Monday, March 31, 2008

கல்கியில் மோடி புராணத்திற்கு பின்னுள்ள உண்மையான உண்மைகள்

கல்கி போன்ற பிராமண பத்திரிக்கைகளே அல்லாது, மக்கள் நாடி அறிந்து நடத்தப்படும் சூத்திரப்பத்திரிக்கைகளும் விற்பனை சரிந்து அல்லாடி வருகின்றன. இதற்கு காரணம் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள். தொலக்காட்சி கலாச்சாரத்தை வளர்த்தது இந்த பத்திரிக்கைகளே.. இப்போது அவதிப்படுவதும் இவர்களே. நிற்க மோடி புராண பின்னணியில் இருப்பது விளம்பர வருவாயே. இந்த மானங்கெட்ட அரசாங்கங்களில் மக்கள் தொடர்புதுறை என்று ஒரு துறை இருக்கும். இதன் முக்கிய வேலையே பத்திரிக்கையாளர்களுக்கும்,அரசுக்கும் இடையில் தரகுவேலை செய்வதே.

போனியாகாத கல்கி இதழ் தன் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள குஜராத் அரசின் மக்கள் தொடர்புதுறையை பிடித்து தொங்கியிருக்கும்,இதற்கு சோ போன்றவர்கள் தரகு வேலை செய்திருக்கலாம். குஜராத் அரசின் பெருமைகள் தம்பட்டம் அடிக்க கல்கி ஒத்துக்கொண்டிருக்க வேண்டும். இதற்கு கைமாறாக இந்த தொடரை ஸ்பான்ஸர் செய்யும் வங்கிகள் பணத்தை கொட்டி அழுதிருக்கலாம். யார் பணம்? குஜராத் மக்களின் வரிப்பணம்.

குஜராத்தில் 500 பிரதியாவது விற்கிறதோ இல்லையோ தெரியாத கல்கிக்கு இந்த விளம்பர வருவாயை கொட்டியழுததிலிருந்தே மோடி அரசின் நிர்வாக திறமை பளிச்சிடுகிறது.

குறிப்பு: எம் மாநிலத்தில் சந்திரபாபு முதல்வராக இருந்த போது மணீமேகலை பிரசுரம் நான் பரிந்துரைத்த " சமகால சாண‌க்கியர் சந்திரபாபு" என்ற நூலை எழுதப்பணித்தது. நானும் சாஸ்த்ரோக்தமாக அரசுக்கு இதை கடிதம் மூலம் எழுதினேன். உடனே மனோ வேகம்,வாய் வேகத்தில் உதவி பறந்து வந்தது. அனுபவத்துல சொல்றேன். கல்கியின் மோடி புராணத்தின் பின்னணி இது தான்.