட் ஆகும்னு சொல்லுங்க பார்ப்போம்)
இவரது தாய்க்கும், மனைவி/கணவருக்கு சில ஒற்றுமைகள் அமைந்திருக்கும். பெயரில்,குணத்தில் அ ஜாடையில்.

லக்னம்/ராசி கன்னியானால்:
கடன், நோய்கள், விரோதங்கள்,சொத்து தகராறுகள் இருந்து கொண்டே இருக்கும் . கடன் இருக்கும் வரை ஆரோக்கியமாக இருப்பார். விரோதங்கள் இருக்கும் வரை கடன் இராது. ( சில கால கட்டத்தில் மட்டும் மூன்றுமே தொல்லை தரலாம்.) இவை குறித்து கவலை வேண்டாம்.

லக்னம் கடகமானால்:
அம்மா ஏதேனும் ஒரு கலை/அழகு படுத்தும் கலை கைவரப்பெற்றிருப்பார்கள். நல்ல ரசனை இருக்கலாம். ஆனால் இவருடன் ஒருவித ஹேட் அண்ட் லவ் தான் இருக்குமேதவிர அதில் தொடர்ச்சி இல்லாதிருக்கலாம். இவருக்கு கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரலாம். (கருப்பை,ஓவரிஸ்,அண்டம்) பாட்டு டீச்சர், ட்ராயிங் டீச்சர் மாதிரி கூட இருந்திருக்கலாம்

சனி ஜீவனஸ்தானத்தில் தொடர்பு கொண்டால்:
ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறை. . எந்த துறையில் இருந்திருந்தாலும் கை,கால் அழுக்காகும் தொழில்/சீட்டில் இருந்திருக்கலாம். ஒர்க்கிங் என்விரான்மென்டில்குறைந்த பட்சம் தூசு, துர்வாசனை இருந்திருக்கும்.
இவருக்கு தொழில் உத்யோகத்தில் எதிர்ப்புகள் இருந்தால்:
காகத்துக்கு சோறு, பசு மாட்டுக்கு அகத்தி கீரை தரவும்.

Tuesday, August 23, 2011

ஜோதிட பால பாடம்: 5


அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னமான கடகத்துக்கு பத்துல குரு வந்து கொஞ்சம் போல சீண்டிப்பார்த்துட்டாரு (வேறென்ன இருக்கிற வேலைய ஒழுங்கா பார்க்க விடாமத்தேன்) அவரு இந்த 30ஆம் தேதி வக்ரமாகப்போறாருங்கோ.
வக்ரம்னா என்ன சுபர் அசுபராயிருவாரு. அசுபர் சுபராயிருவாரு. பத்துல குரு இருந்ததாலத்தானோ என்னமோ ஜா.ரா கெட்ட ஆட்டம் போட்டாலும் "போவட்டும் போவட்டும்னு இருந்தம்.

குரு வக்கிரமாற சங்கதி ஜா.ராவுக்கு தெரியலை போலும். சமீப காலமா (இடையில கொஞ்ச நாளு கேப்) மறுபடி பேண்டு வைக்க ஆரம்பிச்சுட்டாரு.
நம்ம அய்யரு வேற (கோபி கிருஷ்ணன்) "அண்ணா.. அந்த அடாசை இப்படியே விட்டுட்டா எப்படி ? அவன் ஆசனத்துக்கு ஒரு கார்க் அடிங்கோ - நீங்க ஊம்னா நான் அடிக்கறேன்னு கேட்டுக்கிட்டே இருந்தாரு. நாமளும் ஊம் கொட்டிட்டம். இதை கூட ஜா.ராவுக்கு எச்சரிக்கையா சொல்லியாச்சு. ஊ ஹூம்..

நம்ம கோ.கி ஜா.ராவோட கண்ணீர் கடிதங்களை பதிவா போட்டு தூள் பண்ணிட்டாரு. அதை படிக்க இங்கே அழுத்துங்க .ஜா.ராவோட பிற்கால செயல்பாடுகளுக்கெல்லாம் தேவையான இருமனப்போக்கு - மன அழுத்தம் -இயலாமை - பொறாமை எல்லாத்துக்கும் அவரோட கண்ணீர் கடிதங்களே சாட்சி.
இப்பவும் மிஞ்சிப்போகலை. திருவாளர் ஜா.ரா அல்ப சங்கியைக்கு மட்டும் நவத்வாரங்களை திறந்து மத்த நேரம் பொத்திக்கிட்டு தன் வேலைய தான் பார்த்துக்கிட்டா சரி . உடனே இதை ட்ராஃப்டா மாத்திர சொல்லியிருக்கேன்
சொந்த பஞ்சாயத்து ஓகே. பால பாடம் தொடருது..
9ஆமிடம் கெட்டால்:
தந்தை, தந்தை வழி சொத்து, தூர பிரயாணங்கள், சேமிப்பு,முதலீடு,தூர தேச தொடர்பு வகையிலும் பாதிப்பு ஏற்படும் .
3ல் பாவ கிரகம்:
தங்கள் ஜாதகம் தங்கள் இளைய உடன் பிறப்புகளுக்கும், செவிக்கும் நல்லதல்ல. மித மிஞ்சிய தைரியத்தாலும், சாகசம் செய்யும் இச்சையாலும் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
சந்திரன் கெட்டால்:
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பொது வாழ்வு உதவாது.

9ல் கேது/ராகு:
தந்தைக்கும், தந்தை வழி சொத்துக்கும் செதில்,பாம்பு தேள் இத்யாதி விஷ ஜந்துக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
விரய பாவம் கெட்டால்:
இதனால் தூக்கமின்மை, அகால போஜனம்,அகால நித்திரை ,துரித ஸ்கலிதம் - காதல் அ திருமணத்தில் தடைகள் , மனைவியுடன் தகராறுகள் ஏற்படலாம்.
சுக்கிர சூரிய சேர்க்கை:
சுக்கிர சூரிய சேர்க்கையால் விந்து வறளும். எனவே உடலுறவுகளுக்கிடையே யான இடைவெளியை அதிகரிக்கவும். அல்லது தம்பதியிடையே ஈகோ பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்
சுக்கிரன் கெட்டால்:
வெள்ளி அதிகம் உபயோகிக்கவும். லக்சரி,ஆடம்பரம், ஃபர்னிச்சர், டபுள் காட் பெட், ஹோம் நீட்ஸ்,வாகனம் ,பார்ட்டி, சுப காரியங்களில் நீண்ட நேரம் இருந்து எஞ்ஜாய் பண்ணுவது இத்யாதி தவிர்க்கவும். இதுவும்
3.சுக்கிர செவ்வாய் சேர்க்கை
இன உறுப்பில் காயம் ஏற்படலாம். முடிந்தால் அப்டமன் கார்ட் அணியவும். (ஸ்போர்ட்ஸ் கடைகளில் கிடைக்கும்) பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை
1+12
4.தாங்கள் உற்பத்தி துறையில் இருப்பதைவிட விற்பனை துறைக்கு மாறுவது பெட்டர்.

லக்னம் துலாம் அ ரிஷபமாகி லக்னாதிபதி விரயத்தில் நின்றால்/ அ லக்னாதிபதி விரயாதிபதி சேர்க்கை நடந்திருந்தால்: :
ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர் துறைகளில் விற்பனை பிரிவை தேர்வு செய்யவும்.
லக்னம் கன்னி/மிதுனமாகி லக்னாதிபதி விரயத்தில் நின்றால்/ அ லக்னாதிபதி விரயாதிபதி சேர்க்கை நடந்திருந்தால்: :
போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு துறைகளில் விற்பனை பிரிவை தேர்வு செய்து கொண்டால் சாதனை படைக்கலாம்.

குரு+சனி /ராகு/கேது (ரிப்பீட்டு தான் இன்னம் ஸ்ட் ராங்கா சொல்லியிருக்கம்ல)
ஜோதிடனும் ஒரு குருதான். குருஸ்தானத்தில் உள்ள நான் இப்படி சொல்லக்கூடாது. ஆனாலும் தங்கள் நலம் நாடி கூறுகிறேன் இன்று முதல் கோவில் குளம், தெய்வம், தெய்வ நம்பிக்கை இத்யாதியை மறந்துவிடுங்கள் .
உங்கள் ஜாதகப்படி அந்த கடவுள் தங்களுக்கு கொடுத்துள்ள சாய்ஸ் 2
முதல் சாய்ஸ்:
தெய்வ நம்பிக்கையுடன் பணரீதியில் நிறைய கஷ்டப்படுவது. திருமணம், மனைவி ,வாரிசுகள் விசயத்தில் நிராசைப்படுவது .
இரண்டாவது சாய்ஸ்:
நாத்திக வாதியாக மேற்கண்ட தொல்லைகள் பெரிதாக பாதிக்காது ஓரளவேனும் நிம்மதியாக வாழ்வது. இதில் தங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை செய்யவும்.

சனி கெட்டால் பரிகாரம்:
பித்ருக்களுக்கு பிண்டம் வைத்தல் , காகத்துக்கு சோறு வைத்தல், நொண்டிக்கு உதவுதல்.
செவ்வாய் தொடர்பான மனிதர்கள்:
வயதில் சிறியவர்கள், இளையவயது போல் தோற்றம் தரும் மூத்தவர்கள், சகோதரர்கள், வன்னியர், ராஜுக்கள் (ஒரு சாதி பெயருங்க),
ராகு தொடர்பான மனிதர்கள்:
அட்டை கரி நிறத்தவர் ,ஓரப்பார்வை பார்ப்பவர், காகம் போல் தலை சாய்த்து பார்ப்பவர் இதர மதத்தவர், இதர மொழியினர் ஆகியோருடன் கூட்டு வியாபாரம் , நட்பு , வேண்ட
ஜன்ம செவ்வாய்:
பரிகாரம்: போட்டிகள் வேண்டாம்.(ப்ளட் ஷுகர் கூட வரலாம்) , அஜீரணம், மலச்சிக்கல் தவிர்க்கவும் இன்றேல் பைல்ஸ் கியாரண்டி. பவழக்கல் வைத்த மோதிரம் ,
.
சனி தரும் யோகம்:
தாங்கள் அதிர்ஷ்ட சாலி என்பதில் ஐயமில்லை. ஆனால் அதிர்ஷ்டம் சற்று தாமதமாய் (முதுகு வளைந்த பின், தலைமுடியெல்லாம் வெளுத்த பின் வரிக்கும். பொறுமை தேவை. யூனிஃபார்ம் அணியும் தொழில், இரும்பு, ஆயில், சுரங்கம், குவாரி, செகண்ட் ஹ்யாண்ட் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள்,விவசாயத்தொழில், கருப்பு நிற பொருட்கள் தாமதமாக அதிர்ஷ்டம் தரும். மேற்கு திசை, எஸ்.சி.பிரிவினரும் 8.17.26 தேதிகளும்,சனிக்கிழைமையும் கூட அப்படித்தான். பலன் தரும்.
சனி சுபனாகி ஐந்தில் நின்றால்:
முடிவுகள் எடுப்பதில், செயல்பாட்டில் மந்தம் இருப்பின் அதை அப்படியே தொடரவும். அதுவே அதிர்ஷ்டம் தரும். பிள்ளைகள் மட்டும் ரொம்பவே மந்த புத்தி அ கால்,ஆசனம் தொடர்பான தொல்லைகளை சந்திக்கவேண்டி இருக்கும்.
சனிக்கு பரிகாரம்:
திருமலையில் உள்ள வராக ஸ்வாமியை தியானம் செய்க. பெயர் புகழுக்கு ஆசைப்படாது,எதற்கும் முன்னே நிற்காது கும்பலில் கோவிந்தா போடவும்.
புதன் கெட்டால்:
புதன் கிழமை கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வணங்கி வரவும்.
10ல் சந்திரன் அ 10 ஆமிடத்ததிபதி +சந்திரன்:
செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
11ல் சந்திரன் நின்றால்:
லாப நஷ்டம் சமமாக இருக்கும். இதுல பயங்கர நஷ்டம் வரும் என்று முடிவு செய்துவிட்ட விஷயத்தில் திடீர் லாபம் ஏற்பட வாய்ப்புண்டு. லாப விஷயத்திலும் இப்படியே குண்டக்க மண்டக்க நடக்கலாம்
4ல் ராகு/ கேது
பாம்பு புற்று, சாராயக்கடை,சர்ச் ,மசூதி,தர்கா,துர்கை கோயில் உள்ள தெருவில் அருகாமையில் வீடு கட்ட , நிலம் வாங்க வாய்ப்பிருக்கிறது.
6+8/12
நீங்கள் பாக்கி வைத்துள்ள ஒரு கடன் காரர் /எதிரி/போட்டியாளர் செத்தே போகலாம் அ ஊரை விட்டே போய்விடுவார்,
7ல் சந்திரன் அ லக்ன சந்திரன்:
தங்கள் மனைவியார் உடல் திடீர் என்று புசுபுசுவென்று வந்து , திடீன் என்று ஒல்லியாகிவருவார். பரிகாரம் முத்துமாலை அணிதல். தங்கள் வேலை/தொழில் விசயமாக அவர் கூறும் யோசனைகள் பவுர்ணமிக்கு பின் வரும் காலங்களில் ஒர்க் அவுட் ஆக
சனி கெட்டால்:
இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும்.


Monday, August 22, 2011

ஜோதிட பாலபாடம்: 4


அண்ணே வணக்கம்ணே !
பால பாடம் புரியலைன்னு நிறைய புகார் வருது. சனங்களுக்கு அதிகாரம் மட்டும் இருந்திருந்தா நம்மை திகாருக்கே அனுப்பியிருப்பாய்ங்க.அவிக புகார்ல முக்கிய அம்சம் என்னன்னா வரிசைப்படி இல்லை. ஜோதிடம் என்ன முருகன். நாம என்ன ஔவையாரா ஒன்று ரெண்டுன்னு வரிசைப்படுத்திப்பாட. (ச்சொம்மா நக்கல் தேன்)
ஜோதிஷத்துல உள்ளதெல்லாம் 9 கிரகம் , 12 பாவம் தேன். சொந்த சிஸ்டத்துல ப்ரவுஸ் பண்றவுக 9+12 =21 ஃபைல் ஓப்பன் பண்ணி வச்சுக்கிட்டு இந்த தொடர்ல வர்ர மேட்டரை எல்லாம் அந்தந்த கிரகம் அந்தந்த பாவம் தொடர்பான ஃபைல்ல போட்டுக்கிட்டே வந்தா ஒழுங்கான தொகுப்பு தயாராயிரும்.
பாவ வரிசை:
முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குண‌ம்


2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்


3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்

பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்


4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்


5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,


6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு


7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்


8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்


9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.


10ஆவ‌து சேன‌ல்:
வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்


11.ஆவ‌து சேன‌ல்:
மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.


12ஆவ‌து சேன‌ல்:
தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.

கிரக வரிசை;
சூ ,சந், செவ்,ராகு,குரு,சனி,புத,கேது,சுக்
சமைத்துப்பார் புஸ்தவத்துல தாளி ஒவ்வொரு ஐட்டத்துக்கும் தேவை ,செய்முறைன்னு ஒரே முறை ரிப்பீட் ஆயிட்டே இருக்கும். ஆனால் நான் அய்யா சமையலுக்கு தேவை உப்பு,புளி,காரம். சிலதுக்கு கல்லுப்பு,சிலதுக்கு சால்ட் போடுவம் - சிலதுக்கு புளியை அப்படியே போடுவம்,சிலதுக்கு கரைச்சு விடுவம், சிலதுக்கு லெமன் ,காரம்னா சிலதுக்கு காஞ்ச மொளகா,சிலதுக்கு பச்சை மொளகா,சிலதுக்கு மிளகாய் பொடி இதான் சமையலுன்னு சொல்றேன்
வரிசையா எழுதித்தொலைச்சா நீங்க எனக்கு அடிமையாயிருவிங்க. அதே சமயம் நான் கச்சா முச்சான்னு எழுதி நீங்க உங்க சொந்த ஆர்வத்துல தொகுத்து மைண்ட்ல ஏத்திக்கிட்டா நீங்க சுதந்திரர்களா இருக்கலாம். இப்பம் புரியுதா..ஏன் வரிசைப்படி எழுதலைன்னு. (ஸ்..அப்பாடா கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா)

சரி இன்னைக்கும் பால பாடம் தொடருது
கேது கெட்டால்:
தினசரி ஒரு மணி நேரம் - வாரம் ஒரு தினம் (திங்கள்) காவி உடை உடுத்தி வினாயகரை தியானம் செய்யவும். இதர மத நூல்களையும் படிக்கலாம். ( தியானம்னா மனசுக்குள்ள எழும் சிந்தனைகளை கவனிக்கிறது - அந்த கூட்டத்துல வினாயகர் எங்கனா கிராஸ் ஆறாரா பாருங்க போதும்)
சனி காரகம் கொண்ட மனிதர்கள்;
கீழ் சாதியினர் கருப்பாக இருப்பவர்கள், உடல் ஊனமுற்றவர்
இவர்களால் தொல்லை ஏற்பட்டால் பரிகாரம்:
திருமலையில் உள்ள வராக ஸ்வாமியை தியானம் செய்யவும். (பன்றி முகத்துடன் விஷ்ணு) அல்லது வாராஹியையும் வணங்கலாம். ( பன்றி முகத்துடன் கூடிய அம்மன்)
செவ்வாய் கெட்டால்:
முருகனை வழிபடச்செய்யவும். செம்பருத்தி பூவை நிழலில் உலர்த்தி கஷாயம் போட்டு குடிக்க சொல்லவும். ரத்த விருத்திக்கு தேவையான ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்ற சொல்லவும். செம்பு காப்பு/வளையல் அணியவும் ஈயப்பூச்சு கொண்ட செம்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் நல்லது. குறைஞ்ச பட்சம் இப்படியா கொத்த பாத்திரத்துல வச்சு சாப்பிடுங்க.குடிங்க
சந்திர மனிதன்:
சஞ்சல சுபாவம் கொண்டவராக கற்பனை, பரபரப்பு மிக்கவராக இருந்தாலும் ஆழமான யோசனை உள்ளவராக இருப்பார். தன் கருத்துக்களை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பார். சுற்றுபயணங்கள், பயணங்கள் என்றால் விருப்பம் உள்ளவராக இருக்கலாம்/சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் மீது கவர்ச்சி இருக்கும்.
ஒரு வேலையை எடுத்துக்கொண்டு அதை முழுமூச்சாக முடிக்கும் உறுதி இல்லாவிட்டாலும் பல்வேறு வேலைகளுக்கிடையே அனைத்து வேலைகளையும் தவணையில் சிறிது சிறிதாக முடிக்கும் தனமை இருக்கலாம்.
பரிகாரம்:
வண்ண மீன் வளர்ப்பு, கன்னியா குமாரி வழிபாடு, ஊஞ்சலாடுதல், நிலாச்சோறு, ஸ்படிக மாலை, முத்து மாலை , முத்து மோதிரம்.

4ல் ராகு:
ஜாதகருக்கு படிப்பில் தடை ஏற்படலாம். அன்னிய மொழியில்/ நடைமுறை வாழ்வில் வித்தகராவார்.இதய பகுதியில் மச்சம் இருக்கலாம்.
சூரியன் சுப பலமானால்:(பகல்ல பிறந்திருந்தா)
இவருக்கு சிறிய தந்தை , பெரிய தந்தை போன்றோரின் அன்பு, ஆதரவு கிட்டலாம்.
சனி தொடர்பான கணவர், மனைவி:
இவர் தகுதிக்கு சமமானவராக இல்லாது போகலாம். தம்பதியிடையில் சச்சரவுகளும் ஏற்படலாம். . சிறு வாகன விபத்தில் கால் தொடர்பான பிரச்சினை. பொருந்தா காதல் போன்ற விவகாரமும் தலை காட்டலாம்.
\பெண் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டால்:
பிறப்புறுப்பு கருப்பை தொடர்பான மருத்துவ பிரச்சினைகளும் வரலாம்
சுக்கிரன் கெட்டால் பரிகாரம்:
லட்சுமிக்கு சுமங்கலி பூஜை, எளிய வாழ்வு. ஃபர்னிச்சர்ஸ், ஸ்னேக்ஸ், சுவீட்ஸ், சாட்டிங், டி.வி, ஏ.சி, வாசனா திரவியங்கள்,பார்ட்டி,கெட் டு கெதர் ,சுப காரியங்களில் பங்கேற்பது லக்சரி தவிர்க்கவும்.
11 கெட்டால்:
இவருக்கு முன் பிறந்த மூத்த உடன் பிறப்புக்கு இந்த ஜாதகம் அனுகூலமல்ல.
சனி செவ்வாய் சேர்க்கை:
தனது தாயின் கருவில் இருந்த போதே தூரத்து/ நெருங்கிய உறவில் துர்மரணம் அ அகால மரணம் சம்பவித்திருக்கலாம். மேலும் ரத்தம் கெடுவதால் வரும் நோய்களும் வாட்டலாம் . உ.ம் கட்டிகள், ப்ளட் ஷுகர் ஒரு உயில் மூலமாகவோ நஷ்ட ஈடு வகையிலேயோ தனவரவு ஏற்படலாம்.
பரிகாரம் : குல தெய்வத்துக்கு பலி பூஜை. நட்பு /உறவுக்கு நான் வெஜ் டின்னர் ஜாதகரும் சாப்பிடலாம்.
இரண்டில் ராகு/கேது:
இவருக்கு பேச்சு, கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம். எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல், ஈ என் டி பிரச்சினைகள் ( காது, மூக்கு, தொண்டை) தொல்லை தரலாம். குடும்பத்திற்கு கடன் ஏற்படலாம்.
ஜாதகர் அடிக்கடி பேச்சு மாறுதல், திடீர் என்று கிசு கிசுப்பாய் பேசுதல், திடீர் என்று கத்தி பேசுதல் , மிமிக்ரி செய்தல் நடக்கலாம்.
குரு கெட்டால்:
தனக்கு மீறிய தான தருமம் அ கோர்ட்டு நடவடிக்கை அ அரசியல் நடவடிக்கை காரணமாக பொருளாதார நெருக்கடி ,கேஸ்ட்ரிக், பிரச்சினைகள் வரலாம்.
லக்ன சனி:
மேலுக்கு மந்த புத்தி உடையவராக, சோம்பல் கொண்டவராக இருப்பார். சனி லக்னத்துக்கு சுபனாகில் அதிர்ஷ்ட சாலி. டெக்னிக்கலாய் முன்னேறி குறைந்தது 8 பேருக்கு வேலை வாய்ப்பு தருவார்.
சனி தொழில்:
இரும்பு,ஆயில், க்ரானைட்ஸ், செகண்ட் ஹேண்ட் பொருட்கள், விவசாயம் தொடர்பானவை , வெட்டினரி துறை, கருப்பான பொருட்கள், துர் நாற்றம் வீசும் பொருட்களில் நல்ல லாபம் முன்னேற்றம் கிட்டும் .
சனி சுபனாக இருந்து படிக்கும் வயதில் சனி தசை :
கல்வியில் சிறு தடைகள் ,ஆர்வமின்மை, பின் தங்குதல் நடக்கலாம். என்றாலும் கல்வி தொடரும். அது தொழில் நுட்ப கல்வியாக இருந்தால் பிரச்சினை இல்லை.
செவ்வாய் கெட்டால் /முக்கியமா புத செவ் சேர்க்கை::
உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், வெ ந் நீர் , சுடும் எண்ணை , மின்சாரத்தாலும் பிரச்சினை ஏற்படலாம் எச்சரிக்கை தேவை.
சனி கெட்டால் ( முக்கியமாக எட்டாமிடத்துடன் தொடர்பு ஏற்பட்டால்) பலன் + பரிகாரம்:
ஜாதகருக்கு இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும்.
4ஆமிடம் சுபபலமானால்:
ஜாதகருக்கு சொந்த வீடு, வாகன யோகம் ஏற்படும்.
சூரியன் கெட்டால் பரிகாரம்:
பரிகாரம் : காயத்ரி மந்திர ஜபம், சூரிய நமஸ்காரம்.
சூரியன் சுபபலமானால்:
ஜாதகர் வாழ்க்கை கல்வி பயின்று ஆஷாட பூதியாக இல்லாவிட்டாலும் தமக்கென்று ஒரு ஃபிலாசஃபியுடன் வாழ்வார்.
லக்னாதிபதி விரயம் :
சதா சர்வ காலம் தங்கள் முயற்சியில் பிறர் வேலைகள் எல்லாம் முடியுமே தவிர சொந்த வேலை முடியாது. ஞாபக சக்தி குறைவு, சொந்த கருத்து ,புத்தி இன்மை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருத்தல் தாழ்வு மனப்பான்மை அ எதிராளிகளை கிள்ளுகீரையாக பாவிப்பது போன்ற குணங்கள் ஏற்படும்.
கேந்திர சுக்கிரன்:
செக்ஸ் மீதான அதீத ஈடுபாட்டால் விரைவில் அதன் மீதுள்ள கவர்ச்சியை இழத்தல் கூட நடக்கலாம். காதல் ,கல்யாணம் வகையிலும் அதிருப்திகள் ஏற்படும். பொருந்தா காதல், காதல் திருமணம், கலாட்டா கல்யாணம்,மனைவியுடன் தகராறுகள் , பெண்களால் விவகாரம் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.
சுக்கிரன் கெட்டால் பரிகாரம்:
வெண் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வெள்ளியன்று லட்சுமி பூஜை செய்க.சுமங்கலிகளுக்கு (6 பேர்) தாம்பூலம் வழங்கவும். வெள்ளி ஆபரணங்கள் அதிகம் அணியவும். வெள்ளி பாத்திரங்கள் உபயோகிக்கவும்.

Saturday, August 20, 2011

ஜோதிட பாலபாடம்: 2


அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பால பாடம் இன்றும் தொடருது. அதுக்கு மிந்தி சின்ன எச்சரிக்கை. இதெல்லாம் ஏதோ ஒரு ஃபேக்டரை /ஒரு கிரக ஸ்திதியை வச்சு எழுதினது. அந்த கிரக ஸ்திதியை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணக்கூடிய வேறொரு கிரகஸ்திதி ஜாதகத்துல இருந்தா பலன் மாறும். இதை கவனத்தில் வச்சு படிங்க.

உதாரணமா:

பாவகிரகம் லக்னாதிபதியானால்:
லக்னாதிபதி என்பவர் ஒரு ஜாதகத்துக்கு தாய் மாதிரி. புலியே ஆனாலும் தன் குட்டிக்கு தாயாகவே இருப்பதை போல் பாபகிரகம் லக்னாதிபத்யம் பெற்றாலும் அவர் உங்க ஜாதகத்துக்கு லக்னாதிபதி என்பதால் நல்லதையே செய்யவேண்டும்

இது வே இவர் 6 ,8 .12லயோ இருந்தா நற்பலன் தருவாரா? மாட்டார். இது வே இவர் 6 ,8 .12அதிபதிகளோட சேர்ந்தா நற்பலன் தருவாரா மாட்டார்.

அவன் அவள் அது தொடரும் தொடருது. தொடரோட 18 ஆவது அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க

கிரகங்களின் இயல்பு: (தன்னிலை)

பொதுவா எங்களுக்குன்னு ஒரு நேச்சர் இருக்கு......... நாங்க எந்த அளவுக்கு வலிமையா இருக்கோமோ அந்த அளவுக்கு தீயபலனை குறைச்சு, நற்பலனை கூட்டி கொடுப்போம். அதேமாதிரி எந்த அளவுக்கு வீக்காகறமோ அந்த அளவுக்கு தீய பலனை கூட்டி ,நற்பலனை குறைச்சு கொடுப்போம்.

ஸ்வ புக்தி அ சுய புக்தி:
ஒரு தசை முழுக்க முழுக்க நற்பலன் தருவதாயின் அதன் சுய புக்தி (முதல் புக்தி ) பலன் தரக்கூடாது. அதே நேரம் ஒரு தசை முழுக்க முழுக்க கெடுக்க வேண்டுமேயானால் தன் சுய புக்தியில் (முதல் புக்தி) யோக பலனை தரவேண்டும்.
சனி தசை
யாருக்கு அவர் வாழ் நாளில் சனி தசை முழுக்க ( 19 வ) நடைபெறுகிறதோ அவருக்கு மறுபிறவி கிடையாது என்று நம்பிக்கை உள்ளது. நல்லதோ கெட்டதோ முழுக்க முழுக்க அனுபவித்துவிடுவார்கள் என்பதால் இந்த நம்பிக்கை
புதன் விரயத்தில்:
முக்கியமாக மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவுகளில் விற்பனை துறையை தேர்வு செய்து கொண்டால் சாதனை படைக்கலாம்.
விரயாதிபதி மூன்றில்:
உடன் பிறப்புகள் வகையறாவிலும் நஷ்டம்,மனக்கஷ்டமே நேரிடும். அப்படியானால் லேசான செவிட்டு தன்மையும் ஏற்படலாம்.அல்லல் அலைச்சலிருக்கும். விரக்தி ஏற்படும்.
சுக்கிரன் சுபபலமானால்:
நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகம், லாபம் தரும்.பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியனவும் அனுகூலம் தரும்.
ஜன்ம செவ்வாய் / லக்ன செவ்வாய் / செவ்வாய் நீசம்/ 7ல் செவ்வாய்:
அதி கோபத்தால் வரும் வியாதிகள் (ஹை பிபி) அல்லது கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் ( அல்சர்) வரலாம்.இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.
லக்னாதிபதி நீசம்:
இதன் பலனாக ஜாதகம் ஒரு வீடுன்னா லக்னாதிபதி கடைக்கால் மாதிரி .6 அடி ஆழத்துக்கு போடவேண்டிய க்டைக்காலை 3 அடியில முடிச்சிட்டா கிரவுண்ட் ஃப்ளோர் வரைகும்னா சமாளிக்கலாம். ( ஐ மீன் பேச்சிலர் லைஃப் - உத்யோகம் ) ஃபர்ஸ்ட் ஃப்ளோர் போட்டா ரிஸ்க். ( ஐ மீன் திருமண வாழ்க்கை - சொந்த தொழில் ) அதுக்கு மேல போனா டப்பா டான்ஸ் ஆடிரும்
லக்னாதிபதி விரயம்:
ஜாதகம் ஒரு வீடுன்னா லக்னாதிபதி கடைக்கால் மாதிரி . நீங்க 32 ஆம் நெம்பர் ஃப்ளாட்ல வீடு கட்டனும்னா கடைக்காலும் 32 ஆம் நெம்பர் ஃப்ளாட்ல தானே போடுவிங்க. பக்கத்து ஃப்ளாட்ல போட்டுட்டா என்னாகும்? அதே நிலைதான் இந்த ஜாதகத்துக்கும்.இதனால்
சர்வ காலம் தங்கள் முயற்சியில் பிறர் வேலைகள் எல்லாம் முடியுமே தவிர சொந்த வேலை முடியாது. ஞாபக சக்தி குறைவு, சொந்த கருத்து ,புத்தி இன்மை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருத்தல் தாழ்வு மனப்பான்மை அ எதிராளிகளை கிள்ளுகீரையாக பாவிப்பது, ஸ்திரமான அபிப்ராயம் இல்லாது போதல் போன்ற குணங்கள் ஏற்படும். அல்லல் அலைச்சல் தூக்கமின்மை , விரயமான பிரயாணங்கள்,இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது போன்ற பலனும் ஏற்படும். சேல்ஸ் லைனில் இருந்தால் மட்டுமே சாதனைகள் செய்யலாம். தாங்கள் உற்பத்தி/சேவை துறைகளில் இருப்பதைவிட விற்பனை துறைக்கு மாறுவது பெட்டர்.
சந்திரன் கெட்டால் பரிகாரம்;
தண்ணீர் பந்தல் வைத்தல், லாப நோக்கற்ற அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்கு மாதம் ஒரு டாங்க் தண்ணீர் ஸ்பான்சர் செய்யலாம்.
செவ் கெட்டால் பரிகாரம்:
முருகன் கோவிலுக்கு எரியும் பொருட்களை அன்பளித்தல். (உம்: பல்பு , விளக்கு. விளக்காயின் செம்பாகில் உத்தமம். செம்பு பூஜா பாத்திரங்களும் தரலாம் அ உடல் அங்கம் அறுபட்டவர்கள், தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்)
9 ஆமிடம் குருவால் பலம் பெற்றால்:
சமூகத்தில் நல்ல மரியாதையை பெற்றிருப்பர். ஊர் பொது வேலைகள், சேவைகள், சங்கம் , கோவில் தேவஸ்தானம் போன்றவற்றில் பங்கிருக்கலாம்.
செவ்வாய் லக்னாதிபதியாகி நீசம்
சோம்பலுடையவர் என்று கூற முடியாது. சரியான திட்டமிடல் இன்றி, மனோபலம் இன்றி, வேலைகளை குழப்பி விடலாமே தவிர உடல் நலம் ஒத்துழைக்காது போகலாமே தவிர சுறு சுறுப்பானவர் என்றே சொல்லலாம்.
ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்
கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்
சனியால் பிரச்சினைக்கு பரிகாரம் :
கிராம தேவதையை பூசித்தல்
2 ஆம் பாவம் கெட்டால்:
தனம்,வாக்கு,குடும்பம், கண்கள் ஆகிய வகைகளில் கஷ்டம் ,மனக்கஷ்டம், நஷ்டம் ஏற்படலாம்.
5 ஆம் பாவம் கெட்டால்:
பிள்ளைகள், மன நிம்மதி, பெயர் புகழ் இத்யாதிக்கு பாதிப்பு
நான்கில் சூரியன்:
தந்தை வழியில் கூரையிழந்த வீடோ, காலி இடமோ கிடைக்கலாம். அது மலை பிரதேசத்தில் அ குக்கிராமத்தில் இருக்கலாம்.

Friday, August 19, 2011

ஜோதிட பால பாடம் :1


அண்ணே வணக்கம்ணே !

அவன் அவள் அது தொடரை ஆரம்பிச்ச பிறவு ஹிட்ஸ் குறைய ஆரம்பிச்சுருச்சு. ( ஜா.ரா ! எங்கே போறிங்க? ஸ்வீட் வாங்கவா ? வேணா வேஸ்ட்.. குறையறதுன்னா ஆயிரத்துலருந்து குறைஞ்சு 800 க்கும் 900 க்கும் இடையில காபரே ஆடுது .அவ்ளதான். அதனால புதுசா எதுனா கில்மா வசவு ஸ்பார்க் ஆகுதா ரோசிங்க. கமெண்ட் போட நல்லாருக்கும் )

ஹிட்ஸ் குறைஞ்சாலும் இந்த தொடர் ஆத்தாளுக்கும் நமக்கும் இடையிலான கனெக்சனை நல்லாவே தீட்டிருச்சு. இதுக்கு சின்ன உதாரணத்தை சொல்றதுக்கு மிந்தி ஜோதிட பால பாடம் கற்க வந்த பார்ட்டிங்களுக்கு ஒரு பம்பர் ஆஃபரை அறிவிச்சுர்ரன்.

இன்னையிலருந்து ஜோதிட பால பாடம்ங்கற இதே தலைப்புல தினசரி சில விஷயங்களை எழுதப்போறேன்.

அவன் அவள் அது தொடருக்கு பேர்லலா இதுவும் கன்டின்யூ ஆகும். அவன் அவள் அது தொடரோட 17 ஆவது சாப்டரை படிக்க இங்கே அழுத்துங்க.

இப்ப பாலபாடத்துக்கு போயிருவமா:

அண்ணே வணக்கம்ணே !

அனுபவஜோதிடம் சைட்டுக்கு வர்ரவுக சோசியத்துல எதுனா அடிப்படை மேட்டர் தேறுமான்னு வந்து வந்து ஏமாந்து போறாய்ங்கனு கேள்வி.அந்த மாதிரி பார்ட்டிகளுக்காக தொடர்ந்து பால பாடங்களை தர்ரதா முடிவு பண்ணியிருக்கம்.

ஆனால் இந்த பாடங்கள் வரிசைப்படி இருக்காது. இதெல்லாம் பொதுப்பலன் தேன். இங்கன குறிப்பிட்ட கிரகஸ்திதியை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணக்கூடிய வேறு ஏதாவது கிரகஸ்திதி உங்க ஜாதகத்துல இருந்தா இந்த பலன் மாறும்.

சனி தரும் பலன்:

தாமதமா கிடைக்கும் -அது ஏலத்துல வர்ர சொத்தாவோ - சோற்றுக்கில்லாத நிலையில் விற்கப்படும் சொத்தாவோ -கொலை /தற்கொலை நடந்த சொத்தாவோ -லாக் அவுட்ல இருந்த தொழிற்சாலையாவோ இருக்கலாம்.
லக்னாதிபதி+ராகு:
இது தங்களை ரகசியங்களுக்குள் புதைத்துவிடும். ஒரு காலத்துல அரசாங்க ரகசியங்கள் வெளி நாட்டுக்கு லீக் செய்யப்பட்டதாய் பரபரப்பு ஏற்பட்டது ஞா இருக்கலாம்.

கண்டதையும் ரகசியம் என்று குறிப்பிட்டு தொலைத்ததால் - ரகசிய காப்பு இயலாத ஒன்றாய் போனதால் இது இப்படி நிகழ்ந்தது

தாங்கள் கண்டதுக்கும் ரகசியம் மெயின்டெய்ன் செய்பவராக இருக்கலாம். ரகசியம்னா "எல்லாத்துலயும்" இது ஏறக்குறைய ராகு ஜன்மத்தில் இருப்பது போன்ற எஃபெக்டை தரலாம்.

பத்தில் கேது:
இங்கே கேது நின்றது நல்லதே. இது தொழில் உத்யோக துறையில் தோல்விகளை கண்டு அஞ்சாத மன நிலையை காட்டும்.அதே நேரம் செய்யும் வேலைகளில் புதுமையை புகுத்துகிறேன் பேர்வழி ஏகத்துக்கு குழப்பவும் செய்யலாம். மொத்தத்தில் சோம்பல் இருக்காது. நல்லதாவோ /பொல்லாததாவோ ஏதோ ஒன்னை செய்துக்கிட்டே இருப்பாய்ங்க.

4 ல் சனி+செவ்வாய்:

அந்த வீட்டில் துர்மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம். 100 சதவீதம் வாஸ்து பார்த்தே குடி போக வேண்டும். அந்த வீடு இடுகாடு, ஆடறுப்பு நிலையம், மார்ச்சுவரியை ஒட்டி அமைந்திருக்கலாம். பயம் வேண்டாம். வாஸ்து சரி செய்து கொண்டால் போதுமானது. தியானத்தில் உள்ள சிவனார், உக்ர ரூபமாக உள்ள அம்மன் படத்தை வைத்து வழிபட்டு வரவும்.

நான் வெஜ் அடிக்கடி சமைக்கவும். பிறரையும் அழைத்து உண்ணச்செய்யவும். இல்லாவிட்டால் எவ்ரி திங் ஓகே என்ற நிலையில் திடீர் என்று வேண்டாத சம்பவங்கள் நடக்கும்.




2/8 ல் ராகு கேது: அல்லது 2ல் கேது 8ல் ராகு:

ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.
பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

புதன் ஜாதகத்துல சுப பலமா இருந்தா:
எவ்வித முதலும் இன்றி தன் தொடர்புகளை பயன் படுத்தியே தரகு, கமிஷன், ஏஜென்ஸி வகையறாவில் பணமீட்டுவார். பேச்சுத்திறமை, வாய் சாலக்கு பொது அறிவை வைத்தே வைத்தியம் ,கல்வி,கணிதம், மீடியா, போஸ்டல், கூரியர், எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருந்தகம், வருமான வரி, விற்பனை வரி விற்பனைட் துறையை தேர்வு செய்து கொண்டால் சாதனை படைக்கலாம்.
நல்ல நேரம் கெட்ட நேரம் வித்யாசம்:
கெட்ட நேரம்ங்கறது முயற்சிகளை செய்யற நேரம். நல்ல நேரங்கறது அந்த முயற்சியின் பலனை அனுபவிக்கிற நேரம்.
கெட்ட நேரத்துல நல்ல வேலைய செய்தா அது இன்றே கடைசி கணக்கா தொடரவே தொடராது. நல்ல நேரத்துல நல்ல வேலைய செய்தா அது இன்னைக்கு ஒன்னு நாளைக்கு 10 ன்னு பெருகும். இதான் வித்யாசம்.

2 ஆமிடம் கெட்டால்:
வாக்கு தவற வேண்டி வர்ரது, நிஷ்டூரமா பேசிர்ரது, வாக்கு கொடுத்து மாட்டிக்கிறது, நீங்க நிஜமே சொன்னாலும் பொய்யா போயிர்ரது, பொய் சொன்னா நிஜமாயிர்ரது. குடும்ப கலகம். சாப்பாட்டுக்கே கஷ்டம், கண் நோய்.
2ஆமிடம் சனியால் கெட்டால்: (தன்னிலை)
நீங்க சுடு சோறே சாப்பிடாத படிக்கு பண்ணுவன். கொடுக்கல் வாங்கல்ல பயங்கர தாமதம் ஏற்படும். கொடுத்ததுல நிறைய பணம் திரும்பி வரவே வராது

சந்திரனால் வரும் பிரச்சினைகள்:
சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன உங்கள் புத்தியை மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும். முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பொது வாழ்வு உதவாது.செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாவார்.திடீர் பயணங்கள் ஏற்படலாம்.சில சமயம் க்ஷண நேரத்தில் முடிவெடுத்து ஆண்டு கணக்கில் வருந்துவதும் நடக்கலாம்.தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்"
அடிக்கடி வீடு மாறுதல் அ வீட்டு நிதி நிலை மாறுதலை காட்டும். எல்லா வகையிலும் எவ்ரி டூ இயர்ஸுக்கு பெரும் மாற்றம் தெரியும். வாகன விசயத்திலும் பெரும் ஏற்ற இறக்கம் இருக்கும். சில காலம் சொத்துக்களை விற்று வாழும் நிலையும் ஏற்படலாம். அதே சமயம் திடீர் தனலாபம் ஏற்பட்டு சொத்து வாங்கும் சூழலும் ஏற்படும் இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸ் இருக்கும் சில சமயம் அவை அச்சு அசலாக நிஜமாவதும் உண்டு..

கருத்து சொல்லுங்க:

என் கணிப்புகளை பற்றின உங்க கருத்துக்களை சொல்லுங்க. என்னை பொருத்தவரை ஜோதிஷம் என்ன சொல்லுதுங்கறது முக்கியம் கிடையாது. உங்க அனுபவம் தான் முக்கியம். அதனால தான் என் ஜோதிஷத்துக்கு அனுபவ ஜோதிஷம்னு பேர் வச்சிருக்கேன். இன்னைக்கு நான் சொல்லியிருக்கிற கணிப்பு 1989 முதல் பல்லாயிரம் க்ளையண்ட்ஸோட அனுபவத்துல புடம் போட்டது தான். உங்க அனுபவம் ஏதேனும் திருத்தங்களை சொன்னா அதையும் ஏத்துக்க தயாரா இருக்கேன்