ஆபத்தான வாழ்க்கை
ஆபத்தான வாழ்க்கையை வாழாவிட்டால் நீ வாழ்ந்ததற்கு பொருளே இல்லை என்பது ஓஷோ வின் வாக்கு. இந்த தினத்தந்தி நிருபர் வேலையில் சேர்ந்த பிறகு ரத்தத்தில் சூடு குறைந்து,ஒருவித அசமஞ்சத்தனம் வந்து விட்டது. (ஒரு ரகசியம்: லேசாக தொப்பை கூட போட்டிருக்கிறது).
ஆனால் என் மனைவி என் ரத்தச்சூடு ஆறாது பார்த்துக்கொள்கிறாள் என்பது வேறு விஷயம். சித்தூர் ஹேட்ரிக் எம்.எல்.ஏ சி.கே.பாபு. இவர் குண்டர்,ரிக்கிங் பார்ட்டி என்று தெ.தேசம் அரசு,கட்சி தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருவது தெரியும். ஆனால் அவருக்கிருக்கும் மக்கள் ஆதரவு வேறு எந்த நாய்க்கும் கிடையாது என்பதை இறுதியாக நடந்த தேர்தல்களுக்கு முந்தைய தேர்தலில் நானே கண்ணார கண்டேன்.ஓட்டுப்பதிவன்று சிகே.பாபுவை அப்படியே அடைகாத்தது போலீஸ், முகர்ந்தபடியே பின் தொடர்ந்தது. ஆனாலும் என்ன சி.கே . எம்.எல்.ஏ ஆனார்.
நான் என்.டி.ஆர்.ரசிகன். என் மனம் ஏன் சி.கே.பாபுவுக்கு அனுகூலமாய் மாறவேண்டும். அவர் பிறந்த நாளுக்கு நான் ஏன் 8 பக்கத்தில் சிறப்பிதழ் வெளியிடனும்? அதை விளக்கத் தான் இந்த பதிவு:\
நான் என்.டி,.ஆர் ரசிகன் என்று ஏற்கெனவே சொல்லியாயிற்று. நடிப்புக்கு மட்டுமல்ல அவரது அரசியல் சிந்தனைக்கும் ரசிகன் தான்.
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் :
நரசிம்மராவ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். என்.டி.ஆர் உடனே அறிவித்தார், பி.வி.போட்டியிடும் தொகுதியில் தெ.தே.வேட்பாளரை நிறுத்தாது. காரணம் அவர் தெலுங்கர் என்பதாம். இதெல்லாம் சராசரி அரசியல்வாதிகளால் கற்பனை கூட செய்ய முடியாத ஒன்று. நிற்க.
என்.டி,.ஆர் ரசிகனான நான் அவர் முதுகில் குத்திய சந்திரபாபுவை எதிரியாக பாவித்ததில் தவறில்லை. என்.டி.ஆர் பிள்ளைகள்,பேரன் கள் ,மருமகள்கள் எல்லாமே சரண்டர் ஆகிவிட்டாலும் நான் தனியொருவனாக இருந்து சந்திரபாபு மானத்தை உலக அளவில் வாங்கினேன்,வாங்கிகொண்டே இருக்கிறேன்.
இத்தனைக்கு விசயம் என்னவென்றால்:
சமுதாயம் என் கோவில்,ஏழைமக்களே என் தெய்வம் என்றார் என்.டி,.ஆர். இந்த முழக்கத்தின் தொடர்ச்சியாய் ஏழைமக்கள் 40 கோடி பேருக்கு சுயமரியாதையுடன் கூடிய உயிர்பாதுகாப்பு,வேலை வாய்ப்பு,உணவு,உடை,இருப்பிடம் வழங்க ஒரு திட்டம் தீட்டினேன். அதை 1997 முதல் சந்திரபாபுவுக்கு அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ். தபால் செலவுக்கு 10 ரூ. எம்.ஓ அனுப்பினேன். வாங்கிக்கொள்ளப்பட்டது.
இது பெய்டட் சர்வீசாகிவிட்டதால் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன். உடனே முதல்வர் அலுவலகம் "தங்கள் ஆலோசனைகளை உரிய முறையில் உபயோகித்துக்கொள்கிறோம் என்று கடிதம் போட்டு கை கழுவி விட்டது.
பழிவாங்கும் போக்கு:
பெரியமனிதத்தனமாய் பதில் போட்ட பாபு, மாவட்ட அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு போட்டு எனது தனிப்பட்ட விண்ணப்பங்களை கூட கிடப்பில் போடச்செய்தார். காவல் நிலையத்தில் ஒரு மிஸ்ஸிங் கம்ப்ளெயிண்டை கூட எடுக்கலைங்க..
நாளைக்கு எவனாச்சும் என்ன கத்தியால் கிழித்தாலும் கதை இவ்ளதானே.. அரண்டு போன நான் மனித உரிமை கமிஷனுக்கு புகார் கொடுத்து என் பிரச்சினையை தீர்த்துக்கொண்டேன்.
சி.கே.மீது கொலை வழக்கு:
எங்கள் ஊரில் ஒரு மகளிரணி தலைவி. அவருக்கும் சி.கே.வால் தோற்கடிக்கப்பட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் ஏ.எஸ்.மனோகருக்கும் நல்ல நெருக்கம். இந்நிலையில் தலைவியின் மகன் கொல்லப்பட்டார். பழி சி.கே தலையில் விழுந்தது. தற்போது அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது வேறு கதை.
அடக்குமுறை:
இந்த வழக்கில் சி.கே. மீது தெ.தே.அரசு அவிழ்த்துவிட்ட அடக்கு முறை இருக்கிறதே. அடடா! மாவட்டத்துல இருக்க கூடாதுனு சில மாசம், டவுனுக்குள்ள வரக்கூடாதுனு சில மாசம். அடப்பாவிகளே ! இந்த காலகட்டத்தில் தான் எனக்கு சி.கே. மீது சிம்பதி ஏற்பட ஆரம்பித்தது.
துஷ்பிரச்சாரம்:
வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. அதற்குள் தெ.தேசத்தினர் சி.கே.வை தனிப்பட்ட வகையில் இழிவு படுத்தி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஏனோ சி.கே தரப்பில் இந்த துஷ்பிரச்சாரத்தை திருப்பியடிக்க சரியான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
துண்டு பிரசுரம்:
இந்நிலையில் நான் கைக்காசை செலவழித்து 5000 துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு, மக்கள் கடிதத்துக்கு பதில் போட ஸ்டாம்புக்கு துட்டில்லாது, மக்கள் பணத்தில் பதில் எழுதும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புங்கள் என்பது அதன் சாராம்சம்.
சி.கே.இருப்பதால் பெரிதாய் லாபமில்லாமல் கூட இருக்கலாம். ஆனால் சி.கே. களத்தில் இல்லையென்றால் மட்டும் கதை கந்தல் தான். தெ.தேசத்தில் உள்ள வால் எல்லாம் பாம்பாகி ஆடுவதோடு கொத்தவே ஆரம்பித்து விடும். இந்த ஒரே நோக்கத்துடன் தான் சிறப்பிதழ் வெளியிட உள்ளேன்.