ஆனந்த விகடனில் மதன் பதில்களில் ஜனாதிபதியும்,பெண்களும் ஒரு சேர அவமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாசகர் ஒரு பெண் ஜனாதிபதியானதால் என்ன லாபம் என்று கேட்கிறார். அதற்கு மதன் பதிலளிக்கிறார். ஜனாதிபதிக்கு பெண்பால் ஜனாதிபத்தினியா என்று ஜோக் எழுத முடியும் என்று கூறியுள்ளார். மதனின் நோக்கம் சிரிக்க வைப்பது மட்டுமே என்றால் ஜனாதிபதிக்கு பெண்பாலாக ஜனாதிபதினி என்று சொல்லியிருக்கலாம். ஆனால் ஜனாதி"பத்தினி" என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
இதைத்தான் பார்ப்பன குறும்பு,பூனைக்குறும்பு என்று சொல்கிறார்கள் போலும். இந்த பதிலால் ஜனாதிபதியை மட்டுமல்லாது பெண்களையும் ஆ.விகடன் அவமதித்துவிட்டது.
ஒரு பிராமணப்பெண் ஜனாதிபதியாகியிருந்தால் இந்த கேள்வி பிரசுரமாகியிருக்குமா?
இது போன்ற பதில் தரப்பட்டிருக்குமா என்பதே என் கேள்வி.
பெண்ணுரிமை வாதிகள் இந்த பொறுப்பற்ற பதிலை கண்டிக்க வேண்டும் என்று கோருகிறேன்.