Monday, June 15, 2009

ஆஸ்திரேலிய காவலர் மீது இந்திய மாணவர் துப்பாக்கிச்சூடு

டவுனுக்கு வந்த கிராமத்தானைப்போல் இவர்கள் ஆஸ்திரேலியாவில் ஓவர் ஆக்ஷன் செய்கிறார்களா என்று ஒரு சம்சயம். கிராமத்தான் அப்படித்தான் அவன் காலை 6 மணீக்கு புறப்பட்டால்தான் டவுனுக்கு பத்துமணிக்கு வரமுடியும். மீண்டும் எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு மாலை 5 மணீ பஸ்ஸை பிடித்தால்தான் ஊர் போய் சேரமுடியும்.(கடைசி பஸ்)

மேற்சொன்ன காரணங்களால் அவன் ஊர் வம்பில் ஈடுபடமாட்டான். எவனாவது துப்பினாலும் சரிண்ணே சரிண்ணே என்பான். தன் வேலையே முக்கியம் என்றிருப்பான். இதரர் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்கமாட்டான்.(அலையல்,பரபரப்புடனே இருப்பான்)

இது டவுனிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அருவறுப்பாக இருக்கும். அதே சமயத்தில் காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் வீரியம் தான் பெரிதென்று டவுன் காரன் கோட்டை விட்டிருக்க காரியம் தான் பெரிதென்று கிராமத்தான் க்ளிக் ஆகி விடுகிறான்.

ஒரு டெயிலரையே எடுத்துக்கொள்ளுங்கள். டவுனிலிருக்கும் டெயிலர் ஆன பில்டப்புகள் கொடுத்துக்கொண்டிருப்பான். ரோத்மன் சிகரட் எட்ஸெட்ரா. கிராம பின்னணீயில் வந்தவன் பீடி குடிப்பதும் பத்து ரூபாய் குறைவாய் சார்ஜ் பண்ணுவதுமாய் டவுன் பிழைப்பை கெடுத்துக்கொண்டிருப்பான். மேலும் இந்த ஃபீலிங் கூட இருக்காது அவனுக்கு.


ஆஸ்திரேலியா போன இந்தியர் கதையும் இதுதான் போலும் .ஆஸ்திரேலிய காவலர் மீது இந்திய மாணவர் துப்பாக்கிச்சூடு என்பதெல்லாம் ஓவராக படவில்லையா ! ஆஸ்திரேலியா என்ன பாரதம் போன்று மானம் கெட்டா இருக்கிறது?