Monday, March 31, 2008

கல்கியில் மோடி புராணத்திற்கு பின்னுள்ள உண்மையான உண்மைகள்

கல்கி போன்ற பிராமண பத்திரிக்கைகளே அல்லாது, மக்கள் நாடி அறிந்து நடத்தப்படும் சூத்திரப்பத்திரிக்கைகளும் விற்பனை சரிந்து அல்லாடி வருகின்றன. இதற்கு காரணம் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள். தொலக்காட்சி கலாச்சாரத்தை வளர்த்தது இந்த பத்திரிக்கைகளே.. இப்போது அவதிப்படுவதும் இவர்களே. நிற்க மோடி புராண பின்னணியில் இருப்பது விளம்பர வருவாயே. இந்த மானங்கெட்ட அரசாங்கங்களில் மக்கள் தொடர்புதுறை என்று ஒரு துறை இருக்கும். இதன் முக்கிய வேலையே பத்திரிக்கையாளர்களுக்கும்,அரசுக்கும் இடையில் தரகுவேலை செய்வதே.

போனியாகாத கல்கி இதழ் தன் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள குஜராத் அரசின் மக்கள் தொடர்புதுறையை பிடித்து தொங்கியிருக்கும்,இதற்கு சோ போன்றவர்கள் தரகு வேலை செய்திருக்கலாம். குஜராத் அரசின் பெருமைகள் தம்பட்டம் அடிக்க கல்கி ஒத்துக்கொண்டிருக்க வேண்டும். இதற்கு கைமாறாக இந்த தொடரை ஸ்பான்ஸர் செய்யும் வங்கிகள் பணத்தை கொட்டி அழுதிருக்கலாம். யார் பணம்? குஜராத் மக்களின் வரிப்பணம்.

குஜராத்தில் 500 பிரதியாவது விற்கிறதோ இல்லையோ தெரியாத கல்கிக்கு இந்த விளம்பர வருவாயை கொட்டியழுததிலிருந்தே மோடி அரசின் நிர்வாக திறமை பளிச்சிடுகிறது.

குறிப்பு: எம் மாநிலத்தில் சந்திரபாபு முதல்வராக இருந்த போது மணீமேகலை பிரசுரம் நான் பரிந்துரைத்த " சமகால சாண‌க்கியர் சந்திரபாபு" என்ற நூலை எழுதப்பணித்தது. நானும் சாஸ்த்ரோக்தமாக அரசுக்கு இதை கடிதம் மூலம் எழுதினேன். உடனே மனோ வேகம்,வாய் வேகத்தில் உதவி பறந்து வந்தது. அனுபவத்துல சொல்றேன். கல்கியின் மோடி புராணத்தின் பின்னணி இது தான்.

ஒரு ராத்திரிக்கே மொட்டை மாடியில் இடம் மறுத்த நண்பனின் அம்மா,

திரும்பிப்பார்க்கிறேன்..

கிரிட்லி பாடசாலையில் கிறிஸ்தவ சூழலில் , பூக்கார பாபு வகையறாக்களுடன் படித்த நாட்கள். நடேச முதலியார் பேரன் சதீஷின் பிஞ்சில் பழுத்த குசும்புகள்,பா.ஜ.க. உயர்நிலைப்பள்ளியில் ஐசக்,மாணிக்கம் வகையறாக்களின் பிடியில் 6,7,வகுப்புகள், பின் சுந்தரேசன்,டி.ஜி.ஆர். பத்மினி மேடம் உபயத்தில் சட்டாம்பிள்ளையாய் இருந்த காலம்,பி.சி.ஆர் .ஜூனியர் காலேஜில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்த முதல் வருடம், தோல்வியின் ருசியை முதல் முதலாய் உணர்ந்தமை (முதல்வ் வருடம் அக்கவுண்ட்ஸில் கோட்டு),பேச்சு,கட்டுரை போட்டியில் வென்று,கல்லூரி ஆண்டு மலரில் கவிதை எழுதி, அக்கவுண்ட்ஸில் 72 மார்க் வாங்கியது எல்லாம் நினைவிருக்கிறது. பி.வி.கே என். கல்லூரியில் பிரச்சினை இல்லாத டிகிரி முதல் வருடம். சித்தூரின் அரசியல், குண்டாயிச நெளிவு சுளிவுகள் தெரியாது செக்ரட்ரியாக நிற்க முனைந்து நாறிய 2 ஆவது வருடம், கலை செயலராய் நின்று 468 வோட்டுகள் வாங்கி, 3 வோட்டில் தோற்ற 3 ஆவது வருடம். அப்பா முன்னாள் மாவட்ட கருவூல அதிகாரி, இந்நாள் அதிகாரி அப்பாவின் அந்நாள் சீடர் என்ற முறையில் கிடைத்த நாலணா உத்யோகம்,(நிஜ‌மாவேங்க ..முதியோர் உதவிதொகைக்கு எம்.ஓ.எழுதனும்,ஒரு எம்.ஓ க்கு நாலணா)

பெட்ரோலுக்கு இந்தியா செலவழிக்கும் அந்நிய செலாவணி விவரம், நாற்கர சாலைகளுக்கு பின்னாலுள்ள சதிகள் ஏதும் தெரியாது இரண்டாம் கை லூனாவுக்காக தந்தையுடன் மோதி வெளியேறியது எல்லாம் நினைவிருக்கிறது. ஒரு ராத்திரிக்கே மொட்டை மாடியில் இடம் மறுத்த நண்பனின் அம்மா, உள்ளிருப்பு போராட்டம் நடத்தும்படி அறிவுரை சொன்ன மாவட்ட கருவூல அதிகாரி, வீட்டின் மாடியறையில் தனியே சமைத்து தின்றது எல்லாமே நினைவிருக்கிறது.

Friday, March 21, 2008

ஆபத்தான வாழ்க்கை

ஆபத்தான வாழ்க்கை
ஆபத்தான வாழ்க்கையை வாழாவிட்டால் நீ வாழ்ந்ததற்கு பொருளே இல்லை என்பது ஓஷோ வின் வாக்கு. இந்த தினத்தந்தி நிருபர் வேலையில் சேர்ந்த பிறகு ரத்தத்தில் சூடு குறைந்து,ஒருவித அசமஞ்சத்தனம் வந்து விட்டது. (ஒரு ரகசியம்: லேசாக தொப்பை கூட‌ போட்டிருக்கிறது).

ஆனால் என் மனைவி என் ரத்தச்சூடு ஆறாது பார்த்துக்கொள்கிறாள் என்பது வேறு விஷயம். சித்தூர் ஹேட்ரிக் எம்.எல்.ஏ சி.கே.பாபு. இவர் குண்டர்,ரிக்கிங் பார்ட்டி என்று தெ.தேசம் அரசு,கட்சி தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருவது தெரியும். ஆனால் அவருக்கிருக்கும் மக்கள் ஆதரவு வேறு எந்த நாய்க்கும் கிடையாது என்பதை இறுதியாக நடந்த தேர்தல்களுக்கு முந்தைய தேர்தலில் நானே கண்ணார கண்டேன்.ஓட்டுப்பதிவன்று சிகே.பாபுவை அப்படியே அடைகாத்தது போலீஸ், முகர்ந்தபடியே பின் தொடர்ந்தது. ஆனாலும் என்ன சி.கே . எம்.எல்.ஏ ஆனார்.

நான் என்.டி.ஆர்.ரசிகன். என் மனம் ஏன் சி.கே.பாபுவுக்கு அனுகூலமாய் மாறவேண்டும். அவர் பிறந்த நாளுக்கு நான் ஏன் 8 பக்கத்தில் சிறப்பிதழ் வெளியிடனும்? அதை விளக்கத் தான் இந்த பதிவு:\

நான் என்.டி,.ஆர் ரசிகன் என்று ஏற்கெனவே சொல்லியாயிற்று. நடிப்புக்கு மட்டுமல்ல அவரது அரசியல் சிந்தனைக்கும் ரசிகன் தான்.


ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் :

நரசிம்மராவ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். என்.டி.ஆர் உடனே அறிவித்தார், பி.வி.போட்டியிடும் தொகுதியில் தெ.தே.வேட்பாளரை நிறுத்தாது. காரணம் அவர் தெலுங்கர் என்பதாம். இதெல்லாம் சராசரி அரசியல்வாதிகளால் கற்பனை கூட செய்ய முடியாத ஒன்று. நிற்க.

என்.டி,.ஆர் ரசிகனான நான் அவர் முதுகில் குத்திய சந்திரபாபுவை எதிரியாக பாவித்ததில் தவறில்லை. என்.டி.ஆர் பிள்ளைக‌ள்,பேர‌ன் க‌ள் ,ம‌ரும‌க‌ள்க‌ள் எல்லாமே ச‌ர‌ண்ட‌ர் ஆகிவிட்டாலும் நான் த‌னியொருவ‌னாக‌ இருந்து ச‌ந்திர‌பாபு மான‌த்தை உல‌க‌ அள‌வில் வாங்கினேன்,வாங்கிகொண்டே இருக்கிறேன்.

இத்த‌னைக்கு விச‌ய‌ம் என்ன‌வென்றால்:

ச‌முதாய‌ம் என் கோவில்,ஏழைம‌க்க‌ளே என் தெய்வ‌ம் என்றார் என்.டி,.ஆர். இந்த‌ முழ‌க்க‌த்தின் தொட‌ர்ச்சியாய் ஏழைம‌க்க‌ள் 40 கோடி பேருக்கு சுய‌ம‌ரியாதையுட‌ன் கூடிய‌ உயிர்பாதுகாப்பு,வேலை வாய்ப்பு,உண‌வு,உடை,இருப்பிட‌ம் வ‌ழ‌ங்க‌ ஒரு திட்ட‌ம் தீட்டினேன். அதை 1997 முத‌ல் ச‌ந்திர‌பாபுவுக்கு அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ். த‌பால் செல‌வுக்கு 10 ரூ. எம்.ஓ அனுப்பினேன். வாங்கிக்கொள்ள‌ப்ப‌ட்ட‌து.


இது பெய்ட‌ட் ச‌ர்வீசாகிவிட்ட‌தால் மாவ‌ட்ட‌ நுக‌ர்வோர் ம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு ப‌திவு செய்தேன். உட‌னே முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம் "த‌ங்க‌ள் ஆலோச‌னைக‌ளை உரிய‌ முறையில் உப‌யோகித்துக்கொள்கிறோம் என்று க‌டித‌ம் போட்டு கை க‌ழுவி விட்ட‌து.

ப‌ழிவாங்கும் போக்கு:

பெரிய‌ம‌னித‌த்த‌ன‌மாய் ப‌தில் போட்ட‌ பாபு, மாவ‌ட்ட‌ அதிகாரிக‌ளுக்கு ர‌க‌சிய‌ உத்த‌ர‌வு போட்டு என‌து த‌னிப்ப‌ட்ட‌ விண்ண‌ப்ப‌ங்க‌ளை கூட‌ கிட‌ப்பில் போட‌ச்செய்தார். காவ‌ல் நிலைய‌த்தில் ஒரு மிஸ்ஸிங் க‌ம்ப்ளெயிண்டை கூட‌ எடுக்க‌லைங்க‌..

நா‌ளைக்கு எவ‌னாச்சும் என்ன‌ க‌த்தியால் கிழித்தாலும் க‌தை இவ்ள‌தானே.. அர‌ண்டு போன‌ நான் ம‌னித‌ உரிமை க‌மிஷ‌னுக்கு புகார் கொடுத்து என் பிர‌ச்சினையை தீர்த்துக்கொண்டேன்.

சி.கே.மீது கொலை வ‌ழ‌க்கு:

எங்க‌ள் ஊரில் ஒரு ம‌க‌ளிர‌ணி த‌லைவி. அவ‌ருக்கும் சி.கே.வால் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌ தெலுங்கு தேச‌ம் வேட்பாள‌ர் ஏ.எஸ்.ம‌னோக‌ருக்கும் ந‌ல்ல‌ நெருக்க‌ம். இந்நிலையில் த‌லைவியின் ம‌க‌ன் கொல்ல‌ப்ப‌ட்டார். ப‌ழி சி.கே த‌லையில் விழுந்த‌து. த‌ற்போது அது த‌ள்ளுப‌டி செய்ய‌ப்ப‌ட்டு விட்ட‌து வேறு க‌தை.

அட‌க்குமுறை:

இந்த‌ வ‌ழ‌க்கில் சி.கே. மீது தெ.தே.அர‌சு அவிழ்த்துவிட்ட‌ அட‌க்கு முறை இருக்கிற‌தே. அட‌டா! மாவ‌ட்ட‌த்துல‌ இருக்க‌ கூடாதுனு சில‌ மாச‌ம், ட‌வுனுக்குள்ள‌ வ‌ர‌க்கூடாதுனு சில‌ மாச‌ம். அட‌ப்பாவிக‌ளே ! இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் தான் என‌க்கு சி.கே. மீது சிம்ப‌தி ஏற்ப‌ட‌ ஆர‌ம்பித்த‌து.



துஷ்பிர‌ச்சார‌ம்:

வ‌ழ‌க்கு நீதிம‌ன்ற‌த்தில் ந‌ட‌க்கிற‌து. அத‌ற்குள் தெ.தேச‌த்தின‌ர் சி.கே.வை த‌னிப்ப‌ட்ட‌ வ‌கையில் இழிவு ப‌டுத்தி பிர‌ச்சார‌ம் செய்ய‌ ஆர‌ம்பித்து விட்ட‌ன‌ர். ஏனோ சி.கே த‌ர‌ப்பில் இந்த‌ துஷ்பிர‌ச்சார‌த்தை திருப்பிய‌டிக்க‌ ச‌ரியான‌ முய‌ற்சி மேற்கொள்ள‌ப்ப‌ட‌வில்லை.

துண்டு பிர‌சுர‌ம்:

இந்நிலையில் நான் கைக்காசை செல‌வ‌ழித்து 5000 துண்டு பிர‌சுர‌ங்க‌ள் வெளியிட்டு, ம‌க்க‌ள் க‌டித‌த்துக்கு ப‌தில் போட‌ ஸ்டாம்புக்கு துட்டில்லாது, ம‌க்க‌ள் ப‌ண‌த்தில் ப‌தில் எழுதும் இந்த‌ அர‌சை வீட்டுக்கு அனுப்புங்க‌ள் என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம்.

சி.கே.இருப்ப‌தால் பெரிதாய் லாப‌மில்லாம‌ல் கூட‌ இருக்க‌லாம். ஆனால் சி.கே. க‌ள‌த்தில் இல்லையென்றால் ம‌ட்டும் க‌தை க‌ந்த‌ல் தான். தெ.தேச‌த்தில் உள்ள‌ வால் எல்லாம் பாம்பாகி ஆடுவ‌தோடு கொத்த‌வே ஆர‌ம்பித்து விடும். இந்த‌ ஒரே நோக்க‌த்துட‌ன் தான் சிற‌ப்பித‌ழ் வெளியிட‌ உள்ளேன்.

Thursday, March 20, 2008

உடலுறவில் பெண்களுக்குஆர்வம் இல்லாததற்கு காரணம்.. "ஹும் ..எல்லாம் பழைய குருடி கதவை திறடி கதைதானே " என்ற அலுப்பு

ஆண்களுக்கு உடலுறவில் தொடர்ந்த ஆர்வம் இருப்பதற்கு காரணம், கடந்த முறை தாம் சரியாக செயல்படவில்லையோ என்ற குற்ற உணர்ச்சிதான். இந்த முறையாவது சரியாக செயல்பட முடியாதா என்ற துடிப்புதான்.

பெண்களுக்கு அந்த அளவுக்கு ஆர்வம் இல்லாததற்கு காரணம்.. "ஹும் ..எல்லாம் பழைய குருடி கதவை திறடி கதைதானே " என்ற அலுப்பு.

இதற்கு உயிரியல் ரீதியாக இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று : யோனியில் நுழைந்த பிறகு ஆணின் இன உறுப்பு 7 முறை அசைக்கப்பட்டாலே அவன் உச்சம் பெற்றுவிடுகிறான். வீரியம் வெளியான பிறகு அவன் செயல்பட முடிவதில்லை. ஆனால் பெண்ணுக்கோ அவளது உறுப்பு, ஆணுறுப்பு நுழந்த பிறகு 23 முறை அசைந்த பிறகே அவள் உச்சம் பெறுகிறாள்.

இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் பெறுவதை காமசூத்திரம் "சம ரதம்" என்கிறது. ஆனால் செக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சி அற்ற ஆண்களால் சமரதம் என்பது கைகூடாதே போய்விடுகிறது. இன்னமும் உறுப்பின் அளவு பொருத்தும், எத்தனை முறை உடலுறவு என்பதை பொருத்தும்,தம் ஆண்மை நிரூபிக்க படுவதாய் எண்ணும் ஆண்கள் உள்ளனர்.

23 க்கும் 7 க்குமிடையில் உள்ள வித்யாசம் 16. இந்த 16 அசைவுகளை, மூக்கு,நாக்கு,விரல்கள் கொண்டு கொடுக்க தெரிந்தால் சமரதம் உறுதி. மேலும் ஆணின் காமம் பால் பொங்குவதை போன்றுள்ளது. பெண்ணின் காமமோ அரிசி வேகுவதை போன்ற ஸ்லோ பிராசஸாக உள்ளது.

இதை ச‌மாளிப்ப‌தில்தான் ஆணின் வெற்றி அட‌ங்கியிருக்கிற‌து. பெண்ணின் ம‌ன‌திலான‌ ச‌ந்தேக‌ங்க‌ள், கு.உண‌ர்ச்சிக‌ளைப்போக்கி, பாதுகாப்பான‌ சூழ‌லில், கர்ப பயம் போக்கி, முன்விளையாட்டுக்க‌ளுக்கு பிற‌கு உட‌லுற‌வில் ஈடுப‌ட்டால் ச‌ம‌ர‌த‌ம் உறுதி.



குறிப்பு: உட‌லுற‌வில் கிடைக்கும் இன்ப‌ம் அற்ப‌மான‌து. ஆனால் தியான‌த்தில் ஏற்ப‌டு சிந்த‌னைய‌ற்ற‌ நிலை உட‌லுற‌வில் ஒரு நொடி ஏற்ப‌டுகிற‌து. இது அற்ப‌மே. என்றாலும் தியான‌த்தில் கிடைக்கும் பிர‌ம்மான‌ந்த‌த்துக்கு இது முன்னோடி என்ப‌தால், இது தியான‌த்துக்கான‌ ஆர்வ‌த்தை ஏற்ப‌டுத்தும் என்ப‌தால் இந்த‌ குறிப்பை இப்ப‌திவில் இட்டுள்ளேன். ப‌டித்து ப‌ய‌ன‌டைந்து தியான‌த்துக்கு வ‌ரும்ப‌டி அழைக்கிறேன்.

Tuesday, March 18, 2008

காதல் ஒருவனை கைப்பிடித்து தினம் தினம் அவனை கசாப்பு போடும் பெண்க‌ள்

திரும‌ண‌த்துக்கு முன் மார்க்கெட்டிங் நிர்ப‌ந்த‌ங்க‌ள் கார‌ண‌மாய் க‌வ‌ர்ச்சி முக‌மூடி அணிந்து க‌வ‌ரும் பெண்க‌ள் , திரும‌ண‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ பிற‌கு, த‌ம‌து மார்க்கெட்டிங் திறமைக‌ளை மூட்டை க‌ட்டி வைத்துவிடுகிறார்க‌ள்.

திரும‌ண‌ ப‌ந்த‌த்தில் கிடைக்கும் பாதுகாப்பு ஒரு வித‌ அச‌ம‌ஞ்ச‌த்த‌ன‌த்தை பெண்க‌ளில் ஏற்ப‌டுத்தி விடுகிற‌து. விவாக‌ர‌த்து ச‌ட்ட‌த்தில் உள்ள‌ சிக்க‌ல்க‌ளும், த‌னிய‌னான‌ ஆண் குறித்த‌ ச‌மூக‌ ச‌ந்தேக‌ங்க‌ளுமே ஆணின் கைக‌ளை க‌ட்டிப்போடுகின்ற‌ன‌.

வெறும் திரும‌ண‌ உற‌வுக்கு ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ உற‌வுக்குமே ஒருவ‌ர் சேடிஸ்டாக‌வும், அடுத்த‌வ‌ர் ம‌ஸாக்கிஸ்டாக‌வும் இருந்தால் தான் அந்த‌ உற‌வு தொட‌ரும். த‌ம்ப‌தியில் இருவ‌ருமே சேடிஸ்டாக‌ இருந்தாலோ, அல்ல‌து ம‌சாக்கிஸ்டாக‌ இருந்தாலோ அந்த‌ உற‌வு தொட‌ராது.

மேற்சொன்ன‌ சேடிஸ‌ம்,மாசாக்கிச‌ம் இர‌ண்டுக்குமே அடிப்ப‌டை ம‌னித‌ ம‌ன‌தின் ஆழ‌த்தில் புதைந்து கிட‌க்கும் 2 கோரிக்கைக‌ளே.

1. கொல்லும் விருப்ப‌ம் 2. கொல்ல‌ப்ப‌டும் விருப்ப‌ம்.

மின் உப‌க‌ர‌ண‌ங்க‌ளில் ஆன்,ஆஃப் ஸ்விட்ச் இருப்ப‌து போல‌வே, ம‌னிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களிலும் உயிர்வாழும் இச்சை போல‌வே , த‌ன்னை தான‌ழித்து கொள்ளும் இச்சையும் சேர்ந்தே புதை‌ந்துள்ள‌ன‌.


ம‌னித‌ன் அடிப்ப‌டையில் மிருக‌ம். த‌ன் மிருக‌த்தன்‌மையை ம‌றுக்கும் மிருக‌ம். உட‌லை ஆடைக்க‌ட்டியும், ம‌ன‌தை தான் மிருக‌ம் அல்ல‌ என்ற‌ போலி ந‌ம்பிக்கையாலும் க‌ட்டுப்ப‌டுத்த‌ விரும்புகிறான்.ஆடைக்குள் மிருகமாக இருக்கிறான்.அடி மனதில் மிருக இச்சைகளுடனேயே வாழ்கிறான்.

ப‌ழைய,புதிய கற்காலங்கள்:பழைய கற்காலத்தில் ஆண் பெண் இருவருமே சவால்கள் நிறைந்த வாழ்வை வாழ்ந்த படி, மரணத்தை அடிக்கடி சந்தித்து ஹலோ சொல்லி வந்ததால் அவர்களின் மனதில் இருந்திருக்கக்கூடிய மேற்படி அடிப்படை கோரிக்கைகள் வெகு சுலபமாக நிறைவேறி வந்தன.

இருவரும் சமமான உடல் வலிமையுடன் வாழ்ந்ததால் ஆண் பெண் மனோ தத்துவங்களில் வித்யாசம் ஏற்படவில்லை.

புதிய கற்காலத்தில் வாழ்விலான சவால்கள் ஓரளவு குறைந்தன. ஆண்,பெண்ணை கர்ப காலம், பேறுகாலங்களில் ஓய்வெடுக்க அனுமதிக்க ஆரம்பித்தான். ஓய்வுக்கு பழக்கப்பட்ட பெண்ணுடலும்,மனமும் பலவீனமடைந்தது அவள் தந்திரங்கள் கற்க ஆரம்பித்துவிட்டாள். பலவீனமே பாவங்களின் பிறப்பிடம். //sound mind in sound body//


மனித உடல் எத்தனைக்கெத்தனை உழைக்கிறதோ,அத்தனைக்கெத்தனை வலிமை பெறுகிறது எத்தனைக்கெத்தனை ஓய்வெடுக்கிறதோ அத்தனைக்கெத்தனை பலவீனமடையும். சவால்கள் குறைந்து விட்டதால் ஆண் அவற்றை தானே தனியிருவனாக சமாளிக்க முடிவு செய்தான். டிவிஷன் ஆஃப் லேபர் என்பது ஆரம்பித்தது. (நீ உள்ளே /நான் வெளியே).


மனிதன் வேட்டையாடுதல் ,மீன்பிடித்தலை நம்பி வாழ்ந்த போது சஞ்சாரியாய் இருந்தான். விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்த பின் நிலைத்து வாழ ஆரம்பித்தான். தான் பாடுபட்டு சீர் திருத்திய நிலம் தன் வாரிசுக்கே சேர வேண்டும் என்று திட்டமிட்டான்.

இதையடுத்து பெண்ணின் யோனிக்கு பூட்டுகள் தயாரிக்க ஆரம்பித்தான். பெண் உள்ளுக்குள் கருவ ஆரம்பித்தாள் ." தாளி ! உனக்கு நான் முக்கியமில்லை என் யோனி கூட முக்கிய மில்லை, அது வழியா வர்ர உன் பிள்ளை தானே முக்கியம், உனக்கு வைக்கிறேண்டா வெடி " என்று செயல்பட ஆரம்பித்தாள். கள்ளக்காதல்,தொடுப்பு,வேலி தாண்டுதல் எல்லாமே பெண்ணடிமைக்கு எதிரான புரட்சிகள் தான்.

பெண் குழந்தை பார்க்கும் முதல் ஆண் தந்தை‌

ஆண் குழந்தை பார்க்கும் முதல் பெண் தாய்.

இய‌ல்பாக‌வே உள்ள‌ இன‌க்க‌வ‌ர்ச்சி கார‌ண‌மாய் பெண் குழநதை த‌ந்தையையும், ஆண் குழ‌ந்தை தாயையும் விரும்புகின்ற‌ன‌. ஆனால் பெற்றோர் குழ‌ந்தைக‌ளின் மெல்லிய‌ உண‌ர்வுக‌ளை புரிந்து கொள்ளாது அவ‌ற்றின் சுத‌ந்திர‌த்தை ப‌றித்து தாம் விரும்பும் ஒரு ஃப்ரேமுக்குள் அவ‌ர்க‌ளை அடைக்க‌ பார்க்கின்ற‌ன‌ர். இத‌னால் குழ‌ந்தைக‌ளுக்கு த‌ம் பெற்றோர் மீது ஒருவித‌ ஹேட் அன்ட் ல‌வ் ஏற்ப‌டுகிற‌து.

இளைஞன் தான் பார்க்கும் பெண்களில் தேடுவது,அடைய துடிப்பது (தாயை) தாய் போன்ற வடிவம் கொண்ட பெண்ணை.

எதற்கு? அவள் எப்படியெல்லாம் அவன் சிறகுகளை வெட்டினாளோ அப்படியெல்லாம் இந்த புதிய பெண்ணை இம்சித்து பழிவாங்கத்தான்.


இதையே இளம்பெண்ணுக்கும் பொருத்தி பாருங்கள். கூட்டி கழித்து பாருங்கள். ஆன்ஸர் கரெக்டா வரும். இதனாலதான் திருமணங்கள் ஆயிரங்காலத்து பயிர் என்ற லெஜண்டை தகர்த்து, ஆசை அறுபது நாள்,மோகம் முப்பது நாள் கூட காலாவதியாகி காலை பிறண்டுகின்றன.

சம்போகத்திலும் சுயம்பாகம்

இயற்கையே !
உயிர்கள் பல்கி பெருகுவதே
உன‌து நோக்க‌ம் என்றால்
காதில் குரும்பியை போல்
ப‌டைத்திருக்க‌ கூடாதா வீரிய‌த்தை?

அதென்ன‌வோ வெறும‌னே ஒரு பிப்பெட் செய்ய‌ வேண்டிய‌ வேலைக்கு
ஒரு அங்க‌ம். அது ஆண்மையின் சின்னமாம்.. ஷிட்!

அது நித்த‌ம் அப‌த்திர‌மாக‌வே உண‌ர்ந்து
ப‌த்திர‌ம் தேடி
உத்திர‌மாகி அலைகிறது மூத்திரம் வழியும் துளையினுக்கே !

ஆத்திரம் கொண்டதுவே தலையணை இடையினிலும்
சின்ன இடையாளிருப்பதாய் எண்ணி பாய்ந்து ஓய்ந்திடுதே
யாவும் தளர்ந்த பின்னே
உனக்கே உனக்கென்றுதந்து என்ன லாபம் பார்த்து பசியாறுவதோ

ச‌க‌ல‌ ச‌க்திக‌ளும் அத‌னுக்கே த‌த்த‌மாகி
வ‌ளையொன்றின் மீதே பித்த‌மாகி
க‌ன‌வு,ந‌ன‌வு,உண‌வு போதிலும்
மாதிலும் ம‌ங்கையிலும்
ம‌ன‌ம் ல‌யிக்க‌ செய்கிற‌து.

கங்கையென பொங்குவது மனம் மட்டுமா?
இல்லையில்லை
தாய் வயதொத்தவளையும், கற்பனையிலேனும்
உரித்து பார்க்க வைப்பது எது?
கறைபடுவது மனம் மட்டுமா?
அவள்களும் இவன்களும் தனியுத்தம்
செய்வதென்ன?துவந்தம் மட்டும்
தடை செய்யப்பட்டதென்ன்?

வயிற்றில்வந்து விடும் என்றே காமத்தை கயிற்றால் கட்டி வைத்து வெந்தே சாம்பல் கூடான பின் தான் கூடல் என்றவனை கட்டிவைத்து உதைக்கவேணும்

மூல‌த்தில் இத்த‌னை வெப்ப‌ம் வைத்து
மூல‌ம் எதுவென்று சக்தி மேல் நோக்கி ஏற‌ முனைவ‌து என்று ?
அணை நிர‌ம்பி வ‌ழிவ‌தென்ன‌?
தீயை அணை அணை என்றுஅணங்கை அணை ய‌ துடிப்ப‌தென்ன‌?

சம்போகத்திலும் சுயம்பாகம்
திருமணமாகாத இளைஞன்.

Monday, March 17, 2008

Leaders stops padhayathra and rendering support to Operation India 2000



It is well known to my blog readers that I had drafted a fine plan to erodicate all the problems of India and struggling for the implementation of the same. As Centre and state govt neglected my Operation India 2000 , I had announced a padha yathra to Hyderabad on 2004 th Ugadhi.

When I was to start the local leaders of BC,SC,Vaddara were to stop me and rendered unconditional support to operation idia 2000.

They have also promised that if I go by bus to the capital they will also come with me to meet the cm and request him to implement Operation India

(The photograph shows the leaders rendering support)

Saturday, March 15, 2008

சர்ப்பத்தின் குணம் சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு ஏற்பட்டு


சர்ப்பத்தின் குணம் சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷய‌ங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரட் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,

மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),

உட‌ல‌மைப்பிலும் வித்யாச‌ம் இருக்கிற‌து. ஒன்று ஊளைச்ச‌தை,அல்ல‌து வ‌ய‌துக்கேற்ற‌ வ‌ள‌ர்ச்சி இன்மை காண‌ப்ப‌டுகிற‌து. சதிகள் செய்வது,ச‌திக்கு இல‌க்காவ‌து,ர‌க‌சிய‌ எதிரிக‌ள்,இர‌வில்,இருளில் செய்யும் வேலைக‌ளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிர‌ஃபி)ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ள்,க‌ட‌த்த‌ல்,டூப்ளிகேட் த‌யாரித்த‌ல்,க‌ள்ள‌ கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.

இதற்கான பரிகாரங்களை பின்னொரு பதிவில் காண்போம்.

Friday, March 14, 2008

சர்ப்பதோஷம் உள்ளவர்கள் செக்ஸ் மேனியாக்குகளா? சன்யாசம் தான் கதியா?


சர்ப்பம் யோகத்துக்கும் அறிகுறி:

ஆம். பாம்பு யோகத்துக்கும் அறிகுறியாக உள்ளது. குண்டலிசக்தி கூடஒரு பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் இருப்பதாய் யோக நூல்கள் கூறுகின்றன. யோகத்தின் மீதான ஆவல்,முயற்சி நல்லதே. இதற்கும் ராகு,கேதுக்கள் நல்ல நிலையில் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் தான் யோகத்தில் வெற்றி கிடைக்கும். இல்லாவிட்டால் விழிப்பு நிலைக்கேகிய‌ குண்டலியின் தாக்கத்தை தாங்க முடியாது பித்தாவதோ, அல்லது வெறுமனே கஞ்சா குடிக்கும் சன்யாசியாவதோ நிகழ்ந்துவிடும். இதுவும் சர்ப்பதோஷத்தின் விளைவே.

சர்ப்பம் செக்ஸுக்கு அறிகுறி:

சர்ப்பம் செக்ஸுக்கும் அறிகுறியாக உள்ளது. சர்ப்ப தோஷ ஜாதகர்கள் செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ரகசிய உறவுகள்,கள்ளக்காதல்களுக்கும் சித்தமாகிவிடுவார்கள்.

பாம்புக்குரிய குணநலன்கள் :
பாம்புக்கு ம‌னித‌ர்க‌ள் மீது ப‌ய‌ம். ம‌னித‌ர்க‌ளுக்கு பாம்பு மீது ப‌ய‌ம். என‌வே பாம்பு ம‌றைந்து வாழ்கிற‌து. ம‌னித‌ன் க‌ண்ணில் ப‌ட்டால் அடிப்ப‌ட்டு சாகிற‌து. அல்ல‌து ம‌னித‌னை கொத்தி கொன்று விடுகிற‌து. வ‌ளைந்து வ‌ளைந்து செல்கிற‌து. இரையெடுத்த‌ பின் அசையாம‌ல் கிட‌க்கிற‌து. பாம்புக்கு சிறுநீர்,ம‌ல‌ம் க‌ழிக்க விந்துவை வெளியேற்ற தனித் த‌னி துவார‌ங்க‌ள் கிடையாது. அனைத்துக்கும் பொதுவாக‌ க்ளோய‌கா என்ற‌ துவார‌ம் தான் உண்டு.

ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலை:
ஜாத‌க‌த்தில் ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலையும் ஏற‌க்குறைய‌ இப்ப‌டித்தான். எப்படி என்பதை கொஞ்ச‌ம் முக்கி யோசியுங்க‌ள். அடுத்த‌ ப‌திவில் ச‌ந்திப்போம்.

சர்ப்ப தோஷம் ஒரு விஞ்ஞான கண்ணோட்டம்

சர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவையாவது கேள்வி பட்டிருப்போம். பாம்பை கொன்றுவிட்டதாலோ,பாம்பு புற்றை கலைத்துவிட்டதாலோ தோஷம் ஏற்பட்டிருக்கும், எனவே பாம்பு கடித்து மரணம் ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நம்மையும் அறியாமல் மூளையில் மின்னும்.

தர்கரீதியில்,விஞ்ஞான கண்ணோட்டத்துடன் யோசிக்கும் ஒரு தொழில் முறை ஜோதிடன் என்ற வகையில் இன்று சர்ப்பதோஷம் குறித்த கருத்துக்களை பதிவு செய்கிறேன்.


ஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாவிட்டால் மரணம் ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் அறுதியிட்டு கூறுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை 1987 முதல் எத்தனையோ சர்ப்ப தோஷ ஜாதகங்களை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறேன். சம்பிரதாய பரிகாரங்களையும், எனது நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்திருக்கிறேன்.
அந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மைகளை கூறுகிறேன்.

முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:

இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது. சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. ஆனால் இதற்குள்ள காரண காரியங்களை அறியாத பிராமணர்கள் இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிப்பது சகிக்க முடியாததாய் உள்ளது.

காளாஸ்திரி சர்ப்பதோஷ பரிகாரம்:

காளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி "இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க " என்று ஆரம்பித்த நொடியிலேயே " ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி! காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு" என்று கூறுகிறார்கள்.

தோஷம் போகவே போகாது:

அம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. கிரக நிலை கூட அவ்வளவுதான்.பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதக‌ரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.

பின்னே சர்ப்பதோஷம் என்ற பெயர் எதற்கு:


பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை தானே. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும். இதுதான் அசலான சங்கதி.

தொடரும்

Wednesday, March 12, 2008

சுஜாதாவின் ஒளிரும் முகம்

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று ஒளிரும்,அடுத்தது இருளால் நிறைந்திருக்கும். (முருகனுக்கே 6 முகமாமே,அரசியல்வாதிக்கு ?) கண்ணதாசன் கூட "ஒருவன் மனது ஒன்பதடா" என்று எழுதியிருக்கிறார். நிற்க சுஜாதாவின் ஒளிரும் முகத்தை மட்டுமே நினைவு கூர்வது தான் பண்பாடு. நம் தமிழர்பண்பாடு பொய்யான இந்த உடலையே மெய் என்றுதான் கூறச்சொல்கிறது. அப்படியிருக்க சுஜாதாவின் சாதனைகளை அவர் மறைவுக்கு பிறகு கூட பதிவு செய்யாவிட்டால் அதுதான் அக்மார்க் ஹிப்பாக்ரஸி.


சுஜாதாவையும்,அவர் எழுத்தையும் யார் எப்படி புரிந்து கொண்டார்களோ நான் ஒழுங்காக புரிந்து கொண்டேன்.

1.எழுத்தாளன் என்பவன் தான் வாழும் சமூகத்தின் நிறை,குறை மற்றும் அவலங்களை தன் எழுத்தில் பதிவு செய்யவேண்டும். அதுதான் உண்மையான இலக்கியமாகி காலங்களை கடந்து நிற்கும்.

சமூக உணர்வற்று ஆண்,பெண் உறவுகளை சுற்றி வரும் எழுத்துக்கள் காது குடையும் குச்சிகள் தான்.

மனிதன் சமூக பிராணி.சமூகத்தை அலட்சியம் செய்கிற தனிமனிதனே தண்டிக்கப்படவேண்டும் என்பது என் கட்சி.

இதில் அநேக எழுத்தாளர்கள் தமது கழிவறை,குளியலறை,கட்டிலறையை விட்டு வெளிவராத காலகட்டத்தில் சுஜாதா சமூக அவலங்களை தனது எல்லைக்குள், எல்லையை மீறியே பதிவு செய்தார். (உ.ம்: பதவிக்காக)

2.எழுத்தாளன் சமகால சமூகத்தின் அவலங்களை பதிவு செய்வதோடு புதிய நம்பிக்கைகளையும் தன் படைப்புகள் மூலம் ஊட்ட வேண்டும். (உ.ம்: டாக்டர் நரேந்திரனின் விசித்திர வழக்கு

இது போல் மேலு 98 சங்கதிகளை குறிப்பெடுத்து வைக்கிறேன் .விரைவில் உள்ளிடுகிறேன்

Tuesday, March 11, 2008

"ஆறாது என் மனசு பதினாறு உன் வயசு வா வா"

நானும் "ஆறாது என் மனசு பதினாறு உன் வயசு வா வா" என்று பாட்டு எழுதியவன் தான். இன்று என் மகளுக்கு வயது 16. கலப்பு திருமணம்,நிருத்யோகம்,நிலையில்லாத வாழ்க்கைக்கு முதல் பலி ம‌களின் படிப்பு தான். லக்னத்துக்கு 5ல்சனி,சனிதிசையில் பிறப்பு,வாத்தியார் பிள்ளை மக்கு இப்படி எத்தனையோ கான்செப்ட் வேலை செய்து 7 ஆம் வகுப்பிலேயே குண்டு. எனக்கு இந்நாளைய படிப்புகளின் மீது நம்பிக்கை கிடையாது. நான் பி.காம் படித்தேன். அது சோறு போட வில்லை. தெலுங்கு நானே கற்றேன்,ஜோதிடம் நானே கற்றேன். இவை இரண்டும் தான் சோறு போட்டன. படிப்பில்லாட்டி இழவே போச்சு ஏதோ ஒரு மொழி ஃப்ளூயன்டா எழுத படிக்க பாருப்பா என்றால் ஊஹூம்.

எல்லாமே அரை குறை. எம்.காம் , பி.காம் கதையும் இதுதான் என்று எனக்கு தெரியும் தான். இருந்தாலும் என்ன செய்ய? எப்படியோ மூளை வளராது என்று தெரிந்துவிட்டது. பாடி ஸ்டேமினாவாச்சு இருக்கா என்றால் ராத்திரியில் அம்மாவை கால் பிடிக்கச்சொல்கிறாள். பிடித்தது ரசம் சோறு. மாடல் மாடலாய் ஹேண்ட் பாக் வாங்குகிறாள். காஸ்மெடிக்ஸ் வாங்குகிறாள்.

ஆந்திர‌பிர‌பா க‌ல்தா கொடுத்துவிட்ட‌ ச‌ம‌ய‌ம் இந்திய‌ன் பொலிடிக‌ல் க்ளோச‌ப் என்ற‌ (பதிவு) மாத‌மிருமுறை இத‌ழ் ந‌ட‌த்தி வ‌ந்தேன். தினத்தந்தியில் வாய்ப்பு கிடைத்த பிறகு அதை ஜாம்ப‌ஜார் டைம்ஸ் மாதிரி ந‌டத்தும்படி ஒப்படைத்தேன். மொத்த டர்ன் ஓவரே 3 முதல் 4 ஆயிரம் தான். அதற்கே மதிய‌ம் சோற்றுக்கு கூட‌ வ‌ர‌மாட்டேன் என்கிறாள். பூனைக்கு ம‌ணி க‌ட்டிய‌ தினுசில் செல் வாங்கி கொடுத்தேன். நான் கால் செய்தால் க‌ட் செய்கிறாள்.

இப்போ புரியுது பெத்த‌வ‌ங்களை எப்படியெல்லாம் இம்சை பண்ணியிருக்கேன்னு..
அட தேவுடா !‌

Sunday, March 9, 2008

மகளிர் தினம் : மகளிருக்கு டிப்ஸ் : பாகம்:2

மகளிர் தினம் : மகளிருக்கு டிப்ஸ் : பாகம்:2

வழக்கமாக நான் செய்யும் வில்லங்க பதிவுகளை 50 பேருக்கு குறையாமல் படித்துவிடுவார்கள். ஆனால் இந்த பதிவின் பாகம் ஒன்றை 10 பேர் வரை தான் படித்திருக்கிறார்கள். பாவம் ஒரே ஒரு வாசகி மறுமொழி செய்திருக்கிறார். இந்தியானின் ஏழ்மைக்கும்,மன்மோகன்,சிதம்பரம் ஆகியோரின் செயல்பாடுகளுக்கும் பின்னணி அவர்களின் மனைவியரே என்று கூறுவேன். ரஜினி கட்சி ஆரம்பிக்காதிருப்பதற்கும், சிரஞ்சீவி துவக்காத கட்சிக்கு தொண்டர் பயிற்சி பட்டறை நடத்துவதற்கும் அவரவர் மனைவியர் ஓரளவாவதுகாரணமாக இருந்து தான் தீரனும்.
இதுதான் லாஜிக்/.


யதார்த்தம் இப்படியிருக்க பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுவது கிரிமினல் குற்றம் மட்டுமல்ல தேச துரோகம். ஆண் என்பவன் ஆக்கிரமிக்க துடிப்பவன். பெண் ரிசீவர். ஆண்களை மாற்றுவதை விட பெண்களை மாற்றப்பார்ப்பது நல்லது. பல்வேறு காரணங்களால் ஆண்கள் ஆண்மை இழந்துவரும் இந்த காலகட்டத்தில் பெண்கள் ஆண்களின் பாத்திரத்தை ஏற்று வாழவேண்டிய கட்டாய‌ம் ஏற்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆணிலும் பெண்மை,ஒவ்வொரு பெண்ணிலும் ஆண்மை இருக்கிறது. பெண்ணில் உள்ள ஆண்மை விதையாகவே இருக்கிறது. முளைத்து கருகிவிட்ட ஆண்களின் ஆண்மையை நம்புவதை விட ,நாளிதுவரை விதையாகவே இருந்து விட்ட பெண்களின் ஆண்மையை நம்புவது மேல் என்று தோன்றிவிட்டது.


பெண் அன்புக்கு ஏங்குகிறாள். அன்பை தருவதாய் வாக்களிக்கும் ஆண்வர்கம் பின் நிஜசொரூபத்தை காட்டுகிறது. இதனால் பெண் பேயாகிறாள். பெண் உடல்ரீதியில் பலவீனமானவள். பாதுகாப்பற்று உணர்கிறாள்.

அவளுக்கு பாதுகாப்பு கொடுக்குமத்தனை ஆண்மை இன்று ஆண்களில் இல்லை.எனவே அவளே ஆணானாள். பெண்ணினத்தை நான் கைகூப்பி ,வணங்கி கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே..

உங்கள் உடல்,மனம் ஆரோக்கியமாக இருந்தால், புத்தி கூர்மையானதாய் இருந்தால்,ஆன்மா தூய‌தாய் இருந்தால் அதுவே போதும். வீடு,நாடு இர‌ண்டுமே சுவ்ர்க‌மாகிவிடும். உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ஆரோக்கிய‌ங்க‌ளுக்காக‌ ,புத்தி கூர்மையை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌த‌ற்காக‌ "எது" வேண்டுமானாலும் செய்யுங்க‌ள்.

பாத்திர‌ம் அறிந்து பிச்சையிடு என்ப‌தை போல் உங்க‌ள் தியாக‌ம் அபாத்திர‌ தான‌ம் ஆகிவிடாது எச்ச‌ரிக்கையாயிருங்க‌ள்.

எந்த‌ த‌க‌ப்ப‌னும்,எந்த‌ க‌ண‌வ‌னும்,எந்த‌ பிள்ளையும் சும்மா போடுவ‌தில்லை சோறு. அது உங்க‌ள் உரிமை. உல‌க‌ம் பெரிது ..குடும்ப‌ம் ஒரு பொடி ட‌ப்பா. பார்வையை ச‌ற்று விரிவு ப‌டுத்துங்க‌ள். விஸ்வ‌ ரூப‌ம் எடுங்க‌ள். வேண்டுமானால் அன்புக்கு க‌ட்டுப்ப‌ட்டு பொடி ட‌ப்பாவுக்குள் வாழ்ந்து காட்ட‌லாமே த‌விர‌.. சிறைப்ப‌ட்டிருக்க‌ கூடாது.

குடும்ப‌மே பொடிட‌ப்பா என்றான‌ பிற‌கு காத‌ல்,க‌த்திரிக்காய்,முறை த‌வ‌றிய‌ ‌ காத‌ல் ,இத்யாதியெல்லாம் உயிருக்கு உலை வைக்கும் விஷ‌ய‌ங்க‌ள். கொஞ்ச‌ம் மாத்தி யோசிங்க‌..

அள‌வுக்கு மிஞ்சினால் அமுத‌மும் ந‌ஞ்சு. தியாக‌மும்தான்.

Saturday, March 8, 2008

மகளிர் தினம் தொடர்பாக மகளிருக்கு சில டிப்ஸ்:

1. காலைக்கடன் தீர்ப்பதை வீட்டு வேலைகள் காரணமாய் தள்ளிப்போடாதீர்கள்

2.வெறுமனே காப்பியை குடித்து வயிற்றை நிரப்பாதீர்கள்

3.வீணாகிறதே என்று சுண்டு கறி,சுண்டு குழம்பெல்லாம் போட்டு திணிக்காதீர்கள்

4.தலைக்கு குளித்துவிட்டு துடைக்க கூட நேரமின்றி பம்பரமாய் சுழலாதீர்கள்

5.அவர் சாப்பிடட்டும் என்று காத்திருந்து கண்ட நேரத்தில் சாப்பிடாதீர்கள்

6.இந்த‌ பாழாய் போன‌ டி.வி.யை பார்க்காதீர்க‌ள். அப்ப‌டியே பார்த்தாலும் ஒவ்வொருவரும் நீட்டி முழ‌க்கி பேசும் அர‌ட்டை அர‌ங்க‌ம் இத்யாதியை பார்க்காதீர்க‌ள். ஆட்டோ வ‌ந்து நிற்ப‌தை அரை ம‌ணி நேர‌ம் காட்டும் சீரிய‌ல்க‌ளை பார்க்காதீர்க‌ள்.

7.அக்க‌ம் ப‌க்க‌த்து பெண்க‌ளிட‌ம் ரொம்ப‌ உர‌சாதீர்க‌ள். நீங்க‌ள் உர‌சுவ‌தே டேஞ்ஜ‌‌ர்.இதில் அந்த‌ விவ‌ர‌ங்க‌ளை க‌ண‌வ‌ருக்கு சொல்வ‌து அதைவிட‌ டேஞ்ச‌ர்.

8.பீட்ஸா,நூடுல்ஸ் இழ‌வெல்லாம் பிள்ளைக‌ள் தின்ன‌ட்டும். மீந்த‌தை தின்ப‌தாய் எண்ணி அவ‌ற்றை முக‌ர்ந்து கூட‌ பாராதீர்க‌ள்

9.இந்த‌ கால‌த்தில் புருஷ‌ன் என்ப‌வ‌ன் புருஷ‌ன் அல்ல‌. வேலை தான் புருஷ‌ன். அல்ல‌து சேமிப்பு தான் புருஷ‌ன்.

10.ப‌ண்ம் கெட்டுப்போனா க‌ட‌ன் வாங்க‌லாம். ம‌ஞ்ச‌ள் நோட்டிஸ் கொடுக்க‌லாம். உட‌ம்பு கெட்டுப்போனால் நாஸ்திதான்.

11.உட‌ம்புக்கு ஏதும் வ‌ராம‌ (நோய்ங்க‌)பார்த்துக்க‌ங்க‌. உட‌ற்ப‌யிற்சி, க‌ல‌ப்புண‌வு(க‌ல‌ப்ப‌ட‌ உண‌வில்லிங்க‌/அர்சி,கோதுமை,கேழ்வ‌ர‌கு,க‌ம்பு, காய்க‌றி,கீரை க‌ல‌ந்து சாப்பிட‌ற‌து க‌ல‌ப்புண‌வு), யோகா எது வேண‌ம்னா செய்ங்க‌ உட‌ம்பு ப‌த்திர‌ம்

12. அந்த‌ 3 நாட்க‌ள்ள‌ வறுமையை எண்ணாம‌ தாராள‌மா செல‌வு ப‌ண்ணி பாதுகாப்பா இருங்க‌. நோய் தொற்றுக்கு அந்த‌ விஷ‌ய‌த்தில் சிக்க‌ன‌ம் தான் முத‌ல் கார‌ண‌ம்.

13.குடும்ப‌ம் முக்கிய‌ம் தான். நீங்க‌ குடும்ப‌த்துக்கு அதை விட‌ முக்கிய‌ம். அதை விட‌ முக்கிய‌ம் நீங்க‌ உயிரோட‌,ஆரோக்ய‌த்தோட‌ இருக்கிற‌து.

14. ஒன்னு உட‌ம்புக்கு வேலை கொடுங்க‌. இல்லை த‌லைக்கு வேலை கொடுங்க‌. ரெண்டுத்துக்கும் கொடுத்திங்க‌ க‌தை க‌ந்த‌ல்தான். டென்ஷ‌ன் வேணாங்க‌..

15.உரிமைக்கு ப‌ங்க‌மா? குடும்ப‌ ந‌ல்வாழ்வுக்கு பிர‌ச்சினையா? தூசு விழும்போதே பொங்கி எழுந்துருங்க‌ ..இல்லாட்டி தூண் விழுந்துரும்.

16.ப‌ச‌ங்க‌ முக்கிய‌ம் தான். அதுக்காக‌ அவ‌ங்க‌ ப‌ண்ற‌ த‌ப்புக‌ளை க‌ண‌வ‌ர் கிட்டே ம‌றைக்காதிங்க‌.

17.இந்த‌ கால‌த்துல‌ யாரையும்(க‌ண‌வ‌ன்/க‌ண‌வ‌னின் ந‌ண்ப‌ன்/இஸ்திரிகார‌ன் எந்த‌ ம‌..ரானாலும் ச‌ரி ந‌ம்பின‌ மாதிரி ந‌டிக்க‌னுமே த‌விர‌ குருட்டுத்த‌ன‌மா ந‌ம்பிராதிங்க‌

18. க‌ர்ப‌ம்,குழ‌ந்தை பேறு ப‌த்தியெல்லாம் சொல்ல‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லைனு நினைக்கிறேன்.. அவ‌சிய‌ம்னா சொல்லுங்க‌ இன்னொரு ப‌திவு போட்டுருவ‌ம்.

குறிப்பு:
இதையெல்லாம் தெரிஞ்சுக்க‌ என் அம்மாவ‌ ப‌றிகொடுக்க‌ வேண்டிய‌தாயிருச்சுங்க‌.. 

Thursday, March 6, 2008

My Account Number

Please note down my savings bank account number, if u want a detailed consultancy deposit ur fee directly in to my account and mail ur birth details to my mail:

Name: S.Murugan
Bank: State Bank of India,Greams pet Branch
A/c Number: 30333022274

Tuesday, March 4, 2008

ஆக்குட் சுஜாதா பக்த சிகாமணிகளுக்கு ஒரு விளக்கம்

"தத்து பித்து பிராமண குழுவில்.. " என்ற‌ வார்த்தையை மீண்டும் மீண்டும் உரக்க சொல்வேன். இந்திய சுதந்திர போர் முதலாக இன்றைய மாவோயிஸ்டு தீவிர வாதம் வரை சித்தாந்த கர்த்தாக்கள் பிராமணர்கள் தான். ஒவ்வொரு மாநில செயலகத்திலும் ஆட்சி செலுத்துவது இந்த தத்து பித்துகள் தான். அதனால் தான் உலகத்துக்கே அட்சய பாத்திரமாகியிருக்க வேண்டிய இந்தியா உலகின் பிச்சைப்பாத்திரமாகியிருக்கிறது.

சிட்டூரின் ஜாதியில் எல்லோருமே அறிவாளிகளாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தத்து பித்துகள் இல்லை. தெரிந்தவர்கள் சொல்கிறார்கள் என்று நம்பி பின்பற்றித்தான் இந்த கதி கெட்ட நிலைக்கு வந்திருக்கிறோ.

நுழைந்து பார்த்தபிறகுதானே தெரிகிறது கலப்படம் அவர்களின் குலத்தொழில் என்று. ஜனத்தொகையில் 52 சதவீதமாக இருக்கும் பஹுஜனங்களான நாங்கள் நாக்கையும், கையையும் அடக்கிக்கொண்டு, கமெண்ட்ஸ் எழுத வேண்டிய அவசியமில்லை. தாங்க‌ள் இதுகுறித்து யோசிப்பது தங்களுக்கு நன்மை பயக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. சதா சத்தம் போட தவளை இல்லிங்க சித்தூர் முருகேஷன் .. முருகேஷனின் எழுத்து ரஜினி மாதிரி (சும்மா நக்கலுக்கு தான் ..) வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துரும். நம்ம எழுத்து உளறல் இல்லிங்க.. நீறு பூத்த நெருப்பாயிருக்கும் திராவிட மனங்களை கிளறல்.
இடஒதுக்கீடை என்றுமே சுஜாதா ஆதரித்ததில்லை. (தூண்டில் கதைகள் படிங்க) அவர் ஆதரித்தது பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீட்டைத்தான்.

ஒரு பாடாவ‌தி சினிமாவை 2 1/2 மணி நேரம் பார்த்துட்டு வந்தாலே மூளை வேலை செய்ரதில்லை. நீங்க பல லட்சக்கணக்கான வருசமா ..உங்க உயிரும் எங்க ...ம் சமம்டா என்று படம் காட்டியிருக்கிங்க.. ஞானத்தை பூட்டி வச்சுக்கிட்டிங்க..


பணத்தை வேணம்னா சம்பாதிச்சுரலாம். ஞானத்துக்கு எங்க போகறது ! உங்களாவா ராஜசுகத்துல சொத்தை கோட்டை விட்டிருக்கலாம் அறிவு அப்படியே தலைமுறைக்கு தலைமுறை ட்ரான்ஸ்ஃபர் ஆகுதே.. அதுலயும் குறுக்குல பாய்ற அந்த அறிவோட போட்டி போட முடியாத ,மேல் சாதியினரிம் சாதிக்கொடுமை வண்டு துளைத்த எங்கள் மக்களின் மர மண்டைகளில் ஞானம் ஏறாது என்ற கண்டுபிடிப்பால் தான் சாதிவாரி ஒதுக்கீடு கேக்கறோம். ஆனால் சுஜாதா "ஜாதி அபிமானத்துல" ஓப்பன் காம்படிஷன்ல தட்றதோட, ஓ.பி.சி லயும் தட்டட்டும்னு பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீட்டுக்கு தான் குரல் கொடுத்துகிட்டு இருந்தார்.

தம் க‌ன‌வு நிறைவேறாதுனு தெரிஞ்சுகிட்டு தான் ரிச‌ர்வேஷ‌ன்ல‌ வ‌ந்த‌ எங்க‌ ஆளுங்க‌லால‌ முன்னேற்ற‌ம் பாதிக்க‌ப்ப‌டுதுனும், ச‌முதாய‌ம் பாழாகுதுனும் வா.ப‌ழ‌த்துல‌ ஊசி ஏத்திக்கிட்டு இருந்தார்.

ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் சினிமா சிவாஜி நடித்த ஹிட்லர் உமாநாத்தின் உல்ட்டா


ஒரே கதையை மீண்டும் மீண்டும் எழுதிய லட்சுமி,ராஜம் கிருஷ்ணன்..


மேற்சொன்ன லட்சுமி,ராஜம் கிருஷ்ணனில் லட்சுமியின் மிதிலா விலாஸ் மட்டும் காவிய ரேஞ்சில் என்னை பாதித்ததை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ராஜ‌ம் கிருஷ்ண‌னின் க‌தைக‌ள் எப்போதாவ‌து விதியின்றி ப‌டித்த‌வைதான். இதில் நான் க‌ண்டுபிடித்த உண்மை என்னவென்றால் இருவருமே ஒரேகதையை மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார்கள் என்பதே !

லட்சுமியின் ஒரேகதை:
வேலைக்கு செல்லும் பெண், குடும்பம்,அலுவலகம் இரண்டிலும் பல பிரச்சினைகளை சந்திப்பாள்..இறுதியில் சுபம். அல்லது ஒரு பெண் பணக்காரர்களான தூரத்து உறவினர்கள் வீட்டில் மாட்டிக்கொண்டு முழிப்பாள். இதையே தான் அவர் மாற்றி மாற்றி எழுதிவந்திருக்கிறார். வாழ்க !

ராஜம் கிருஷ்ணனின் ஒரே கதை:

கோபக்கார ஆண்,அவன் பெரும் பணக்காரனாக இருப்பான். பெண் ஏழை ஆனாலும் தன்மானம் மிக்கவளாக இருப்பாள். ஏற்கெனவே இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும். இருந்தாலும் அவ‌ர்க‌ளிடையில் காத‌ல் நீறு பூத்த‌ நெருப்பாக‌ இருக்கும். பிற்ப‌குதியில் புரித‌ல் ஏற்ப‌ட்டு ஒன்று சேர்வார்க‌ள்.


அட‌ த‌லையெழுத்தே !

ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் சினிமா சிவாஜி நடித்த ஹிட்லர் உமாநாத்தின் உல்ட்டா என்பது தெரியுமா?
"ஹிட்லர் உமாநாத்" ல சிவாஜி கோழை, மனைவி ஹிட்லரோட கதையை சொல்லி ஜும் ஏற்றி வீரனாக்கி,பணக்காரனாக்குவார். இதை தெலுங்குல உல்ட்டா அடிச்சு "தர்மாத்முடு" னு ஒரு படம் எடுத்தானுங்க..

அதைத்தான் ரஜினியை போட்டு ஏவிஎம் நலாவனுக்கு நல்லவன் எடுத்தாங்க . மாப்பிள்ளை லொள்ளு பண்ர கான்செப்டைமட்டும் அப்படியே உருவிட்டாங்க..


இதே மாதிரி இன்னொரு கதை.. தெலுங்குல "பஹுதூரபு பாட்டசாரி" னு ஒரு படம் . இதுல ஹீரோவுக்கு கால் போயிரும்..குடும்பம் கைவிட்டுரும். ஹீரோ நின்னு காட்டுவார். இதை ஹீரோவுக்கு கை போயிர்ரதா தமிழ்ல "வாழ்க்கை" நு ஒரு படம் எடுத்தாங்க. அதை மறுபடி தெலுங்குல ரீமேக் பண்ணி "ஓ தன்ட்ரி தீர்ப்பு"ன்னு எடுத்து விட்டானுங்க அடப்பாவிகளா!

இன்னொரு தமாசு சொல்றேன் கேளுங்க.. தெலுங்குல தாசரி நாராயணராவ் பெரிய்ய டைரக்டர். அவர்கிட்ட மொத்தமா 3 கதை தான் இருக்கு. அதையே மாத்தி மாத்தி எடுத்து ஹிட்டும்,ஃபெயில்யூரும் கொடுத்துக்கிட்டே இருக்கார். அவை வருமாறு:

1. இரண்டு நண்பர்கள் கதை
2. அப்பா,அம்மாவுக்கு பச‌ங்க கை கொடுத்துர்ர கதை
3. ஒருத்த‌னுக்கு/ஒருத்திக்கு அநியாய‌த்துக்கு மேல‌ அநியாய‌ம் ந‌ட‌க்கும் உட‌னே அவ‌ள் ஏதோ ஒரு கெட்ட‌ப்ல‌ (பொப்பிலி புலி,மைச‌ம்மா ஐ.பி.எஸ் இப்ப‌டி எத்த‌னையோ ப‌ட‌ம்) வ‌ந்து வில்ல‌னுங்க‌ளை போட்டு த‌ள்ளிருவார்/த‌ள்ளிருவாள்

அட‌ இழ‌வே !

Saturday, March 1, 2008

தற்போது மானங்கெட்ட அரசாங்கங்கள், உலக வங்கி உத்தரவுப்படி அமல்படுத்திவரும்வி.ஆர்.எஸ் போன்றதே தற்கொலை.

த‌ற்கொலை என்றால் என்ன‌ என்ப‌தை பற்றி சிந்திப்போம். தற்போது மானங்கெட்ட அரசாங்கங்கள், உலக வங்கி உத்தரவுப்படி அமல்படுத்திவரும்வி.ஆர்.எஸ் போன்றதே தற்கொலை.

வி.ஆர்.எஸ் வாங்க எத்தனை காரணங்கள் உண்டோ அத்தனை காரணங்கள் தற்கொலைக்கும் உண்டு. இந்த மொத்தபடைப்பும் ஒரே வஸ்துவிலிருந்து தான் பிறந்தது. இதில் உள்ள உயிர்களுக்கெல்லாம் ஆதியானது ஒரே உயிர் தான். படைப்பு எப்படி ஒரே வஸ்துவிலிருந்து பிரிந்து விரிந்ததோ .. அதே போல் இணையவும் கூடும்.

தாம் ஒரே உயிராக (உடல்களின் தடையின்றி) இருந்த நாட்களின் நினைவு உயிர்களின் அடி மனதில் இருந்து தான் ஆகவேண்டும். உடல்களின் தடையை மீறி உயிர்கள் இணைய முயற்சிப்பது ஓருயிராகிடத்தான். இதற்கான முன்னோட்டம் தான் உடலுறவு. கொலை,தற்கொலை, எல்லாமே மீண்டும் ஓருயிராகிட தடையாக இருக்கும் உடலை நீக்குவதே..

ஈருயிர் ஓருயிராகிட‌ த‌டையாக‌ இருப்ப‌து அவ‌ர‌வ்ர் ஈகோவும் தான். அத‌னால் தான் ம‌னித‌ர்க‌ள் எதிராளியின் ஈகோவை ந‌சுக்கிடவே துடிக்கின்ற‌ன‌ர். ஈகோ ஒழிந்தால் ஓருயிராகிவிட‌முடியும் என்ற‌ உண‌ர்வு அடிம‌ன‌திலாவ‌து இருந்துதான் தீரும். புலால் உண்ணுத‌ல், உண்ணுத‌ல் யாவுமே ப‌டைப்பை ஒன்றாக்கும் முய‌ற்சியோ என்று தோன்றுகிற‌து. இது குறித்த பதிவர்களின் கருத்தை அறிய ஆவலாயுள்ளேன்.

பாலா ரஜினிக்கு போட்ட ஜால்ரா..புல்..லரிக்குதுங்க!

பாஷா பட டிஸ்கஷனின் போது உ.வ.பட்டு பேசிக்கொண்டே பாலா ரஜினியின் சீட்டில் உட்கார்ந்துட்டாராம்.(சி.எம்.நாற்காலி பாருங்க !) ரஜினி மறுபடி அந்த நாற்காலியில் உட்காரவே இல்லையாம். டெட்டாயில்,ஃபெனாயில் போட்டு கழுவிட்டு உட்காரலாம்னு நினைச்சாரோ என்னவோ. பாலா ! ஜால்ரா சத்தம் சகிக்க முடியலை ..கொஞ்சம் அடக்கி வாசியும் பிள்ளாய்!

ரஜினிக்கு கிடைத்த தகுதிக்கு மீறிய அங்கீகாரம் ஒரு விபத்து. ஒரு காலத்தில் வேண்டுமானால் ரஜினி ஒரு வித்யாசமான நடிகராக இருந்திருக்கலாம். வர வர மாமி கழுதைப்போலானாள் என்பது போல் அக்மார்க் அரைத்தமாவாகி விட்ட பிறகும் காலி பெருங்காய டப்பா மணப்பது போல் மணந்து வருகிறார். அந்த பெருங்காயத்துக்கு ஜல் ஜக் போட்டு என்ன லாபம்? ஒரு வேளை சுஜாதாவின் இடத்தை பிடிக்க ரோபோ ரயிலில் தொற்ற ஒரு முயற்சியா?

Visit Site for CK. Chittoor Tiger

ஜெயமோகன் எம்.ஜி.ஆர் சிவாஜி பற்றி எழுதியதை ஆ.வியில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

ஜெயமோகன் எம்.ஜி.ஆர் சிவாஜி பற்றி எழுதியதை வலைப்பூவில் எத்தனை பேர் படித்திருப்பார்கள்? ஆயிரம் ..இரண்டாயிரம் ஏதோ ஒரு இழவு. ஆனால் ஆ.வி.புண்ணியத்தில் தமிழ்கூறு நல்லுலகம் மொத்தம் படித்துவிட்டது. பிராமணரல்லாத இரண்டு நபர்கள் காலம் கடந்தும் சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பதை சகிக்க முடியாத ஆ.வி. ஜெயமோகன் பெயரை சொல்லி ஹோல் சேலாக அவமத்தித்து விட்டது

குறிப்பு:

வி.ஐ.பிக்களைப்பற்றி நேரில் பார்த்தது போல் கூறப்படும் வதந்திகள் ஆயிரமாயிரம். அவற்றை வலைப்பூவில் வைத்தது தான் ஜெயமோகனின் தவறு. ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாட வந்த இந்நாள் தமிழக அரசியலில் இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்ற ஒருவரை இரண்டு தலைவர்கள் (ஒருவர் தற்போது உயிருடனில்லை) இன்னொருவ‌ர் நாட்க‌ளை எண்ணிக் கொண்டிருக்கிறார்) வேறுவித‌மான‌ ந‌ட‌ன‌ம் ஆட‌ச்செய்த‌தாக‌ கூட‌ வ‌த‌ந்தி உண்டு. இதையெல்லாம் உறுதிப்ப‌டுத்திக்கொள்வ‌து எப்ப‌டி. ஒவ்வொரு வி.ஐ.பி. குறித்தும் அவ‌ர்க‌ள‌து இருண்ட‌ ப‌க்க‌ங்க‌ள் குறித்த‌ க‌தைக‌ள் ஆயிர‌மாயிர‌ம் உண்டு. ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ஆட்க‌ள் இருக்கும் வ‌ரை அவை இருளில் இருக்கும். பிற‌கு?

ஜனாதிபதியையும்,பெண்களையும் ஒரு சேர அவமதித்த ஆனந்த விகடன்

ஆனந்த விகடனில் மதன் பதில்களில் ஜனாதிபதியும்,பெண்களும் ஒரு சேர அவமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாசகர் ஒரு பெண் ஜனாதிபதியானதால் என்ன லாபம் என்று கேட்கிறார். அதற்கு மதன் பதிலளிக்கிறார். ஜனாதிபதிக்கு பெண்பால் ஜனாதிபத்தினியா என்று ஜோக் எழுத முடியும் என்று கூறியுள்ளார். மதனின் நோக்கம் சிரிக்க வைப்பது மட்டுமே என்றால் ஜனாதிபதிக்கு பெண்பாலாக ஜனாதிபதினி என்று சொல்லியிருக்கலாம். ஆனால் ஜனாதி"பத்தினி" என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

இதைத்தான் பார்ப்பன குறும்பு,பூனைக்குறும்பு என்று சொல்கிறார்கள் போலும். இந்த பதிலால் ஜனாதிபதியை மட்டுமல்லாது பெண்களையும் ஆ.விகடன் அவமதித்துவிட்டது.
ஒரு பிராமணப்பெண் ஜனாதிபதியாகியிருந்தால் இந்த கேள்வி பிரசுரமாகியிருக்குமா?
இது போன்ற பதில் தரப்பட்டிருக்குமா என்பதே என் கேள்வி.

பெண்ணுரிமை வாதிகள் இந்த பொறுப்பற்ற பதிலை கண்டிக்க வேண்டும் என்று கோருகிறேன்.