தேரு எங்க சுத்தினாலும் தேரடிக்குத்தான் வரனுங்கற மாதிரி மறுபடி தமிழ் வலைப்பூ மேல கான்சன்ட்ரேட் பண்றதா முடிவு பண்ணியிருக்கேன். தமிழ்மணத்தோட கருவிப்பட்டைய இணைக்காததால காட்டில் காய்ந்த நிலவாய் போயின என் எழுத்துக்கள். நிற்க கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கில் ஒரு பதிவை ஆரம்பித்தேன் ஸ்வாமி 7867 என்பது அதன் எயர். இந்த 7 மாத காலத்தில் 16000 பேர் பார்த்தாங்க. ஆந்திர முதல்வரே சந்திரபாபுவை நான் செய்த ரவுசுக்கு ரெஸ்பாண்ட் ஆகிட்டாரு.
இருந்தாலும் என்ன குடுமிகள் பற்றி தெரியாத்தனமா ஒரு பதிவுல மென்ஷன் பண்ணிட்டேன். தினம் தினம் சுமார் 200 பேர் பார்த்துக்கிட்டிருந்த என் வலைப்பூவை சதி செய்து துஷ்பிரசாரம் செய்து ஒரு தடவை தடை கூட பண்ணிட்டாங்க. விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தால் ஜனத்தொகை பெருக்கம்,செக்ஸ் குற்றங்கள்,வன்முறை இத்யாதியை தவிர்க்கலாம்னு எழுதியிருந்தேன் அதை சாக்கா வச்சு துஷ்பிரச்சாரம் செய்தானுங்க.
ஆளை விடுங்கடான்னிட்டு வெப்துனியால இந்தில ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுட்டன்.
என் சித்தாந்தம் ரொம்ப சிம்பிள். நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல,ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம் . இப்போ சிதறிட்டோம். மறுபடி இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடலை தடையா நினக்கிறோம். கொலை தற்கொலை எல்லாத்துக்கும் காரணம் இந்த இணைவதற்கான துடிப்புத்தான்.(மாமிசம் உண்பவர்கள் கதையும் இதுதான்)
ஆனால் இந்த இணைவுக்கு தடையா இருக்கிறது நம்ம உடலில்லே..அகம்பாவம். இதை மறந்துட்டு உடலினை கொண்டே இணையபார்க்கிறோம். உடல்களை உதிர்க்கத்துடிக்கிறோம். நாம எல்லாம் ஒண்ணு. (ஒரு தாய் பிள்ளைன்னு ஜல்லியைக்க முடியாதுன்னாலும் நம்ம எல்லாருக்குமிடையில் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கு.
கொல்றோம். கொல்லப்படறோம். இதுக்கு துடிக்கிறோம். காரணம் இணைப்புக்கு தடையா நாம தவறா நினைக்கிற உடலை உதிர்ப்பதே.
ஆனால் அகத்தை (ஈகோ) உதிர்த்தால் போதும் எல்லோரும் இணையலாம். இப்போ ஜெயா கலைஞரை எடுத்துக்கங்க ரெண்டுபேருக்கும் என்ன வித்யாசம் ? ஒரு ரோமமுல்லே. ரெண்டு கழகத்தையும் சேர்த்து தொலைக்கலாமில்லையா.
ராஜ பக்ஷே வை பாருங்க சிங்கள, தமிழ் பிரிவினையை தமிழர்களை ஒழித்துக்கட்டி கருவறுத்துவிட பார்க்கிறார். எப்படியோ என்னால முடிஞ்சவரைக்கும் என் சித்தாந்தத்தை விளக்கிட்டேன்னு (குழப்பிட்டேன்னு) நினைக்கிறேன்.