Tuesday, June 30, 2009

தி.மு.க அதிமுக இணைப்புக்கு பேச்சு நடத்த வந்த போது

ஒருவன் மனது ஒன்பதடா ..அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா.. என்றார் கண்ணதாசன் .வர்ஜியா வ்ர்ஜியமின்றி(சுஜாதா), கச்சா முச்சானு (ரஜினி) படிச்சதுல என் மனது எண்பதாவும் அதில் ஒளிந்து கிடப்பது எண்ணூறாகவும் மாறிவிட்டது. ஆனால் குழப்பம் என்பது என்னில் எள்ளளவும் கிடையாது. முடிந்தவரை லீகலா இல்லீகலா பார்ப்பேன். லீகலை தேர்வு செய்வேன். பின் அது ஹ்யூமனா இல்லையா பார்ப்பேன். ஹ்யூமனை ம‌ட்டும் தேர்வு செய்வேன். இதனால் தான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும், ஸ்ரீராமனையும் ஒரே நேரத்தில் என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

இதையே இன்ஸ்பிரேஷனாக வைத்து ஒரு குறு நாவல் கூட எழுதியதாய் ஞா. ஒரே நபர் ஒரு பெண்ணை காதலித்து,கர்பமாக்கி கைவிட்டு,மற்றொரு சவுண்ட் பார்ட்டியை மணந்து, மற்றொரு பெண்ணை (தனக்கு எம்மாத்திரமும் தொடர்பற்ற பெண்ணை) இழி நிலயிலிருந்து காப்பாற்றி கலெக்டராகவே ஆக்குகிறான். அந்த நபரை பழிவாங்க வந்த பெண், அதே நபரின் ஸ்பான்ஸர்ஷிப்பில் கலெக்டரான பெண்ணிடம் வந்து சரணடைகிறாள்.

இந்த குறு நாவல் மூலம் சொல்ல வந்த சேதி என்னவெனில் " எவனும் 24 மணி நேரம் நல்லவனும் கிடையாது. 24 மணி நேரம் கெட்டவனும் கிடையாது " என்பதே.

இந்த தத்துவத்தை எல்லா தலைவர்கள் விஷயத்திலும் அப்ளை செய்து பார்க்கலாம். உ.ம்: கலைஞர்
எமர்ஜென்ஸியை எதிர்த்து ஆட்சியை இழந்து, தொண்டர்களை பலி கொடுத்த கலைஞர் எங்கே !
நேருவின் மகளே வருக ! நிலையான ஆட்சி தருக என்ற கலைஞர் எங்கே !
பி.ஜு.பட்னாயக் தி.மு.க அதிமுக இணைப்புக்கு பேச்சு நடத்த வந்த போது எம்.ஜி.ஆரே முதல்வராக தொடரட்டும், அண்ணா வைத்த பெயர் திமுக, அண்ணாவின் சின்னம் உதயசூரியன் அவை தொடரவேண்டும் என்ற கலைஞர் எங்கே !

காதலித்து,கர்பமாக்கி

ஒருவன் மனது ஒன்பதடா ..அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா.. என்றார் கண்ணதாசன் .வர்ஜியா வ்ர்ஜியமின்றி(சுஜாதா), கச்சா முச்சானு (ரஜினி) படிச்சதுல என் மனது எண்பதாவும் அதில் ஒளிந்து கிடப்பது எண்ணூறாகவும் மாறிவிட்டது. ஆனால் குழப்பம் என்பது என்னில் எள்ளளவும் கிடையாது. முடிந்தவரை லீகலா இல்லீகலா பார்ப்பேன். லீகலை தேர்வு செய்வேன். பின் அது ஹ்யூமனா இல்லையா பார்ப்பேன். ஹ்யூமனை ம‌ட்டும் தேர்வு செய்வேன். இதனால் தான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும், ஸ்ரீராமனையும் ஒரே நேரத்தில் என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

இதையே இன்ஸ்பிரேஷனாக வைத்து ஒரு குறு நாவல் கூட எழுதியதாய் ஞா. ஒரே நபர் ஒரு பெண்ணை காதலித்து,கர்பமாக்கி கைவிட்டு,மற்றொரு சவுண்ட் பார்ட்டியை மணந்து, மற்றொரு பெண்ணை (தனக்கு எம்மாத்திரமும் தொடர்பற்ற பெண்ணை) இழி நிலயிலிருந்து காப்பாற்றி கலெக்டராகவே ஆக்குகிறான். அந்த நபரை பழிவாங்க வந்த பெண், அதே நபரின் ஸ்பான்ஸர்ஷிப்பில் கலெக்டரான பெண்ணிடம் வந்து சரணடைகிறாள்.

இந்த குறு நாவல் மூலம் சொல்ல வந்த சேதி என்னவெனில் " எவனும் 24 மணி நேரம் நல்லவனும் கிடையாது. 24 மணி நேரம் கெட்டவனும் கிடையாது " என்பதே.

இந்த தத்துவத்தை எல்லா தலைவர்கள் விஷயத்திலும் அப்ளை செய்து பார்க்கலாம். உ.ம்: கலைஞர்
எமர்ஜென்ஸியை எதிர்த்து ஆட்சியை இழந்து, தொண்டர்களை பலி கொடுத்த கலைஞர் எங்கே !
நேருவின் மகளே வருக ! நிலையான ஆட்சி தருக என்ற கலைஞர் எங்கே !
பி.ஜு.பட்னாயக் தி.மு.க அதிமுக இணைப்புக்கு பேச்சு நடத்த வந்த போது எம்.ஜி.ஆரே முதல்வராக தொடரட்டும், அண்ணா வைத்த பெயர் திமுக, அண்ணாவின் சின்னம் உதயசூரியன் அவை தொடரவேண்டும் என்ற கலைஞர் எங்கே !

சிகப்பு நாடாத்தனம் என்றால் இது தான் .

இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக என்னால் தீட்டப்பட்ட திட்டம் ஆப்பரேஷன் இந்தியா 2000. திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றி இந்த பதிவில் விவரித்துள்ளேன். அடுத்த சைட்டுக்கு ஜம்பாகாது தொடர்ந்து படிக்கும் புண்ணீயாத்மாக்களுக்கு மூனு கிரகம் உச்சமான ஜாதகத்தில் குழந்தை பிறக்கட்டும்.

முதலில் திட்டம்:

ஆனாலும் இந்தியாவின் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க ஒருவன் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் புதுமையான திட்டம் ஒன்றை தீட்டி , அதன் அமலுக்காக லட்சக் கணக்கில் சொந்தப் பணத்தை செலவழித்து 1986 முதல் உழைத்து வருகிறான் என்றால் ஓரளவாவது ஆர்வம் பிறக்கும் என்று நம்புகிறேன்.
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.( இதை தற்போது ஆந்திரத்தில் பரீட்சார்த்தமாக அமல் செய்ய உள்ளனர்)
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்


இப்போ சுய‌ அறிமுக‌ம்:
இந்த சுய அறிமுகத்தை ஓஷோவின் கருத்தோடு ஆரம்பிக்கிறேன்.
"சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. "
பொருளாதார அளவிலான உயர்வுக்கே இதுதான் நிலை. அறிவு,ஆக்கம்,ஆய்வு,ஆன்மீகம்,இப்படி சகல துறைகளிலும் உயர்ந்துவிட்டால் உங்களுக்கும் உலகத்துக்கும் இடையில் பெரிய்ய.......இடைவெளி ஏற்பட்டுவிடும். இது உறுதி. என் திட்ட‌த்தின் பெய‌ர் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000. அதாவ‌து 1986 ல் இந்த‌ திட்ட‌த்தை தீட்டும்போது இது 2000 ஆம் ஆண்டுக்குள் அம‌லுக்கு வ‌ந்துவிடும் என்று ஒரு ந‌ம்பிக்கை. அத‌னால் தான் இதில் 2000 என்ற எண் வ‌ருகிற‌து.

நாட்டின் ஒரே பிரச்சினை ஏழ்மை தான்:
ஒரு த‌னிம‌னித‌னின் வ‌ருவாயைக் கொண்டு அவ‌ன் செழிப்பை க‌ண‌க்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வ‌ருவாயை கொண்டு அத‌ன் செல்வ‌ செழிப்பை க‌ண‌க்கிடுகிறார்க‌ள்.முதலில் தேசீய‌வ‌ருவாய் என்றால் என்ன‌?ஒரு வ‌ருட‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளின் ம‌திப்பே தேசீய‌வ‌ருவாய்.த‌னிம‌னித‌ வ‌ருவாய் என்றால் என்ன‌?தேசீய‌ வ‌ருவாயை, ம‌க்க‌ள் தொகையால் வ‌குத்தால் கிடைக்கும் தொகையே த‌னி ம‌னித‌ வ‌ருவாய்.(அதாவ‌து ர‌ஜினி காந்தின் வ‌ருவாயையும், அவ‌ர் க‌ட்‍‍ அவுட்டுக்கு பீர் அபிஷேக‌ம் செய்யும் ர‌சிக‌னின் வ‌ருவாயையும் கூட்டி இர‌ண்டால் வ‌குத்து விடுகிறார்க‌ள். ப‌ச்சையாக‌ சொன்னால் ர‌ஜினி வ‌ருமான‌த்தை‍ அவ‌ன் ர‌சிக‌னுக்கு ப‌ங்கு போடுகிறார்க‌ள். அதாவ‌து வெறும் காகித‌த்தில்.
அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு :உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைத்தால் தான் உய‌ர்ந்து வ‌ரும் தேசீய‌ வ‌ருமான‌த்தில் உண்மையான‌ ப‌ங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகித‌ப்ப‌ங்கு தான்.
உற்ப‌த்தி கார‌ணிக‌ள்:உற்ப‌த்தி கார‌ணிக‌ள் 4. அவை நில‌ம்,கூலி,முத‌லீடு,நிர்வாக‌ம் ஆகிய‌ன‌வாகும். நாட்டில் ஆதிகால‌ம் முத‌ல் நில‌விய‌ சாதி அமைப்பினால் ச‌மூக‌த்தின் மெஜாரிட்டி ம‌க்க‌ள் வாழ்க்கைக்கு ஆதாரமான க‌ல்வி கிடைக்காது கூலிக‌ளாக‌வே வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் நில‌மோ.முத‌லீடோ,நிர்வாக‌த்தில் ப‌ங்கெடுக்கும் வாய்ப்போ த‌குதியோ இல்லை.
நில‌த்தை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு வாட‌கை,முத‌லீடு வைத்த‌வ‌னுக்கு வ‌ட்டி,நிர்வாக‌ம் செய்த‌வ‌னுக்கு லாப‌ம் கிடைக்கும்.வெறும் உட‌லுழைப்பை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு என்ன‌ கிடைக்கும்? கூலி. அதிலும் சேமிப்போ,எதிர்கால‌ பாதுகாப்போ,ஸ்கில்லோ,க‌ல்வியோ இல்லாத‌ வ‌னுக்கு என்ன‌த்தை..கூலி கிடைக்கும்? தேசீய‌வ‌ருமான‌த்தில் எந்த அளவுக்கு ப‌ங்கு கிடைக்கும்?
இரு வர்கங்கள் /உற்ப‌த்தி கார‌ணிக‌ள் :
நாட்டில் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாய் நில‌வி வ‌ரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி‌ ம‌க்கள் அட‌ங்கிய‌ வ‌ர்க‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மாக‌ உள்ள‌து. உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் நில‌ம்,முத‌லீடு,நிர்வாக‌ம் மூன்றுமே ஆளும் வ‌ர்க‌த்தின் கையில் சிக்கி உள்ள‌து. ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மோ வெறும் கூலிப் ப‌ட்டாள‌மாக‌ நலிந்து வ‌ருகிற‌து.
நில‌ப்ப‌ங்கீடு:
உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் முக்கிய‌மான‌தான‌ நில‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌த்தின் கைக‌ளுக்கு மாற்ற‌ப் ப‌ட‌ வேண்டும். இது நேரிடையாக‌ அம‌ல் செய்ய‌ப் ப‌ட்டால் நாட்டில் ர‌த்த‌ வெள்ள‌ம் ஓடும். இதை த‌விர்க்க‌ விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ள் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, நாட்டில் உள்ள‌ விவ‌சாய‌ நில‌ங்க‌ள் மேற்ப‌டி விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ளுக்கு நீண்ட‌ கால‌ குத்த‌கை அடிப்ப‌டையில் த‌ர‌ப்ப‌ட‌ வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவ‌சாய‌ம் அம‌ல் ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும். இந்த‌ புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் "த‌ம்" "தில்" "அதிகாரம்" இன்றைய ஆட்சி முறையிலான பிர‌த‌ம‌ருக்கு கிடையாது.
நேரிடை ஜ‌ன‌நாய‌க‌ம்:
தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் தேர்வான பிரதமருக்கே மேற்டொன்ன புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் "த‌ம்" "தில்" "அதிகாரம்" உண்டு. பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவ்ய் பெருமளவு குறையும்.
க‌ங்கை காவேரி இணைப்பு:
இந்திய விவசாய நாடு. எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்தை சார்ந்தே வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.
நில‌ங்க‌ள் விவ‌சாயிக‌ளின் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ளுக்கு குத்த‌கைக்கு த‌ர‌ப் ப‌ட்டாலும் நீர் பாச‌னப்பற்றாக்குறை பிர‌ச்சினை ச‌ங்க‌த்தின் குர‌ல் வ‌ளையை நெறித்துவிடும் என்ப‌தால் இத‌ற்கு நிர‌ந்த‌ர‌த்தீர்வாக முதல் கட்டமாக ‌ க‌ங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ள‌ப் ப‌ட‌வேண்டும். பின் ப‌டிப் ப‌டியாக‌ எல்லா ந‌திக‌ளும் இணைக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.
ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம்:
ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம் ஒன்று அமைக்க‌ப் ப‌ட‌வேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. என்னதான் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்திருந்தாலும் ரயில்வே துறை கலாசி வேலைக்கு இஞ்ஜினீயர்கள் அப்ளை செய்யும் நிலை மாறவில்லை. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.
சிகப்பு நாடாசிகப்பு நாடாத்தனத்தின் கொடுமையை அறிந்தவன்,அதனால் கொடூரமாக பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் இந்த வலைப்பூவை வலை மேயர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தியாவின் எல்ல பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை தீட்டினேன். இதன் 200 பிரதிகளை அன்றைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகிக்கு அனுப்பினேன்.(பதிவு தபால் மூலம் தான்). அவற்றை அன்றைய ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரினேன்.(11/6/98) .பல மாதங்கள் வரை பதிலில்லை. அந்த சமயம் என்.டி.ஆர்.ரசிகன் என்ற வகையில் தெலுகு தேசம் சார்பாக பூத் ஏஜண்ட்டாக உட்கார்ந்ததற்கான அடையாள அட்டை என்னிடம் இருந்தது. அதை இணைத்து எங்கள் தொகுதி எம்.பி.ராமகிருஷ்ணாரெட்டி காருவுக்கு இது விஷயமாகஒரு இன்லண்டு லெட்டர் போட்டேன்.அவர் சபாநாயகர் அலுவலகத்தில் விசாரித்திருப்பார் போல.சபாநாயகர் அலுவலகம் எம்.பி.க்கு நான் போட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கடிதம் போட்டது."நீங்கள் சொல்லும் திட்ட பிரதிகள் அடங்கிய பார்சல் எங்களுக்கு வந்து சேரவில்லை"-என்பது அதன் சாரம். நான் பதறியடித்து ஓடி தபால் அலுவலகத்தில் மேற்படி பார்சல் டெலிவரி ஆனதற்கான அத்தாட்சியை பெற்று பதிவு தபாலில் அனுப்பினேன். மீண்டு சில மாதங்கள் மவுனம். இடைவிடாத நினைவூட்டு கடிதங்களுக்கு பிறகு சபாநாயகர் அலுவலகத்து அதிகாரிகள் ஒரு கடிதம் போட்டனர். அதன் சாரம்:நீங்கள் அனுப்பிய கடிதம்,பார்சல் டெலிவரி ஆனதற்கான ஆதாரம் கிடைத்தது. தங்கள் பார்சலை இந்த அலுவலகத்தில் லொகேட் செய்ய முடியவில்லை.எனவே தங்கள் திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினால் தேவையான பிரதிகளை நாங்களே தயாரிப்பதில் பிரச்சினை இல்லை.மனம் நொந்து உடனே திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினேன். பதிலில்லை. பலமாதங்கள் கழித்து வெறுத்துப் போய் திட்டப்பிரதியை திருப்பியனுப்பச் சொல்லி தபால் செலவுக்காக ரூ.50 க்கான அஞ்ஜலாணை கூட அனுப்பிவிட்டேன். நாளிதுவரை ஒரு இழவும் நடக்கவில்லை. நானும் தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பிக் கொண்டேதானிருக்கிறேன். சிகப்பு நாடாத்தனம் என்றால் இது தான் .

மெனக்கெட்டு மத்திய அரசின் வலை தளத்தில் எம்.பிக்களின் மெயில் ஐ.டிக்களை பிகப் செய்து அனைவருக்கும் மெயில் கூட அனுப்பினேன் . தெலுங்கில் வலைதளம் அமைத்து 7 மாதத்தில் 16000 பேருக்கு இத்திட்டம் குறித்த தகவல்களை தெரிவித்து ஆதரவு திரட்டினேன். உங்கள் ஆதரவையும் வேண்டித்தான் இந்த பதிவு.

அடுத்த தமிழக முதல்வர் விஜய் ?

தமிழ் நாடு போகும் போக்கை பார்த்தால் அடுத்த முதல்வர் விஜய் தானோ என்று தோன்றுகிறது. ஆந்திர மக்களை சினிமா பைத்தியங்கள் என்றும் கொல்ட்டி என்றும் நக்கலடிக்கும் தமிழ் கூறு நல்லுலகே ! சற்றே பொறுமையுடன் ஆந்திர அரசியல் பற்றிய சிறு அறிமுகத்தையும், ஆந்திர மக்கள் எத்தனை அறிவுக்கூர்மை படைத்தவர்கள் என்பதையும் படித்துப்பாருங்கள், அதன் பிறகாவது சினிமா பித்தம் தெளிகிறதா பார்ப்போம்.

ஆந்திர அரசியல் பற்றிய ஆர்வம் எனக்கு ஏற்பட்டதே என்.டி.ஆரின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகுதான். தமிழ் பத்திரிக்கைகளின் அலசல் என்னவென்றால் அவர் ராமர் வேடம் போட்டார் ,மக்கள் தேவுடு என்றனர்,எனவே என்.டி.ஆர் முதல்வராகிவிட்டார்.. Thats all !

அட டுபாகூருங்களே ! என்.டி.ஆர் வெறும் ராமன் வேடம் மட்டும் போடலை ராவணன் வேடமும் போட்டிருக்கார். வெறும் கிருஷ்ணன் வேடம் மட்டும் போடலை துரியோதனன் வேடமும் போட்டிருக்கிறார். நெகட்டிவ் கேரக்டர்ஸ் செய்திருக்காரு. (உ.ம். தமிழில் பில்லாவாக வந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் என்.டி.ஆர்.தான் பில்லா)


என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கையும் சாமானியப்பட்டதில்லை.இன்னைக்கு ரஜினி ஷங்கர் வருவாரா, ரஹ்மான் வருவாரானு ஜொள்ளு விடற நிலை எல்லாம் வந்ததே கிடையாது. என்.டி.ஆர் படம்னா அவர் வருவார், போவார் அவ்ளதான் படம். எத்தனை படம் ஃபெயில்யூர் ஆனாலும் அடுத்த படத்துலயும் அதேதான் இருக்கும்.

விஜய் கதையெல்லாம் எடுத்துக்கிட்டு NTR கூட ஒப்பிட்டால் Vijay எல்லாம் ஜுஜுபி.
ஒரே ஒரு உதாரணம் கொடுத்து என்.டி.ஆரோட அரசியல் வாழ்வுக்கு போகலாம். சூப்பற ஸ்டார் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகத்தையே கூட்டிக்கிட்டு ராஜஸ்தான் போயிட்டாரு. குருக்ஷேத்திரம்னு ஒரு படம் எடுக்க. சில மாசம் கழிஞ்ச பிறகு என்.டி.ஆருக்கு ஐடியா வந்தது மகாபாரதத்தை வச்சு படம் எடுத்தா என்னனு. இங்கே பார்த்தா எந்த நடிகரும் அவைலபிலிட்டில இல்லே. பார்த்தார். அவருக்கு ஒரு டஜன் பிள்ளைகள் . கிடைச்சவனுக்கெல்லாம் மேக்கப் போட்டார். தானே கர்ணன், தானே கிருஷ்ணன் , தானே துரியோதனன், இப்படி எடுத்தார் படத்தை. குருக்ஷேத்திரம் அட்டர் ப்ளாஃப். என்.டி.ஆர் எடுத்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். (தான வீர சூர கர்ணா) இது தான் என்.டி.ஆரோட ஸ்பெஷாலிட்டி.





இதையெல்லாம் தெரிஞ்சுக்காத தமிழக பத்திரிக்கைகள் என்.டி.ஆரை ஆந்திர எம்.ஜி.ஆர் என்று குறிப்பிடும்போது எங்களுக்கு எப்படியிருக்கும். என்.டி.ஆருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஆறு வித்யாசங்கள் ..இல்லையில்லை ஆறு நூறு வித்யாசங்கள் உண்டு. எம்.ஜி.ஆர் பற்றி நீங்கள் முழுக்கவே அறிந்திருப்பீர்கள் என்வே இந்த ஒப்பீட்டில் என்.டி.ஆர் குறித்த விஷயங்களை மட்டும் கூறுகிறேன் . நீங்கள் இவற்றை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

1.எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர்.(என்.டி.ஆர் தெலுங்கு தேசத்தின் மண்ணின் மைந்தர்)
2.எம்.ஜி.ஆர் நாடக நடிகராய் ஆரம்பித்து சினிமாவுக்கு வந்தவர். என்.டி.ஆர் டைரக்ட் சினிமா.
3.எம்.ஜி.ஆர் கைநாட்டு. என்.டி.ஆர் பி.ஏ ப‌ட்ட‌தாரி. வ‌ருவாய்த்துறையில் ரிஜிஸ்ட்ராராக‌ ப‌ணிபுரிந்த‌வ‌ர்.

4.எம்.ஜி.ஆர் ஆர‌ம்ப‌த்தில் காங்கிர‌ஸ் வாதி.என்.டி.ஆருக்கு அத‌ன் வாச‌னை கூட‌ கிடையாது. பி.வி. தெலுங்க‌ர் என்ற‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ ஒரு எம்.பி தொகுதியை அவ‌ருக்கு பிச்சையிட்டார்.

5.எம்.ஜி.ஆர் பெரியார்,அண்ணா,க‌லைஞ‌ர் ஆகியோரின் த‌லைமையை ஏற்று செய‌ல்ப‌ட்ட‌வ‌ர்.(பின்பு க‌லைஞ‌ருக்கே ஆப்பு வைத்த‌து வேறு க‌தை). என்.டி.ஆர் சுய‌ம்புவாய் தோன்றிய‌வ‌ர்.

6.எம்.ஜி.ஆர் காங்கிர‌சுட‌ன் கூட்டு வைத்து தில்லிக்கு காவ‌டி எடுத்த‌வ‌ர். என்.டி.ஆர் ?ஊஹூம்.

7.எம்.ஜி.ஆர் நடிகராக இருந்த காலத்திலேயே நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர். அரசியலுக்கு வந்த பிறகும் இது தொடர்ந்தது. உம்.ஜெயலலிதா,லதா,வெண்ணிற ஆடை நிர்மலா. என்.டி.ஆர் ஊஹூம்.

8.எம்.ஜி.ஆரின் பேச்சுத்திற‌மை,வாக்குவ‌ன்மை யெல்லாம் க‌ட‌ன் வாங்கிய‌தே.ஆனால் , என்.டி.ஆர் சிங்கிள் ஹேண்ட் அட் எனி கார்ன‌ர்.

9.எம்.ஜி.ஆரின் இமேஜ் என்ப‌து ஆர‌ம்ப‌ம் முத‌லே க‌வ‌ன‌மாக‌,ஹிட‌ன் அஜெண்டாவுட‌ன் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் என்.டி.ஆர் த‌ம் திரைப்ப‌ட‌ங்க‌ளில் சிக‌ர‌ட்,த‌ண்ணி,க‌ஞ்சா,ஸ்ம‌க்ளிங்,க‌ற்ப‌ழிப்பு காட்சிக‌ளில் கூட‌ ந‌டித்திருக்கிறார். அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌ பிற‌கும் மொட்டை த‌லையுட‌ன் ப‌த்திரிக்கை கேமிராக்க‌ளுக்கு காட்சிய‌ளித்த‌வ‌ர்,

10.எம்.ஜி.ஆர்,ஜெய‌ல‌லிதா உற‌வு எந்த‌ வ‌கையான‌தோ அது எம்.ஜி.ஆருக்கே வெளிச்ச‌ம். ஆனால் என்.டி.ஆர் தான் விரும்பிய‌ ல‌ட்சுமி பார்வ‌தியை துணிவுட‌ன் ம‌ண‌ந்தார். ம‌க்க‌ளும் அதை அங்கீக‌ரித்து மீண்டும் முத‌ல்வ‌ராக்கினார்க‌ள். பெரியாரே ம‌ணிய‌ம்மையை ம‌ண‌ந்து பெரும் அவ‌திக்குள்ளான‌து இங்கு குறிப்பிட‌த்த‌க்க‌தாகும்.

இதே ஆந்திரத்தில் சிரஞ்சீவி அரசியலி குதித்தார், என்னாச்சு..கை கால்தான் முறிஞ்சது . ராஜசேகரரெட்டி என்ன சூப்பர் ஸ்டாரா? இல்லே கலைஞர் மாதிரி வசனகர்த்தாவா இல்லயே.. பின்னே எப்படி இந்த அற்புதம் நடந்தது. ரோசிக்கனுங்க ..

சந்திரபாபு அக்கவுண்ட்ல பணம் போடறேன்னாரு, அரிசி ச்சும்மாவே போடறேன்னாரு. தமிழகத்து தாத்தா கலைஞர் பாணில கலர் டி.வி.தரேனு கலர் கலரா படம் காட்டினார் . ஜனம் ஏமாறலயே..

இதுக்கு மேல ஆந்திரால எந்த நடிகனும் அரசியல்னு கனவுல கூட நினைக்காத அளவுக்கு ஆயிருச்சு.

ஆனால் தமிழ் நாட்டுல ஒரு விஜயகாந்த் மண்ண கவ்வியும் ,கார்த்திக் காணாமல் போயும், சரத்து சுரத்து இல்லாம கிடக்கறத பார்த்தும் விஜய் வருவாரு வருவாரு வருவாருனு அவரோட அப்பா மூணு வாட்டி சொல்றாருனா எந்த நம்பிக்கைலங்க ! நீங்க எல்லாம் குடுமிங்கன்ற நம்பிக்கைலதானே !

Monday, June 29, 2009

ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் ? செக்ஸ் ஒர்க்கர்ஸ் செய்த பாவம் என்ன?

ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் ? செக்ஸ் ஒர்க்கர்ஸ் செய்த பாவம் என்ன?
ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல் குறித்து வேகமாய் சிந்தித்த இந்திய அரசு "அவசரப்படமாட்டோம்" என்று பின் வாங்கியுள்ளது. மதங்கள் யாவும் ஓரின சேர்க்கைக்கே அல்ல செக்ஸுக்கும் எதிரிகள்தான். மனிதனை தன்னை மறக்கச்செய்யும் எதுவும் இறைவனையும் மறக்க செய்துவிடும் என்பதே மதங்களின் அச்ச்ம். எனவே தான் செக்ஸை ஏறக்குறைய தடை செய்து வைத்துள்ளன.

உலகில் மாறாதது மாற்றம் ஒன்றுதான். மாற்றம் என்பது பழமை வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் மரணத்துக்கு ஒப்பானதாக உள்ளது. "காமி கானி வாடு மோட்ச காமி கா லேடு " இது தெலுங்கு சொலவடை. அதாவது காமத்தை அனுபவிக்காதவன் மோட்சத்தை விரும்புபவனாய் மாற முடியாது என்பதே. பேரின்பம் முழு சினிமா என்றால் சிற்றின்பம் என்பது சினிமா ஸ்லைடு மாதிரி. ஸ்லைடையே பார்க்காதவனுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாது.

அந்த காலத்தில் பால்ய திருமணங்கள் நடைபெற்றன. ஆனால் மருத்துவத்துறை வளராத காலம் என்பதால் இளம் விதவைகள் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்தது. இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம் பிள்ளைக்கு ஒரு பத்தாயிரம், மருமகளுக்கு ஒரு பத்தாயிரம் ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியுமா ? முடியாது.

இளமையை முற்றாய் தொலைத்தாலன்றி படிப்பு முடியாது,வேலை கிடைக்காது.(இப்போதெல்லாம் வேலை கிடைத்தால் மட்டும் போதாதாம். செட்டில் ஆகனுமாம்.அதுக்குள்ற இளமை போயே போச்) ஓரின சேர்க்கை பெருக காரணமே சமூகம் செக்ஸ் மீது விதித்துள்ள தடைதான். ஜெனட்டிக்,மன காரணங்களால் ஹோமோக்கள் ஆனவர்கள் உண்டு என்றாலும் இல்லாத குறைக்கு அந்த கரை பக்கம் ஒதுங்கியவர்களும் உண்டு.

இது இயற்கைக்கு விரோதமானது என்பதோடு, மன கோளாறும் கூட. எயிட்ஸுக்கு முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது. இன்னிலையில் ஓரின சேர்க்கை பற்றி பேசுவோர் கூட முப்பது, நாப்பது வயசு வரை செக்ஸ் எண்ணங்களை உள்ளடக்கி வைத்து தலையில் சொட்டை,தொந்தி,வாங்கி மெனோஃபஸ் வயதில் கல்யாணம் செய்து, தனிமைக்கு பழகிப்போய் பெண் ஆணை வைபரேடராகவும், ஆண் பெண்ணை ஸ்பென்ஸர் ப்ளாசா ஸ்பெஷல் பொம்மையாகவும் வாழ்ந்து நாறிப்போவதை காட்டிலும் பாலியல் தொழிலாளிகளுக்கு (ஆண், பெண்) லைசென்ஸ் வழங்குவது நல்லதல்லவா?
எப்படியும் குழந்தை,எயிட்ஸ் பயத்துக்குதான் காண்டோம் இருக்கிறதே. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்களே வன்முறைக்கு காரணம் என்று மனோதத்துவம் கூறுகிறது

எனவே ஓரின சேர்க்கை பற்றி யோசிக்கும் வேகத்திலேயே (பின்வாங்குவதில் காட்டிய வேகத்தில் அல்ல) விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிப்பது நல்லது.

இந்த‌ ப‌டைப்பே ஒரு விப‌த்து. ம‌னித‌ வாழ்வு அக்மார்க் விப‌த்து. ஒரு எல‌க்ட்ரானிக் உப‌க‌ர‌ண‌த்தில் ஆன்,ஆஃப் ஸ்விட்ச் இருப்ப‌து போல் ஒவ்வொரு உயிரிலும் உயிர் வாழும் இச்சையும்,த‌ற்கொலை இச்சையும் சேர்ந்தே உள்ள‌ன‌. ம‌னித‌ர்க‌ள் வெவ்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டைத்தான். 1.கொல்வ‌து 2.சாவ‌து. இவை இர‌ண்டுமே செக்ஸ்,மற்றும் ப‌ண‌த்தில் கைகூடுவ‌தால் தான் ம‌னிதனுக்கு செக்ஸ் ம‌ற்றும் ப‌ண‌த்தின் மீது இத்த‌னை காத‌ல்.

முக்தி என்ப‌து என்ன? எண்ண‌ங்க‌ள் இற‌த்த‌லே முக்தி. செக்ஸில் ஆர்காச‌ம் அடையும்போது எண்ண‌ங்க‌ள் இற‌க்கின்ற‌ன‌. ஒரு செக‌ண்ட் ப்ளாக் அவுட் ஏற்ப‌டுகிற‌து. இதை மீண்டும் மீண்டும் பெற‌த்தான் ம‌னித‌ன் செக்ஸில் ஈடுப‌டுகிறான்.

உயிர்வாழும் இச்சை ப‌டைப்புக்கு தூண்டுகிற‌து. ப‌டைப்பால் ம‌னித‌ன் பார்ஷிய‌லாக‌ இற‌க்கிறான். டூ இன் வ‌ன். ம‌னித‌ உட‌லில் இருப்ப‌து ஒரே ச‌க்தி தான். அது காம‌ ச‌க்தி. அவ‌ன‌து செய‌ல்பாடுக‌ளை பொருத்து அது யோக‌ ச‌க்தியாக‌ மாறுகிற‌து.

செக்ஸில்,பிள்ளைகள் பெறுவதில் முழுமையாக செல‌வ‌ழித்து விட‌ முடியாத‌ அள‌வுக்கு ஆண்மை உள்ள‌வ‌னே ப‌டைப்பு தொழிலுக்கு வ‌ருகிறான். அங்கும் முழுமையாக செல‌வ‌ழியாத‌ காம‌ ச‌க்தி தான் அவ‌னை முக்திக்கு தூண்டுகிற‌து.


ப‌ண‌ம்,செக்ஸ் உத‌வியால் ஒரு ம‌னிதன் முழுமையாக‌ சாக‌வும் முடியாது ,எதிராளியை முழுமையாக‌ கொல்ல‌வும் முடியாது. தியான‌த்தால் இவைஇர‌ண்டுமே சாத்திய‌ம். இந்த‌ உண்மையை அனைவ‌ரும் அறிய‌ முத‌ற்க‌ண் அவ‌ர்க‌ளுக்கு செக்ஸும்,ப‌ண‌மும் த‌ங்கு த‌டையின்றி கிடைக்க‌ வேண்டும். இவற்றை (ஒரு ஜோதிட ஆய்வாளனாக கிர‌க‌ங்க‌ளின் பாதிப்புகளை, அவை வேலை செய்யும் விதத்தை அறிந்த‌வ‌ன் என்ற‌ முறையில்) ம‌க்கள் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் பெற‌ உத‌வுவ‌தே என் ப‌திவுக‌ளின் நோக்க‌ம்.

மனித‌னுக்கு ம‌ர‌ண‌ம் என்றால் ப‌ய‌ம். இருட்டு ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். த‌னிமை ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். இதனால் தான் ராத்திரியில் ப‌வ‌ர் க‌ட்டானால் கூட‌ மின் நிலைய‌ங்க‌ளுக்கு போன் மேல் போன். இத‌னால் தான் 6 முத‌ல் 60 வ‌ய‌து வ‌ரை ம‌னித‌ன் காத‌லித்துகொண்டே இருக்கிறான். நீயே உன் ஒளியாக‌ இரு என்றான் புத்த‌ர். எத்த‌னை பேரால் இப்ப‌டி வாழ‌ முடியும். ஏழ்மையும்,த‌னிமையும் ம‌னித‌னை வெருட்ட‌ ஆர‌ம்பிப்ப‌தால் தான் ம‌க்க‌ள் ப‌ண‌ம் ப‌ண‌ம் என்று ப‌ற‌க்கிறார்க‌ள்.ஈவ் டீசிங்,க‌ற்ப‌ழிப்புக‌ள்,க‌ள்ள‌ உற‌வுக‌ள் எல்லாமே இத‌ன் விளைவுதான்.

இத‌ற்காக‌த்தான் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்தை தீட்டினேன். அத‌ன் அம‌லுக்கு 1986 முத‌லாக‌ உழைத்து வ‌ருகிறேன். பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்று தொட‌ர்ந்து குர‌ல் கொடுத்து வ‌ருகிறேன்.

த‌ன‌து அடிம‌ன‌தில் உள்ள‌ ,அடிப்ப‌டை கோரிக்கைக‌ள் (சாவ‌து,சாவ‌டிப்ப‌து) செக்ஸிலோ,ப‌ண‌த்தாலே நிறைவேறாது, அது தியான‌த்தின் மூல‌ம் ம‌ட்டுமே சாத்திய‌ம் என்று ம‌னித‌ன் அனுபவ பூர்வமாக உண‌ர‌ வேண்டுமானால் ப‌ண‌ம்,செக்ஸ் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் கிடைத்தாக‌ வேண்டும். என் நாடு சித்த‌ர்க‌ள் சூட்சும‌ வ‌டிவில் இன்றும் வாழும் பொன்னாடு. இந்நாட்டு ம‌க்க‌ள் அனைவ‌ருமே ஞான‌ம் பெற‌வேண்டும். அத‌ற்கு முத‌ல் ப‌டியாக‌
ப‌ணம் மற்றும் செக்ஸை முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் பெற‌வேண்டும்.

Sunday, June 28, 2009

ஜோதிட சாஸ்திர‌ மர்மங்கள் ஆயிரமாயிரம்.

ஜோதிட சாஸ்திர‌த்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்.. எல்லோரும் ஒரே பஞ்சாங்கத்தை தான் உபயோகிக்கிறோம். சிலர் சொல்வது நடக்கிறது. பலர் சொல்வது நடப்பதில்லை. இதை வைத்தே பகுத்தறிவாளர்கள் ஜோதிடம் விஞ்ஞானம் அல்ல என்று கூறிவிடுகிறார்கள்.
எந்த ஜோதிடர் பலன் கூறினாலும் அது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில மர்மங்களை ஜோதிட நிபுணர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் . நான் நிபுணர் அல்ல என்ற போதிலும் இதை துவங்கி வைக்கிறேன்.
ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும்.
1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் ‍/ லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.
2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.
லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.
3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்
4.பாபர்கள் வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்
5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்
6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.
7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்
8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்
9.சேரக்கூடாத கிரக‌ங்கள் சேர்ந்திருத்தல்,
10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை மணத்தல் போன்ற அம்சங்களும் நற்பலன் களை தடுத்து விடுகின்றன‌.
11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.
12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.
13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.

14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.

ஜோதிடம் பெயரால் மோசடிகள்

ஜோதிடம் பெயரால் நடைபெறும் மோசடிகளை ஒரு தொழில் முறை ஜோதிடனான நானே எடுத்துக்கூற இருப்பது தங்கள் பூர்வ ஜென்ம புண்ணியமென்றே கூற வேண்டும்.
1.பேர் ராசிக்கு பலன் சொல்லி ஜல்லியடிப்பது. இது 100 சதம் போலி. சிலர் ரொம்பவே சாலாக்குடன் 30 வயசுக்கு பிறகு வச்ச பேருதான் வேலை செய்யும் என்பதும் உண்டு. என் கேள்வி : நாய்க்கு டைகர் என்று பெயர் வைத்த மாத்திரத்தில் அது புலியாகிவிடுமா என்ன ?
இதே மாதிரி கல்யாண பொருத்தத்திலும் மோசடிகள் நடைபெறுகின்றன. வச்ச பேரு, வீட்டுல கூப்புடர பேரு, செல்ல பேருக்கெல்லாம் பொருத்தம் பார்க்கிறது வேஸ்ட். ஜாதகம் பொருந்தனும். தோசங்கள் சமமா இருக்கனும். தச வித பொருத்தங்கள்ள ரஜ்ஜு நாடி கரெக்டா இருக்கனும் தட்ஸ் ஆல்
2.ஜன்ம நட்சத்திரம் அல்லது ஜன்ம ராசியை வைத்து பலன் சொல்லிவிட்டு இதுதான் உன் எதிர்காலம் என்பது. இதுவும் மிகப்பெரிய தவறாகும். மோசடி என்றே கூறலாம். வாழ்க்கை எனும் ரயில் ஜாதகப்படி நடைபெறும் தசாபுக்திகள்,தற்கால கிரக சஞ்‌சாரம் எனும் 2 தண்டவாளங்களின் மீது பயணிக்கும். வெறுமனே கோச்சார பலனை சொல்வது ஊரை ஏமாற்றும் செயலாகும்.(பத்திரிக்கைகளில் வெளியாகும் ராசிபலன்கள் கூட மோசடிதான்.
3.உண்மையில் கோச்சாரப்படி சொன்ன நல்லதோ கெட்டதோ நடைபெறுமானால் உங்கள் ஜாதகம் சப்பை,தக்கை ,என்று அர்த்தம்.

4.சூரியன்,சந்திரன்,செவ்வாய்,ராகு,குரு,சனி,புதன்,கேது,சுக்கிரன் என்று 9 கிரகங்கள் இருந்தாலும் ஒவ்வொரு லக்னத்துக்கும் 3 கிரகங்கள் தான் சுபர்.அதாவது நன்மை செய்யும் கிரகங்கள். சர்ப்ப தோஷமில்லையென்றால் ராகுவும் நலம் புரிவார். எனவே அது உச்சம், இது உச்சம் என்று பூ சுற்றினால் நம்பாதீர்கள். லக்னத்துக்கு சுபனாக இருக்கும் கிரகம் உச்சம் பெற வேண்டும் . அது கூட ஸ்தான பலம், அஸ்தமனம்,வக்கிரம் போன்ற லொள்ளுக்கு உள்ளாகாது இருக்க வேண்டும். அப்போதுதான் பஞ்சமகா புருஷ யோகங்கள் (கிரகம் உச்சம் பெற்ற) வேலை செய்யும்.
5.அப்படியே கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தாலும் நீங்கள் அந்த கிரகம் தொடர்பான கல்வி,தொழிலில் ஈடுபடுவதோடு, மேற்படி கிரகம் தொடர்பான மனிதர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் தான் அந்த கிரகம் தரும் யோகம் வேலை செய்யும்.
6.தனயோகம் என்பது வாயை கட்டி,வயிற்றை கட்டி ஒன்று அல்லது இரண்டு லட்சங்களை சேர்த்துவைத்து ஊர் வாயில் போட்டு முழிப்பதல்ல. எத்தனை லட்சங்களை வீணாக்கினாலும் மீண்டும் மீண்டும் லட்சங்கள் வரவேண்டும் அதுதான் தனயோகம்.

7. சுப கிரகங்கள் தரும் யோகம் ஒரு விதமாக, அசுப கிரகங்கள் தரும் யோகம் வேறு விதமாக பலன் தரும்.

8. வீட்டுக்கு கடைக்கால் எப்படியோ ஜாதகத்துக்கு லக்னம் முக்கியம். லக்னம்,லக்னாதிபதி கெட்டிருந்து எத்தனை யோகங்கள் இருந்தாலும் வேஸ்டுதான்
9.ஒரு ஜாதகனுக்கு பணம் வரக்கூடாது என்று சொல்லக்கூடிய நாள் எதுவும் கிடையாது/எவருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணம் வரலாம். (அஷ்டமாதிபதி தசையில் கூட கால் போய்,கை போய் பணம் வந்திருக்கிறது) என்னவொரு பிரச்சினை என்றால் கெட்ட நேரத்தில் வரும் பணம் வீணாகும். நல்ல நேரத்தில் வரும் பணம் உபயோகப்படும்.

மறு மொழிக்கு மறுமொழி :சுன்னத் செய்து கொண்டுவிட்ட ஆணுக்கு

நண்பரே !
ஆக்கப்பூர்வமாக அணுகி பொறுமையுடன் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தமைக்கு நன்றி. பிறப்புறுப்புகளுக்கு் கடைசிச்சொட்டு சிறு நீரே கேடு விளைவிக்கும் என்றால் ஜன சஞ்சாரமிக்க இடங்களில் கிடைக்கும் கற்களில் அதுவும் மழைகாலங்களில் என்றால் சொல்லவே தேவையில்லை. அவற்றில் எத்தனை கோடி கிருமிகள் இருக்குமோ சிந்தித்து பாருங்கள். நாயகம் கூறியது பாலை நிலத்துக்கு 100 சதம் பொறுத்தம்.

அழுக்கை சுத்தப்படுத்தத்தான் தண்ணீர் இருக்கிறதே (In our country) . பாலை நிலத்தில் தண்ணிர் கிடைப்பது துர்லபம். எனவே தான் நாயகம் இப்படி கூறியிருக்கிறார். சற்றே சிந்தித்து பாருங்கள். சுன்னத் செய்து கொண்டுவிட்ட ஆணுக்கு எப்படி அழுக்கு சேர முடியும் ?

மருத்துவர்கள் நீரையோ,வென்னீரையோ, ஏன் டெட்டால் கலந்த நீரையோ ரெகமண்ட் செய்வார்களே தவிர ஆயிரம் பேர் உபயோகித்த கற்களை ரெகமென்ட் செய்யமாட்டார்கள்.

<முக‌ங்க‌ளை மூடிம‌றைக்க‌ இஸ்லாம் சொல்லித்தர‌வில்லை>

இது நிச்சயம் எனக்கொரு செய்தியே ! வரவேற்கத்தக்கது . <முஸ்லீம் பெயர் தாங்கிகள் > ஆஹா அற்புதமான பிரயோகம் ?

நான் மேற்சொன்ன <முஸ்லீம் பெயர் தாங்கிகள் >சொன்னதை இஸ்லாமாக புரிந்து கொள்ளவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

மீண்டும் சொல்கிறேன்.. இஸ்லாம் மட்டும் நூற்றுக்கு நூறு பின்பற்றப்படுமேயானால் சர்வ‌ நிச்சயமாக வேறொரு மதம் இந்த பூமியிலேயே தொடர முடியாது.

<முஸ்லீம் பெயர் தாங்கிகள் > செய்வதை பார்த்து இஸ்லாமை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் என்றீர்கள் . பெரும்பாலான முஸ்லீம்கள் பின்பற்றும் பலவும் இஸ்லாமுக்கு விரோதமாக இருப்பதை காண்கிறேன். அவை குறித்த விவரங்களை தனிப்பதிவாகவே இட்டால் நலம்.

ஔரங்கசீப் தர்காவுக்குள் செல்வார். சலாம் அலைக்கும் என்று சலாம் கூறுவார். தர்காவுக்குள் புதை பட்டிருக்கும் பெரியவரிடம் பிரதி சலாம் வர வேண்டும். இல்லையோ அந்த தர்கா இடிக்கப்படும்.

அவ்வாறே எந்த ஒரு மசூதிக்குள் தொழுகை நடத்தும்போது ஔரங்கசீபுக்கு இணக்கமான வைபரேஷன்ஸ் கிடைக்கவில்லையோ அந்த மசூதி இடிக்கப்படும். ஔரங்கசீபின் இறை நம்பிக்கைக்கு ஒரு உதாரணம். ஔரங்கசீப் தொழச்செல்லும் மசூதி வாயிலில் எப்போதும் ஒரு குருடன் இருப்பது வழக்கம். ஒரு நாள் ஔரங்கசீபுக்கு தோன்றியது "இறைவன் பேரருளாளனாய் இருக்கும்போது மசூதி வாயிலிலேயே இருக்கும் இந்த குருடனுக்கு ஏன் பார்வை கிடைக்கவில்லை..? ஆம் இவன் இறை நம்பிக்கையற்றவனாய் தான் இருக்கவேண்டும் அதனால் தான் பார்வை பெறவில்லை. இறை நம்பிக்கைக்கு களங்கம்கற்பிக்கும் வகையில் இவன் இங்கே இருக்கக்கூடாது "என்று முடிவு செய்தார்.

குருடனை அழைத்தார். " இதோ பார் ! நான் தொழுகைக்கு சென்று திரும்புவதற்குள் உனக்கு பார்வை கிடைத்திருக்கவேண்டும் இல்லை
என்றால் உன் கழுத்தை வெட்டியெறிவேன்"

தொழுகைக்கு சென்றார். திரும்பினார். குருடன் பார்வை பெற்றிருந்தான் . இது தான் ஔரங்கசீபின் இறை நம்பிக்கைக்கான அடையாளம். அவர் குரான் பிரதி எடுப்பதிலும், தொப்பிகள் தயாரித்து விற்பதிலும் கிடைத்த பணத்தை மட்டுமே சொந்ததுக்கு உபயோகித்து வாழ்ந்தார் என்பது யாவரும் அறிந்ததே. பாபர் ,ஹுமயூன் கதை தெரியுமா? அது அடுத்த பதிவில்

Saturday, June 27, 2009

ஔரங்கசீப் தர்காக்களை,மசூதிகளை கூட இடித்து தள்ளியிருப்பது தெரியுமா?

இஸ்லாமில் என்னை கவர்ந்தவை (‍சில உறுத்தல்கள்)
இஸ்லாமில் என்னை கவர்ந்தவை :
வட்டியை தடை செய்துள்ளமை. (யதார்த்தத்தில் பலரும் வட்டி வாங்குவதும் கொடுப்பதும்)
வரதட்சிணைக்கு தடை அதற்கு பதில் மொஹர் (யதார்த்தத்தில் வரதட்சிணை கொடுக்கல் வாங்கல் உள்ளது)
சம‌த்துவம், சகோதரத்துவம் நமாஸ் வேளைகளில் யார் முன்னே வந்தால் அவருக்கு முதலிடமே தவிர இந்து கோவில்கள் போல் கொள்ளையடிப்பவனுக்கு பூர்ண‌கும்பம் எல்லாம் கிடையாது‌

(யதார்த்தத்தில் பார்க்கும்போது என்னென்னவோ பிரிவினைகள் சன்னி,ஷியா,லெப்பை)
இறைவனை தவிர வேறு எவனுக்கும்,எதற்கும் தலைவணங்காமை (இதுவும் நடைமுறையில் 100 சதம் பின்பற்றப்படுவதில்லை) இதே கான்செப்ட் இந்து மதத்தில் ஊடாடினாலும (நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்) தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று கூறி மைல் கல்லுக்கெல்லாம் படையல் போடுகிறோம்.

ஔரங்கசீப் இந்து கோவில்களை இடித்ததாய் இந்துத்வாவாதிகள் வாதிடுவது உண்டு. அதே ஔரங்கசீப் தர்காக்களை,மசூதிகளை கூட இடித்து தள்ளியிருப்பது தெரியுமா? அதற்கான காரணம் எத்தனை உத்தமமானது தெரியுமா? அவை அடுத்த பதிவில்இந்து மதம் போலவே இஸ்லாமிலும் பண்டித கூச்சல்கள் அதிகமாய் உள்ளன. அண்டர்வேர் அணியலாமா கூடாதா என்று ஒரு அப்பாவி முஸ்லீம் கேட்டால் கூட ஒரே பதிலை கூற முடியாத நிலை உள்ளது. இஸ்லாம் குறித்த விவாதங்களில் தத்துவத்தின் மையத்தை விட்டு விலகிப்போகும் தன்மை உள்ளது. இதற்கு மதப்பெரியவர்களே காரணமாய் உள்ளது வருத்தம் தருகிறது.

இந்துக்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம். டம்ளர் டம்ளராக காபியும்,டீயும் உள்ளே தள்ளி மதியம் 2 க்கெல்லாம் வடை பாயாசத்துடன் விருந்து உண்கிறோம். ஆனால் ரமலான் நோன்பை பாருங்கள். நோன்பென்றால் அதுதான் நோன்பு.

முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால்

இஸ்லாம் சம்பிரதாயங்களை பார்த்தால் அது பாலை நிலத்துக்கும்,யுத்த காலத்துக்கும் ஏற்றவகையில் அமைந்திருப்பதை உணரலாம். உதாரணமாக: ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பாலைவனத்தில் ஒரு காரவான் (பிரயாணிகள் கூட்டம்) கடந்து சென்றால் மற்றொரு காரவான் வர மாதமாகலாம், இரண்டு மாதமாகலாம். இன்று ? சென்னை போன்ற கான்க்ரீட் காட்டில் ?

முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான். அன்று,பாலை நிலத்தில் வெஜ் உணவுகள் கிடைப்பது துர்லபம் எனவே மாமிச உணவு அனுமதிக்கப்பட்டது. இன்று ?

மேலுமொரு உதாரணம்: முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்ய‌ப்பட்ட ஏற்பாடே.
பெண்கள் புர்கா அணிவதும், கோஷாவாக இருப்பதும் எதிரிகள் குறித்த அச்சத்தால் தான் (அது யுத்த காலம் என்பதால் இந்த ஏற்பாடு) மேலும் பாலை நிலத்தில் சூரிய வெப்பம், அதை பிரதிபலிக்கும் மணல்வெளி காரணமாக பெண்களின் முகம் பொலிவிழந்து போகுமென்பதாலும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்.

ஆனால் இன்றுள்ள பொல்யூஷனுக்கு இந்து பெண்களும் புர்கா அணிவது பாதுகாப்போ என்னவோ?

தமது டிப்பாசிட்டுகள் மீதான வங்கி வட்டியை கூட தனியே கணக்கிட்டு வருடம் ஒருமுறை தானம் செய்யும் முசல்மான்கள் உண்டு. ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது. முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால் தான் வந்தேமாதரம் பாடுவதை கூட அந்த காலத்தில் தவிர்த்தனர். ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.

மேலும் மதச்சார்ப்பற்ற தன்மை என்ற பெயரால் கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தலும் ,ஆஞ்சனேயர் தாயத்து தரிப்பதையும் காணமுடிகிறது. தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்

நான் முஸ்லீம் சகோதரர்களை கேட்டுக்கொள்வது ஒன்றே அந்த யுத்தகாலத்துக்கேற்ற வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை இன்றும் பின்பற்றுவது தேவையா ? என்று யோசியுங்கள். பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள். இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?

இறைவனுக்கும், பக்தனுக்குமிடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை. நாம் பேசுவதை இறைவன் கேட்கிறான். இறைவன் சொல்லை நமக்கு சேர விடாமல் செய்வது இடைத்தரகர்களும், அகந்தையும் தான். எனவே அகந்தையை கைவிடுவோம்.( நாம் சரி மற்றவர்கள் அனைவரும் தவறு என்ற எண்ணம்) இடைத்தரகர்களின் சூழ்ச்சியை சூட்சும புத்தியுடன் சிந்தித்து செயல்படுவோம்.

இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின்பற்றப்படுமேயானால் இந்த பூமியில் வேறு மதங்களே இருக்காது !

Friday, June 26, 2009

மனிதம் மதமாக உருமாறிய ஒரே மதம் இஸ்லாம் தான். ஆனால் இஸ்லாம்

முஸ்லீம் கள் கால‌த்துக்கேத்தாப்ல மாறனும்
இதை எழுதலாமா வேணாமானு இத்தனி காலம் ஊற வச்சிருந்தேன். நான் பிறப்பால இந்துவா இருந்தாலும் உணர்வுகளால் நான் அரை துருக்கன். ஆமாங்க அடிக்கடி சொல்வேன் " இஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலிஜியன் & முஸ்லீம்ஸ் ஆர் தி வொர்ஸ்ட் ஃபாலோயர்ஸ்"

இஸ்லாமை பத்தி நமக்கு (எனக்கு) தெரிஞ்சது பத்து பைசா அளவுகூட இருக்காது ..இதுக்கே பயந்துட்டன். இப்படி கூட ஒரு மதம் போதிக்குமா ? மனிதம் மதமாக உருமாறிய ஒரே மதம் இஸ்லாம் தான். ஆனால் இஸ்லாம் முஸ்லீம்களால் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

இந்துமதத்தில் எப்படி அச்சு அசலான யோக முறைகள் எல்லாம் மூலையில் கிடத்தப்பட்டு விளக்குக்கு எத்தனை திரி போடனும் என்ன எண்ணை ஊத்தனும்னு கதை அளக்கறாப்ல இஸ்லாம்லயும் வெத்து விவாதங்கள் நிறைய நடக்கறாப்ல தெரியுது. நம்ம மதத்துல பிராமணர்கள் ஆற்றிய தொண்டை(?) அங்கே மத பெரியவர்கள் ஆற்றுகிறார்கள்.

இறைவனை தவிர வேறெதற்கும் தலை வணங்க கூடாது என்ற தலையாய விதியிருந்த போதிலும் அவர்களிலும் மூட நம்பிக்கைகள்,மந்திர தந்திரங்கள் மீதான நம்பிக்கைக்கு குறைச்சல் இல்லை. சமத்துவம்,சகோதரத்துவம் என்பது போதிக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தத்தில் பார்க்கும்போது பிளவுகள் இருக்கவே இருக்கின்றன. இஸ்லாமில் என்னை கவர்ந்த அம்சங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

நபிகள் நாயகம் போன்ற மனிதாபிமானியை நமது புராணங்களிலோ ,வேதங்களிலோ,சரித்திரத்திலோ எங்குமே காணமுடியாது ,காட்டவும் முடியாது . அது போன்றதொரு மனிதாபி மானி மனிதாபிமானத்துடன் அந்த யுத்த காலத்துக்கென்று, பாலை பூமிக்கென்று வகுத்து கொடுத்த நியதிகளை இன்றும் இந்த சாந்தி காலத்திலும், இந்த பொன் விளையும் பூமியிலும் பின்பற்றுவது எந்த அளவுக்கு அறிவுடமை என்று அவ்வப்போது கேள்விகள் எழுவது உண்டு.

உதாரணமாக : பலதார மணம். அது யுத்த காலம். யுத்தத்தில் வீரமரணங்கள் சகஜம். பெண்டிர் விதவைகளாவது சகஜம். அதனால் நபிகள் நாயகம் பல தார மணத்தை ஆதரித்திருக்கலாம். இன்று ? பிள்ளை பெறுவதற்கும் இதே விதியை பொறுத்திப்பாருங்கள். பாலை பூமிக்கு பர்தா தேவைதான். மணல் புயல் வீசும் என்பதால் . மாமிச உணவும் தேவைதான். அங்கு தாவர உணவு கிடைப்பது சிரமம் என்பதால்.

பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ?

மகளோட காதல் விவகாரம். இன்னம் ஒரு வருசத்துல அவள்

ஒரு நாள் போதுமா ?

இந்த 42 வயசுக்கு மூளைல சேர்ந்துபோன குப்பை கூளங்களை ,அதுல ஒளிஞ்சிருக்கிற மணிகளை பகிரணும்னா எத்தனை ஜி.பி.டைப் பண்ணனுமோ தெரியலை. அதனால இன்னைக்கு ஒரு நாள் என்னா கிழிச்சேனு மட்டும் எழுதறேன் தலைப்பு "ஏழைபடும் பாடு"னு வச்சா பொருத்தமா இருக்குமோ என்னவோ ? 3 வருசம் முன்னாடி உண்மையிலயும் ஏழை, சமுதாயமும் ஏழைனு நினைச்சிருந்தது.
இப்போ கதை கொஞ்சம் மாறி போச்சு. எல்லாரும் நானேதோ க்ளிக் ஆயிட்டேனு நினைக்கறச்ச ஃப்யூஸ் போயிருச்சு. ஒரு நாளிதழ்ல பார்த்துக்கிட்டிருந்த வேலை பணாலாயிருச்சு. சொந்த பத்திரிக்கை தான் சோறு போடுது. முன்னாடி வாடகை இல்லாத வீடு. கரண்டில்லாததால கரண்டு பில்லும் கிடையாது. இப்போ ?

இத்தனைக்கும் நான் ஒரு ஆஃபீஸர் மகன். சொந்த வீடும் இருந்தது. கலப்பு திருமணத்தால அப்பாவோட கனெக்ஷன் கட். அப்பா துபாய் போயிட்டதால வீட்டை வித்து அண்ணன் தம்பி பங்கு போட்டு அதுவும் டமால். நாலு பேர்ல ரெண்டு டி(வி)க்கெட்டும் டமால்.

நிற்க நான் சொல்ல வந்தது என்னன்னா.. ஏழையாவே இருந்தா நான் (சுமார் 16 வ) மேற்படி நாளிதழ் வேலையால வாலை அவுத்து விட்டாச்சு. வீட்டு வாடகை 450 ஆஃபீஸ் வாடகை 270 கரெண்டுபில் 120 டிஷ் பில் சாப்பாட்டு செலவு, மேல் செலவு, பீடி சிகரட் செலவு இப்படி செலவு கூடிப்போச்சு. இதுல தினசரி 20 30 வீதம் இன்டர்னெட் செலவு வேறே . கிழிச்சதுன்னா ஒரு மயிரும் கிடையாது. தெலுங்கு வலைப்பூவையாவது 6 மாசத்துல 16 ஆயிரம் பேரு பார்த்தாங்க . தமிழ்ல 3 வருசமா 2400 பேருதான்.

என்ன இதற்கிடையில அக்ரகேட்டர்ஸ் எண்ணிக்கை அதிகமானதால வாசிப்பும் அதிகமாகியிருக்கு. இதுல மகளோட காதல் விவகாரம். இன்னம் ஒரு வருசத்துல அவள் மேஜர். அவள் விரும்பின டுபாகூரையே கட்டி வச்சுட்டா ஒரு பீடை ஒழியும்னு நப்பாசை.

பெருமையா சொன்ன சொந்த பத்திரிக்கையோட டோட்டல் டர்ன் ஓவர் ரூ.12000 தான் இதுல செலவு போக என்னத்த மிச்சமாகி என்னத்தை செய்ய. ஆனால் சும்மா சொல்ல கூடாது நத்திங் பட் காட் தான் .இதுல ஒரு பி.எஸ்.சி.பட்டதாரிய மாத சம்பளம் ரூ.1,500 க்கு அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன்.

இன்னைக்கு காலைல என்ன நடந்தது? ராத்திரியெல்லாம் ஈரத்துணி சுத்திக்கிட்டு (பசியால இல்லிங்க , மந்திர ஜபம்) கங்கை பதிப்பகத்தோட உலக மகா நாகரீகங்களை வாசிச்சு ரெண்டு ,மூனு மணிக்கு தூங்கி காலை 7 மணி வாக்குல எந்திரிச்சேன். அய்யய்யோ ரெப் வருவாரே (நம்ம பத்திரிக்கையோட அட்வர்டைஸ்மென்ட் ரெப்) அவரு 200 ரூ முன் பணம் கேட்டாரேனு ஞா. வந்துருச்சு.
உங்களை எங்கனா கைமாத்து கேட்டுறப்போறேனு பயந்துக்காதிங்க. எப்படியோ பீராய்ஞ்சு கொடுத்துட்டன்.ஒரு இளைஞரணி தலைவர் ரூ.1000 தரனும், ஒரு ஸ்டடி சென்டர் காரன் ரூ.500 தரணும் இருந்தும் ரூ,200 கடன் வாங்கி சமாளிச்சேன். 11 மணி வரைக்கும் ரெப்பை அழைச்சிட்டு போய் மார்க்கெட்டை காட்டி, விளம்பரம் சேகரிச்சு (அய்யா சாமீ ! சின்ன விளம்பரம் கொடுங்கயா) வீட்டுக்கு வந்தேன். பசி கொல்லுது. 1997 ல யிருந்து டிஃபன் சாப்பிடறதயே விட்டுட்டன். ஒரு காலத்துல மூணு வேளைக்குமா சேர்த்து 4 மணீக்கு சாப்பிட்டதெல்லாம் உண்டு. நடுவுல லெமன் டீ சாப்பிடற பழக்கம் வந்து தான் பசிங்கறதயே உணர ஆரம்பிச்சிருக்கேன்.

சாட் நண்பர் ஒருவர் திருமண தாமதத்துக்கு பரிகாரம் கேட்க அம்மனோட சத நாமாவளிய ப்ரிண்ட் பண்ணி மக்களுக்கு இலவசமா கொடுங்கனு ஒரு சஜஷன் கொடுத்திருந்தேன். அவரு "கல்யாணம் பண்ணிக்கோனா நீயே என் பெண்டாட்டியா வான்னு சொன்ன கதயா நா காசு கொடுத்துர்ரன் நீங்களே போட்டு நீங்களே கொடுத்துருங்கனு சொல்லியிருந்தாரு.

வீடு வந்தேனா பெண்டாட்டி அரி்சி பொறுக்கிகிட்டிருந்தாளா பசி செத்துப்போய் மேற்சொன்ன சதனாமாவளி பாக்கெட் புக் வேலைய பார்க்க டி.டி.பி காரர் கிட்டே போனேன்.

இதற்கிடைல ஆரணி நிருபர் போன் பண்ணி பலான யூனிவர்ஸிட்டி ஸ்டடி சென்டர் வைக்காங்க அவங்களூக்கு கொஞ்சமா கோ ஆப்பரேட் பண்ணுங்க என்றார்.

அங்கே போய் நல்லது கெட்டதெல்லாம் சொல்லி நம்ம பத்திரிக்கைக்கு ஒரு ஃபுல் பேஜ் விளம்பரம் ஒன்னு பீராஞ்சேன். வீட்டுக்கு வரலாம்னு பார்த்தால் ஒரு டி.வி நிருபர் போன். அதேதோ T.V ப்ரோக்ராம்ல ஜோதிட கேள்விக்கு பதில் சொல்ல உங்களை ரெகமண்ட் பண்ணியிருக்கேன் உங்களுக்கு ஓகேன்னா ஒரு மேக்ஸி சைஸ் படம் கொண்டாங்க என்றார். விட முடியுமா ? இத்தனைக்கும் தேங்கா மூடி கேஸுதான். வாத்தியார் சொல்லியிருக்காரே "பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்னு" அதுக்குதான் அனுபவஜோதிடம் டாட் ப்ளாக்ஸ்பாட் டாட்காம்னு ஒன்னு ஆரம்பிச்சேன் .போனியாகலையே. ஏதோ ரெண்டு மூனு மணீயார்டர் (தலா ரூ.200) ஒரு 3 தடவை ரூ.1,500 ,ஒரு தடவை ரூ.3,000 டி.டி.வந்ததோட சரி. இப்படி டி.வி.மூலமாச்சும் புகழ் வந்தா பணம் வரும். பணம் வந்தா ஜனம் சேரும்.ஜனம் சேர்ந்தா ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை பிரபலமாக்கலாம் பத்து கோடி நிருத்யோகர்களை கொண்டு கங்கை காவிரியை இணைக்கலாம்னு நப்பாசை..

எங்கே ஓடறிங்க ..மதியம் வரைக்கும் தாங்க ஆச்சு..

Thursday, June 25, 2009

ம‌னித‌ர்க‌ள் வெவ்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டைத்தான்.

இந்த‌ ப‌டைப்பே ஒரு விப‌த்து. ம‌னித‌ வாழ்வு அக்மார்க் விப‌த்து. ஒரு எல‌க்ட்ரானிக் உப‌க‌ர‌ண‌த்தில் ஆன்,ஆஃப் ஸ்விட்ச் இருப்ப‌து போல் ஒவ்வொரு உயிரிலும் உயிர் வாழும் இச்சையும்,த‌ற்கொலை இச்சையும் சேர்ந்தே உள்ள‌ன‌. ம‌னித‌ர்க‌ள் வெவ்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டைத்தான். 1.கொல்வ‌து 2.சாவ‌து. இவை இர‌ண்டுமே செக்ஸ்,மற்றும் ப‌ண‌த்தில் கைகூடுவ‌தால் தான் ம‌னிதனுக்கு செக்ஸ் ம‌ற்றும் ப‌ண‌த்தின் மீது இத்த‌னை காத‌ல்.

முக்தி என்ப‌து என்ன? எண்ண‌ங்க‌ள் இற‌த்த‌லே முக்தி. செக்ஸில் ஆர்காச‌ம் அடையும்போது எண்ண‌ங்க‌ள் இற‌க்கின்ற‌ன‌. ஒரு செக‌ண்ட் ப்ளாக் அவுட் ஏற்ப‌டுகிற‌து. இதை மீண்டும் மீண்டும் பெற‌த்தான் ம‌னித‌ன் செக்ஸில் ஈடுப‌டுகிறான்.

உயிர்வாழும் இச்சை ப‌டைப்புக்கு தூண்டுகிற‌து. ப‌டைப்பால் ம‌னித‌ன் பார்ஷிய‌லாக‌ இற‌க்கிறான். டூ இன் வ‌ன். ம‌னித‌ உட‌லில் இருப்ப‌து ஒரே ச‌க்தி தான். அது காம‌ ச‌க்தி. அவ‌ன‌து செய‌ல்பாடுக‌ளை பொருத்து அது யோக‌ ச‌க்தியாக‌ மாறுகிற‌து.

செக்ஸில்,பிள்ளைகள் பெறுவதில் முழுமையாக செல‌வ‌ழித்து விட‌ முடியாத‌ அள‌வுக்கு ஆண்மை உள்ள‌வ‌னே ப‌டைப்பு தொழிலுக்கு வ‌ருகிறான். அங்கும் முழுமையாக செல‌வ‌ழியாத‌ காம‌ ச‌க்தி தான் அவ‌னை முக்திக்கு தூண்டுகிற‌து.


ப‌ண‌ம்,செக்ஸ் உத‌வியால் ஒரு ம‌னிதன் முழுமையாக‌ சாக‌வும் முடியாது ,எதிராளியை முழுமையாக‌ கொல்ல‌வும் முடியாது. தியான‌த்தால் இவைஇர‌ண்டுமே சாத்திய‌ம். இந்த‌ உண்மையை அனைவ‌ரும் அறிய‌ முத‌ற்க‌ண் அவ‌ர்க‌ளுக்கு செக்ஸும்,ப‌ண‌மும் த‌ங்கு த‌டையின்றி கிடைக்க‌ வேண்டும். இவற்றை (ஒரு ஜோதிட ஆய்வாளனாக கிர‌க‌ங்க‌ளின் பாதிப்புகளை, அவை வேலை செய்யும் விதத்தை அறிந்த‌வ‌ன் என்ற‌ முறையில்) ம‌க்கள் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் பெற‌ உத‌வுவ‌தே என் ப‌திவுக‌ளின் நோக்க‌ம்.

மனித‌னுக்கு ம‌ர‌ண‌ம் என்றால் ப‌ய‌ம். இருட்டு ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். த‌னிமை ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். இதனால் தான் ராத்திரியில் ப‌வ‌ர் க‌ட்டானால் கூட‌ மின் நிலைய‌ங்க‌ளுக்கு போன் மேல் போன். இத‌னால் தான் 6 முத‌ல் 60 வ‌ய‌து வ‌ரை ம‌னித‌ன் காத‌லித்துகொண்டே இருக்கிறான். நீயே உன் ஒளியாக‌ இரு என்றான் புத்த‌ர். எத்த‌னை பேரால் இப்ப‌டி வாழ‌ முடியும். ஏழ்மையும்,த‌னிமையும் ம‌னித‌னை வெருட்ட‌ ஆர‌ம்பிப்ப‌தால் தான் ம‌க்க‌ள் ப‌ண‌ம் ப‌ண‌ம் என்று ப‌ற‌க்கிறார்க‌ள்.ஈவ் டீசிங்,க‌ற்ப‌ழிப்புக‌ள்,க‌ள்ள‌ உற‌வுக‌ள் எல்லாமே இத‌ன் விளைவுதான்.

இத‌ற்காக‌த்தான் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்தை தீட்டினேன். அத‌ன் அம‌லுக்கு 1986 முத‌லாக‌ உழைத்து வ‌ருகிறேன். பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்று தொட‌ர்ந்து குர‌ல் கொடுத்து வ‌ருகிறேன்.

த‌ன‌து அடிம‌ன‌தில் உள்ள‌ ,அடிப்ப‌டை கோரிக்கைக‌ள் (சாவ‌து,சாவ‌டிப்ப‌து) செக்ஸிலோ,ப‌ண‌த்தாலே நிறைவேறாது, அது தியான‌த்தின் மூல‌ம் ம‌ட்டுமே சாத்திய‌ம் என்று ம‌னித‌ன் அனுபவ பூர்வமாக உண‌ர‌ வேண்டுமானால் ப‌ண‌ம்,செக்ஸ் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் கிடைத்தாக‌ வேண்டும். என் நாடு சித்த‌ர்க‌ள் சூட்சும‌ வ‌டிவில் இன்றும் வாழும் பொன்னாடு. இந்நாட்டு ம‌க்க‌ள் அனைவ‌ருமே ஞான‌ம் பெற‌வேண்டும். அத‌ற்கு முத‌ல் ப‌டியாக‌
ப‌ணம் மற்றும் செக்ஸை முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் பெற‌வேண்டும்.

டி.வி.சீரியலும்,கந்து வட்டியுமா காலத்தை ஓட்டிடலாமுன்னு எண்ணமா?

செவிடன் காதில் சங்கு ,அலிக்கு அரம்பை ,இந்த வரிசையில் தமிழனிடம் இன மானம் குறித்த பேச்சும் இடம் பெற்று ரொம்ப நாளாகிறது. இலங்கை வேற்று நாடுதான் இல்லை என்று கூறவில்லை. நாம் நேருவின் பஞ்சசீல கொள்கைகளை பின்பற்றுகிறோம் என்பதயும் ஏற்கிறேன். அந்த காலத்தில் அகதிகள் பிரச்சினையை முன்வைத்து கிழக்கு வங்காள விடுதலைக்கு உதவவில்லையா? அவ்ள தூரம் தயவு காட்டாட்டி போகுது. விடுதலை புலிகளை ஆதரிக்காட்டியும் பரவாயில்லை. அங்கே வீடிழந்து ,முழத்துணிக்கும்,பிடி சோற்றுக்கும் வழி இல்லாது அல்லாடும் மக்கள் குறித்தாவது சிந்திக்கலாமே.

அட டுபாகூருங்களே !
இப்படியே மானங்கெட்டு வாழ்ந்தா டி.வி.சீரியலும்,கந்து வட்டியுமா காலத்தை ஓட்டிடலாமுன்னு எண்ணமா? அதுதான் நடக்காது. முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும் /கெடுவான் கேடு நினைப்பான் / இதெல்லாம் சும்மா வேலை வெட்டியில்லாத பெருசுங்க விட்ட டகுலுனு நினைக்கிறிங்களா ?

இல்லேடா கண்ணா இதெல்லாம் பல நூற்றாண்டு கால வாழ்க்கை தந்த பாடம். நாளைய சத்தியம். தாளி ! உங்களுக்குதான் இலங்கைய தட்டி கேட்க திராணியில்லே.


ஐநாசபைல எவனோ கொண்டுவந்த தீர்மானத்தையும் தோற்கடிக்கறிங்களே ..இப்படியே போயிடுமா வாழ்க்கை ? "கொடுப்பதழுக்கறுப்பான் சுற்றம் உணவும்,உறையும் இன்றிக்கெடும்"


இந்த அலித்தனமான போக்காலதான் எங்கே போனாலும் உதை வாங்கி சாகறிங்க‌

அடச்சீ..ஆயுதம் தூக்கி போராடச்சொல்லலையே ! தேர்தல்ல இனமானம் காக்க எழுந்த கட்சிகளுக்கு ஆதரவா பட்டனை அழுத்த கூட தகிரியம் இல்லியா ?

முறத்தால புலிய ஓட்டினோம்னு கதையா பண்றிங்க ? ஒரு நாளில்லே ஒரு நாள் உங்க கதியும் அந்த தமிழன் கதிதான்

Monday, June 22, 2009

பாதி ராத்திரி கதவு டொக் டொக். திறந்தா கையில பெர்த்டே கேக்

நள்ளிரவு ஹேப்பி பர்த்டே !
நம்ம தமிழ் சினிமால ஹீரோயினுக்கு பிறந்த நாளுன்னா ஹீரோ பாதி ராத்திரி போன் பண்ணி ஹேப்பி பர்த்டே சொல்வாரு. இதெல்லாம் சினிமால பார்க்கிறப்ப நல்லாவே இருக்கும்.இருக்கப்பட்டவன் வீட்ல பார்த்தாலும் ஓகே தான். ஆனால் என் மகளுக்கு பெர்த்டேன்னதும் பாதி ராத்திரி கதவு டொக் டொக். திறந்தா என் மகளோட உட் பி (இதுலயே சந்தேகமிருக்குது பாருங்க).கையில பெர்த்டே கேக். அதுமேல ஒரு கேண்டில்.

பேரு சன் தீப் இங்கிலீஷ்ல எழுதி பரிச்சு படிங்க ! சேண்ட் (மணல்), மணல் எங்க இருக்கும் பாலைவனத்துல. டீப் (ஆழம்). பார்க்க நம்ம லேட்டஸ்ட் சினிமா ஸ்டார் மாதிரிதான் இருக்கான்.

உஃப்னு ஊதினா பறந்துருவான். புல் தடுக்கி. எங்க சித்தூர்ல ராத்திரி 7.30 ஆனா போதும் லாலா பார்ட்டி எல்லாம் லாலா போட ஆரம்பிச்சுரும். 9 ஆனால் போதும் கடையெல்லாம் மூடிருவாங்க ! கடை படிக்கட்டுல பிளாஸ்டிக் கிளாஸ் சகிதம் தண்ணி கச்சேரி .

மெயின் ரோட்ல போலீஸ் ரோந்து இருக்குதுன்னு சந்துகள்ள கூட இது நடக்கும். இந்த பையன் கேக்கோட வர்ரத பார்த்து எவனாச்சும் லாலா பார்ட்டி கழுத்துல கத்திய வச்சு வீடுவரைக்கும் வந்து கதவை தட்ட வச்சு உள்ளே பூந்திருந்தா என்ன நிலை? நான் என்ன ஜாக்கிசானா ! இல்லே அவன் என்ன ப்ரூஸ்லீயா !

இந்த லவ்ஸ் வந்தாலே மண்டைல ஸ்க்ரூ எல்லாம் லூஸாயிருமா என்ன? பூனை கண்ணை மூடிக்கிட்டு பால் குடிக்குமாம். எவனும் என்னை பார்க்கலைனு நினைச்சுக்குமாம். இந்த லவர்ஸ் நிலை கூட அதே தான். அவன் என்ன பண்றான்னு அவனை தவிர மத்த எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கும்.

தாளி நான் கூட காதலிச்சிருக்கேன். நம்ம காதலெல்லாம் வெரைட்டியா இருக்கும். உள்ளுக்குள்ள தெய்வீக காதலா இருந்தாலும் மேலுக்கு டவுன் பஸ்ஸுல க்ளோசப்ல நின்னுக்கிட்டு "காலேஜ் வரைக்கும் லவ் பண்ணேன்" தான்.

இவனுங்களால காதலையும் தாங்க முடியாது. காதல் தோல்வியையும் தாங்க முடியாது.

என்ன ஃபிஸிக்கோ, என்ன பழக்க வழக்கமோ ..தாளி ..ஒரு தடவை காதலி , பொறுக்கின்னிட்டா "வெறும் பொறுக்கி இல்லே கண்ணா பொம்பளை பொறுக்கி என்றுவிட்டு சாம்பார்சாதம் 2 தடவை, ரசம் 2 தடவை, மோர் 2 தடவை போட்டு மூக்கு பிடிக்க சாப்பிட்டேன்.

இவன் என்னத்த ரிஸ்க் எடுத்தான். ஒரு நாள் முகமெல்லாம் எண்ணையா என் மகளோட வீட்டுக்கு வந்தான். "என்னா கண்ணா லவ்வா" ன்னேன். என் மக தான் ஆமா போட்டா. நான் வச்சுக்க நீனிட்டேன்.

காதல் தோல்வில மூக்குபிடிக்க சாப்பிட்டா நான் எங்கே ! வில்லனாக வேண்டிய அப்பனே ப்ரோக்கர் ஸ்டேஜுக்கு வந்து " நைனா அங்கே இங்கேல்லாம் மீட் பண்ணாதே .. நேர நம்ம வீட்டுக்கு வந்துடு" என்று சொன்ன பிறகும் வேளைக்கு சாப்பிடாம அல்ஸர் வந்து ரத்த வாந்தி எடுக்கிற இவன் எங்கே..

இவனையெல்லாம் நம்பி எதிர்கால இந்தியா !

அவ‌ன் ம‌னைவியை அனுப‌விச்சே,அவ‌னுக்கு தெரிஞ்சு போய் வெட்ட‌ வ‌ந்தான்

வாழ்க்கைக்கு உங்கள் திட்டமிடல்கள் என்றால் அலர்ஜி

ஆம். நாம் அனைவருமே திட்டமிடுகிறோம். நம் திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்று துடிக்கிறோம். ஆனால் வாழ்க்கைக்கு உங்கள் திட்டமிடல்கள் என்றால் அலர்ஜி
எங்கள் சந்திரபாபு முதல்வராக இருந்த போது விஷன் 2020 என்று ஒரு உட்டாலக்கடியை பற்றி தொண்டை வறள பேசிக்கொண்டிருந்தார். கம்யூனிஸ்டுகள் அதை விஷன் 420 என்று கிண்டலடித்து வந்தனர்.

நிற்க என் நண்பன் ஒருவனின் திட்டமிடல் பற்றியும் வாழ்க்கை அவனை எப்படி லொள்ளு செய்தது என்பதை பற்றியும் சில வரிகள். அவன் பெயர் ..வேண்டாம். ஏடுகொண்டலு என்று வைத்து கொள்வோம். பட்சி தோஷம்(?) காரணமாய் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாத உருவம். பள்ளி ஆசிரியரான அப்பா. உப தொழில் இலவசமாய் வரன் பார்த்தல். அம்மா ஹவுஸ் வைஃப். அந்த காலத்து கலப்பு திருமண தம்பதி. கச்சாமுச்சான்னு பசங்க. நம்ம ஏடுகொண்டலு சின்ன வயசுலயே வறுமை நிலைக்கு பயந்துட்டான். திறமை இருக்குங்கறதை மறந்துட்டான்.

இதில் அவன் ராசி வேறு ரிஷப ராசியாச்சா.. பேச்சுன்னா வெல்லம். பெண்கள் என்றால் ஜொள், தீனிப்பண்டாரம்,கல்யாணம், காரியம் ஒன்னு விடமாட்டான். மேலும் வேலி தாண்டி மேய்வதில் ஒரு ருசி. பாகாலாவில் ரயில்வே எம்ப்ளாயியின் ஆசைநாயகி, தங்கள் காலனி லாரி ட்ரைவரின் மனைவி,(அந்த நேரம் நம் ஏடு கொண்டலு பிரைவேட் லைன் மேனிடம் உதவியாள்தான்),பாகாலாவிலேயே கோர்ட்டு குமாஸ்தாவின் மனைவி. அவன் மேய்வதும்,பிடிபட்டு அவதி படுதல்,உதைபடுதல் ஏதோ ஒரு வகையில் நான் காப்பாற்றியோ,ஒப்பேற்றியோ விடுதல் நடந்து வந்தது.

இதெல்லாம் ஒரு புறம் என்றால் அவன் திட்டமிடல் தான் எரிச்சலூட்டும் விஷயம். காலனிக்கு செல்லும் டவுன் பஸ்ஸின் நேரத்தை கூட தெரிந்து வைத்துக் கொண்டு பத்து முறை நேரம் பார்த்து பார்த்து பேசுவது நம்மை பைல்ஸ் நோயாளி போலாக்கிவிடும். சரி ஒழியட்டும்.

லாரி ட்ரைவ‌ர் ம‌னைவி விஷ‌ய‌த்தில் கால‌னிக்கே போக‌ முடியாத‌ நிலைமை ஆகிவிட்ட‌து. நான் பாகாலாவில் ஏடுகொண்ட‌லு குட் வில்லில் வீடு பிடித்து வாழ்ந்து வ‌ந்த‌ க‌ட்ட‌ம். ப‌ய‌ங்க‌ர‌மாய் சாமி கும்பிடுவான் . என்ன‌டா வேண்ட‌றே என்றால் லாரி ட்ரைவ‌ர் செத்துட‌னும்னு வேண்ட‌றேன் என்றான்.

"ச‌ரிப்பா நீ அவ‌ன் ம‌னைவியை அனுப‌விச்சே,அவ‌னுக்கு தெரிஞ்சு போய் வெட்ட‌ வ‌ந்தான் ஓடி வ‌ந்துட்டே..இப்போ அவ‌ன் சாக‌னும்னு சாமி கும்பிட‌றே, அவ‌ன் செத்துட்டா அவ‌ன் பெண்டாட்டிய‌ நீ க‌ட்டிக்க‌ற‌யா/இல்லை வ‌ச்சுக்க‌றயா/ச‌ரி போவ‌ட்டும் அவ‌ளுக்கு ப‌ச‌ங்க‌ வேற‌ இருக்காங்க‌ அதுல‌ யாரையாவ‌து த‌த்தெடுத்துக்க‌ற‌யா/ உன் டீல் என்ன‌ சொல்லு நானும் உன‌க்கு ச‌ப்போர்ட்டா வேண்டிக்கிறேன்."என்றேன்.

ஊஹூம் என்று விட்டான். இன்று மின் துறையில் வேலை வ‌ந்து,திரும‌ண‌மாகி ஒரு பெட்டை குட்டி போட்டு,சுக‌ர் வாங்கி க‌டைக‌ளில் தூசு த‌ட்டும் குச்சி மாதிரி ஆகிவிட்டிருக்கிறான். ஊரில் உள்ள‌ எல்.ஐ.சி. எல்லாம் க‌ட்டி (சாவு ப‌ய‌ம்?) குடும்ப‌ செல‌வுக்கு கூட‌ யோசிக்க‌ வேண்டிய‌ நிலை .


இந்நிலையில் திருவ‌ள்ளூரில் ஒரு திரும‌ண‌த்துக்கு போக‌ வேண்டிவ‌ந்த‌து. நான் ஒன்றும் கூகுள் எர்த் மேதை இல்லாவிட்டாலும் குன்ஸாக‌ ஒரு குன்ஸ் வைத்திருப்பேன். நாய‌க்க‌ரே! திருத்த‌ணி போயிட்டு ர‌யில் பிடிச்சுர‌லாம் என்றேன். த‌னியார் ப‌ஸ் நின்னு போவான் அர‌சு ப‌ஸ் அடிச்சுகிட்டு போயிடுவான் ,ரோடு ந‌ல்லாருக்காது அது இது என்று டூர் புரோக்ராம‌ர் ஆகிவிட்டான். என‌க்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை. நீதான் டீம் லீட‌ர் ,நீ சொல்லு நாய‌க்க‌ரே..நீ எப்ப‌டி சொன்னா அப்ப‌டி என்று விட்டேன். பிற‌கு பாருங்க‌ளேன் நாயடி.

வ‌யா திருத்த‌ணி சென்னை ப‌ஸ் என்றான்/பின் காட்பாடி போய் அர‌க்கோண‌ம் ட்ரெயின், அங்கிருந்து ப‌ஸ்ஸுல‌ திருவ‌ள்ளூர் என்றான். எல்லாத்துக்கும் ஓகே என்றேன். காட்பாடி ஸ்டேஷன் போனோம் ம‌ணி ம‌திய‌ம் 2.40. இனி 6 ம‌ணிக்குத்தான் ர‌யில் என்று விட்டார்க‌ள். பின் வேலூர் ப‌ஸ் ஸ்டாண்டு. அங்கிருந்து அர‌க்கோண‌ம் . ர‌யிலில் திருவ‌ள்ளூர். திரும‌ண‌ம‌ண்ட‌ப‌ம் சென்ற‌தும் மூக்குக்கு நேராய் ரூம் சாவி கேட்டு அரிக்க‌ ஆர‌ம்பித்து விட்டான். வாங்கியும் விட்டான்.ரிச‌ப்ஷ‌ன் ஆச்சு.விடிய‌ல்
திரும‌ண‌ம். நான் ந‌ள்ளிர‌வு வ‌ரை சென்னை ந‌ண்ப‌ரை வ‌ர‌வ‌ழைத்து வைத்துக் கொண்டு அவ‌ர் க‌தைக‌ளை கேட்டுக் கொண்டிருந்து விட்டேன்.

குடித்த‌ காப்பி தொண்டை குழிவ‌ரையாவ‌து இற‌ங்கிய‌தோ இல்லையோ..ர‌யில் ர‌யில் என்று ஜெபிக்க‌ துவ‌ங்கினான். அதென்ன‌மோ என‌க்கு ர‌யில் என்றாலே அல‌ர்ஜி. என்னைப்பொருத்த‌வ‌ரை அந்த‌ உல‌க‌மே புராதன‌மான‌து,ம‌ர்ம‌ம் நிறைந்த‌து. ஆப‌த்து நிறைந்த‌து.நம் செல்வாக்கு எதுவும் வேலை செய்யாத தீவு அது .

க‌டைசி பெட்டியில் ஒரு எக்ஸ் சிம்ப‌ல் இருக்கும் அது எத‌ற்கு தெரியுமா ஒவ்வொரு ஸ்டேஷ‌னிலும் டார்ச் அடித்து பார்க்கும் போது எக்ஸ் இல்லாவிட்டால் பெட்டி ஏதோ க‌ழ‌ன்டுகிச்சு என்று தேட‌ ஆர‌ம்பிப்பார்க‌ளாம்.இது போன்ற‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளால் என‌க்கு ர‌யில் ப‌ய‌ண‌ம் என்றாலே வ‌யிறு க‌ல‌ங்கும் (அந்த‌ க‌ல‌க்க‌ம் இல்லிங்க‌)

நான் சொல்லி பார்த்தேன் நாய‌க்க‌ரே ரொம்ப‌ சுக‌ம் தேடாதே.. இண்டிய‌ன் ரோட்ஸ் எப்ப‌டி இருக்குனு தெரிஞ்சுக்க‌லாம் ப‌ஸ்ல‌யே போலாம் என்றேன் ப‌ல‌வீன‌ குர‌லில். ஊஹூம். அலைந்து ப‌றை சாற்றி டிக்க‌ட் வாங்கினான். சென்னை ந‌ண்ப‌ர் வில்லிவாக்க‌ம் செல்ல‌ ர‌யிலேறினார். அர‌க்கோண‌ம் செல்லும் ர‌யில் வ‌ந்த‌து. வில்லிலிருந்து புற‌ப்ப‌ட்ட‌ அம்பு மாதிரி ஏறிக்கொண்டு என்னையும் டென்ஷ‌ன்ப‌டுத்தி ஏற்றினான்.

ந‌ம‌க்கு ஏற்கென‌வே அல‌ர்ஜி. ர‌யில் உல‌க‌ ச‌மாச்சார‌ம்னாலே மூளை க‌த‌வு ஹ‌வுஸ் புல் போர்டு போட்டுரும். வ‌ந்தாருயா டிக்க‌ட் செக்க‌ர் நீ ஆர்டின‌ரிக்கு டிக்க‌ட் வாங்கி,எக்ஸ்பிர‌ஸ்ல‌ வ‌ந்துட்ட‌ வைய்யா ஆளுக்கு 265 னுட்டார். கூட‌ என் ம‌க‌ள் வேறு.

அவ‌ன் முக‌த்தை பார்க்க‌ வேண்டுமே அப்ப‌டியே பேஸ்த‌டித்து,க‌ருத்து..பே பே என் கிறான். பின் நான் க‌ள‌மிற‌ங்கி லாலு நமக்கு க்ளையண்டு,வேலு நமக்கு க்ளோஸ் அது இதுன்னு பேச்சு வார்த்தை ந‌ட‌த்தி ஒரு 265க்கு செட்டில் செய்து வெளி வ‌ந்தோம்.கையில் கால‌ணா இல்லை. அதுவ‌ரை அவ‌ன் காட்டிய‌ க‌ம்பீர‌ம்,த‌ன்ன‌ம்பிக்கை,திட்ட‌மிட‌ல்,அலைய‌ல் எல்லாமே புஸ் ஆகிவிட்ட‌து.

ந‌ம‌க்கு அட‌கு வ‌ச்சு காசு வாங்கிற‌துல‌ எக்க‌ச்ச‌க்க‌ அனுப‌வ‌மாச்சே ! கையில‌ செல் இருக்கு சேட்டு க‌டை யில்லாத‌ ஊர் எதுங்க‌ற‌து என் தைரிய‌ம். ஏடுகொண்ட‌லுவுக்கு பேதியாகிவிட்ட‌து. பின் எப்ப‌டியோ ஒரு பாவாவுக்கு (வைசிய‌ ந‌ண்ப‌ன்) போன் போட்டு அவ‌ன் அர‌க்கோண‌ம் பாவாவுக்கு போன் போட்டு 150 வாங்கி ஊர் வ‌ந்து சேர்ந்தோம். தாளி ..திட்ட‌மிட‌ற‌வ‌ன் நாஸ்திக‌ன். வாழ்க்கையைப் ப‌ற்றிய‌ புரித‌ல் இல்லாத‌வ‌ன் என்ற‌ என் க‌ருத்து உறுதிப்ப‌ட்ட‌து.


ரூ.150 கைக்கு வ‌ந்த‌துமே ஸ்டார்ட் ப‌ண்ணிட்டான்யா! க‌ணேஷ் ப‌வ‌ன்ல‌ 3 இட்லி ம‌ட்டும் சாப்பிட‌னுமாம். திருத்த‌ முடியாத‌ ஜ‌ன்ம‌ங்க‌ள்.

Sunday, June 21, 2009

கொல்லவும்,கொல்லப்படவும் தைரியம் போதாதவன் செக்ஸ்,பணம்,அதிகாரம்,புகழ்

மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் அதன் பின்னுள்ள் விருப்பம் ஒன்றே .அது கொல்வது அல்லது கொல்லப்படுவதே ! இது மனவியல் கூறும் உண்மை . மனவியல் மேலும் கூறுவது என்னவென்றால்:
கொல்லவும்,கொல்லப்படவும் தைரியம் போதாதவன் அதற்கு ஆல்ட்டர்னேடிவ் வழிகளை தேடுகிறான். அவை யாவன செக்ஸ்,பணம்,அதிகாரம்,புகழ்

எல்லாம் சரி ஆறறிவு படைத்த மனிதன் ஏன் கொல்வதும் கொல்லப்படுவதுமாயிருக்கிறான்.

இங்குதான் முடிவான தத்துவம் வருகிறது. நாமனைவரும் இல்லாதிருந்த காலமே கிடையாது. நாம் எல்லோருமே ஏதோ ஒரு கல்பத்தில்,ஏதோ ஒரு யுகத்தில் ஏதோ ஒரு வடிவில் சேர்ந்திருந்தோம். அப்போது அந்த இணைவில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தோம். பின் ப்ரிந்தோம். மீண்டும் இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடல் தடையாக இருப்பதாக பிரமிக்கிறோம்.

மாமிசம் உண்பவனை பாருங்கள். அவன் என்ன செய்கிறான். அவன் கொன்ற கோழியையோ,ஆட்டையோ தன்னுள் ஐக்கியம் செய்துகொள்கிறான். ஆண் பெண்ணில் ஐக்கியமாகிறான். பெண் ஆணை தன்னில் ஐக்கியம் செய்து கொள்கிறாள். இணைப்புக்கான கோரிக்கை அவர்களை ஊக்கு (சட்டைக்கு போடறதில்லிங்க) விக்கிறது. ஆனால் இணைப்புக்கு வழி உடல்களை இணைப்பதோ ? உடல்களை உதிர்ப்பதோ அல்ல.

நாம் பிரிந்திருக்கிறோம் என்பது நம் பிரமை. ஏற்கெனவே இணைந்தேதானிருக்கிறோம். நாமனைவரும் இப்படைப்பில் ஒரு அங்கமாகத்தானிருக்கிறோம். ஆனால் நம்மை இந்த படைப்பிலிருந்து பிரித்துக் காட்டுவது நமது அகந்தை ஒன்றே. பிறந்த குழந்தைக்கு தன்னை தனது பொம்மைகளிலிருந்து கூட பிரித்துக்காண முடிவதில்லை. ஆனால் நாம் ?

பெற்ற தாயை, தந்தையை, கூடப்பிறந்த சகோதர சகோதிரிகளையும் நம்மிலிருந்து பிரித்து காண்கிறோம். முஸ்லீம் இந்துவை, இந்து முஸ்லீமை பிரித்துக் காண்கிறான். இதனால் மனிதனில் பாதுகாப்பின்மை வளர்கிறது.

இதனால் மனிதன் இணைய துடிக்கிறான். மாமிசம் உண்ணும்பழக்கம், செக்ஸ் மீதான வேட்கை அதிகரிக்க மனிதருள் பெருகி வரும் பிரிவினையே முதல் காரணம். இதனால் தான் மனிதர்கள் சாகத்துடிக்கிறார்கள்.கொலை தற்கொலைக்கெல்லாம் ஸ்தூலமான காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் சூட்சுமமாக பார்க்கும்போது அவனது நோக்கம் தன் உடலை உதிர்ப்பதும் இந்த அண்டத்துடன் இரண்டற கலப்பதுமே.

மனிதன் காட்டில் வாழ்ந்த காலத்தில் குழுவாய் வாழ்ந்தான் (இணைந்து வாழ்ந்தான்) மேலும் உடல் உதிர்ந்து போக-அவன் இந்த அண்டத்துடன் இரண்டறா கலக்க எந்த நேரமும் வாய்ப்பிருந்தது. எனவே அவன் தற்கொலைக்கோ ,கொலைக்கோ பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை. இப்போது காலம் மாறிப்போச்சு. மரணம் ஏறக்குறைய அசாத்தியமாகி விட்டது. எனவே தானாய் வராத சாவை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறான் மனிதன்.

செக்ஸில் ஆண் பெண்களுக்கு சுக்கில சுரோணிதங்கள் ஸ்கலிதமாகும்போது காலம் தெரியாத மரணமொத்த ப்ளாக் அவுட் ஏற்படுகிறது. எனவேதான் மனிதன் செக்ஸ் மீது அதிக ஆர்வம் காட்டுகிறான். 100 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் கூடி வாழ்ந்தனர், இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். எனவே படைப்புடனான உறவு நெருக்கமாகவே இருந்தது. மனிதன் பாதுக்காப்புணர்வுடன் வாழ்ந்தான்.

இப்போது ? இயற்கையிலிருந்து ஓடினான் ஓடினான் ஓடிக்கொண்டே இருக்கிறான். இந்த விலகல் அவனில் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது எனவே அவன் சமுதாயத்துடன் இணைய துடிக்கிறான். ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள துடிக்கிறான். சாதி சங்கம்,கட்சிகள் பெருக இதுவே காரணம். ஓயாமல் செல் பேசுவதும் இதன் அடையாளம் தான்.


பின்னே இதற்கு என்னதான் தீர்வு ? மனிதன் சமுதாயத்துடன்,இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும். அதற்கு தடையாக இருப்பது அவன் உடலல்ல். அவனது அகந்தை. ஆண் பெண் இயற்கையின் இரண்டு பாகங்கள். இவை பிரிந்து கிடக்கும் வரை மனிதன் அபத்திரமாகத்தான் உணர்வான். பெண் இயற்கையின் பிரதி.+ நிதி. பெண்ணே இயற்கைதான். சந்திரனின் வளர்ச்சி,தளர்ச்சிக்கும் பெண்ணின் மாதாந்திர ருதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவளுடன் ஆண் உறவாட வேண்டும். ஸ்கலிதத்தின் போது காலாதீத நிலயை உணரவேண்டும். அதுவே யோகத்துக்கான திறவு கோல்.

(தொடரும்

பெண்டாட்டி," நாயே நீ அதுலதான் ஒன்னத்தையும் கழட்டறதில்ல "

பெருமாளை பத்தி 1சதம் தெரிஞ்சவன் கூட அந்தப்பக்கம் தலை வச்சு படுக்கமாட்டான். பெருமாள் கூப்டாரா இவனுங்க்ளை ? ஊரை அடிச்சு உலைல போட வேண்டியது. பெண்டுக பட்டும்,பவிசுமா புறப்பட வேண்டியது. பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி,கூல் ட்ரிங்க் . வழில ஒரு கை காலில்லாத பிச்சைக்காரனுக்கு 10 பைசா தர்மம் பண்ண மாட்டானுங்க.

மலை மேல போய் அய்ய்ப்புண்டைங்க ஆசனத்துல ஆயிரம் ஆயிரமா செருகிட்டு வருவானுங்க. உங்களுக்கு திருமலைல தரிசனம் ஏறபாடு பண்ண தெரிஞ்சா போதும் உங்க நிறுவனத்துல எல்லா அதிகாரியும் உங்க பேக்கட்ல். அது பெரிய ராக்கெட் . ஜட்ஜாகட்டும், எம்.டி.யாகட்டும் பெருமாளை பார்த்துட்டா ஜன்மம் சாபல்யமாயிரும்.

அட பாவிகளா ? ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா ,மானவ சேவா மாதவ சேவா -இதெல்லாம் உங்க மரமண்டைக்கு ஏறவே ஏறாதா ? இப்படி சல்லீசா புண்ணியம் தேட வழி யிருக்கும்போது ஆயிரம் கிலோ மீட்டர் பிரயாணம் எதுக்கு ? ஹை வேல அனாதை சாவு எதுக்கு ?

1983லனு நினைக்கிறேன் . என்.டி.ஆர் சித்தூர் வந்தார். கட்டமஞ்சி ரயில்வே பிரிட்ஜை தாண்டும்போது பிரசார ரதம் மேலே உட்கார்ந்து வந்த என்.டி.ஆருக்கு தலைல அடி பட்டுருச்சு. அந்த ஆளு அந்த காலத்து ஆசாமி. அரசு மருத்துவ மனைல தான் தையல் போட்டுக்குவேனு ராத்திரி நேரம் ஜி.ஹெச்சுக்கு வண்டிய விடச்சொன்னாரு, ஒரு தையல் போட தேவையான சாமான் கூட சரியாயில்லே.

பின்னாடி அவர் சி.எம். ஆன பிறகு பல கோடி ரூபா சித்தூர் ஜி.ஹெச்சுக்கு சேங்க்ஷன் பண்ணாரு. இன்னிக்கும் என்னடா நிலைன்னா ? தாளி காயங்களை துடைக்க வென்னீருக்கு கதி கிடையாது. சும்மா அப்படி இப்படி பம்மாத்து பண்ணிட்டு வேலூர் சி.எம்.சி போ/ திருப்பதி ஸ்விம்ஸ் போம்பான்.
இவனுகளையெல்லாம் நிக்கவச்சு சுடவேண்டாமா?

இவனுங்களை சொல்லி என்ன ? இவனுங்க பெண்டாட்டிகளை சொல்லனும். இவனுகளுக்கு அந்த விஷயத்துல தாக்கத் கம்மி போல. பெண்டாட்டி நாயே நீ அதுலதான் ஒன்னத்தையும் கழட்டறதில்ல வாஷிங்க் மெஷினாச்சும் கொண்டா ,ஏ.சி கொண்டாங்கறாளுகளோ என்னமோ ?

இப்படி கொள்ளையடிச்ச பணத்தை பீரோல வச்சுக்கிட்டு எவன் எப்ப வந்து பிடிப்பானோங்கற நிலல இவனுகளுக்கு அந்த சமாச்சாரத்துல விரைப்பாச்சும் ஏற்படுதானு ஒரு சம்சயம் ?



எவன் செத்தாலும் ஆறடிதான்..ஆனாலும் கொள்ளையடிக்கிறத மட்டும் விட மாட்டேங்கறானுங்க . எனக்கு தெரிஞ்ச்சு பணத்துக்கே மதிப்பில்லாம ஆக்கிரணும். ஒரு தனி மனிதனால சமுதாயத்துக்கு என்ன லாபமோ , அத கணக்கிட்டு அவனுக்கு ஒரு அட்டை கொடுத்துரனும். அத காட்டி அவனுக்கு வேண்டியதை பெற வழி செய்யனும்.

எனக்கு நம்பிக்கை இருக்கு ஒரு நாளில்லே ஒரு நாள் என் ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலாகும். ஜனாதிபதி ஜன நாயகம் பிறக்கும். 10 கோடி வேலையில்லா வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைக்கப்படும். சிறப்பு ராணுவம் அனைத்து நதிகளையும் இணைக்கும். வடக்கே வெள்ளம், தெற்கே வறட்சி ஓடிப்போகும். அனைத்து விவசாயிகளை கொண்டு கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும் .எல்லா விளை நிலங்களும் அந்த கூ.ச.த்துக்கு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கப்படும். கூட்டுறவு பண்ணை விவசாயம் அமலாகும். ஸ்விட்ஜர்லாந்து மாதிரி "கேப்பார் மேப்பார் இல்லாத பேங்க் வரும். இங்கே கொள்ளையடிக்கப்பட்ட பணம் இங்கேயே வந்து சேரும். தற்போதைய கரன்சி ரத்தாகும். புதிய கரன்சி அமலாகும்.

காட்டுல புலிகளை கணக்கெடுத்தமாதிரி மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும். நல்லாட்சி நடக்கும். ஆனால் இந்த நாய மகனுங்க நிர்வாகத்துல இருக்கிற ஜனமெல்லாம் செத்துப்போகும் போலிருக்கே ..அதனாலதான் இந்த பதிவு.

அடுத்த பதிவுல கொலை, தற்கொலைய பத்தி சொல்றேன்.

Friday, June 19, 2009

நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"

ஆங்கிலத்தில் ஒரு பொன் மொழி " நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"

ஒரு சோதிட ஆய்வாளனாக இருந்தும் இந்த வரிகளைஎழுதுகிறேன் என்றால் இதில் உள்ள உண்மையை , ஜோதிட ரீதியான ஆதாரத்தை புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.


ஆம். நவகிரகங்கள் என்பவை இறைவன் எனும் பிரதமரின் மந்திரி சபையிலான மந்திரிகள் தாம். நீங்கள் சுய நலத்துடனோ,பிறருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடனோ செயல்படும்போதுதான் கிரகங்கள் உங்களை பாதிக்கும். உங்களில் சுய நலமில்லாத போது நீங்களே கடவுளாகிறீர்கள். நல்ல வேலையை தவிர வேறெதையும் செய்ய முடியாது. பின் எப்படி கிரகங்கள் உங்கள் மேல் வேலை செய்ய முடியும்.

Tuesday, June 16, 2009

நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல,ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம்

தேரு எங்க சுத்தினாலும் தேரடிக்குத்தான் வரனுங்கற மாதிரி மறுபடி தமிழ் வலைப்பூ மேல கான்சன்ட்ரேட் பண்றதா முடிவு பண்ணியிருக்கேன். தமிழ்மணத்தோட கருவிப்பட்டைய இணைக்காததால காட்டில் காய்ந்த நிலவாய் போயின என் எழுத்துக்கள். நிற்க கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கில் ஒரு பதிவை ஆரம்பித்தேன் ஸ்வாமி 7867 என்பது அதன் எயர். இந்த 7 மாத காலத்தில் 16000 பேர் பார்த்தாங்க. ஆந்திர முதல்வரே சந்திரபாபுவை நான் செய்த ரவுசுக்கு ரெஸ்பாண்ட் ஆகிட்டாரு.

இருந்தாலும் என்ன குடுமிகள் பற்றி தெரியாத்தனமா ஒரு பதிவுல மென்ஷன் ப‌ண்ணிட்டேன். தினம் தினம் சுமார் 200 பேர் பார்த்துக்கிட்டிருந்த என் வலைப்பூவை சதி செய்து துஷ்பிரசாரம் செய்து ஒரு தடவை தடை கூட பண்ணிட்டாங்க. விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தால் ஜனத்தொகை பெருக்கம்,செக்ஸ் குற்றங்கள்,வன்முறை இத்யாதியை தவிர்க்கலாம்னு எழுதியிருந்தேன் அதை சாக்கா வச்சு துஷ்பிரச்சாரம் செய்தானுங்க.

ஆளை விடுங்கடான்னிட்டு வெப்துனியால இந்தில ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுட்டன்.

என் சித்தாந்தம் ரொம்ப சிம்பிள். நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல,ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம் . இப்போ சிதறிட்டோம். மறுபடி இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடலை தடையா நினக்கிறோம். கொலை தற்கொலை எல்லாத்துக்கும் காரணம் இந்த இணைவதற்கான துடிப்புத்தான்.(மாமிசம் உண்பவர்கள் கதையும் இதுதான்)

ஆனால் இந்த இணைவுக்கு தடையா இருக்கிறது நம்ம உடலில்லே..அகம்பாவம். இதை மறந்துட்டு உடலினை கொண்டே இணையபார்க்கிறோம். உடல்களை உதிர்க்கத்துடிக்கிறோம். நாம எல்லாம் ஒண்ணு. (ஒரு தாய் பிள்ளைன்னு ஜல்லியைக்க முடியாதுன்னாலும் நம்ம எல்லாருக்குமிடையில் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கு.

கொல்றோம். கொல்லப்படறோம். இதுக்கு துடிக்கிறோம். காரணம் இணைப்புக்கு தடையா நாம தவறா நினைக்கிற உடலை உதிர்ப்பதே.

ஆனால் அகத்தை (ஈகோ) உதிர்த்தால் போதும் எல்லோரும் இணையலாம். இப்போ ஜெயா கலைஞரை எடுத்துக்கங்க ரெண்டுபேருக்கும் என்ன வித்யாசம் ? ஒரு ரோமமுல்லே. ரெண்டு கழகத்தையும் சேர்த்து தொலைக்கலாமில்லையா.
ராஜ பக்ஷே வை பாருங்க சிங்கள, தமிழ் பிரிவினையை தமிழர்களை ஒழித்துக்கட்டி கருவறுத்துவிட பார்க்கிறார். எப்படியோ என்னால முடிஞ்சவரைக்கும் என் சித்தாந்தத்தை விளக்கிட்டேன்னு (குழப்பிட்டேன்னு) நினைக்கிறேன்.

Monday, June 15, 2009

ஆஸ்திரேலிய காவலர் மீது இந்திய மாணவர் துப்பாக்கிச்சூடு

டவுனுக்கு வந்த கிராமத்தானைப்போல் இவர்கள் ஆஸ்திரேலியாவில் ஓவர் ஆக்ஷன் செய்கிறார்களா என்று ஒரு சம்சயம். கிராமத்தான் அப்படித்தான் அவன் காலை 6 மணீக்கு புறப்பட்டால்தான் டவுனுக்கு பத்துமணிக்கு வரமுடியும். மீண்டும் எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு மாலை 5 மணீ பஸ்ஸை பிடித்தால்தான் ஊர் போய் சேரமுடியும்.(கடைசி பஸ்)

மேற்சொன்ன காரணங்களால் அவன் ஊர் வம்பில் ஈடுபடமாட்டான். எவனாவது துப்பினாலும் சரிண்ணே சரிண்ணே என்பான். தன் வேலையே முக்கியம் என்றிருப்பான். இதரர் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்கமாட்டான்.(அலையல்,பரபரப்புடனே இருப்பான்)

இது டவுனிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அருவறுப்பாக இருக்கும். அதே சமயத்தில் காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் வீரியம் தான் பெரிதென்று டவுன் காரன் கோட்டை விட்டிருக்க காரியம் தான் பெரிதென்று கிராமத்தான் க்ளிக் ஆகி விடுகிறான்.

ஒரு டெயிலரையே எடுத்துக்கொள்ளுங்கள். டவுனிலிருக்கும் டெயிலர் ஆன பில்டப்புகள் கொடுத்துக்கொண்டிருப்பான். ரோத்மன் சிகரட் எட்ஸெட்ரா. கிராம பின்னணீயில் வந்தவன் பீடி குடிப்பதும் பத்து ரூபாய் குறைவாய் சார்ஜ் பண்ணுவதுமாய் டவுன் பிழைப்பை கெடுத்துக்கொண்டிருப்பான். மேலும் இந்த ஃபீலிங் கூட இருக்காது அவனுக்கு.


ஆஸ்திரேலியா போன இந்தியர் கதையும் இதுதான் போலும் .ஆஸ்திரேலிய காவலர் மீது இந்திய மாணவர் துப்பாக்கிச்சூடு என்பதெல்லாம் ஓவராக படவில்லையா ! ஆஸ்திரேலியா என்ன பாரதம் போன்று மானம் கெட்டா இருக்கிறது?

Sunday, June 7, 2009

பஞ்சகச்சத்தை அவிழ்த்து காட்டி விட்ட இந்திய ராஜதந்திரிகளை நாடு கடத்தவேண்டாமோ ?

குடிமக்களை காத்திட ,சமத்துவத்தை காத்திட,மனித உரிமைகளை காத்திட எந்த நாடும் எந்த நாட்டை வேண்டுமானால் வற்புறுத்தும் உரிமை உள்ளது. உலகமயமாக்கல் காரணமாக உலகமே ஒரு பட்டிக்காடாக மாறும் என்று கூறினார்கள். நாடுகள் காடுகளாகவும் ஆட்சியாளர்கள் காட்டுமிராண்டிகளாகவும் இருப்பது சோகம்.
ராஜ பக்ஷேவை போர் குற்றவாளியாக தீர்மானிக்கும் அமெரிக்க பிரிட்டன் முயற்சிக்கு பஞ்சகச்சத்தை அவிழ்த்து காட்டி விட்ட இந்திய ராஜதந்திரிகளை நாடு கடத்தவேண்டாமோ ?

Thursday, June 4, 2009

இந்த விதி சுய இன்பத்துக்கு மட்டுமல்ல, உடலுறவுக்கும் பொருந்தும்.

அது அவரவர் உடல் நலத்தை ,வலிமையை பொறுத்த விஷயம். வெயில் காலத்தில் ஆற்றோரம் குழி பறித்து அதிலிருந்து ஆற்று (ஊற்று) நீரை முகர்வார்கள். அப்போது மேலோட்டமாக ,தண்ணீர் கலங்கி விடாது எச்சரிக்கையுடன் சிறிய பாத்திரத்தில் எடுப்பார்கள். சுய இன்பமும் அப்படித்தான் அனுபவிக்கப்படவேண்டும். இந்த விதி சுய இன்பத்துக்கு மட்டுமல்ல, உடலுறவுக்கும் பொருந்தும்.
இதனை பொழுது போக்காகவோ,வேலையற்றதுகளின் வேலையாகவோ செய்தால் வம்புதான். உறுப்பே சில்க்கின் இடுப்பு போல் பல வளைவுகளுக்கு உட்பட்டு விடும்.
அதே நேரத்தில் இதேதோ பஞ்சமா பாதகம் என்றெண்ணி ஈர கோவணம் உடுத்தி கட்டுப்படுத்தினால் வேறு வகையான தொல்லைகள் ஏற்பட்டுவிடும். பஸ் நெரிசலில் கைபோட்டு உதை வாங்குவது. பப்ளிக்கில் லங்கோட்டா நனைவது முதலானவை

உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும் (இது சாதாரணமாக ஆரோக்கியமான இளைஞனுக்கு வாரம்,பத்து நாளைக்கொருமுறை ஏற்படும். அந்த சமயத்தில் சுய இன்பம் அனுபவிப்பது நலமே. (எமர்ஜென்சி கேட் மாதிரி)

முக்கியமான விஷயம் என்னன்னா ... இது குற்றமல்ல ,கெட்டப்பழக்கமல்ல ,மேலும் சொல்லப்போனால் ஒரு தற்காப்பு நடவடிக்கை (அளவுடனிருக்கும்போது)