Saturday, March 1, 2008

ஜெயமோகன் எம்.ஜி.ஆர் சிவாஜி பற்றி எழுதியதை ஆ.வியில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

ஜெயமோகன் எம்.ஜி.ஆர் சிவாஜி பற்றி எழுதியதை வலைப்பூவில் எத்தனை பேர் படித்திருப்பார்கள்? ஆயிரம் ..இரண்டாயிரம் ஏதோ ஒரு இழவு. ஆனால் ஆ.வி.புண்ணியத்தில் தமிழ்கூறு நல்லுலகம் மொத்தம் படித்துவிட்டது. பிராமணரல்லாத இரண்டு நபர்கள் காலம் கடந்தும் சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பதை சகிக்க முடியாத ஆ.வி. ஜெயமோகன் பெயரை சொல்லி ஹோல் சேலாக அவமத்தித்து விட்டது

குறிப்பு:

வி.ஐ.பிக்களைப்பற்றி நேரில் பார்த்தது போல் கூறப்படும் வதந்திகள் ஆயிரமாயிரம். அவற்றை வலைப்பூவில் வைத்தது தான் ஜெயமோகனின் தவறு. ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாட வந்த இந்நாள் தமிழக அரசியலில் இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்ற ஒருவரை இரண்டு தலைவர்கள் (ஒருவர் தற்போது உயிருடனில்லை) இன்னொருவ‌ர் நாட்க‌ளை எண்ணிக் கொண்டிருக்கிறார்) வேறுவித‌மான‌ ந‌ட‌ன‌ம் ஆட‌ச்செய்த‌தாக‌ கூட‌ வ‌த‌ந்தி உண்டு. இதையெல்லாம் உறுதிப்ப‌டுத்திக்கொள்வ‌து எப்ப‌டி. ஒவ்வொரு வி.ஐ.பி. குறித்தும் அவ‌ர்க‌ள‌து இருண்ட‌ ப‌க்க‌ங்க‌ள் குறித்த‌ க‌தைக‌ள் ஆயிர‌மாயிர‌ம் உண்டு. ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ஆட்க‌ள் இருக்கும் வ‌ரை அவை இருளில் இருக்கும். பிற‌கு?