Tuesday, March 18, 2008

காதல் ஒருவனை கைப்பிடித்து தினம் தினம் அவனை கசாப்பு போடும் பெண்க‌ள்

திரும‌ண‌த்துக்கு முன் மார்க்கெட்டிங் நிர்ப‌ந்த‌ங்க‌ள் கார‌ண‌மாய் க‌வ‌ர்ச்சி முக‌மூடி அணிந்து க‌வ‌ரும் பெண்க‌ள் , திரும‌ண‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ பிற‌கு, த‌ம‌து மார்க்கெட்டிங் திறமைக‌ளை மூட்டை க‌ட்டி வைத்துவிடுகிறார்க‌ள்.

திரும‌ண‌ ப‌ந்த‌த்தில் கிடைக்கும் பாதுகாப்பு ஒரு வித‌ அச‌ம‌ஞ்ச‌த்த‌ன‌த்தை பெண்க‌ளில் ஏற்ப‌டுத்தி விடுகிற‌து. விவாக‌ர‌த்து ச‌ட்ட‌த்தில் உள்ள‌ சிக்க‌ல்க‌ளும், த‌னிய‌னான‌ ஆண் குறித்த‌ ச‌மூக‌ ச‌ந்தேக‌ங்க‌ளுமே ஆணின் கைக‌ளை க‌ட்டிப்போடுகின்ற‌ன‌.

வெறும் திரும‌ண‌ உற‌வுக்கு ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ உற‌வுக்குமே ஒருவ‌ர் சேடிஸ்டாக‌வும், அடுத்த‌வ‌ர் ம‌ஸாக்கிஸ்டாக‌வும் இருந்தால் தான் அந்த‌ உற‌வு தொட‌ரும். த‌ம்ப‌தியில் இருவ‌ருமே சேடிஸ்டாக‌ இருந்தாலோ, அல்ல‌து ம‌சாக்கிஸ்டாக‌ இருந்தாலோ அந்த‌ உற‌வு தொட‌ராது.

மேற்சொன்ன‌ சேடிஸ‌ம்,மாசாக்கிச‌ம் இர‌ண்டுக்குமே அடிப்ப‌டை ம‌னித‌ ம‌ன‌தின் ஆழ‌த்தில் புதைந்து கிட‌க்கும் 2 கோரிக்கைக‌ளே.

1. கொல்லும் விருப்ப‌ம் 2. கொல்ல‌ப்ப‌டும் விருப்ப‌ம்.

மின் உப‌க‌ர‌ண‌ங்க‌ளில் ஆன்,ஆஃப் ஸ்விட்ச் இருப்ப‌து போல‌வே, ம‌னிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களிலும் உயிர்வாழும் இச்சை போல‌வே , த‌ன்னை தான‌ழித்து கொள்ளும் இச்சையும் சேர்ந்தே புதை‌ந்துள்ள‌ன‌.


ம‌னித‌ன் அடிப்ப‌டையில் மிருக‌ம். த‌ன் மிருக‌த்தன்‌மையை ம‌றுக்கும் மிருக‌ம். உட‌லை ஆடைக்க‌ட்டியும், ம‌ன‌தை தான் மிருக‌ம் அல்ல‌ என்ற‌ போலி ந‌ம்பிக்கையாலும் க‌ட்டுப்ப‌டுத்த‌ விரும்புகிறான்.ஆடைக்குள் மிருகமாக இருக்கிறான்.அடி மனதில் மிருக இச்சைகளுடனேயே வாழ்கிறான்.

ப‌ழைய,புதிய கற்காலங்கள்:பழைய கற்காலத்தில் ஆண் பெண் இருவருமே சவால்கள் நிறைந்த வாழ்வை வாழ்ந்த படி, மரணத்தை அடிக்கடி சந்தித்து ஹலோ சொல்லி வந்ததால் அவர்களின் மனதில் இருந்திருக்கக்கூடிய மேற்படி அடிப்படை கோரிக்கைகள் வெகு சுலபமாக நிறைவேறி வந்தன.

இருவரும் சமமான உடல் வலிமையுடன் வாழ்ந்ததால் ஆண் பெண் மனோ தத்துவங்களில் வித்யாசம் ஏற்படவில்லை.

புதிய கற்காலத்தில் வாழ்விலான சவால்கள் ஓரளவு குறைந்தன. ஆண்,பெண்ணை கர்ப காலம், பேறுகாலங்களில் ஓய்வெடுக்க அனுமதிக்க ஆரம்பித்தான். ஓய்வுக்கு பழக்கப்பட்ட பெண்ணுடலும்,மனமும் பலவீனமடைந்தது அவள் தந்திரங்கள் கற்க ஆரம்பித்துவிட்டாள். பலவீனமே பாவங்களின் பிறப்பிடம். //sound mind in sound body//


மனித உடல் எத்தனைக்கெத்தனை உழைக்கிறதோ,அத்தனைக்கெத்தனை வலிமை பெறுகிறது எத்தனைக்கெத்தனை ஓய்வெடுக்கிறதோ அத்தனைக்கெத்தனை பலவீனமடையும். சவால்கள் குறைந்து விட்டதால் ஆண் அவற்றை தானே தனியிருவனாக சமாளிக்க முடிவு செய்தான். டிவிஷன் ஆஃப் லேபர் என்பது ஆரம்பித்தது. (நீ உள்ளே /நான் வெளியே).


மனிதன் வேட்டையாடுதல் ,மீன்பிடித்தலை நம்பி வாழ்ந்த போது சஞ்சாரியாய் இருந்தான். விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்த பின் நிலைத்து வாழ ஆரம்பித்தான். தான் பாடுபட்டு சீர் திருத்திய நிலம் தன் வாரிசுக்கே சேர வேண்டும் என்று திட்டமிட்டான்.

இதையடுத்து பெண்ணின் யோனிக்கு பூட்டுகள் தயாரிக்க ஆரம்பித்தான். பெண் உள்ளுக்குள் கருவ ஆரம்பித்தாள் ." தாளி ! உனக்கு நான் முக்கியமில்லை என் யோனி கூட முக்கிய மில்லை, அது வழியா வர்ர உன் பிள்ளை தானே முக்கியம், உனக்கு வைக்கிறேண்டா வெடி " என்று செயல்பட ஆரம்பித்தாள். கள்ளக்காதல்,தொடுப்பு,வேலி தாண்டுதல் எல்லாமே பெண்ணடிமைக்கு எதிரான புரட்சிகள் தான்.

பெண் குழந்தை பார்க்கும் முதல் ஆண் தந்தை‌

ஆண் குழந்தை பார்க்கும் முதல் பெண் தாய்.

இய‌ல்பாக‌வே உள்ள‌ இன‌க்க‌வ‌ர்ச்சி கார‌ண‌மாய் பெண் குழநதை த‌ந்தையையும், ஆண் குழ‌ந்தை தாயையும் விரும்புகின்ற‌ன‌. ஆனால் பெற்றோர் குழ‌ந்தைக‌ளின் மெல்லிய‌ உண‌ர்வுக‌ளை புரிந்து கொள்ளாது அவ‌ற்றின் சுத‌ந்திர‌த்தை ப‌றித்து தாம் விரும்பும் ஒரு ஃப்ரேமுக்குள் அவ‌ர்க‌ளை அடைக்க‌ பார்க்கின்ற‌ன‌ர். இத‌னால் குழ‌ந்தைக‌ளுக்கு த‌ம் பெற்றோர் மீது ஒருவித‌ ஹேட் அன்ட் ல‌வ் ஏற்ப‌டுகிற‌து.

இளைஞன் தான் பார்க்கும் பெண்களில் தேடுவது,அடைய துடிப்பது (தாயை) தாய் போன்ற வடிவம் கொண்ட பெண்ணை.

எதற்கு? அவள் எப்படியெல்லாம் அவன் சிறகுகளை வெட்டினாளோ அப்படியெல்லாம் இந்த புதிய பெண்ணை இம்சித்து பழிவாங்கத்தான்.


இதையே இளம்பெண்ணுக்கும் பொருத்தி பாருங்கள். கூட்டி கழித்து பாருங்கள். ஆன்ஸர் கரெக்டா வரும். இதனாலதான் திருமணங்கள் ஆயிரங்காலத்து பயிர் என்ற லெஜண்டை தகர்த்து, ஆசை அறுபது நாள்,மோகம் முப்பது நாள் கூட காலாவதியாகி காலை பிறண்டுகின்றன.