நானும் "ஆறாது என் மனசு பதினாறு உன் வயசு வா வா" என்று பாட்டு எழுதியவன் தான். இன்று என் மகளுக்கு வயது 16. கலப்பு திருமணம்,நிருத்யோகம்,நிலையில்லாத வாழ்க்கைக்கு முதல் பலி மகளின் படிப்பு தான். லக்னத்துக்கு 5ல்சனி,சனிதிசையில் பிறப்பு,வாத்தியார் பிள்ளை மக்கு இப்படி எத்தனையோ கான்செப்ட் வேலை செய்து 7 ஆம் வகுப்பிலேயே குண்டு. எனக்கு இந்நாளைய படிப்புகளின் மீது நம்பிக்கை கிடையாது. நான் பி.காம் படித்தேன். அது சோறு போட வில்லை. தெலுங்கு நானே கற்றேன்,ஜோதிடம் நானே கற்றேன். இவை இரண்டும் தான் சோறு போட்டன. படிப்பில்லாட்டி இழவே போச்சு ஏதோ ஒரு மொழி ஃப்ளூயன்டா எழுத படிக்க பாருப்பா என்றால் ஊஹூம்.
எல்லாமே அரை குறை. எம்.காம் , பி.காம் கதையும் இதுதான் என்று எனக்கு தெரியும் தான். இருந்தாலும் என்ன செய்ய? எப்படியோ மூளை வளராது என்று தெரிந்துவிட்டது. பாடி ஸ்டேமினாவாச்சு இருக்கா என்றால் ராத்திரியில் அம்மாவை கால் பிடிக்கச்சொல்கிறாள். பிடித்தது ரசம் சோறு. மாடல் மாடலாய் ஹேண்ட் பாக் வாங்குகிறாள். காஸ்மெடிக்ஸ் வாங்குகிறாள்.
ஆந்திரபிரபா கல்தா கொடுத்துவிட்ட சமயம் இந்தியன் பொலிடிகல் க்ளோசப் என்ற (பதிவு) மாதமிருமுறை இதழ் நடத்தி வந்தேன். தினத்தந்தியில் வாய்ப்பு கிடைத்த பிறகு அதை ஜாம்பஜார் டைம்ஸ் மாதிரி நடத்தும்படி ஒப்படைத்தேன். மொத்த டர்ன் ஓவரே 3 முதல் 4 ஆயிரம் தான். அதற்கே மதியம் சோற்றுக்கு கூட வரமாட்டேன் என்கிறாள். பூனைக்கு மணி கட்டிய தினுசில் செல் வாங்கி கொடுத்தேன். நான் கால் செய்தால் கட் செய்கிறாள்.
இப்போ புரியுது பெத்தவங்களை எப்படியெல்லாம் இம்சை பண்ணியிருக்கேன்னு..
அட தேவுடா !