இஸ்லாம் சம்பிரதாயங்களை பார்த்தால் அது பாலை நிலத்துக்கும்,யுத்த காலத்துக்கும் ஏற்றவகையில் அமைந்திருப்பதை உணரலாம். உதாரணமாக: ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பாலைவனத்தில் ஒரு காரவான் (பிரயாணிகள் கூட்டம்) கடந்து சென்றால் மற்றொரு காரவான் வர மாதமாகலாம், இரண்டு மாதமாகலாம். இன்று ? சென்னை போன்ற கான்க்ரீட் காட்டில் ?
முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான். அன்று,பாலை நிலத்தில் வெஜ் உணவுகள் கிடைப்பது துர்லபம் எனவே மாமிச உணவு அனுமதிக்கப்பட்டது. இன்று ?
மேலுமொரு உதாரணம்: முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்யப்பட்ட ஏற்பாடே.
பெண்கள் புர்கா அணிவதும், கோஷாவாக இருப்பதும் எதிரிகள் குறித்த அச்சத்தால் தான் (அது யுத்த காலம் என்பதால் இந்த ஏற்பாடு) மேலும் பாலை நிலத்தில் சூரிய வெப்பம், அதை பிரதிபலிக்கும் மணல்வெளி காரணமாக பெண்களின் முகம் பொலிவிழந்து போகுமென்பதாலும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்.
ஆனால் இன்றுள்ள பொல்யூஷனுக்கு இந்து பெண்களும் புர்கா அணிவது பாதுகாப்போ என்னவோ?
தமது டிப்பாசிட்டுகள் மீதான வங்கி வட்டியை கூட தனியே கணக்கிட்டு வருடம் ஒருமுறை தானம் செய்யும் முசல்மான்கள் உண்டு. ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது. முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால் தான் வந்தேமாதரம் பாடுவதை கூட அந்த காலத்தில் தவிர்த்தனர். ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.
மேலும் மதச்சார்ப்பற்ற தன்மை என்ற பெயரால் கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தலும் ,ஆஞ்சனேயர் தாயத்து தரிப்பதையும் காணமுடிகிறது. தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்
நான் முஸ்லீம் சகோதரர்களை கேட்டுக்கொள்வது ஒன்றே அந்த யுத்தகாலத்துக்கேற்ற வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை இன்றும் பின்பற்றுவது தேவையா ? என்று யோசியுங்கள். பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள். இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?
இறைவனுக்கும், பக்தனுக்குமிடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை. நாம் பேசுவதை இறைவன் கேட்கிறான். இறைவன் சொல்லை நமக்கு சேர விடாமல் செய்வது இடைத்தரகர்களும், அகந்தையும் தான். எனவே அகந்தையை கைவிடுவோம்.( நாம் சரி மற்றவர்கள் அனைவரும் தவறு என்ற எண்ணம்) இடைத்தரகர்களின் சூழ்ச்சியை சூட்சும புத்தியுடன் சிந்தித்து செயல்படுவோம்.
இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின்பற்றப்படுமேயானால் இந்த பூமியில் வேறு மதங்களே இருக்காது !