Wednesday, March 12, 2008

சுஜாதாவின் ஒளிரும் முகம்

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று ஒளிரும்,அடுத்தது இருளால் நிறைந்திருக்கும். (முருகனுக்கே 6 முகமாமே,அரசியல்வாதிக்கு ?) கண்ணதாசன் கூட "ஒருவன் மனது ஒன்பதடா" என்று எழுதியிருக்கிறார். நிற்க சுஜாதாவின் ஒளிரும் முகத்தை மட்டுமே நினைவு கூர்வது தான் பண்பாடு. நம் தமிழர்பண்பாடு பொய்யான இந்த உடலையே மெய் என்றுதான் கூறச்சொல்கிறது. அப்படியிருக்க சுஜாதாவின் சாதனைகளை அவர் மறைவுக்கு பிறகு கூட பதிவு செய்யாவிட்டால் அதுதான் அக்மார்க் ஹிப்பாக்ரஸி.


சுஜாதாவையும்,அவர் எழுத்தையும் யார் எப்படி புரிந்து கொண்டார்களோ நான் ஒழுங்காக புரிந்து கொண்டேன்.

1.எழுத்தாளன் என்பவன் தான் வாழும் சமூகத்தின் நிறை,குறை மற்றும் அவலங்களை தன் எழுத்தில் பதிவு செய்யவேண்டும். அதுதான் உண்மையான இலக்கியமாகி காலங்களை கடந்து நிற்கும்.

சமூக உணர்வற்று ஆண்,பெண் உறவுகளை சுற்றி வரும் எழுத்துக்கள் காது குடையும் குச்சிகள் தான்.

மனிதன் சமூக பிராணி.சமூகத்தை அலட்சியம் செய்கிற தனிமனிதனே தண்டிக்கப்படவேண்டும் என்பது என் கட்சி.

இதில் அநேக எழுத்தாளர்கள் தமது கழிவறை,குளியலறை,கட்டிலறையை விட்டு வெளிவராத காலகட்டத்தில் சுஜாதா சமூக அவலங்களை தனது எல்லைக்குள், எல்லையை மீறியே பதிவு செய்தார். (உ.ம்: பதவிக்காக)

2.எழுத்தாளன் சமகால சமூகத்தின் அவலங்களை பதிவு செய்வதோடு புதிய நம்பிக்கைகளையும் தன் படைப்புகள் மூலம் ஊட்ட வேண்டும். (உ.ம்: டாக்டர் நரேந்திரனின் விசித்திர வழக்கு

இது போல் மேலு 98 சங்கதிகளை குறிப்பெடுத்து வைக்கிறேன் .விரைவில் உள்ளிடுகிறேன்