இயற்கையே !
உயிர்கள் பல்கி பெருகுவதே
உனது நோக்கம் என்றால்
காதில் குரும்பியை போல்
படைத்திருக்க கூடாதா வீரியத்தை?
அதென்னவோ வெறுமனே ஒரு பிப்பெட் செய்ய வேண்டிய வேலைக்கு
ஒரு அங்கம். அது ஆண்மையின் சின்னமாம்.. ஷிட்!
அது நித்தம் அபத்திரமாகவே உணர்ந்து
பத்திரம் தேடி
உத்திரமாகி அலைகிறது மூத்திரம் வழியும் துளையினுக்கே !
ஆத்திரம் கொண்டதுவே தலையணை இடையினிலும்
சின்ன இடையாளிருப்பதாய் எண்ணி பாய்ந்து ஓய்ந்திடுதே
யாவும் தளர்ந்த பின்னே
உனக்கே உனக்கென்றுதந்து என்ன லாபம் பார்த்து பசியாறுவதோ
சகல சக்திகளும் அதனுக்கே தத்தமாகி
வளையொன்றின் மீதே பித்தமாகி
கனவு,நனவு,உணவு போதிலும்
மாதிலும் மங்கையிலும்
மனம் லயிக்க செய்கிறது.
கங்கையென பொங்குவது மனம் மட்டுமா?
இல்லையில்லை
தாய் வயதொத்தவளையும், கற்பனையிலேனும்
உரித்து பார்க்க வைப்பது எது?
கறைபடுவது மனம் மட்டுமா?
அவள்களும் இவன்களும் தனியுத்தம்
செய்வதென்ன?துவந்தம் மட்டும்
தடை செய்யப்பட்டதென்ன்?
வயிற்றில்வந்து விடும் என்றே காமத்தை கயிற்றால் கட்டி வைத்து வெந்தே சாம்பல் கூடான பின் தான் கூடல் என்றவனை கட்டிவைத்து உதைக்கவேணும்
மூலத்தில் இத்தனை வெப்பம் வைத்து
மூலம் எதுவென்று சக்தி மேல் நோக்கி ஏற முனைவது என்று ?
அணை நிரம்பி வழிவதென்ன?
தீயை அணை அணை என்றுஅணங்கை அணை ய துடிப்பதென்ன?
சம்போகத்திலும் சுயம்பாகம்
திருமணமாகாத இளைஞன்.