
சர்ப்பத்தின் குணம் சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷயங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரட் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,
மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),
உடலமைப்பிலும் வித்யாசம் இருக்கிறது. ஒன்று ஊளைச்சதை,அல்லது வயதுக்கேற்ற வளர்ச்சி இன்மை காணப்படுகிறது. சதிகள் செய்வது,சதிக்கு இலக்காவது,ரகசிய எதிரிகள்,இரவில்,இருளில் செய்யும் வேலைகளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிரஃபி)சட்ட விரோத செயல்கள்,கடத்தல்,டூப்ளிகேட் தயாரித்தல்,கள்ள கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.
இதற்கான பரிகாரங்களை பின்னொரு பதிவில் காண்போம்.