Monday, June 22, 2009

பாதி ராத்திரி கதவு டொக் டொக். திறந்தா கையில பெர்த்டே கேக்

நள்ளிரவு ஹேப்பி பர்த்டே !
நம்ம தமிழ் சினிமால ஹீரோயினுக்கு பிறந்த நாளுன்னா ஹீரோ பாதி ராத்திரி போன் பண்ணி ஹேப்பி பர்த்டே சொல்வாரு. இதெல்லாம் சினிமால பார்க்கிறப்ப நல்லாவே இருக்கும்.இருக்கப்பட்டவன் வீட்ல பார்த்தாலும் ஓகே தான். ஆனால் என் மகளுக்கு பெர்த்டேன்னதும் பாதி ராத்திரி கதவு டொக் டொக். திறந்தா என் மகளோட உட் பி (இதுலயே சந்தேகமிருக்குது பாருங்க).கையில பெர்த்டே கேக். அதுமேல ஒரு கேண்டில்.

பேரு சன் தீப் இங்கிலீஷ்ல எழுதி பரிச்சு படிங்க ! சேண்ட் (மணல்), மணல் எங்க இருக்கும் பாலைவனத்துல. டீப் (ஆழம்). பார்க்க நம்ம லேட்டஸ்ட் சினிமா ஸ்டார் மாதிரிதான் இருக்கான்.

உஃப்னு ஊதினா பறந்துருவான். புல் தடுக்கி. எங்க சித்தூர்ல ராத்திரி 7.30 ஆனா போதும் லாலா பார்ட்டி எல்லாம் லாலா போட ஆரம்பிச்சுரும். 9 ஆனால் போதும் கடையெல்லாம் மூடிருவாங்க ! கடை படிக்கட்டுல பிளாஸ்டிக் கிளாஸ் சகிதம் தண்ணி கச்சேரி .

மெயின் ரோட்ல போலீஸ் ரோந்து இருக்குதுன்னு சந்துகள்ள கூட இது நடக்கும். இந்த பையன் கேக்கோட வர்ரத பார்த்து எவனாச்சும் லாலா பார்ட்டி கழுத்துல கத்திய வச்சு வீடுவரைக்கும் வந்து கதவை தட்ட வச்சு உள்ளே பூந்திருந்தா என்ன நிலை? நான் என்ன ஜாக்கிசானா ! இல்லே அவன் என்ன ப்ரூஸ்லீயா !

இந்த லவ்ஸ் வந்தாலே மண்டைல ஸ்க்ரூ எல்லாம் லூஸாயிருமா என்ன? பூனை கண்ணை மூடிக்கிட்டு பால் குடிக்குமாம். எவனும் என்னை பார்க்கலைனு நினைச்சுக்குமாம். இந்த லவர்ஸ் நிலை கூட அதே தான். அவன் என்ன பண்றான்னு அவனை தவிர மத்த எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கும்.

தாளி நான் கூட காதலிச்சிருக்கேன். நம்ம காதலெல்லாம் வெரைட்டியா இருக்கும். உள்ளுக்குள்ள தெய்வீக காதலா இருந்தாலும் மேலுக்கு டவுன் பஸ்ஸுல க்ளோசப்ல நின்னுக்கிட்டு "காலேஜ் வரைக்கும் லவ் பண்ணேன்" தான்.

இவனுங்களால காதலையும் தாங்க முடியாது. காதல் தோல்வியையும் தாங்க முடியாது.

என்ன ஃபிஸிக்கோ, என்ன பழக்க வழக்கமோ ..தாளி ..ஒரு தடவை காதலி , பொறுக்கின்னிட்டா "வெறும் பொறுக்கி இல்லே கண்ணா பொம்பளை பொறுக்கி என்றுவிட்டு சாம்பார்சாதம் 2 தடவை, ரசம் 2 தடவை, மோர் 2 தடவை போட்டு மூக்கு பிடிக்க சாப்பிட்டேன்.

இவன் என்னத்த ரிஸ்க் எடுத்தான். ஒரு நாள் முகமெல்லாம் எண்ணையா என் மகளோட வீட்டுக்கு வந்தான். "என்னா கண்ணா லவ்வா" ன்னேன். என் மக தான் ஆமா போட்டா. நான் வச்சுக்க நீனிட்டேன்.

காதல் தோல்வில மூக்குபிடிக்க சாப்பிட்டா நான் எங்கே ! வில்லனாக வேண்டிய அப்பனே ப்ரோக்கர் ஸ்டேஜுக்கு வந்து " நைனா அங்கே இங்கேல்லாம் மீட் பண்ணாதே .. நேர நம்ம வீட்டுக்கு வந்துடு" என்று சொன்ன பிறகும் வேளைக்கு சாப்பிடாம அல்ஸர் வந்து ரத்த வாந்தி எடுக்கிற இவன் எங்கே..

இவனையெல்லாம் நம்பி எதிர்கால இந்தியா !