Sunday, March 9, 2008

மகளிர் தினம் : மகளிருக்கு டிப்ஸ் : பாகம்:2

மகளிர் தினம் : மகளிருக்கு டிப்ஸ் : பாகம்:2

வழக்கமாக நான் செய்யும் வில்லங்க பதிவுகளை 50 பேருக்கு குறையாமல் படித்துவிடுவார்கள். ஆனால் இந்த பதிவின் பாகம் ஒன்றை 10 பேர் வரை தான் படித்திருக்கிறார்கள். பாவம் ஒரே ஒரு வாசகி மறுமொழி செய்திருக்கிறார். இந்தியானின் ஏழ்மைக்கும்,மன்மோகன்,சிதம்பரம் ஆகியோரின் செயல்பாடுகளுக்கும் பின்னணி அவர்களின் மனைவியரே என்று கூறுவேன். ரஜினி கட்சி ஆரம்பிக்காதிருப்பதற்கும், சிரஞ்சீவி துவக்காத கட்சிக்கு தொண்டர் பயிற்சி பட்டறை நடத்துவதற்கும் அவரவர் மனைவியர் ஓரளவாவதுகாரணமாக இருந்து தான் தீரனும்.
இதுதான் லாஜிக்/.


யதார்த்தம் இப்படியிருக்க பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுவது கிரிமினல் குற்றம் மட்டுமல்ல தேச துரோகம். ஆண் என்பவன் ஆக்கிரமிக்க துடிப்பவன். பெண் ரிசீவர். ஆண்களை மாற்றுவதை விட பெண்களை மாற்றப்பார்ப்பது நல்லது. பல்வேறு காரணங்களால் ஆண்கள் ஆண்மை இழந்துவரும் இந்த காலகட்டத்தில் பெண்கள் ஆண்களின் பாத்திரத்தை ஏற்று வாழவேண்டிய கட்டாய‌ம் ஏற்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆணிலும் பெண்மை,ஒவ்வொரு பெண்ணிலும் ஆண்மை இருக்கிறது. பெண்ணில் உள்ள ஆண்மை விதையாகவே இருக்கிறது. முளைத்து கருகிவிட்ட ஆண்களின் ஆண்மையை நம்புவதை விட ,நாளிதுவரை விதையாகவே இருந்து விட்ட பெண்களின் ஆண்மையை நம்புவது மேல் என்று தோன்றிவிட்டது.


பெண் அன்புக்கு ஏங்குகிறாள். அன்பை தருவதாய் வாக்களிக்கும் ஆண்வர்கம் பின் நிஜசொரூபத்தை காட்டுகிறது. இதனால் பெண் பேயாகிறாள். பெண் உடல்ரீதியில் பலவீனமானவள். பாதுகாப்பற்று உணர்கிறாள்.

அவளுக்கு பாதுகாப்பு கொடுக்குமத்தனை ஆண்மை இன்று ஆண்களில் இல்லை.எனவே அவளே ஆணானாள். பெண்ணினத்தை நான் கைகூப்பி ,வணங்கி கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே..

உங்கள் உடல்,மனம் ஆரோக்கியமாக இருந்தால், புத்தி கூர்மையானதாய் இருந்தால்,ஆன்மா தூய‌தாய் இருந்தால் அதுவே போதும். வீடு,நாடு இர‌ண்டுமே சுவ்ர்க‌மாகிவிடும். உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ஆரோக்கிய‌ங்க‌ளுக்காக‌ ,புத்தி கூர்மையை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌த‌ற்காக‌ "எது" வேண்டுமானாலும் செய்யுங்க‌ள்.

பாத்திர‌ம் அறிந்து பிச்சையிடு என்ப‌தை போல் உங்க‌ள் தியாக‌ம் அபாத்திர‌ தான‌ம் ஆகிவிடாது எச்ச‌ரிக்கையாயிருங்க‌ள்.

எந்த‌ த‌க‌ப்ப‌னும்,எந்த‌ க‌ண‌வ‌னும்,எந்த‌ பிள்ளையும் சும்மா போடுவ‌தில்லை சோறு. அது உங்க‌ள் உரிமை. உல‌க‌ம் பெரிது ..குடும்ப‌ம் ஒரு பொடி ட‌ப்பா. பார்வையை ச‌ற்று விரிவு ப‌டுத்துங்க‌ள். விஸ்வ‌ ரூப‌ம் எடுங்க‌ள். வேண்டுமானால் அன்புக்கு க‌ட்டுப்ப‌ட்டு பொடி ட‌ப்பாவுக்குள் வாழ்ந்து காட்ட‌லாமே த‌விர‌.. சிறைப்ப‌ட்டிருக்க‌ கூடாது.

குடும்ப‌மே பொடிட‌ப்பா என்றான‌ பிற‌கு காத‌ல்,க‌த்திரிக்காய்,முறை த‌வ‌றிய‌ ‌ காத‌ல் ,இத்யாதியெல்லாம் உயிருக்கு உலை வைக்கும் விஷ‌ய‌ங்க‌ள். கொஞ்ச‌ம் மாத்தி யோசிங்க‌..

அள‌வுக்கு மிஞ்சினால் அமுத‌மும் ந‌ஞ்சு. தியாக‌மும்தான்.