Monday, March 31, 2008

ஒரு ராத்திரிக்கே மொட்டை மாடியில் இடம் மறுத்த நண்பனின் அம்மா,

திரும்பிப்பார்க்கிறேன்..

கிரிட்லி பாடசாலையில் கிறிஸ்தவ சூழலில் , பூக்கார பாபு வகையறாக்களுடன் படித்த நாட்கள். நடேச முதலியார் பேரன் சதீஷின் பிஞ்சில் பழுத்த குசும்புகள்,பா.ஜ.க. உயர்நிலைப்பள்ளியில் ஐசக்,மாணிக்கம் வகையறாக்களின் பிடியில் 6,7,வகுப்புகள், பின் சுந்தரேசன்,டி.ஜி.ஆர். பத்மினி மேடம் உபயத்தில் சட்டாம்பிள்ளையாய் இருந்த காலம்,பி.சி.ஆர் .ஜூனியர் காலேஜில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்த முதல் வருடம், தோல்வியின் ருசியை முதல் முதலாய் உணர்ந்தமை (முதல்வ் வருடம் அக்கவுண்ட்ஸில் கோட்டு),பேச்சு,கட்டுரை போட்டியில் வென்று,கல்லூரி ஆண்டு மலரில் கவிதை எழுதி, அக்கவுண்ட்ஸில் 72 மார்க் வாங்கியது எல்லாம் நினைவிருக்கிறது. பி.வி.கே என். கல்லூரியில் பிரச்சினை இல்லாத டிகிரி முதல் வருடம். சித்தூரின் அரசியல், குண்டாயிச நெளிவு சுளிவுகள் தெரியாது செக்ரட்ரியாக நிற்க முனைந்து நாறிய 2 ஆவது வருடம், கலை செயலராய் நின்று 468 வோட்டுகள் வாங்கி, 3 வோட்டில் தோற்ற 3 ஆவது வருடம். அப்பா முன்னாள் மாவட்ட கருவூல அதிகாரி, இந்நாள் அதிகாரி அப்பாவின் அந்நாள் சீடர் என்ற முறையில் கிடைத்த நாலணா உத்யோகம்,(நிஜ‌மாவேங்க ..முதியோர் உதவிதொகைக்கு எம்.ஓ.எழுதனும்,ஒரு எம்.ஓ க்கு நாலணா)

பெட்ரோலுக்கு இந்தியா செலவழிக்கும் அந்நிய செலாவணி விவரம், நாற்கர சாலைகளுக்கு பின்னாலுள்ள சதிகள் ஏதும் தெரியாது இரண்டாம் கை லூனாவுக்காக தந்தையுடன் மோதி வெளியேறியது எல்லாம் நினைவிருக்கிறது. ஒரு ராத்திரிக்கே மொட்டை மாடியில் இடம் மறுத்த நண்பனின் அம்மா, உள்ளிருப்பு போராட்டம் நடத்தும்படி அறிவுரை சொன்ன மாவட்ட கருவூல அதிகாரி, வீட்டின் மாடியறையில் தனியே சமைத்து தின்றது எல்லாமே நினைவிருக்கிறது.