Saturday, June 27, 2009

ஔரங்கசீப் தர்காக்களை,மசூதிகளை கூட இடித்து தள்ளியிருப்பது தெரியுமா?

இஸ்லாமில் என்னை கவர்ந்தவை (‍சில உறுத்தல்கள்)
இஸ்லாமில் என்னை கவர்ந்தவை :
வட்டியை தடை செய்துள்ளமை. (யதார்த்தத்தில் பலரும் வட்டி வாங்குவதும் கொடுப்பதும்)
வரதட்சிணைக்கு தடை அதற்கு பதில் மொஹர் (யதார்த்தத்தில் வரதட்சிணை கொடுக்கல் வாங்கல் உள்ளது)
சம‌த்துவம், சகோதரத்துவம் நமாஸ் வேளைகளில் யார் முன்னே வந்தால் அவருக்கு முதலிடமே தவிர இந்து கோவில்கள் போல் கொள்ளையடிப்பவனுக்கு பூர்ண‌கும்பம் எல்லாம் கிடையாது‌

(யதார்த்தத்தில் பார்க்கும்போது என்னென்னவோ பிரிவினைகள் சன்னி,ஷியா,லெப்பை)
இறைவனை தவிர வேறு எவனுக்கும்,எதற்கும் தலைவணங்காமை (இதுவும் நடைமுறையில் 100 சதம் பின்பற்றப்படுவதில்லை) இதே கான்செப்ட் இந்து மதத்தில் ஊடாடினாலும (நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்) தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று கூறி மைல் கல்லுக்கெல்லாம் படையல் போடுகிறோம்.

ஔரங்கசீப் இந்து கோவில்களை இடித்ததாய் இந்துத்வாவாதிகள் வாதிடுவது உண்டு. அதே ஔரங்கசீப் தர்காக்களை,மசூதிகளை கூட இடித்து தள்ளியிருப்பது தெரியுமா? அதற்கான காரணம் எத்தனை உத்தமமானது தெரியுமா? அவை அடுத்த பதிவில்இந்து மதம் போலவே இஸ்லாமிலும் பண்டித கூச்சல்கள் அதிகமாய் உள்ளன. அண்டர்வேர் அணியலாமா கூடாதா என்று ஒரு அப்பாவி முஸ்லீம் கேட்டால் கூட ஒரே பதிலை கூற முடியாத நிலை உள்ளது. இஸ்லாம் குறித்த விவாதங்களில் தத்துவத்தின் மையத்தை விட்டு விலகிப்போகும் தன்மை உள்ளது. இதற்கு மதப்பெரியவர்களே காரணமாய் உள்ளது வருத்தம் தருகிறது.

இந்துக்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம். டம்ளர் டம்ளராக காபியும்,டீயும் உள்ளே தள்ளி மதியம் 2 க்கெல்லாம் வடை பாயாசத்துடன் விருந்து உண்கிறோம். ஆனால் ரமலான் நோன்பை பாருங்கள். நோன்பென்றால் அதுதான் நோன்பு.