Tuesday, June 30, 2009

அடுத்த தமிழக முதல்வர் விஜய் ?

தமிழ் நாடு போகும் போக்கை பார்த்தால் அடுத்த முதல்வர் விஜய் தானோ என்று தோன்றுகிறது. ஆந்திர மக்களை சினிமா பைத்தியங்கள் என்றும் கொல்ட்டி என்றும் நக்கலடிக்கும் தமிழ் கூறு நல்லுலகே ! சற்றே பொறுமையுடன் ஆந்திர அரசியல் பற்றிய சிறு அறிமுகத்தையும், ஆந்திர மக்கள் எத்தனை அறிவுக்கூர்மை படைத்தவர்கள் என்பதையும் படித்துப்பாருங்கள், அதன் பிறகாவது சினிமா பித்தம் தெளிகிறதா பார்ப்போம்.

ஆந்திர அரசியல் பற்றிய ஆர்வம் எனக்கு ஏற்பட்டதே என்.டி.ஆரின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகுதான். தமிழ் பத்திரிக்கைகளின் அலசல் என்னவென்றால் அவர் ராமர் வேடம் போட்டார் ,மக்கள் தேவுடு என்றனர்,எனவே என்.டி.ஆர் முதல்வராகிவிட்டார்.. Thats all !

அட டுபாகூருங்களே ! என்.டி.ஆர் வெறும் ராமன் வேடம் மட்டும் போடலை ராவணன் வேடமும் போட்டிருக்கார். வெறும் கிருஷ்ணன் வேடம் மட்டும் போடலை துரியோதனன் வேடமும் போட்டிருக்கிறார். நெகட்டிவ் கேரக்டர்ஸ் செய்திருக்காரு. (உ.ம். தமிழில் பில்லாவாக வந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் என்.டி.ஆர்.தான் பில்லா)


என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கையும் சாமானியப்பட்டதில்லை.இன்னைக்கு ரஜினி ஷங்கர் வருவாரா, ரஹ்மான் வருவாரானு ஜொள்ளு விடற நிலை எல்லாம் வந்ததே கிடையாது. என்.டி.ஆர் படம்னா அவர் வருவார், போவார் அவ்ளதான் படம். எத்தனை படம் ஃபெயில்யூர் ஆனாலும் அடுத்த படத்துலயும் அதேதான் இருக்கும்.

விஜய் கதையெல்லாம் எடுத்துக்கிட்டு NTR கூட ஒப்பிட்டால் Vijay எல்லாம் ஜுஜுபி.
ஒரே ஒரு உதாரணம் கொடுத்து என்.டி.ஆரோட அரசியல் வாழ்வுக்கு போகலாம். சூப்பற ஸ்டார் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகத்தையே கூட்டிக்கிட்டு ராஜஸ்தான் போயிட்டாரு. குருக்ஷேத்திரம்னு ஒரு படம் எடுக்க. சில மாசம் கழிஞ்ச பிறகு என்.டி.ஆருக்கு ஐடியா வந்தது மகாபாரதத்தை வச்சு படம் எடுத்தா என்னனு. இங்கே பார்த்தா எந்த நடிகரும் அவைலபிலிட்டில இல்லே. பார்த்தார். அவருக்கு ஒரு டஜன் பிள்ளைகள் . கிடைச்சவனுக்கெல்லாம் மேக்கப் போட்டார். தானே கர்ணன், தானே கிருஷ்ணன் , தானே துரியோதனன், இப்படி எடுத்தார் படத்தை. குருக்ஷேத்திரம் அட்டர் ப்ளாஃப். என்.டி.ஆர் எடுத்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். (தான வீர சூர கர்ணா) இது தான் என்.டி.ஆரோட ஸ்பெஷாலிட்டி.





இதையெல்லாம் தெரிஞ்சுக்காத தமிழக பத்திரிக்கைகள் என்.டி.ஆரை ஆந்திர எம்.ஜி.ஆர் என்று குறிப்பிடும்போது எங்களுக்கு எப்படியிருக்கும். என்.டி.ஆருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஆறு வித்யாசங்கள் ..இல்லையில்லை ஆறு நூறு வித்யாசங்கள் உண்டு. எம்.ஜி.ஆர் பற்றி நீங்கள் முழுக்கவே அறிந்திருப்பீர்கள் என்வே இந்த ஒப்பீட்டில் என்.டி.ஆர் குறித்த விஷயங்களை மட்டும் கூறுகிறேன் . நீங்கள் இவற்றை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

1.எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர்.(என்.டி.ஆர் தெலுங்கு தேசத்தின் மண்ணின் மைந்தர்)
2.எம்.ஜி.ஆர் நாடக நடிகராய் ஆரம்பித்து சினிமாவுக்கு வந்தவர். என்.டி.ஆர் டைரக்ட் சினிமா.
3.எம்.ஜி.ஆர் கைநாட்டு. என்.டி.ஆர் பி.ஏ ப‌ட்ட‌தாரி. வ‌ருவாய்த்துறையில் ரிஜிஸ்ட்ராராக‌ ப‌ணிபுரிந்த‌வ‌ர்.

4.எம்.ஜி.ஆர் ஆர‌ம்ப‌த்தில் காங்கிர‌ஸ் வாதி.என்.டி.ஆருக்கு அத‌ன் வாச‌னை கூட‌ கிடையாது. பி.வி. தெலுங்க‌ர் என்ற‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ ஒரு எம்.பி தொகுதியை அவ‌ருக்கு பிச்சையிட்டார்.

5.எம்.ஜி.ஆர் பெரியார்,அண்ணா,க‌லைஞ‌ர் ஆகியோரின் த‌லைமையை ஏற்று செய‌ல்ப‌ட்ட‌வ‌ர்.(பின்பு க‌லைஞ‌ருக்கே ஆப்பு வைத்த‌து வேறு க‌தை). என்.டி.ஆர் சுய‌ம்புவாய் தோன்றிய‌வ‌ர்.

6.எம்.ஜி.ஆர் காங்கிர‌சுட‌ன் கூட்டு வைத்து தில்லிக்கு காவ‌டி எடுத்த‌வ‌ர். என்.டி.ஆர் ?ஊஹூம்.

7.எம்.ஜி.ஆர் நடிகராக இருந்த காலத்திலேயே நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர். அரசியலுக்கு வந்த பிறகும் இது தொடர்ந்தது. உம்.ஜெயலலிதா,லதா,வெண்ணிற ஆடை நிர்மலா. என்.டி.ஆர் ஊஹூம்.

8.எம்.ஜி.ஆரின் பேச்சுத்திற‌மை,வாக்குவ‌ன்மை யெல்லாம் க‌ட‌ன் வாங்கிய‌தே.ஆனால் , என்.டி.ஆர் சிங்கிள் ஹேண்ட் அட் எனி கார்ன‌ர்.

9.எம்.ஜி.ஆரின் இமேஜ் என்ப‌து ஆர‌ம்ப‌ம் முத‌லே க‌வ‌ன‌மாக‌,ஹிட‌ன் அஜெண்டாவுட‌ன் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் என்.டி.ஆர் த‌ம் திரைப்ப‌ட‌ங்க‌ளில் சிக‌ர‌ட்,த‌ண்ணி,க‌ஞ்சா,ஸ்ம‌க்ளிங்,க‌ற்ப‌ழிப்பு காட்சிக‌ளில் கூட‌ ந‌டித்திருக்கிறார். அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌ பிற‌கும் மொட்டை த‌லையுட‌ன் ப‌த்திரிக்கை கேமிராக்க‌ளுக்கு காட்சிய‌ளித்த‌வ‌ர்,

10.எம்.ஜி.ஆர்,ஜெய‌ல‌லிதா உற‌வு எந்த‌ வ‌கையான‌தோ அது எம்.ஜி.ஆருக்கே வெளிச்ச‌ம். ஆனால் என்.டி.ஆர் தான் விரும்பிய‌ ல‌ட்சுமி பார்வ‌தியை துணிவுட‌ன் ம‌ண‌ந்தார். ம‌க்க‌ளும் அதை அங்கீக‌ரித்து மீண்டும் முத‌ல்வ‌ராக்கினார்க‌ள். பெரியாரே ம‌ணிய‌ம்மையை ம‌ண‌ந்து பெரும் அவ‌திக்குள்ளான‌து இங்கு குறிப்பிட‌த்த‌க்க‌தாகும்.

இதே ஆந்திரத்தில் சிரஞ்சீவி அரசியலி குதித்தார், என்னாச்சு..கை கால்தான் முறிஞ்சது . ராஜசேகரரெட்டி என்ன சூப்பர் ஸ்டாரா? இல்லே கலைஞர் மாதிரி வசனகர்த்தாவா இல்லயே.. பின்னே எப்படி இந்த அற்புதம் நடந்தது. ரோசிக்கனுங்க ..

சந்திரபாபு அக்கவுண்ட்ல பணம் போடறேன்னாரு, அரிசி ச்சும்மாவே போடறேன்னாரு. தமிழகத்து தாத்தா கலைஞர் பாணில கலர் டி.வி.தரேனு கலர் கலரா படம் காட்டினார் . ஜனம் ஏமாறலயே..

இதுக்கு மேல ஆந்திரால எந்த நடிகனும் அரசியல்னு கனவுல கூட நினைக்காத அளவுக்கு ஆயிருச்சு.

ஆனால் தமிழ் நாட்டுல ஒரு விஜயகாந்த் மண்ண கவ்வியும் ,கார்த்திக் காணாமல் போயும், சரத்து சுரத்து இல்லாம கிடக்கறத பார்த்தும் விஜய் வருவாரு வருவாரு வருவாருனு அவரோட அப்பா மூணு வாட்டி சொல்றாருனா எந்த நம்பிக்கைலங்க ! நீங்க எல்லாம் குடுமிங்கன்ற நம்பிக்கைலதானே !