தற்கொலை என்றால் என்ன என்பதை பற்றி சிந்திப்போம். தற்போது மானங்கெட்ட அரசாங்கங்கள், உலக வங்கி உத்தரவுப்படி அமல்படுத்திவரும்வி.ஆர்.எஸ் போன்றதே தற்கொலை.
வி.ஆர்.எஸ் வாங்க எத்தனை காரணங்கள் உண்டோ அத்தனை காரணங்கள் தற்கொலைக்கும் உண்டு. இந்த மொத்தபடைப்பும் ஒரே வஸ்துவிலிருந்து தான் பிறந்தது. இதில் உள்ள உயிர்களுக்கெல்லாம் ஆதியானது ஒரே உயிர் தான். படைப்பு எப்படி ஒரே வஸ்துவிலிருந்து பிரிந்து விரிந்ததோ .. அதே போல் இணையவும் கூடும்.
தாம் ஒரே உயிராக (உடல்களின் தடையின்றி) இருந்த நாட்களின் நினைவு உயிர்களின் அடி மனதில் இருந்து தான் ஆகவேண்டும். உடல்களின் தடையை மீறி உயிர்கள் இணைய முயற்சிப்பது ஓருயிராகிடத்தான். இதற்கான முன்னோட்டம் தான் உடலுறவு. கொலை,தற்கொலை, எல்லாமே மீண்டும் ஓருயிராகிட தடையாக இருக்கும் உடலை நீக்குவதே..
ஈருயிர் ஓருயிராகிட தடையாக இருப்பது அவரவ்ர் ஈகோவும் தான். அதனால் தான் மனிதர்கள் எதிராளியின் ஈகோவை நசுக்கிடவே துடிக்கின்றனர். ஈகோ ஒழிந்தால் ஓருயிராகிவிடமுடியும் என்ற உணர்வு அடிமனதிலாவது இருந்துதான் தீரும். புலால் உண்ணுதல், உண்ணுதல் யாவுமே படைப்பை ஒன்றாக்கும் முயற்சியோ என்று தோன்றுகிறது. இது குறித்த பதிவர்களின் கருத்தை அறிய ஆவலாயுள்ளேன்.