Saturday, March 8, 2008

மகளிர் தினம் தொடர்பாக மகளிருக்கு சில டிப்ஸ்:

1. காலைக்கடன் தீர்ப்பதை வீட்டு வேலைகள் காரணமாய் தள்ளிப்போடாதீர்கள்

2.வெறுமனே காப்பியை குடித்து வயிற்றை நிரப்பாதீர்கள்

3.வீணாகிறதே என்று சுண்டு கறி,சுண்டு குழம்பெல்லாம் போட்டு திணிக்காதீர்கள்

4.தலைக்கு குளித்துவிட்டு துடைக்க கூட நேரமின்றி பம்பரமாய் சுழலாதீர்கள்

5.அவர் சாப்பிடட்டும் என்று காத்திருந்து கண்ட நேரத்தில் சாப்பிடாதீர்கள்

6.இந்த‌ பாழாய் போன‌ டி.வி.யை பார்க்காதீர்க‌ள். அப்ப‌டியே பார்த்தாலும் ஒவ்வொருவரும் நீட்டி முழ‌க்கி பேசும் அர‌ட்டை அர‌ங்க‌ம் இத்யாதியை பார்க்காதீர்க‌ள். ஆட்டோ வ‌ந்து நிற்ப‌தை அரை ம‌ணி நேர‌ம் காட்டும் சீரிய‌ல்க‌ளை பார்க்காதீர்க‌ள்.

7.அக்க‌ம் ப‌க்க‌த்து பெண்க‌ளிட‌ம் ரொம்ப‌ உர‌சாதீர்க‌ள். நீங்க‌ள் உர‌சுவ‌தே டேஞ்ஜ‌‌ர்.இதில் அந்த‌ விவ‌ர‌ங்க‌ளை க‌ண‌வ‌ருக்கு சொல்வ‌து அதைவிட‌ டேஞ்ச‌ர்.

8.பீட்ஸா,நூடுல்ஸ் இழ‌வெல்லாம் பிள்ளைக‌ள் தின்ன‌ட்டும். மீந்த‌தை தின்ப‌தாய் எண்ணி அவ‌ற்றை முக‌ர்ந்து கூட‌ பாராதீர்க‌ள்

9.இந்த‌ கால‌த்தில் புருஷ‌ன் என்ப‌வ‌ன் புருஷ‌ன் அல்ல‌. வேலை தான் புருஷ‌ன். அல்ல‌து சேமிப்பு தான் புருஷ‌ன்.

10.ப‌ண்ம் கெட்டுப்போனா க‌ட‌ன் வாங்க‌லாம். ம‌ஞ்ச‌ள் நோட்டிஸ் கொடுக்க‌லாம். உட‌ம்பு கெட்டுப்போனால் நாஸ்திதான்.

11.உட‌ம்புக்கு ஏதும் வ‌ராம‌ (நோய்ங்க‌)பார்த்துக்க‌ங்க‌. உட‌ற்ப‌யிற்சி, க‌ல‌ப்புண‌வு(க‌ல‌ப்ப‌ட‌ உண‌வில்லிங்க‌/அர்சி,கோதுமை,கேழ்வ‌ர‌கு,க‌ம்பு, காய்க‌றி,கீரை க‌ல‌ந்து சாப்பிட‌ற‌து க‌ல‌ப்புண‌வு), யோகா எது வேண‌ம்னா செய்ங்க‌ உட‌ம்பு ப‌த்திர‌ம்

12. அந்த‌ 3 நாட்க‌ள்ள‌ வறுமையை எண்ணாம‌ தாராள‌மா செல‌வு ப‌ண்ணி பாதுகாப்பா இருங்க‌. நோய் தொற்றுக்கு அந்த‌ விஷ‌ய‌த்தில் சிக்க‌ன‌ம் தான் முத‌ல் கார‌ண‌ம்.

13.குடும்ப‌ம் முக்கிய‌ம் தான். நீங்க‌ குடும்ப‌த்துக்கு அதை விட‌ முக்கிய‌ம். அதை விட‌ முக்கிய‌ம் நீங்க‌ உயிரோட‌,ஆரோக்ய‌த்தோட‌ இருக்கிற‌து.

14. ஒன்னு உட‌ம்புக்கு வேலை கொடுங்க‌. இல்லை த‌லைக்கு வேலை கொடுங்க‌. ரெண்டுத்துக்கும் கொடுத்திங்க‌ க‌தை க‌ந்த‌ல்தான். டென்ஷ‌ன் வேணாங்க‌..

15.உரிமைக்கு ப‌ங்க‌மா? குடும்ப‌ ந‌ல்வாழ்வுக்கு பிர‌ச்சினையா? தூசு விழும்போதே பொங்கி எழுந்துருங்க‌ ..இல்லாட்டி தூண் விழுந்துரும்.

16.ப‌ச‌ங்க‌ முக்கிய‌ம் தான். அதுக்காக‌ அவ‌ங்க‌ ப‌ண்ற‌ த‌ப்புக‌ளை க‌ண‌வ‌ர் கிட்டே ம‌றைக்காதிங்க‌.

17.இந்த‌ கால‌த்துல‌ யாரையும்(க‌ண‌வ‌ன்/க‌ண‌வ‌னின் ந‌ண்ப‌ன்/இஸ்திரிகார‌ன் எந்த‌ ம‌..ரானாலும் ச‌ரி ந‌ம்பின‌ மாதிரி ந‌டிக்க‌னுமே த‌விர‌ குருட்டுத்த‌ன‌மா ந‌ம்பிராதிங்க‌

18. க‌ர்ப‌ம்,குழ‌ந்தை பேறு ப‌த்தியெல்லாம் சொல்ல‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லைனு நினைக்கிறேன்.. அவ‌சிய‌ம்னா சொல்லுங்க‌ இன்னொரு ப‌திவு போட்டுருவ‌ம்.

குறிப்பு:
இதையெல்லாம் தெரிஞ்சுக்க‌ என் அம்மாவ‌ ப‌றிகொடுக்க‌ வேண்டிய‌தாயிருச்சுங்க‌..