மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் அதன் பின்னுள்ள் விருப்பம் ஒன்றே .அது கொல்வது அல்லது கொல்லப்படுவதே ! இது மனவியல் கூறும் உண்மை . மனவியல் மேலும் கூறுவது என்னவென்றால்:
கொல்லவும்,கொல்லப்படவும் தைரியம் போதாதவன் அதற்கு ஆல்ட்டர்னேடிவ் வழிகளை தேடுகிறான். அவை யாவன செக்ஸ்,பணம்,அதிகாரம்,புகழ்
எல்லாம் சரி ஆறறிவு படைத்த மனிதன் ஏன் கொல்வதும் கொல்லப்படுவதுமாயிருக்கிறான்.
இங்குதான் முடிவான தத்துவம் வருகிறது. நாமனைவரும் இல்லாதிருந்த காலமே கிடையாது. நாம் எல்லோருமே ஏதோ ஒரு கல்பத்தில்,ஏதோ ஒரு யுகத்தில் ஏதோ ஒரு வடிவில் சேர்ந்திருந்தோம். அப்போது அந்த இணைவில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தோம். பின் ப்ரிந்தோம். மீண்டும் இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடல் தடையாக இருப்பதாக பிரமிக்கிறோம்.
மாமிசம் உண்பவனை பாருங்கள். அவன் என்ன செய்கிறான். அவன் கொன்ற கோழியையோ,ஆட்டையோ தன்னுள் ஐக்கியம் செய்துகொள்கிறான். ஆண் பெண்ணில் ஐக்கியமாகிறான். பெண் ஆணை தன்னில் ஐக்கியம் செய்து கொள்கிறாள். இணைப்புக்கான கோரிக்கை அவர்களை ஊக்கு (சட்டைக்கு போடறதில்லிங்க) விக்கிறது. ஆனால் இணைப்புக்கு வழி உடல்களை இணைப்பதோ ? உடல்களை உதிர்ப்பதோ அல்ல.
நாம் பிரிந்திருக்கிறோம் என்பது நம் பிரமை. ஏற்கெனவே இணைந்தேதானிருக்கிறோம். நாமனைவரும் இப்படைப்பில் ஒரு அங்கமாகத்தானிருக்கிறோம். ஆனால் நம்மை இந்த படைப்பிலிருந்து பிரித்துக் காட்டுவது நமது அகந்தை ஒன்றே. பிறந்த குழந்தைக்கு தன்னை தனது பொம்மைகளிலிருந்து கூட பிரித்துக்காண முடிவதில்லை. ஆனால் நாம் ?
பெற்ற தாயை, தந்தையை, கூடப்பிறந்த சகோதர சகோதிரிகளையும் நம்மிலிருந்து பிரித்து காண்கிறோம். முஸ்லீம் இந்துவை, இந்து முஸ்லீமை பிரித்துக் காண்கிறான். இதனால் மனிதனில் பாதுகாப்பின்மை வளர்கிறது.
இதனால் மனிதன் இணைய துடிக்கிறான். மாமிசம் உண்ணும்பழக்கம், செக்ஸ் மீதான வேட்கை அதிகரிக்க மனிதருள் பெருகி வரும் பிரிவினையே முதல் காரணம். இதனால் தான் மனிதர்கள் சாகத்துடிக்கிறார்கள்.கொலை தற்கொலைக்கெல்லாம் ஸ்தூலமான காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் சூட்சுமமாக பார்க்கும்போது அவனது நோக்கம் தன் உடலை உதிர்ப்பதும் இந்த அண்டத்துடன் இரண்டற கலப்பதுமே.
மனிதன் காட்டில் வாழ்ந்த காலத்தில் குழுவாய் வாழ்ந்தான் (இணைந்து வாழ்ந்தான்) மேலும் உடல் உதிர்ந்து போக-அவன் இந்த அண்டத்துடன் இரண்டறா கலக்க எந்த நேரமும் வாய்ப்பிருந்தது. எனவே அவன் தற்கொலைக்கோ ,கொலைக்கோ பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை. இப்போது காலம் மாறிப்போச்சு. மரணம் ஏறக்குறைய அசாத்தியமாகி விட்டது. எனவே தானாய் வராத சாவை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறான் மனிதன்.
செக்ஸில் ஆண் பெண்களுக்கு சுக்கில சுரோணிதங்கள் ஸ்கலிதமாகும்போது காலம் தெரியாத மரணமொத்த ப்ளாக் அவுட் ஏற்படுகிறது. எனவேதான் மனிதன் செக்ஸ் மீது அதிக ஆர்வம் காட்டுகிறான். 100 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் கூடி வாழ்ந்தனர், இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். எனவே படைப்புடனான உறவு நெருக்கமாகவே இருந்தது. மனிதன் பாதுக்காப்புணர்வுடன் வாழ்ந்தான்.
இப்போது ? இயற்கையிலிருந்து ஓடினான் ஓடினான் ஓடிக்கொண்டே இருக்கிறான். இந்த விலகல் அவனில் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது எனவே அவன் சமுதாயத்துடன் இணைய துடிக்கிறான். ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள துடிக்கிறான். சாதி சங்கம்,கட்சிகள் பெருக இதுவே காரணம். ஓயாமல் செல் பேசுவதும் இதன் அடையாளம் தான்.
பின்னே இதற்கு என்னதான் தீர்வு ? மனிதன் சமுதாயத்துடன்,இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும். அதற்கு தடையாக இருப்பது அவன் உடலல்ல். அவனது அகந்தை. ஆண் பெண் இயற்கையின் இரண்டு பாகங்கள். இவை பிரிந்து கிடக்கும் வரை மனிதன் அபத்திரமாகத்தான் உணர்வான். பெண் இயற்கையின் பிரதி.+ நிதி. பெண்ணே இயற்கைதான். சந்திரனின் வளர்ச்சி,தளர்ச்சிக்கும் பெண்ணின் மாதாந்திர ருதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவளுடன் ஆண் உறவாட வேண்டும். ஸ்கலிதத்தின் போது காலாதீத நிலயை உணரவேண்டும். அதுவே யோகத்துக்கான திறவு கோல்.
(தொடரும்