Friday, June 26, 2009

மகளோட காதல் விவகாரம். இன்னம் ஒரு வருசத்துல அவள்

ஒரு நாள் போதுமா ?

இந்த 42 வயசுக்கு மூளைல சேர்ந்துபோன குப்பை கூளங்களை ,அதுல ஒளிஞ்சிருக்கிற மணிகளை பகிரணும்னா எத்தனை ஜி.பி.டைப் பண்ணனுமோ தெரியலை. அதனால இன்னைக்கு ஒரு நாள் என்னா கிழிச்சேனு மட்டும் எழுதறேன் தலைப்பு "ஏழைபடும் பாடு"னு வச்சா பொருத்தமா இருக்குமோ என்னவோ ? 3 வருசம் முன்னாடி உண்மையிலயும் ஏழை, சமுதாயமும் ஏழைனு நினைச்சிருந்தது.
இப்போ கதை கொஞ்சம் மாறி போச்சு. எல்லாரும் நானேதோ க்ளிக் ஆயிட்டேனு நினைக்கறச்ச ஃப்யூஸ் போயிருச்சு. ஒரு நாளிதழ்ல பார்த்துக்கிட்டிருந்த வேலை பணாலாயிருச்சு. சொந்த பத்திரிக்கை தான் சோறு போடுது. முன்னாடி வாடகை இல்லாத வீடு. கரண்டில்லாததால கரண்டு பில்லும் கிடையாது. இப்போ ?

இத்தனைக்கும் நான் ஒரு ஆஃபீஸர் மகன். சொந்த வீடும் இருந்தது. கலப்பு திருமணத்தால அப்பாவோட கனெக்ஷன் கட். அப்பா துபாய் போயிட்டதால வீட்டை வித்து அண்ணன் தம்பி பங்கு போட்டு அதுவும் டமால். நாலு பேர்ல ரெண்டு டி(வி)க்கெட்டும் டமால்.

நிற்க நான் சொல்ல வந்தது என்னன்னா.. ஏழையாவே இருந்தா நான் (சுமார் 16 வ) மேற்படி நாளிதழ் வேலையால வாலை அவுத்து விட்டாச்சு. வீட்டு வாடகை 450 ஆஃபீஸ் வாடகை 270 கரெண்டுபில் 120 டிஷ் பில் சாப்பாட்டு செலவு, மேல் செலவு, பீடி சிகரட் செலவு இப்படி செலவு கூடிப்போச்சு. இதுல தினசரி 20 30 வீதம் இன்டர்னெட் செலவு வேறே . கிழிச்சதுன்னா ஒரு மயிரும் கிடையாது. தெலுங்கு வலைப்பூவையாவது 6 மாசத்துல 16 ஆயிரம் பேரு பார்த்தாங்க . தமிழ்ல 3 வருசமா 2400 பேருதான்.

என்ன இதற்கிடையில அக்ரகேட்டர்ஸ் எண்ணிக்கை அதிகமானதால வாசிப்பும் அதிகமாகியிருக்கு. இதுல மகளோட காதல் விவகாரம். இன்னம் ஒரு வருசத்துல அவள் மேஜர். அவள் விரும்பின டுபாகூரையே கட்டி வச்சுட்டா ஒரு பீடை ஒழியும்னு நப்பாசை.

பெருமையா சொன்ன சொந்த பத்திரிக்கையோட டோட்டல் டர்ன் ஓவர் ரூ.12000 தான் இதுல செலவு போக என்னத்த மிச்சமாகி என்னத்தை செய்ய. ஆனால் சும்மா சொல்ல கூடாது நத்திங் பட் காட் தான் .இதுல ஒரு பி.எஸ்.சி.பட்டதாரிய மாத சம்பளம் ரூ.1,500 க்கு அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன்.

இன்னைக்கு காலைல என்ன நடந்தது? ராத்திரியெல்லாம் ஈரத்துணி சுத்திக்கிட்டு (பசியால இல்லிங்க , மந்திர ஜபம்) கங்கை பதிப்பகத்தோட உலக மகா நாகரீகங்களை வாசிச்சு ரெண்டு ,மூனு மணிக்கு தூங்கி காலை 7 மணி வாக்குல எந்திரிச்சேன். அய்யய்யோ ரெப் வருவாரே (நம்ம பத்திரிக்கையோட அட்வர்டைஸ்மென்ட் ரெப்) அவரு 200 ரூ முன் பணம் கேட்டாரேனு ஞா. வந்துருச்சு.
உங்களை எங்கனா கைமாத்து கேட்டுறப்போறேனு பயந்துக்காதிங்க. எப்படியோ பீராய்ஞ்சு கொடுத்துட்டன்.ஒரு இளைஞரணி தலைவர் ரூ.1000 தரனும், ஒரு ஸ்டடி சென்டர் காரன் ரூ.500 தரணும் இருந்தும் ரூ,200 கடன் வாங்கி சமாளிச்சேன். 11 மணி வரைக்கும் ரெப்பை அழைச்சிட்டு போய் மார்க்கெட்டை காட்டி, விளம்பரம் சேகரிச்சு (அய்யா சாமீ ! சின்ன விளம்பரம் கொடுங்கயா) வீட்டுக்கு வந்தேன். பசி கொல்லுது. 1997 ல யிருந்து டிஃபன் சாப்பிடறதயே விட்டுட்டன். ஒரு காலத்துல மூணு வேளைக்குமா சேர்த்து 4 மணீக்கு சாப்பிட்டதெல்லாம் உண்டு. நடுவுல லெமன் டீ சாப்பிடற பழக்கம் வந்து தான் பசிங்கறதயே உணர ஆரம்பிச்சிருக்கேன்.

சாட் நண்பர் ஒருவர் திருமண தாமதத்துக்கு பரிகாரம் கேட்க அம்மனோட சத நாமாவளிய ப்ரிண்ட் பண்ணி மக்களுக்கு இலவசமா கொடுங்கனு ஒரு சஜஷன் கொடுத்திருந்தேன். அவரு "கல்யாணம் பண்ணிக்கோனா நீயே என் பெண்டாட்டியா வான்னு சொன்ன கதயா நா காசு கொடுத்துர்ரன் நீங்களே போட்டு நீங்களே கொடுத்துருங்கனு சொல்லியிருந்தாரு.

வீடு வந்தேனா பெண்டாட்டி அரி்சி பொறுக்கிகிட்டிருந்தாளா பசி செத்துப்போய் மேற்சொன்ன சதனாமாவளி பாக்கெட் புக் வேலைய பார்க்க டி.டி.பி காரர் கிட்டே போனேன்.

இதற்கிடைல ஆரணி நிருபர் போன் பண்ணி பலான யூனிவர்ஸிட்டி ஸ்டடி சென்டர் வைக்காங்க அவங்களூக்கு கொஞ்சமா கோ ஆப்பரேட் பண்ணுங்க என்றார்.

அங்கே போய் நல்லது கெட்டதெல்லாம் சொல்லி நம்ம பத்திரிக்கைக்கு ஒரு ஃபுல் பேஜ் விளம்பரம் ஒன்னு பீராஞ்சேன். வீட்டுக்கு வரலாம்னு பார்த்தால் ஒரு டி.வி நிருபர் போன். அதேதோ T.V ப்ரோக்ராம்ல ஜோதிட கேள்விக்கு பதில் சொல்ல உங்களை ரெகமண்ட் பண்ணியிருக்கேன் உங்களுக்கு ஓகேன்னா ஒரு மேக்ஸி சைஸ் படம் கொண்டாங்க என்றார். விட முடியுமா ? இத்தனைக்கும் தேங்கா மூடி கேஸுதான். வாத்தியார் சொல்லியிருக்காரே "பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்னு" அதுக்குதான் அனுபவஜோதிடம் டாட் ப்ளாக்ஸ்பாட் டாட்காம்னு ஒன்னு ஆரம்பிச்சேன் .போனியாகலையே. ஏதோ ரெண்டு மூனு மணீயார்டர் (தலா ரூ.200) ஒரு 3 தடவை ரூ.1,500 ,ஒரு தடவை ரூ.3,000 டி.டி.வந்ததோட சரி. இப்படி டி.வி.மூலமாச்சும் புகழ் வந்தா பணம் வரும். பணம் வந்தா ஜனம் சேரும்.ஜனம் சேர்ந்தா ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை பிரபலமாக்கலாம் பத்து கோடி நிருத்யோகர்களை கொண்டு கங்கை காவிரியை இணைக்கலாம்னு நப்பாசை..

எங்கே ஓடறிங்க ..மதியம் வரைக்கும் தாங்க ஆச்சு..