Thursday, June 25, 2009

டி.வி.சீரியலும்,கந்து வட்டியுமா காலத்தை ஓட்டிடலாமுன்னு எண்ணமா?

செவிடன் காதில் சங்கு ,அலிக்கு அரம்பை ,இந்த வரிசையில் தமிழனிடம் இன மானம் குறித்த பேச்சும் இடம் பெற்று ரொம்ப நாளாகிறது. இலங்கை வேற்று நாடுதான் இல்லை என்று கூறவில்லை. நாம் நேருவின் பஞ்சசீல கொள்கைகளை பின்பற்றுகிறோம் என்பதயும் ஏற்கிறேன். அந்த காலத்தில் அகதிகள் பிரச்சினையை முன்வைத்து கிழக்கு வங்காள விடுதலைக்கு உதவவில்லையா? அவ்ள தூரம் தயவு காட்டாட்டி போகுது. விடுதலை புலிகளை ஆதரிக்காட்டியும் பரவாயில்லை. அங்கே வீடிழந்து ,முழத்துணிக்கும்,பிடி சோற்றுக்கும் வழி இல்லாது அல்லாடும் மக்கள் குறித்தாவது சிந்திக்கலாமே.

அட டுபாகூருங்களே !
இப்படியே மானங்கெட்டு வாழ்ந்தா டி.வி.சீரியலும்,கந்து வட்டியுமா காலத்தை ஓட்டிடலாமுன்னு எண்ணமா? அதுதான் நடக்காது. முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும் /கெடுவான் கேடு நினைப்பான் / இதெல்லாம் சும்மா வேலை வெட்டியில்லாத பெருசுங்க விட்ட டகுலுனு நினைக்கிறிங்களா ?

இல்லேடா கண்ணா இதெல்லாம் பல நூற்றாண்டு கால வாழ்க்கை தந்த பாடம். நாளைய சத்தியம். தாளி ! உங்களுக்குதான் இலங்கைய தட்டி கேட்க திராணியில்லே.


ஐநாசபைல எவனோ கொண்டுவந்த தீர்மானத்தையும் தோற்கடிக்கறிங்களே ..இப்படியே போயிடுமா வாழ்க்கை ? "கொடுப்பதழுக்கறுப்பான் சுற்றம் உணவும்,உறையும் இன்றிக்கெடும்"


இந்த அலித்தனமான போக்காலதான் எங்கே போனாலும் உதை வாங்கி சாகறிங்க‌

அடச்சீ..ஆயுதம் தூக்கி போராடச்சொல்லலையே ! தேர்தல்ல இனமானம் காக்க எழுந்த கட்சிகளுக்கு ஆதரவா பட்டனை அழுத்த கூட தகிரியம் இல்லியா ?

முறத்தால புலிய ஓட்டினோம்னு கதையா பண்றிங்க ? ஒரு நாளில்லே ஒரு நாள் உங்க கதியும் அந்த தமிழன் கதிதான்