Friday, June 26, 2009

மனிதம் மதமாக உருமாறிய ஒரே மதம் இஸ்லாம் தான். ஆனால் இஸ்லாம்

முஸ்லீம் கள் கால‌த்துக்கேத்தாப்ல மாறனும்
இதை எழுதலாமா வேணாமானு இத்தனி காலம் ஊற வச்சிருந்தேன். நான் பிறப்பால இந்துவா இருந்தாலும் உணர்வுகளால் நான் அரை துருக்கன். ஆமாங்க அடிக்கடி சொல்வேன் " இஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலிஜியன் & முஸ்லீம்ஸ் ஆர் தி வொர்ஸ்ட் ஃபாலோயர்ஸ்"

இஸ்லாமை பத்தி நமக்கு (எனக்கு) தெரிஞ்சது பத்து பைசா அளவுகூட இருக்காது ..இதுக்கே பயந்துட்டன். இப்படி கூட ஒரு மதம் போதிக்குமா ? மனிதம் மதமாக உருமாறிய ஒரே மதம் இஸ்லாம் தான். ஆனால் இஸ்லாம் முஸ்லீம்களால் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

இந்துமதத்தில் எப்படி அச்சு அசலான யோக முறைகள் எல்லாம் மூலையில் கிடத்தப்பட்டு விளக்குக்கு எத்தனை திரி போடனும் என்ன எண்ணை ஊத்தனும்னு கதை அளக்கறாப்ல இஸ்லாம்லயும் வெத்து விவாதங்கள் நிறைய நடக்கறாப்ல தெரியுது. நம்ம மதத்துல பிராமணர்கள் ஆற்றிய தொண்டை(?) அங்கே மத பெரியவர்கள் ஆற்றுகிறார்கள்.

இறைவனை தவிர வேறெதற்கும் தலை வணங்க கூடாது என்ற தலையாய விதியிருந்த போதிலும் அவர்களிலும் மூட நம்பிக்கைகள்,மந்திர தந்திரங்கள் மீதான நம்பிக்கைக்கு குறைச்சல் இல்லை. சமத்துவம்,சகோதரத்துவம் என்பது போதிக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தத்தில் பார்க்கும்போது பிளவுகள் இருக்கவே இருக்கின்றன. இஸ்லாமில் என்னை கவர்ந்த அம்சங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

நபிகள் நாயகம் போன்ற மனிதாபிமானியை நமது புராணங்களிலோ ,வேதங்களிலோ,சரித்திரத்திலோ எங்குமே காணமுடியாது ,காட்டவும் முடியாது . அது போன்றதொரு மனிதாபி மானி மனிதாபிமானத்துடன் அந்த யுத்த காலத்துக்கென்று, பாலை பூமிக்கென்று வகுத்து கொடுத்த நியதிகளை இன்றும் இந்த சாந்தி காலத்திலும், இந்த பொன் விளையும் பூமியிலும் பின்பற்றுவது எந்த அளவுக்கு அறிவுடமை என்று அவ்வப்போது கேள்விகள் எழுவது உண்டு.

உதாரணமாக : பலதார மணம். அது யுத்த காலம். யுத்தத்தில் வீரமரணங்கள் சகஜம். பெண்டிர் விதவைகளாவது சகஜம். அதனால் நபிகள் நாயகம் பல தார மணத்தை ஆதரித்திருக்கலாம். இன்று ? பிள்ளை பெறுவதற்கும் இதே விதியை பொறுத்திப்பாருங்கள். பாலை பூமிக்கு பர்தா தேவைதான். மணல் புயல் வீசும் என்பதால் . மாமிச உணவும் தேவைதான். அங்கு தாவர உணவு கிடைப்பது சிரமம் என்பதால்.

பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ?