Thursday, November 18, 2010

எம்.எல்.என்னை "தூக்கிட்டு" வர சொல்வேன்னாரு

இப்போது நான் சொல்லப் போகும் விஷயங்களை நம்பவே முடியாது. ஆனால் அட்சர சத்தியம். இதற்கெல்லாம் நான் காரணமோ பொறுப்போ அல்ல ..யாவும் தெய்வாதீனம்.

இந்தியாவை பணக்கார நாடாக்க நான் திட்டம் தீட்டியதும்,சந்திரபாபுவுக்கு அனுப்பியது,அவர் அதை 5 வருடம் கிடப்பில் போட்டது,பதில் தர தபால் செலவுக்கு நான் ரூ 10 எம்.ஓ அனுப்பியது ,பிறகு கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு போட்டது,பத்திரிக்கைகள் மூலம் வழக்கு விவரம் அறிந்த சந்திரபாபு என் திட்டத்தை உரிய வகையில் உபயோகித்துக் கொள்வதாய் கடிதம் போட்டது / இந்த விசயமெல்லாம் தங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கலாம்.(லேட்டஸ்டா கூட ஒரு பதிவுல இந்த விருத்தாந்தங்களையெல்லாம் சொல்லியிருக்கேன்)

என்.டி,ஆர் சிங்கம். சந்திரபாபு நரி. முதலில் என்.டி.ஆருக்காக நரி வேலைகள் செய்தார்.பின்பு என்.டி.ஆருக்கே நரி வேலை காட்டி அல்வா கொடுத்து முதலில் வீட்டுக்கும்,பின் எமப்பட்டணத்துக்கும் அனுப்பிய நரி சந்திரபாபு. அவர் 4 காலையும் தூக்கி, திட்டத்தை உரியவகையில் உபயோகித்துகொள்வதாய் கடிதம் போட்ட உடனேயே எனக்குள் புளி கரைக்க ஆரம்பித்து விட்டது.

முதல்வர் அலுவலகத்திலிருந்தே மாவட்ட அரசு இயந்திரத்துக்கு நான் சப்மிட் செய்யும் எந்த வித மனு,புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்று குறிப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

என்னுடன் வந்து கொடுத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு மிஸ்ஸிங் கம்ப்ளெயிண்ட் மீது நடவடிக்கை எடுக்க 6 மாதம் பிடித்தது. அதுவும் மனித உரிமைகள் கமிஷன் உத்தரவு பிறப்பித்த பிறகு.

ச‌ந்திர‌பாபு இடைத்தேர்த‌லுக்கு திட்ட‌மிட்டு ரேஷ‌ன் கார்டுக‌ளை அள்ளிவிட‌ உத்த‌ர‌விட்டார். ஊரில் ல‌ட்சாதிப‌தி,கோடீஸ்வ‌ர‌ன் எல்லாம் அரிசி கார்டு வாங்கிக் கொண்டிருக்க‌, ப‌ஞ்சை ப‌ராரியான‌ என‌க்கு அல்வா கொடுத்து விடுவார்க‌ளோ என்ற‌ அய்ய‌ம். அதுவும் ரேஷ‌ன் கார்டு என்ப‌து நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஆகிவிட்ட‌ கால‌க‌ட்ட‌த்தில் நாட்டுக்காக‌ நாயாய் உழைக்கும் என‌க்கு கார்டு ம‌றுக்க‌ப் ப‌ட‌வே க‌டுப்பாகிவிட்டேன்.

எம்.ஆர்.ஓ வை பிடித்து எகிறினேன்.(1991 ந‌வ‌ம்ப‌ரில் காத‌ல் க‌டிம‌ண‌ம் கொண்ட‌ உட‌னேயே கார்டுக்கு ப‌திவு செய்த‌வ‌ன் நான். 2004 ல் கூட‌ ம‌றுத்தால் எப்ப‌டியிருக்கும்) கோர்ட்டுக்கு போவேன் என்று மிர‌ட்டினேன். "அட‌ போய்யா" என்றார் அவ‌ர்.

கோர்ட்டுக்கு போக‌ ஆட்டோவுக்கே காசில்லாத‌ நான் வ‌க்கீல் பார்த்து ,வ‌ளைக்காப்பு ந‌ட‌த்துவ‌தெல்லாம் ந‌ட‌க்கிற‌ விஷ‌ய‌மா? லோக் அதால‌த்துக்கு த‌ட்டினேன் ஒரு புகார்.

அப்போது யாரோ க‌வுடு தான் மாவ‌ட்ட‌ நீதிப‌தி. பாவ‌ம் ம‌னுச‌ன் எங்கிருந்தாலும் வாழ்க‌ ரொம்ப‌வே ந‌க்க‌ல‌டித்தாலும் " கார்ட் கொடுத்துருங்க‌ப்பா' என்று க‌லெக்ட‌ருக்கு ஒரு க‌டித‌ம் அனுப்பினார், க‌லெக்ட‌ர் எம்.ஆர்,ஓ வை காய்ச்சினார். எம்.ஆர்.ஓ எம்.எல்.ஏ விட‌ம் ஓடி புகார் செய்தார்.

எம்.எல்.ஏ வுக்கு என்னை தெரியும். ப்ரைவேட் எலெக்ட்ரிக்க‌ல் வைர்மேன் ச‌ங்க‌ பி.ஆர்.ஓ வாக‌. உட‌னே யூனியனுக்கு  போட்டார் போனை. " எங்க‌யா உங்க‌ பி.ஆர்.ஓ? ப‌த்து நிமிஷ‌த்துல‌ என் முன்னாடி இருக்க‌னும். இல்ல‌ தூக்கிட்டு வ‌ர‌ச்சொல்லுவேன்" என்றார்.

யூனியன் காரவுக "த‌ பாருப்பா நீ இல்ல‌ன்னா ச‌ங்க‌ம் ந‌ட‌க்க‌ற‌து க‌ஷ்ட‌ம். காசு த‌ர்ரேன். எங்க‌னா போயிரு. நான் பேசிக்கிறேன்"னாய்ங்க. வ‌ர்ர‌ ல‌ட்சுமிய‌ ஏன் விட‌னும்னு சில்ல‌றை வாங்கி கிட்டு ஹைய‌ர் சைக்கிள் ஒன்னு எடுத்துக் கிட்டு எம்.எல்.ஏ வீட்டுக்கு போனேன்.

நம்ம முகத்துல உள்ள பிராமண களை , சந்தன பொட்டு, கழுத்துல மாலை,பவ்யமான நமஸ்காரம்லாம் பார்த்ததும் எம்.எல்.ஏவுக்கு சுதி இற‌ங்கி போச்சு. " என்ன‌யா நீ உன‌க்கு பிர‌ச்சினைன்னா என‌க்கு சொல்ல‌லாம்ல‌ " என்று இற‌ங்கி வ‌ந்தார்.

" அய்யா! என‌க்கு ஏதோ நால‌ணா த‌மிழ்,நால‌ணா தெலுங்கு ,ப‌த்து பைசா இங்கிலீஷ் தெரியும் பி.ஆர்.ஓ ஆகிட்டேன்,உங்க‌ளை தெரியும். ஒன்னுமே இல்லாத‌வ‌னையும் இப்ப‌டித்தானே சார் லொள்ளு ப‌ண்ணுவாங்க‌ எல்லாருக்கும் ரெக்க‌ம‌ண்ட் ப‌ண்ணி கார்டு வாங்கி த‌ந்துருவிங்க‌ளா " என்றேன் .

இவ‌ன் எங்க‌டா மாட்டினான் த‌மிழ் சினிமா மாதிரி பேசிக்கிட்டுன்னு எம்.எல்.ஏ. நினைச்சுருப்பாரு. " அட‌ நீ கூட்டிட்டு வாயா நான் வாங்கித் த‌ரேன்" என்றார். மேட்ச் ட்ராவில் முடிந்த‌து.

Wednesday, November 17, 2010

அனைத்து எம்.பிக்களோட மெயில் ஐடியும் போகஸ்

ஆமாம் பாஸ்..
நேஷ்னல் இன்ஃபர்மேட்டிக் சென்டர் ( www.nic.in) வெப்சைட்ல வச்சிருக்கிற அனைத்து எம்.பிக்களின் மெயில் ஐடியும் போகஸ். ஏன்னா அந்த ஐடிக்களூக்கு அனுப்பின எல்லா மெயிலுமே "நோ சச் யூசர்"னு ரிட்டர்ன் ஆயிருச்சு.

என்ன மயித்துக்கு ஐடி கொடுக்கனும். இவிகதான் நம்மை ஆள்றாய்ங்க. சொகம்மா தூங்குங்கப்பா..

இந்த பரபர சுறு சுறு மேட்டர் நடந்து மாமாங்கமாச்சு. இப்ப இதை கோர்த்துவிட்டது இந்திய வல்லரசு கனவுகளை நனவாக்க நான் பட்ட பாட்டை புது வாசகர்கள்/பதிவர்களோட பகிர்ந்துக்கத்தேன்..

இப்ப பழங்கதைக்கு போயிருவமா?

ஓல்ட் ஈஸ் கோல்டுங்கறது நெஜம்தான் போலும். ஒரு காலத்துல நான் போட்ட பதிவுகள் இன்னைக்கும் படிக்கப்படுது. மறுமொழிகள் வந்துட்டே இருக்கு.  என் பதிவுகள்ளயே சனம் கண்டுக்காத விட்டுட்டது இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக என்னால் தீட்டப்பட்ட திட்டமான ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றிய பதிவைத்தான்.

எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஏழ்மை -ஏழ்மைக்கு காரணம் தேசீய உற்பத்தியில் பெருவாரியான மக்களுக்கு பங்கு இல்லாமை, மற்றும் தேசீய வருமானத்தில் உண்மையான பங்கு இல்லாமைதாங்கறது என் முடிவு.

அதுக்கு அதிரடி தீர்வுதான் ஆ.இ 2000. இதைபத்தி கழுகு வலைச்சரத்துல வல்லரசு கனவுகள்னு ஒரு பதிவு கூட வெளியானது.

இதைப்பத்தி கூகுல் க்ரூப்ஸ்ல நடந்த சர்ச்சையில சிலர் நாட்ல ஏழ்மையே இல்லைனு கூட வாதம் பண்ணாய்ங்க. தூத்தேரிக்க இன்னாடா இது படா பேஜாரா போச்சுனு விட்டுட்டன்.

சமீபத்துல ஒரு பார்ட்டி ஆரம்ப நாட்கள்ள நான் போட்ட பதிவை படிச்சுட்டு மீள் பதிவு போடுங்கனு சொல்லவே  இந்த விஷபரீட்சைல இறங்கியிருக்கேன்.

என் அதிரடி திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றியும் புது வாசகர்களுக்காக  ஒரு அறிமுகம்.


என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

என் திட்ட‌த்தின் பெய‌ர் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000னு சொன்னேன்.. அதாவ‌து 1986 ல் இந்த‌ திட்ட‌த்தை தீட்டும்போது இது 2000 ஆம் ஆண்டுக்குள் அம‌லுக்கு வ‌ந்துவிடும் என்று ஒரு ந‌ம்பிக்கை. அத‌னால் தான் இதில் 2000ங்கற பேரை வச்சேன்.

இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே பிரச்சினையின் விளைவுகளே..
நாட்டின் ஒரே பிரச்சினை ஏழ்மை தான்:

ஒரு த‌னிம‌னித‌னின் வ‌ருவாயைக் கொண்டு அவ‌ன் செழிப்பை க‌ண‌க்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வ‌ருவாயை கொண்டு அத‌ன் செல்வ‌ செழிப்பை க‌ண‌க்கிடுகிறார்க‌ள்.

முதலில் தேசீய‌வ‌ருவாய் என்றால் என்ன‌?
ஒரு வ‌ருட‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளின் ம‌திப்பே தேசீய‌வ‌ருவாய்.த‌னிம‌னித‌ வ‌ருவாய் என்றால் என்ன‌?தேசீய‌ வ‌ருவாயை, ம‌க்க‌ள் தொகையால் வ‌குத்தால் கிடைக்கும் தொகையே த‌னி ம‌னித‌ வ‌ருவாய்.

(அதாவ‌து ர‌ஜினி காந்தின் வ‌ருவாயையும், அவ‌ர் க‌ட்‍‍ அவுட்டுக்கு பீர் அபிஷேக‌ம் செய்யும் ர‌சிக‌னின் வ‌ருவாயையும் கூட்டி இர‌ண்டால் வ‌குத்து விடுகிறார்க‌ள். ப‌ச்சையாக‌ சொன்னால் ர‌ஜினி வ‌ருமான‌த்தை‍ அவ‌ன் ர‌சிக‌னுக்கு ப‌ங்கு போடுகிறார்க‌ள். அதாவ‌து வெறும் காகித‌த்தில். அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.

உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு :
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைத்தால் தான் உய‌ர்ந்து வ‌ரும் தேசீய‌ வ‌ருமான‌த்தில் உண்மையான‌ ப‌ங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகித‌ப்ப‌ங்கு தான்.

உற்ப‌த்தி கார‌ணிக‌ள்:
உற்ப‌த்தி கார‌ணிக‌ள் 4. அவை நில‌ம்,கூலி,முத‌லீடு,நிர்வாக‌ம் ஆகிய‌ன‌வாகும். நாட்டில் ஆதிகால‌ம் முத‌ல் நில‌விய‌ சாதி அமைப்பினால் ச‌மூக‌த்தின் மெஜாரிட்டி ம‌க்க‌ள் வாழ்க்கைக்கு ஆதாரமான க‌ல்வி கிடைக்காது கூலிக‌ளாக‌வே வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் நில‌மோ.முத‌லீடோ,நிர்வாக‌த்தில் ப‌ங்கெடுக்கும் வாய்ப்போ த‌குதியோ இல்லை.

நில‌த்தை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு வாட‌கை,முத‌லீடு வைத்த‌வ‌னுக்கு வ‌ட்டி,நிர்வாக‌ம் செய்த‌வ‌னுக்கு லாப‌ம் கிடைக்கும்.வெறும் உட‌லுழைப்பை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு என்ன‌ கிடைக்கும்? கூலி. அதிலும் சேமிப்போ,எதிர்கால‌ பாதுகாப்போ,ஸ்கில்லோ,க‌ல்வியோ இல்லாத‌ வ‌னுக்கு என்ன‌த்தை..கூலி கிடைக்கும்? தேசீய‌வ‌ருமான‌த்தில் எந்த அளவுக்கு ப‌ங்கு கிடைக்கும்?

இரு வர்கங்கள் /உற்ப‌த்தி கார‌ணிக‌ள் :
நாட்டில் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாய் நில‌வி வ‌ரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி‌ ம‌க்கள் அட‌ங்கிய‌ வ‌ர்க‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மாக‌ உள்ள‌து. உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் நில‌ம்,முத‌லீடு,நிர்வாக‌ம் மூன்றுமே ஆளும் வ‌ர்க‌த்தின் கையில் சிக்கி உள்ள‌து. ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மோ வெறும் கூலிப் ப‌ட்டாள‌மாக‌ நலிந்து வ‌ருகிற‌து.

நில‌ப்ப‌ங்கீடு:
உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் முக்கிய‌மான‌தான‌ நில‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌த்தின் கைக‌ளுக்கு மாற்ற‌ப் ப‌ட‌ வேண்டும். இது நேரிடையாக‌ அம‌ல் செய்ய‌ப் ப‌ட்டால் நாட்டில் ர‌த்த‌ வெள்ள‌ம் ஓடும். இதை த‌விர்க்க‌ விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ள் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, நாட்டில் உள்ள‌ விவ‌சாய‌ நில‌ங்க‌ள் மேற்ப‌டி விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ளுக்கு நீண்ட‌ கால‌ குத்த‌கை அடிப்ப‌டையில் த‌ர‌ப்ப‌ட‌ வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவ‌சாய‌ம் அம‌ல் ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும். இந்த‌ புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் "த‌ம்" "தில்" "அதிகாரம்" இன்றைய ஆட்சி முறையிலான பிர‌த‌ம‌ருக்கு கிடையாது.

நேரிடை ஜ‌ன‌நாய‌க‌ம்:
தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் தேர்வான பிரதமருக்கே மேற்டொன்ன புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் "த‌ம்" "தில்" "அதிகாரம்" உண்டு. பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவ்ய் பெருமளவு குறையும்.

க‌ங்கை காவேரி இணைப்பு:
இந்திய விவசாய நாடு. எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்தை சார்ந்தே வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.

நில‌ங்க‌ள் விவ‌சாயிக‌ளின் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ளுக்கு குத்த‌கைக்கு த‌ர‌ப் ப‌ட்டாலும் நீர் பாச‌னப்பற்றாக்குறை பிர‌ச்சினை ச‌ங்க‌த்தின் குர‌ல் வ‌ளையை நெறித்துவிடும் என்ப‌தால் இத‌ற்கு நிர‌ந்த‌ர‌த்தீர்வாக முதல் கட்டமாக ‌ க‌ங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ள‌ப் ப‌ட‌வேண்டும். பின் ப‌டிப் ப‌டியாக‌ எல்லா ந‌திக‌ளும் இணைக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.

ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம்:
ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம் ஒன்று அமைக்க‌ப் ப‌ட‌வேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. என்னதான் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்திருந்தாலும் ரயில்வே துறை கலாசி வேலைக்கு இஞ்ஜினீயர்கள் அப்ளை செய்யும் நிலை மாறவில்லை. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.

முயற்சிகள்:

இந்த திட்டத்தின் 200 பிரதிகளை அன்றைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகிக்கு அனுப்பினேன்.(பதிவு தபால் மூலம் தான்). அவற்றை அன்றைய ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரினேன்.(11/6/98) .பல மாதங்கள் வரை பதிலில்லை.

அந்த சமயம் என்.டி.ஆர்.ரசிகன் என்ற வகையில் தெலுகு தேசம் சார்பாக பூத் ஏஜண்ட்டாக உட்கார்ந்ததற்கான அடையாள அட்டை என்னிடம் இருந்தது. அதை இணைத்து எங்கள் தொகுதி எம்.பி.ராமகிருஷ்ணாரெட்டி காருவுக்கு இது விஷயமாகஒரு இன்லண்டு லெட்டர் போட்டேன்.அவர் சபாநாயகர் அலுவலகத்தில் விசாரித்திருப்பார் போல. (பாவம் மகராஜன் சமீபத்துல போய் சேர்ந்துட்டாரு.அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக)

சபாநாயகர் அலுவலகம் எம்.பி.க்கு நான் போட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கடிதம் போட்டது."நீங்கள் சொல்லும் திட்ட பிரதிகள் அடங்கிய பார்சல் எங்களுக்கு வந்து சேரவில்லை"-என்பது அதன் சாரம். நான் பதறியடித்து ஓடி தபால் அலுவலகத்தில் மேற்படி பார்சல் டெலிவரி ஆனதற்கான அத்தாட்சியை பெற்று பதிவு தபாலில் அனுப்பினேன்.

மீண்டு சில மாதங்கள் மவுனம். இடைவிடாத நினைவூட்டு கடிதங்களுக்கு பிறகு சபாநாயகர் அலுவலகத்து அதிகாரிகள் ஒரு கடிதம் போட்டனர். அதன் சாரம்:நீங்கள் அனுப்பிய கடிதம்,பார்சல் டெலிவரி ஆனதற்கான ஆதாரம் கிடைத்தது. தங்கள் பார்சலை இந்த அலுவலகத்தில் லொகேட் செய்ய முடியவில்லை.எனவே தங்கள் திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினால் தேவையான பிரதிகளை நாங்களே தயாரிப்பதில் பிரச்சினை இல்லை.

மனம் நொந்து உடனே திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினேன். பதிலில்லை. பலமாதங்கள் கழித்து வெறுத்துப் போய் திட்டப்பிரதியை திருப்பியனுப்பச் சொல்லி தபால் செலவுக்காக ரூ.50 க்கான அஞ்ஜலாணை கூட அனுப்பிவிட்டேன். நாளிதுவரை ஒரு இழவும் நடக்கவில்லை. நானும் தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பிக் கொண்டேதானிருக்கிறேன்.

ஆந்திர முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம்:(1997 முதல் 2004 அக்டோபர் வரை)
அப்போதைய‌ ஆந்திர‌ முத‌ல்வ‌ர் ச‌ந்திர‌பாபு நாயுடு. தெ.தேசம் கட்சியின் தலைவரும் அவரே. அதே  க‌ட்சியை சேர்ந்த‌ பால‌யோகிதான் லோக்ச‌பா ச‌பாநாய‌க‌ராக இருந்தார்.
மேலும் சந்திர பாபு மத்திய அரசில் பெரும் செல்வாக்கை பெற்றிருந்த காலம் அது.

என‌வே  நான்  இந்த திட்டம்  குறித்த விவரங்களை  தொட‌ர்ந்து முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு கூரிய‌ர்,ப‌திவு த‌பால் த‌ந்தி,இ மெயில் இத்யாதி மூலம்  அனுப்பி வ‌ந்தேன்.(இவற்றிற்கான ஆதாரங்கள் இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளன)

ஆனால் எனது தொடர்ந்த தபால்களுக்கு  2002 வ‌ரை முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ த்திலிருந்து எந்த‌ ப‌திலும் இல்லை. அதாவது ஐந்து வருடங்கள் ஒன் வே ட்ராஃபிக். இந்த அழகுல சந்திரபாபு போஸ்ட் கார்ட் போடுங்க கிழிச்சுர்ரன்னு வசனம் வேற விட்டுக்கிட்டு இருந்தாரு. தூர்தர்ஷன்ல  ப்ரஜலதோ முக்யமந்த்ரினு ஒரு ப்ரோக்ராம் வேற . எங்கே எரிஞ்சிருக்கும் பாருங்க.

மீடியா:
இது இப்படியெல்லாம் வேலைக்காகாதுன்னு லெட்டர் டு எடிட்டர் , அறிக்கைகள்னு ஆளுங்கட்சியை நல்லாவே கிழிக்க ஆரம்பிச்சேன்.  இதனோட உச்ச கட்டமா வார்த்தா - தெலுங்கு நாளிதழ் அரைப்பக்க அளவுக்கு என்னைபத்தி ஒரு ஸ்டோரியே பப்ளிஷ் பண்ணாய்ங்கன்னா பார்த்துக்கங்க. ஆனால் நம்ம தமிழ் மீடியா மட்டும் கண்டுக்கிடவே இல்லை.( மறுமலர்ச்சிங்கற முஸ்லீம்  பத்திரிக்கையும்,ஜன சக்திங்கற கம்யூனிஸ்ட் பத்திரிக்கையும் மட்டும் வெளியிட்டாய்ங்க)

யூஸ‌ர் சார்ஜ்:
அப்போது முத‌ல்வ‌ர் அரசு நிறுவனங்களில் யூஸ‌ர் சார்ஜ் முறையை அம‌ல் ப‌டுத்தி வ‌ந்தார்.உ.ம். அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ரூ.2 செலுத்த‌வேண்டும். இதை ம‌ன‌தில் வைத்து,முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு ரூ. 10 எம்.ஓ. மூல‌ம் அனுப்பிவைத்தேன்.. அது முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு டெலிவ‌ரியும் ஆன‌து. பணம் பெற்றுக்கொண்டதற்கான அக்னாலட்ஜ்மென்ட் வரவில்லை. உடனே தபால் துறையை தொடர்பு கொண்டு பணம் கொடுக்கப்பட்டதை உறுதி செய்யும் சர்ட்டிஃபிகேட் ஆஃப் பேமெண்ட் பெற்றேன்.

எதிர்கட்சி தலைவர்:
அப்போது டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி எதிர்கட்சி தலைவராக இருந்தார். அவருக்கு  இந்த அவலத்தை  கடிதம் மூலம் தெரிவித்தேன். காங்கிரஸ் சட்டமன்ற அலுவலகத்திலிருந்து ஒரு போஸ்ட் கார்ட் கூட வந்தது. அவர்கள் முதல்வர் அலுவலகத்தை  லேசாக குடைந்தார்களா என்ன தெரியாது.

மறுபடி முதல்வர் அலுவலகம்:
2002, ஆகஸ்ட் மாதம் முதல்வர் அலுவலகத்திலிருந்து எனக்கொரு பதிவு தபால் வந்தது. அதில் நான் ஆந்திர முதல்வர் அலுவலக அலட்சியப்போக்கை குறித்து அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு அனுப்பிய புகாரின் ஃபேக்ஸ் பிரதி ( நானே சி.எம்.ஓக்கு அனுப்பியது) இருந்தது. அதன் மீது  முதல்வரின் செயலர் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். முதல்வர் முன் வைக்க தங்களது ப்ரப்போசலை உடனே அனுப்பவும்னு எழுதியிருந்தார்.

ஆகா வந்துருச்சுய்யா வந்துருச்சு ஆப்பரேஷன் இந்தியாவுக்கு விடிவு காலம் வந்துருச்சுன்னு வடிவேலு பாணில புலம்பிக்கிட்டே திட்டத்தோட முழு விவரத்தை DTP பண்ண வச்சு பதிவு தபால்ல அனுப்பினேன். இதனோட உடனடி விளைவு என்னடான்னா..

சந்திரபாபு தெ.தேசம் கட்சியோட ஆனிவர்சரில " நதிகள் இணைப்பால் தான் சுபிட்சம் சாத்தியம்"னு வசனம் விட்டதுதான். அதுவரை தன் அரசியல் வாழ்க்கைல நதிகளின்  இணைப்பு பத்தி அவர் பேசினதே இல்லை.

நுக‌ர்வோர் ம‌ன்ற‌ம்:
இது தொடர்பாக சித்தூர் மாவட்ட  நுக‌ர்வோர் ம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொட‌ர்ந்தேன். இந்த‌ செய்தி தெலுங்கு தின‌ச‌ரிக‌ளில் வெளிவ‌ந்த‌தைய‌டுத்து "த‌ங்க‌ள் ஆலோச‌னைக‌ளை உரிய‌ வ‌கையில் ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்கிறோம் என்று முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம் எனக்கு ஒரு க‌டித‌ம் போட்டு கை க‌ழுவி கொண்ட‌து. (அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போயிருச்சுங்கண்ணா)

நுகர்வோர் மன்ற  நடுவர்கள் இந்த கேஸ்ல டெஃபிஷியன்சி ஆஃப் சர்வீசே இல்லைன்னு சரித்திர பூர்வமான தீர்ப்பை கொடுத்து கழட்டிவிட்டுட்டாய்ங்க.

மானில நுகர்வோர் மன்றம்:
இவிகளுக்கு அப்பீல் பண்ணேன். ஒடனே மாவட்ட மன்றம் கொடுத்த தீர்ப்போட ஒரிஜினலை அனுப்புங்கனு கேட்டாய்ங்க அனுப்பிட்டன். அது ஆரம்ப எழுத்தாளன் பத்திரிக்கை ஆஃபீசுக்கு அனுப்பின படைப்பா போச்சு.

டாக்டர் ஒய்.எஸ்:
இந்த பஞ்சாயத்து நடந்துக்கிட்டிருந்த   காலத்திலேயே சந்திரபாபு மீது அலிப்பிரி கொலைமுயற்சி ந‌ட்ந்தது. இடைத்தேர்தல் நடந்தது. ராஜசேகர ரெட்டி முதல்வரானார். (இவர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போதே நான் சி.எம்.ஓ பத்தி புகார் செய்ததும் , காங்கிரஸ் சட்டமன்ற கட்சி ஆறுதல் சொல்லி போஸ்ட் கார்டு எழுதினதும் ஞா இருக்கலாம்)

இந்நிலையில் முதல்வராகிவிட்ட ஒய்.எஸ்.ஆருக்கு ஆயிரம் கனவுகளோட ஃபாக்ஸ்,தபால்,கூரியர்,தந்திகள் மூலம் நினைவூட்டு கடிதங்கள் அனுப்பிக்கிட்டே இருந்தேன். பதில் தான் கிடைக்கவில்லை.சந்திரபாபு காலத்து சி.எம்.ஓ அதிகாரிங்க அப்படியே கன்டின்யூ ஆயிட்டிருந்தாய்ங்க. எங்கே தங்களோட பவிசு தெரிஞ்சு போயிருமோன்னு  என் கடிதங்களை சி.எம் பார்வைக்கு கொண்டுபோகலை.

சாகும்வரை உண்ணாவிரதம்:
2004 அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளில்  நான்  என் வீட்லயே சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினேன்.வருவாய்த்துறை,சி.ஐ,டி அதிகாரிகள் பதறியடிச்சு வந்து  உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.

ஜஸ்ட் இமேஜின். புது அரசாங்கம் பதவியேற்று 100 நாள் ஆன உடனே அறிவிக்கப்பட்டு துவங்கின  உண்ணாவிரதம் அதுவும் சாகும் வரை உண்ணாவிதம்னா பார்த்துக்கங்க. பயங்கர ப்ரஷர். ஆனாலும் சமாளிச்சேன்.

உண்ணாவிரதம் தொடர்ந்தது. 11 ஆம் நாள் டூ டவுன் எஸ்.ஐ வ‌ந்தார். அவரது செல் போனில் எஸ்.பி என்னோட  பேசினார். (அப்பல்லாம் சோத்துக்கே லாட்டரிண்ணே. இதுல சொந்த செல் ஃபோனுக்கெல்லாம் எங்கே பவிசு?)  தாம் அனுப்பும் வாராந்திர அறிக்கையில் என்னோட  உண்ணாவிரத மேட்டர்  குறித்தும்  எழுதுவதாகவும்,முதல்வர் நிச்சயம் ரெஸ்பாண்ட் ஆவார் என்றும் உறுதி கூறினார். இதையடுத்து  நான்  உண்ணாவிரதத்தை முடிச்சேன்.

தகவலறியும் சட்டம்:
தகவல் அறியும் சட்டப்படியாவது தமது திட்டம் குறித்த அரசின் முடிவை தெரிஞ்சிக்கலாம்னு  முயற்சி பண்ணேன்  . சட்ட நிபந்தனைப் படி மாதங்கள் வீணானதுதான் மிச்சம்.

தகவல் அறியும் சட்டப்படி எனது திட்டத்தைப் பற்றிய மாநில அரசின் கருத்தை கேட்டு மாவட்ட தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன்.  பதிலில்லை. கட்டணமாக இணைக்கப் பட்டிருந்த அஞ்சலாணை மட்டும் திரும்பி வந்தது. மாநில தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன்.  பதிலில்லை. மாநில தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தேன்.  பதிலில்லை.மத்திய தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பிச்சேன். பதில் கிடைத்தது. என்ன பதில் தெரியுமா?

மாநில‌ ஆணைய‌த்திற்கும்,ம‌த்திய‌ ஆணைய‌த்திற்கும் உள்ள‌ அதிகார‌ வ‌ர‌ம்பு ஒன்றே என்ப‌தால் மாநில‌ ஆணைய‌த்தின் மேல் ம‌த்திய‌ ஆணைய‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ முடியாதாம்.

போங்கடாங்கொய்யாலன்னு விட்டுட்டன்

ஆமா இந்த முயற்சிகள் இத்தோட ஏன் நின்னு போச்சுனு கேப்பிக. சொல்றேன்.

2004 அக்டோபர்ல 11 நாள் உண்ணாவிரதம் இருந்தும் எஸ்.பி உறுதி மொழி கொடுத்தும் ஒரு  ...ரும் நடக்கலை. தாளி ரெண்டுல ஒன்னு பார்த்துர்ரதுன்னு 2005 ஏப்ரல்ல ஹைதராபாதுக்கு பாதயாத்திரை அனவுன்ஸ் பண்ணேன். ரிப்போர்ட்டர்ஸுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டு புறப்படற சமயம்  பி.சி.,எஸ்.சி,எஸ்.டி சங்கம் காரவுக வந்தாக.

கையிலருந்து மைக்கை வாங்கி ( ஸ்பீச்செல்லாம் கொடுத்தோமில்லை) ஆ.இ.2000 த்துக்கு ஆதரவு தெரிவிக்கிறதாவும், பாதயாத்திரையை கைவிட்டு  பஸ்ல போறதா இருந்தா நாங்களும் வரோம்னு அறிவிச்சாய்ங்க.

கிடைச்ச ஆதரவை ஏன் விடறதுன்னு ட்ராப் ஆனேன். பஸ்ஸு யாத்திரை தான் பெண்டிங்ல நின்னு போச்சு.பாதயாத்திரைன்னா கடவுள் கொடுத்த கால்கள் போதும்.பஸ்ஸு யாத்திரைக்கு காசு வேணம்ல.

இதுமட்டுமில்லாம கிறிஸ்தவ பாதிரியார் பரலோக ராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது பாவிகளே மனம் திரும்புங்கள்னிட்டு பிரச்சாரம் பண்றாப்ல இதை பத்தி பேசிக்கிட்டே இருந்தேன். பல பேரு ( நண்பர்கள் உட்பட) "மொதல்ல நீ பணக்காரனாக வழியப்பாரு அப்பாறம் இந்தியாவை பணக்கார நாடாக்கலாம்னு  நக்கலடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

ஒய்.எஸ்.ஆரும் பாசன நீர் பற்றாக்குறைக்கு ஒரு லட்சம் கோடி ரூபா பட்ஜெட்ல ஜலயக்னம் ஆரம்பிச்சுட்டாரு. விவசாயிகளின் மின் கட்டண பாக்கி ரத்து, இலவச மின்சாரம்னு செயல்படுத்த ஆரம்பிச்சாரு.

விவசாயமே வேஸ்டு ,விவசாயி மகனெல்லாம் கம்ப்யூட்டர் கத்துக்கிடுங்கனு சொல்லிக்கிட்டிருந்த சந்திரபாபு ஒய்.எஸ்ஸை கிழிக்க ஆரம்பிச்சாரு. அந்த கிழிப்பை திருப்பியடிக்கவும், ஜலயக்னத்துக்கு தார்மீக ஆதரவை தரவும் தெலுங்குல ப்ளாக், மாதமிருமுறை தெலுங்கு பத்திரிக்கை ஆரம்பிச்சு லோக்கல் பாலிட்டிக்ஸ்ல இறங்கி டைவர்ட் ஆயிட்டன்.

ஒய்.எஸ்ஸையும் சொம்மா சொல்லக்கூடாது ஜலயக்னம் மட்டுமில்லிங்கண்ணா ஏ.சி.பி ரெயிடுகளை மும்முரப்படுத்தறது, (கருப்புபண ஒழிப்பு) , தேர்வு செய்த மண்டலங்கள்ள கூட்டுறவு பண்ணை விவசாயம்னு ஆ.இ.2000 த்தை ஸ்மால் ஸ்கேல்ல அமல்படுத்திக்கிட்டிருந்தாரு.

ஒய்.எஸ். விபத்துல போனதுக்கப்பாறம் திரு திருனு முழிச்சிக்கிட்டிருக்கேன். இந்த திட்டத்தையும் ,இது தொடர்பா நான் செய்த முயற்சிகள்ளயும் ஏதேனும் தப்பு தவறு இருந்தா சொல்லுங்கண்ணா  திருத்திக்கிடலாம். ஒரு கை கொடுங்க.  இந்த பதிவை நாலு பேரோட ஷேர் பண்ணிக்கங்க. மக்கள் மன்றத்துக்கு கொண்டு போகலாம். எனக்கும் ஒரு கமிட்மென்ட் வரும்.

ஓகே வுடு ஜூட்..

பணம் பணம் பணம் : 2

பணத்தை புரிஞ்சிக்கிட்டா பணத்தை சம்பாதிக்கலாம் அ தத் .. இந்த மயித்துக்குத்தான் சம்பாதிக்கிறாய்ங்களானு விட்டுரலாம்.

இதுக்காகத்தான் இந்த தொடர்பதிவு.  பணம் பற்றிய டாக்டரேட் பட்டத்துக்குரிய என் தியரிய பதிவின் இறுதியில் தந்திருக்கேன். பொறுமையிருந்தா படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க..

ஓகே இப்ப பணம் குறித்த என் புரிதல் தொடர்கிறது..


13.பணம் கடவுளை கூட உயர்ந்தது. ஏன்னா கடவுளை பார்க்க முடியாது. பணத்தை கொண்டு கடவுளை கூட வாங்க (ட்ரை பண்ண)லாம்.

14.கடன் வாங்கினா அதுக்கு கட்டவேண்டியது வெறும் வட்டி மட்டுமில்லை..  நம்ம சுதந்திரத்தையும்தான். ஏழுமலையான் மட்டும் குபேரன் கிட்டே கடன் வாங்காம இருந்திருந்தா தாளி நம்ம உதவாக்கரை பிரார்த்தனையையெல்லாம் காது கொடுத்து கேட்க வேண்டிய நிலை வந்திருக்குமா?

15.பணம் நெருப்பு மாதிரி .ரெம்ப எட்ட நின்னா வறுமை குளிர் வாடும். ரெம்ப நெருங்கி நின்னா  பொசுங்கிருவம்.

16.எதையாவது சாதிக்க பணம் சம்பாதிச்சா புரிஞ்சிக்கலாம். சம்பாதிக்கறதுக்காகவே சம்பாதிச்சா ?

17.பணம் எப்படிப்பட்ட குரூபியையும் அழகனா /அழகியா மாத்தக்கூடிய ப்யூட்டிஷியன்


18.பணமிருந்தா வெளி மன்சாளுங்க நெருக்கமாவாய்ங்களோ என்னமோ சொந்த மன்சாள் மட்டும் தூரமாயிருவாய்ங்க. ( அப்படி நெருங்கியிருந்தான்னா அது போக்கத்த நாயினு அர்த்தம் ஏதோ ஒரு நா கடிச்சு வைக்கும்)

18.பணம் மூளைய கொண்டு யோசிக்கிற திறமைய தரும். ஆனால் இதயத்தை கொண்டு யோசிக்கிற மனிதாபிமானத்தை மண்ணாக்கிரும்.

19.பணம் இருக்கும்போதும், தொடர்ச்சிய வர்ரப்பயும் அது  குறித்த சிந்தனையே இருக்காது. அது குறித்த சிந்தனை இருக்கும் வரை பணம் வராது.

20.மனிதன் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் மரணத்துக்கு முடிச்சிட்டு யோசிக்கிறான் ( நினைவிலி மனதில்) உ.ம் இருட்டு,தனிமை, நிராகரிப்பு,அவமானம்,ஏழ்மை,பசி,முதுமை .  இதெல்லாம் மரணத்தின் நிழல்கள். இதையெலாம் செயிக்கத்தான் பணம் தேடறான்.  மரணத்தின்  நிழல்களுடனான யுத்தத்துல வேணம்னா  பணம் கொஞ்சம் போல  தைரியத்தை தரலாம். ஆனால் அது மரணம் பற்றின அச்சத்தைதான் அதிகரிக்குது. அதை எதிர்காலம் குறித்த சிந்தனையா மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு புது புது  எல் ஐ சி பாலிசியா போடறோம்

21.எல்லார்க்கிட்டயும் பணம் இருக்கு. சிலர் கிட்ட பணமா இல்லை. ஆனால் பணமா மாத்தக்கூடிய எத்தனையோ சமாசாரம் ஒவ்வொரு மன்சன் கிட்டயும் இருக்கு. அதை ஐடென்டிஃபை பண்ணிக்கிட்ட ஏழை பணக்காரன் ஆகிறான்.

22.பணம் பலர் விஷயத்தில் தலை முடியெல்லாம் கொட்டிப்போன பின் கிடைக்கு சீப்பாய் இருக்கிறது

23.பணம் ஜஸ்ட்  ஒரு கருவி. அதை நாமதான் உபயோகிக்கனும். சனம் பணத்தின் கையில கருவியாயிர்ரதுதான் சோகம்.

24. நீங்க பணம் சம்பாதிக்கனும்னா உங்களை சுத்தி இருக்கிறவன்லாம் சம்பாதிச்சிட்டிருக்கனும். கு.ப சம்பாதிக்கனுங்கற துடிப்புல இருக்கனும்


எல்லா உயிருக்கும் மூலம் அமீபா. ஒரு  செல்  அங்கஜீவி - அது கொழுத்து  செல் காப்பிமூலமா ரெண்டாச்சு - செல் காப்பியிங் எர்ரார் காரணமா புது ஜீவராசிகள்- குரங்கு குரங்குலருந்து மனிதன் .

ஒரே உடல் ஒரே உயிரா இருந்தச்ச காலம் , தூரம் ,கம்யூனிகேஷன் ட்ரபுள், இன்செக்யூரிட்டி இப்படி எந்த பிரச்சினையும் கிடையாது  -  ரெண்டாவது உயிர் உருவானதுமே இதெல்லாம் ஸ்டார்ட் ஆயிருச்சு - ஆனால் ஓருயிர் ஓருடலா இருந்த நினைவுகள் மட்டும் செல் டு செல் காப்பியிங் மூலமா ஒவ்வொரு  மனித மூளைலயும் ஃபீட் ஆயிருக்கு. மறுபடி ஓருயிர் ஓருடலாகனும்ங்கற துடிப்பு இருக்கு.

எல்லாம் கரீட்டுதான். ஆனால் இந்த ஓருயிர் ஓருடலா மாற இந்த உடல்தான் தடைங்கற ஒரு ஃபோபியா ஹ்யூமன் மைண்ட்ல இருக்கு(ங்கறது என் நம்பிக்கை)

மன்சங்க இன்னா நெல்ல வேலை பண்ணாலும், என்னா கேப்மாரி வேலை பண்ணாலும் அதும்பின்னாடி இருக்கிறது ரெண்டே ரெண்டு ஆசை தானாம்.

ஒன்னு கொல்றது ரெண்டு கொல்லப்படறது. இதை நான் சொல்லலை . சைக்காலஜி சொல்லுது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். அதனால தான் சனங்க  செக்ஸுக்கு சரண்டர் ஆயிர்ராய்ங்க.  மன்சங்களோட எல்லா செயல்பாடுகளுக்கும் பின்னாடி இருக்கிறது செக்ஸ் தான். செக்ஸுக்கு பின்னாடி இருக்கிறது கொலை+தற்கொலை வெறி.


ஆனால் பாருங்க நம்ம மதம்,பண்பாடு,கலாசாரம் எல்லாமே செக்ஸை ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு. 

வாய்க்கால்ல ஓடற தண்ணிய தடை பண்ணா அது தேங்கற மாதிரியே தேங்கி எங்கே கரை பலகீனமா இருக்கோ அங்கே உடைச்சிக்கிட்டு பாஞ்சுரும். 

அதே மாதிரி மனித மனம் செக்ஸ் தடை பண்ணப்பட்டிருக்கறதால அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேடி பிடிச்சுக்குச்சு. அதான் பணம்.

செக்ஸ்ல கிடைக்கிறதெல்லாம்  பணத்துலயும் கிடைக்குது. உபரியா செக்ஸும் கிடைக்குது. அதனாலதான் சனம் பணம் பணம்னு  லோ லோனு அலையுது

குழந்தைக்கு தாய் முலைக்காம்பு மறுக்கப்பட்டா - சூப்பான் -சூப்பான் மறுக்கப்பட்டா  விரல் போட்டுக்கற மாதிரிதான் இதெல்லாம். 

அடங்கொய்யால முலைக்காம்புலயாச்சும் பால் கிடைக்கும், சூப்பான் மேலயாச்சும் சாக்ரின் பூச்சிருக்கும் எச்சில் பட்டா கொஞ்சமேனும் இனிப்பா இருக்கும். விரல்ல என்னங்கடா கீது?

ஓருடல் ஓருயிர் நிலை மாறி பல்லுடல்  பல்லுயிரா  மாறினாலும் நம்ம உயிர்களெல்லாம் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. (செல் ஃபோன்கள்  டவர்களால் இணைக்கப்பட்ட மாதிரி) ஆனால்  அகந்தை காரணமா பிரிஞ்சிருக்கம். நோக்கமென்னவோ சக உயிர்களோட இணையறது. ஆனால் நாம செய்றதென்னா.. பணம் பணம்னு அலைஞ்சு இணைஞ்சிருக்கிற ஒரு சில உயிர்களிடமிருந்தும் பிரிஞ்சுர்ரம் பை.தனமா இல்லே?

Tuesday, November 16, 2010

பணம் பணம் பணம் - 1

பணத்துக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் வர காரணமே செக்ஸ் குறித்த தவறான பார்வையும்,புரிதலும் ,அதன் மீதான ஏறக்குறைய தடையும் தான்.

திருமணமே  ஆண்மை குறைவுக்கு ஆதி மூலம். இதுல தாளி ஒரே  சாதில கண்ணாலம் கட்டி கட்டி ஃபிசிக் ,ஆண்மை எல்லாமே ஃபணால்.  13 அ 14ல செக்ஸுக்கு தயாரானவனுக்கு 30க்கு மேலத்தான் கண்ணாலம். தாளி அதுக்குள்ள  பேட்டரி வீகககி, ஒய்ரிங் எல்லாம் மெல்ட் ஆகி கிடக்கும்.

ஆண்மையின் சிகரமா உள்ளவன் கட்டாந்தரையில கூட கில்மால தூள் கிளப்புவான். அதில்லாதவன் எனக்கு எவனாச்சும் பகத்து டோரை தட்டினா கூட படக்குனு விழுந்துருதும்பான். அல்லது ஏசி இல்லைன்னா  நம்மால ஆவறதில்லம்பான் . டபுள் காட், தனி பெட் ரூம், அட்டாச்ட் எல்லாமே "முடியாத "குறைய ஃபில் அப் பண்ணத்தான்.

ஆண்மை நிறைஞ்சவன் எப்பவும் நிறைவா உணர்வான். அவனோட செக்ஸ் பார்ட்னரும் அப்படியே. எப்போ செக்ஸ் பவர் விழ ஆரம்பிக்குதோ தன் குறைய ஈடுகட்ட வெளிப்பக்கமா தன் பார்வைய திருப்பறான்.

இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர் .அதான் கிரியேட்டிவ் பவர். செக்ஸ் பவர் ஃப்யூஸ் ஆனதும் படைப்பாற்றல் குறைஞ்சு போச்சு. தன் படைப்பு சக்தியை பணம் மூலமா நிறைவு செய்துக்க ட்ரை பண்றான். (பணத்தாலயும் படைக்க முடியும். ஆனால் நம்மாளு ஓஞ்சு ,தேஞ்சு போயி  இருக்கிறதால ரெடிமேடுக்கு தாவிர்ரான்.

அட கட்டிலை எடுத்துக்கங்களேன்...தாளி அதுலயும் ரெடிமேட். இப்படி சனம் பேட்டரி வீக் ஆகி ,குறையா உணர்ந்து, அதை நிறைவு செய்ய ஸ்தூல பொருட்களை வாங்கி குவிக்க ஆரம்பிக்க பணம் தேவைப்படுது. மெஜாரிட்டி வர்கம் இப்படி இருக்கிறதால மனித உடல்ல ரத்தம் மாதிரி தங்கு தடையில்லாம சுத்தி வரவேண்டிய  பணம் முடங்கி போவுது. டெட் ஆகுது.

யூத் "அது"இல்லாத குறைக்கு ஆல்ட்டர்னேட்டிவ்க்கு செலவழிக்க (அன் ப்ரொடக்டிவ்) , மிடில் ஏஜ்ட் பீப்புள் அது இருந்தும் அதை எடுத்துக்க முடியாத குறைக்கு ஆல்ட்டர்னேட்டிவ்ஸுக்கு இறங்க, அந்த ஸ்தூல பொருட்களையும் தாங்களே உருவாக்கிற முயற்சி மிரட்ட ரெடிமேடுக்கு இறங்க உலகமே பணம் பணம்னு பேத்த ஆரம்பிச்சுருச்சு.

கிடைச்சத ஆவியாக்கிர்ரானுவ. அது கிடைக்கனுமேனு ஆவி சோர அலையறானுவ. மொத்தத்துல பணம் குறித்த சரியான புரிதல் இல்லாமத்தான் சனம் இப்படி அல்லாடுதுனு ஒரு சம்சயம். அதுக்காக பணம் குறித்த என் புரிதலை பதிவாக்குறேன்.

1.பணம் ரத்தம் போன்றது.அது சமுதாயம் என்ற உடலில் தங்கு தடையின்றி சுற்றிவரவேண்டும். அது உறைந்தாலோ, சுண்டினாலோபிரச்சினைதான்.

2.பணம் எப்படிப்பட்ட முட்டாளையும் அறிவாளியாக்கக்கூடிய அற்புத மூலிகை. எனவே முட்டாள்களுக்கே பணம் அதிகம் தேவைப்படுகிறது

3.பணம் ஊமையை பேச வைக்கும். குருடனை பார்க்க வைக்கும்.முடவனையும் நமக்காய் கைத்தட்ட வைக்கும். நொண்டியை கூட நமக்காய் ஓடிவரவைக்கும்

4.பணம்.. எந்த மொழியினருக்கும் புரியக்கூடிய உலகப்பொதுமொழி.

5. மனிதன் ஒரு ஈ பணம் தேன் நிறைந்த பாத்திரம்.  .அதன் உதட்டின் மேல் நின்று லேசாய் உறிஞ்சினால் பிரச்சினையில்லை. அதில் குதித்தால் இறக்கை நனைந்து ஒட்டி சாக வேண்டியதுதான்.

6 பணம் ஆக்சிஜனை விட மதிப்பு மிகுந்தது. பணத்தை கொண்டு ஆக்சிஜனையும் வாங்கலாமே..

7.பணத்தை கொண்டு காலம்,தூரத்தை வெல்ல முடிவது மனித குலத்தின் அதிர்ஷ்டம். ஆனால் அதே பணத்தை கொண்டு தான் இதயங்களையும் வெல்ல முடியும் என்பது துரதிர்ஷ்டம்.

8.பணம்...அதற்கான தேவையுடன் அதை ஈட்ட முனைபவனுக்கு கானல் நீர். அதற்கான தேவையின்றி முயல்பவனுக்கு ஆற்று நீர்

9. பணத்துக்கு ஈகோ அதிகம். எவன் தன் ஈகோவுக்காக அதை செலவழிக்கிறானோ அவனிடமிருந்து கழண்டு கொள்ளும்.

10 பணம் சுய கவுரவத்துடன் வாழ வகை செய்யும்.ஆனால் அதை ஈட்ட பலி கொடுக்க வேண்டியதும் சுய கவுரவத்தைதான்.

11. பணம் .. குறைவாக இருந்தால் வெளிச்சம் தரும் வீட்டு விளக்கு அளவுக்கு அதிகமானால் வீட்டை சாம்பலாக்கும் காட்டுத்தீ

12.பணம் புல்லெட் போன்றது. ட்ரிக்கரை அழுத்திய பின் அதன் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறோம். வெடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கியை விட குறி வைக்கப்பட்ட துப்பாக்கிக்கே ஆணையிடும் அதிகாரம் அதிகம்

தொடரும்)

Monday, November 15, 2010

15 கோடி லஞ்சம் தர மறுத்த டாட்டா உத்தமரா?

விமான சர்வீஸ் ஆரம்பிக்க முயன்ற போது ஒரு மந்திரி 15 கோடி லஞ்சம் கேட்டதாகவும், தாம் தர மறுத்ததால் தான் நாளிதுவரை விமான சர்வீஸ் ஆரம்பிக்கவில்லை என்றும் ரத்தன் டாட்டா  கூறியுள்ளார். உடனே சோடாபுட்டி கண்ணாடிகள் ( அறிவு ஜீவிகள்) ஆகா டாட்டா உத்தமர் என்றும், செட் அப்பே கரப்ட் ஆயிருச்சு என்றும் பீசிக்கொள்ள ஆரம்பித்து விட்டிருப்பார்கள்.

வி.ச ஆரம்பிக்க லஞ்சம் கேட்டவுக மத்த யாவாரத்துக்கும் நிச்சயம் கேட்டிருப்பாய்ங்க. இவர் தர மறுத்திருந்தா தாளி ஒரு தீப்பெட்டி கம்பெனி கூட ஆரம்பிச்சிருக்க முடியாது. ஆனால் இவர் சொல்ற காலகட்டத்துல எத்தீனி யாவாரம் ஆரம்பிச்சாய்ங்கனு நெனச்சி பாருங்க.

இந்தியாவுல தாளி லஞ்சம் கொடுக்காம தள்ளுவண்டில இட்லி கூட விக்க முடியாது. இது எந்த கேணையனுக்கும் தெரியும்.  ரோட்ல டூ வீலர்ல  போறச்ச கீப் லெஃப்ட், நோ என்ட்ரி அது இதுனு போட்டு ஐரன்  போர்டுங்க தெரியும். அல்லது டிவைடர் கட்டாத ரோட்ல நீட்டத்துக்கு போர்டுகளை வச்சி பிரிச்சிருப்பாய்ங்க. பார்த்திருப்பிங்க. போர்டுகள்ள கீழ் பாகத்துல ஏஏஏ அபார்ஷன் க்ளினிக், களவாணி அண்ட் கோனு கம்பெனிங்க பேரு இருக்கும்.

இந்த போர்டுகளோட ஏற்பாடு  எப்படி நடக்குது தெரீமா? யாவாரிங்களை ஸ்டேஷனுக்கு கூப்டுவாய்ங்க. நீ இத்தீனி போர்டு நீ இத்தீனி போர்டுனு சொல்லிருவாய்ங்க.அம்புட்டுதேங்.

வாத்யாரே நானு சித்தூர் வேலூர் பஸ்ல வேலை செய்தேன். அங்கனதான் பார்த்தேன் மாசா மாசம் கவர்ல போட்டு ஒன் டவுன் டூ டவுன் ட்ராஃபிக் ஆர்டிஓ, செக் போஸ்டுனு அனுப்பிட்டிருப்பாய்ங்க. இல்லாட்டி தொழில் நடக்காது.

நகைத்திருடன் பிடிபட்டான் 50ஒ கிராம் பறிமுதல்னு சேதி வரும். மேட்டர் என்னடான்னா அவன் திருடியே கூட இருக்கமாட்டான். ஒரு வேளை திருடியிருந்தாலும் எங்கனயோ வித்திருப்பான். தின்னு,குடிச்சு தீர்த்திருப்பான். அவனை ஒரு ஜீப்ல போட்டுக்கிட்டு எஸ்.ஐ வருவாரு. ஒவ்வொரு நகை கடையா ஏறி இறங்குவாரு.

திருடன் இங்கனதான் வித்தேம்பான். ஒடனே திருடன் சொன்ன கிராம்ஸ் ஆஃப் கோல்ட் ரிகவரி பண்ணிக்கிட்டு அடுத்த கடை ஏறுவாரு. இதான் நாட்டு நிலைம.

ஜுவெல்லரி காரன் திருட்டு நகைய வாங்கவே இல்லைன்னாலும் ரிக்கவரி கொடுத்துதான் ஆகனும். அதுவும் கேஸில்லாம மெயின்டெய்ன் பண்றதுக்கு மாமூல் வேற, ஜீப்புக்கு டீசல் செலவு வேற.

இந்த அழகுல டாட்டா தானேதோ உத்தமர் மாதிரியும் ஒரே ஒரு மந்திரிதான் 15 கோடி கேட்ட மாதிரியும் அதை தர விருப்பமில்லாமதான் விமான சர்வீஸ் ஆரம்பிக்காதது மாதிரியும் பீத்தியிருக்காரு.

தாளி நம்ம வீட்டுல கக்கூஸ் கட்டணும்னா கூட நகராட்சிக்கு லஞ்சம் தரவேண்டிய நிலை.  இவரு பீலா விடறாரு.

உண்மையிலயே டாட்டா உத்தமரா இருந்தா தங்களோட எந்தெந்த தொழில் ஆரம்பிக்க எத்தீனி எத்தீனி கோடி கொடுத்தோம்னு லிஸ்டை ரிலீஸ் பண்ணனும்.

இதெல்லாம் பிக்காலி பேச்சு. உப்பு வித்து, தீப்பெட்டி வித்து ஏழைதொழிலாளிங்க வயித்துல அடிச்சு அவிகளை பிச்சையெடுக்க வச்சு,திருடங்களாக்கி, அவன் வீட்டு பெண்களை தேவடியாளாக்கி நாறடிச்ச பெரியவுக இவிக.

அரசியல் வாதியோட லைன் க்ளியரா இருக்கும். தாளி பேர் வரனும். கெட்ட பேர் வரதாருந்தா சூட் கேஸ் வரனும்.

இவிக யாவாரத்துக்கு அனுமதி கொடுத்தா எப்படியும் கொள்ளைதான் அடிப்பாய்ங்க. பேரு ரிப்பேராயிரும்.அப்பாறம் ஓட்டு "வாங்கறது"எப்படியாம். அதனாலதான் 15 கோடி.

நல்ல அரசியல் வாதிங்க.. நல்ல தொழிலதிபருங்க. விளங்கிரும்யா..

Sunday, November 14, 2010

"ஏக் மார், தோ துக்டா" பதிவுக்கு எதிர்வினை

சுகுமார்ஜி அவர்களே,
முன்னமொருதரம் உ.வ பட்டு நீ..............ளமான கமெண்ட் போட முயன்று வில்லங்கமாகி அது காத்தா போயிருச்சு. அதனால உசாரய்யா உசாருன்னு தனிப்பதிவே ரெடி பண்றேன். உங்க "ஏக் மார், தோ துக்டா" பதிவுக்கு எதிர்வினையா.

உங்க கருத்துக்களுக்கு எதிரான என்  கருத்துக்கள் நம்மிடையிலான நட்பை பாதித்துவிடும் என்று எண்ணுமத்தனை முட்டாள் நானாய் இருந்தாலும் நீங்க அப்படியில்லை தானே.

//ஆத்திகம், நாத்திகமான பெரியாரோடு சம்மந்தமான வார்த்தைகள் வேண்டாம்... //
ஆன்மீகத்துல கடவுள் எவ்ள முக்கியமோ பெரியாரும் அவ்ளோ முக்கியம்னு நான் நினைக்கிறேன். கவுண்டர் பார்ட்டுனு சனங்க நினைக்கலாம். ஆனால் நான் பெரியாரையே ஒரு அவதாரமாதான் நினைக்கிறேன்.  நீங்க சொல்ற பாய்யிண்டையெல்லாம் சனம் ஃபாலோ பண்ணி ஆன்மீகத்துல உச்சிக்கு போயிட்டா அங்கன பெரியாரை பார்க்கலாங்கறது என் கருத்து

//இறைவனை நம்ப மறுப்பவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை...  “ஏதோ ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்திலும், நம்முள்ளும் இருக்கிறது//

பாஸ்! ஓஷோ ஒரு பாய்ண்ட் சொல்லியிருக்காரு. நாம பேசிக்கற சக்தி/ குண்டலி/ சக்கரங்கள் எல்லாம் கிடையவே கிடையாதாம் சாதனை காரணமா உருவாகுதாம். நீங்க எல்லாரையும் ஒரு பேட்டையில சேர்க்க ட்ரை பண்றிங்க. (எனக்கும் இந்த நப்பாசை உண்டு)

ஆனா சனத்துல பல ரகம் உண்டு. சிலர் உடலளவுல வாழ்ந்து முடிச்சுர்ராய்ங்க, சிலர் மன அளவுலயே அல்லாடி முடிஞ்சுர்ராய்ங்க ,சிலர் புத்து அளவுலயே நோண்டி நுங்கெடுத்து கழிஞ்சுர்ராய்ங்க. சக்தி இருக்குதுங்கறதை அவன் உணராதவரை இல்லேனு தான் அர்த்தம்.

//நிருபிக்கபட்டால் ஏற்றுக்கொள்ள தயார் என்பதெல்லாம் வேடிக்கைத்தனம். அதுவோ, இதுவோ மனிதனால் ஏற்படுத்திக்கொண்ட கணக்குகளில் அடங்குவதில்லை.//

இங்க நாத்திகவாதி கழண்டுக்கறான்..தாளி பல ஆயிரக்கணக்கான கோடி ரூ சொத்துக்களை நிர்வகிக்கிற மடாதிபதிங்கல்லாம் ஒன்னு சேர்ந்து நிரூபிக்கலாமில்லயா ( அவிகளுக்குத்தான் கிழவிகளை தடவவும், வாடகை கொலையாளிகளை அமர்த்தவுமே நேரம் போதலயே


//ஆனால் ஆசாமியான தன்னை சாமி என்று சொல்லுபவனை, ஏமாற்றுபவனை கழுவிலேற்றலாம்.//

என்ன பாஸ் இந்த பிக்காலிகளுக்காக ஒரு மரத்தை வெட்டி , சீவி,எண்ணெய் பூசு கலீஜு பண்ணிக்கினு சனம் இவிகளை சுத்தமா கழட்டி விட்டா போதும் எல்லாரும் பை.ஆஸ்பத்திரில வந்து சேர்ந்துருவாய்ங்க.

//அந்த சக்தியை நோக்கிய (யா இல்லை) பாதையில் இரண்டு வழிகள்.
ஒன்று வழிபாடு,
இரண்டு தன் வழிபாடு. //

ஓஷோவின் மறைந்திருக்கும் மர்மங்கள் படிச்சுபாருங்க. விக்கிரக ஆராதனைய பத்தி கொளுத்தி போடறாரு .அப்படியே தீபாவளிதான். அதை வச்சு பார்த்தா ஒரே வழிபாடுதான் .. தன் வழிபாடு


//அது கோவில், குளம், சடங்கு, மந்திரம், யாகம், நம்பிக்கை...//

// இது தியானம்... //

Ref:மறைந்திருக்கும் மர்மங்கள்

//எனக்குத்தெரிந்தவரையில் இரண்டையுமே வழிமொழிந்தவர்கள் சித்தர்கள்தான். உனக்கு எது முடியுமோ அது...//

ஓஷோ இன்னா சொல்றாருன்னா ( பல்லை கடிக்காதிங்க பாஸ்! சித்தூர்ல கேட்குது) உன்னால எது முடியலையோ அதான் உன் பாதை - ரிவர்ஸ் எஃபெக்ட்

//சடங்குகளின் உண்மை நிலை... தளர்ந்திருப்பதால் முதலானது இப்பொழுது கேலிக்குரியதாக மாறுகிறது.//

காதலியின் அழகை காதலன் கண் கொண்டு பார்க்கனும். இறைவனின் மகிமையை பக்தனின் மனம் கொண்டு பார்க்கனும். பக்தி கூட காதல் மாதிரிதான். நாம என்ன பை.தனம் பண்றோங்கறது முக்கியமில்லை. நாம எந்த பா(B)வத்தோட செய்றோங்கறதுதான் முக்கியம்.


//சித்தர் தியானமோ நிரூபணம் வேண்டுவதால் ஏற்றுக்கொள்ள ஆர்வமில்லை.//

இப்போ ஈஷா யோகானு கூட்டம் அம்முதே நிரூபணம் இல்லாமயா ? தலை சனம் அல்ப சந்தோஷிங்க. ஒரு சிப்பில கடல் நீரை முகர்ந்து இதாண்டா கடல்னா நம்பிருவாய்ங்க. அதை மொண்டுதர்ர தேஜஸ் கூட இன்னைக்கிருக்கிற காட் மென்ஸுக்கு இல்லை அதான் பிரச்சினை

//இரண்டிலும் விருப்பமுள்ளவருக்கோ, விளக்கம் தர ஆசானில்லை. கடல் நீரில் இனிப்பைத் தேடுவதாக இருக்கிறது. சந்தர்ப்பவாதிகள் மக்களை ஏமாற்றி, மூளையையும், கற்பையும் சுரண்டிவிடுகிறார்கள். //

கத்துக்க தேவை ஆசானில்லை.கத்துக்கனுங்கற வெறி. அதுதான் ஆசானை லபக்கிக்கிட்டு வருது

//மேயிற மாட்டை, நக்குற மாடு கெடுத்ததாக ஒரு சொலவடை உண்டு... அது போல, பக்தியிலும், தியானத்திலும் இருப்பவனை மறுதலிப்பவன் விடுவதே இல்லை.//

இங்கே நான் முரண்படறேன். எந்த நாத்திகனுக்கு தன் நாத்திகம் மேல சந்தேகம் இருக்கோ அவன் தான் இந்த வேலைய செய்வான்.

எந்த ஆத்திகனுக்கு  தன் ஆத்திகம் மேல சந்தேகம் இருக்கோ அவன் தான் நாத்திகவாதியால டிஸ்டர்ப் ஆவான்

//தன் சகதியை எதிராளிக்கும் பூசி மகிழும் சந்தோஷம்.//

இதை ரெண்டு தரப்புக்கும் சொல்லுங்க. பூசி மகிழும் என்பதை விட தன் சகதியை தானே முகர்ந்து பார்க்கும்னு சொல்லலாம்

//வழிபாடுகளை பொறுத்தவரை... வழிகாட்டி தேவையில்லை.//

என் அனுபவப்படி எதுக்குமே தேவையில்லை பாஸ்.. எல்லாத்துக்கும் வழிகாட்டி இயற்கை. இயற்கை எல்லா சனத்தையும் தன்ல ஐக்கியப்படுத்திக்கத்தான் பார்க்குது. என்ன சனம் கொஞ்சம் லேட். லேட் (அமரர்) ஆன பிற்பாடுதான் ஐக்கியமாவேனு லொள்ளு பண்றாய்ங்க

//உனக்கு எந்த தெய்வமோ அதே... அது ஆசியாவின் உயர்ந்த கோபுர வழியிலிருந்தாலும் சரி, இல்லை மொட்டை கோபுர வழியிலிருந்தாலும் சரி. அது முதன்மையான நம்பிக்கையின் அடிப்படையானது.//

இன்னா பாஸ்! கரண்ட் உண்மைன்னா நம்பிக்கையில்லாம ப்ளக் பாய்ண்ட்ல கை வச்சா கூட ஷாக் அடிக்கனும்ல


முறையான பிரணாயாமம்... இட, வல சுவாச வழியே காற்றை சுவாசித்தல்... இரண்டிற்குமிடையே ஒரு கணம் நிறுத்துதல்... இந்த நிறுத்தல் காற்றை சூடாக்கி, மூலாதாரம் நோக்கி நகர்ந்து குண்டலியை உசுப்பேற்றும்...

" நான் என்ன நினைக்கிறேன்னா நீங்க சொல்ற முறையான பிராணயாமம் தானாவே அமையறதுதான் பெஸ்ட் சாய்ஸ்னு நினைக்கிறேன்.

மழைக்காக யாகம் பண்றாய்ங்களே அதனோட கான்செப்ட் என்ன தெரியுமா?  மழை வர்ரதுக்கு முந்தி இயற்கையில ஏற்படக்கூடிய காட்சிகள் ( கார் மேகம் - யாகப்புகை) த்வனிகளை( சத்தங்கள் - அதே மூடிலான மந்திரங்கள்)  ஏற்படுத்தின மழை வந்துரும்.

பிராணயாமம் மேட்டர்லயும் இதே தலைகீழ்புத்தி வேலை செய்யுதோனு சந்தேகம்.
பிராணயாமம்ங்கறது பை ப்ராடக்ட். அது ரா மெட்டீரியலில்லியோனு சம்சயம்.

//அப்பொ... வழிபாடு பண்ணா இதெல்லாம் நடக்காதா?
நடக்கும்... அமெரிக்காவிற்கு விமானத்தில் போவதற்கும், கப்பலில் போவதற்குமான வித்தியாசம்தான்.//

இல்லை பாஸ்! பல கேஸ்ல இது ஆமை முயல் கதையானதை என் அனுபவத்துல பார்த்திருக்கேன்

என்னடா முருகேசன் வரிக்கு வரி வரிப்புலி கணக்கா கிழிக்கிறாரேனு நினைச்சுராதிங்க. ரெண்டு கார்ப்பரேஷன் குப்பை லாரி மோதிக்கிட்டா குப்பை தான் சிதறும்.

நாமதான் ரிசர்வ் பேங்க் கண்டெயினர் கணக்கா இருக்கோமே ..கட்டு கட்டா சிதறட்டும் சனங்களோட ஆன்மீக வறுமை ஒழியட்டும்.

நான் புரிஞ்சிக்கிட்ட கடவுளை படிச்சு அந்த பார்ட்டிய புரிஞ்சிக்காட்டாலும்  என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க.

ஏக் மார், தோ துக்டா


உங்கள் வலைப்பூ விளம்பரங்கள், ஒளிப்படங்கள் வேலைகளுக்கும், வலை, கணிணி வடிவ வேலைகள், 2டி, 3டி அனிமேசன், வீடியோ, ஆடியோ தொகுப்பு வேலைகள், ஓவியம், கேரிகேச்சர், விளம்பர வடிவங்களுக்கும், அனைத்து கணிணி மென்பொருள் பாடங்களுக்கும் அணுக... ஓகதாஸ்... Ohedas Technologies... info by: Mail to


ஏக் மார், தோ துக்டா

ஆத்திகம், நாத்திகமான பெரியாரோடு சம்மந்தமான வார்த்தைகள் வேண்டாம்... இறைவனை நம்ப மறுப்பவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை...  “ஏதோ ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்திலும், நம்முள்ளும் இருக்கிறது”.

நிருபிக்கபட்டால் ஏற்றுக்கொள்ள தயார் என்பதெல்லாம் வேடிக்கைத்தனம். அதுவோ, இதுவோ மனிதனால் ஏற்படுத்திக்கொண்ட கணக்குகளில் அடங்குவதில்லை. ஆனால் ஆசாமியான தன்னை சாமி என்று சொல்லுபவனை, ஏமாற்றுபவனை கழுவிலேற்றலாம்.

அந்த சக்தியை நோக்கிய (யா இல்லை) பாதையில் இரண்டு வழிகள்.
ஒன்று வழிபாடு,
இரண்டு தன் வழிபாடு.
அது கோவில், குளம், சடங்கு, மந்திரம், யாகம், நம்பிக்கை... இது தியானம்...

எனக்குத்தெரிந்தவரையில் இரண்டையுமே வழிமொழிந்தவர்கள் சித்தர்கள்தான். உனக்கு எது முடியுமோ அது...

சடங்குகளின் உண்மை நிலை... தளர்ந்திருப்பதால் முதலானது இப்பொழுது கேலிக்குரியதாக மாறுகிறது. சித்தர் தியானமோ நிரூபணம் வேண்டுவதால் ஏற்றுக்கொள்ள ஆர்வமில்லை.

இரண்டிலும் விருப்பமுள்ளவருக்கோ, விளக்கம் தர ஆசானில்லை. கடல் நீரில் இனிப்பைத் தேடுவதாக இருக்கிறது. சந்தர்ப்பவாதிகள் மக்களை ஏமாற்றி, மூளையையும், கற்பையும் சுரண்டிவிடுகிறார்கள்.

மேயிற மாட்டை, நக்குற மாடு கெடுத்ததாக ஒரு சொலவடை உண்டு... அது போல, பக்தியிலும், தியானத்திலும் இருப்பவனை மறுதலிப்பவன் விடுவதே இல்லை. தன் சகதியை எதிராளிக்கும் பூசி மகிழும் சந்தோஷம்.

ஒரு சின்ன கேள்வி... இப்பொழுது எல்லா வலைப்பூக்களிலும் கூகுள் ஆட்சென்ஸ் உண்டு... எத்தனை பேர் அதை கிளிக்கி அந்த வலை பதிவருக்கு உதவியிருக்கிறோம்?. 

“போய்யா ஜி... நான் கிளிக்கினால் எனக்கா பணம் வருது... அவனுகுல்ல போகுது...!”

அடபாவிகளா... அவன் கிளிக்கினால் உனக்கு வருமேயா... அதை மறந்திட்டயே?

இந்த ஒரு பொதுவான விசயத்திலேயே இப்படியான முரண் இருந்தால்.... விளங்கிரும்லா...

வழிபாடுகளை பொறுத்தவரை... வழிகாட்டி தேவையில்லை... உனக்கு எந்த தெய்வமோ அதே... அது ஆசியாவின் உயர்ந்த கோபுர வழியிலிருந்தாலும் சரி, இல்லை மொட்டை கோபுர வழியிலிருந்தாலும் சரி. அது முதன்மையான நம்பிக்கையின் அடிப்படையானது.

ஆனால் இரண்டாவதான தன் வழிபாடு... தியானம், இது உடல், மன அமைதி தியானம் இல்லை. குண்டலி அ குண்டலினி தியானம்...

ஆர்வமுள்ளவர் மட்டுமே மேற்கொண்டு படிக்கலாம்...

குண்டலி மூலாதாரம் எனும் Sexual Gland ல் உறைந்திருக்கிற ஒரு மின்சாரம். அதுவே உடல், மன, எண்ண செயற்பாடுகளின் ஆதாரம். இதன் இயக்கம் சிவம்... இல்லையேல் சவம். சித்தர் தியான முறை... குண்டலியின் இயக்கத்தை மாற்றுதல்... தன் சுய இயக்கத்தை நிறுத்தி நமது கட்டுப்பாட்டில் கொண்டுவருதல்.

எப்படி கொண்டுவர இயலும்?
முறையான பிரணாயாமம்... இட, வல சுவாச வழியே காற்றை சுவாசித்தல்... இரண்டிற்குமிடையே ஒரு கணம் நிறுத்துதல்... இந்த நிறுத்தல் காற்றை சூடாக்கி, மூலாதாரம் நோக்கி நகர்ந்து குண்டலியை உசுப்பேற்றும்...

இது இப்போதில்லை... எளிய முறை குண்டலி தியான பயிற்சி கிடைக்கிறது... வேண்டுவோருக்கு மட்டுமே கிடைக்கும். எங்கே ஜி? தேடுங்கள்... வாழைப்பழம் தான் தர முடியும்... உரித்தலும், ஊட்டிவிடுதலும் என் வேலையல்ல.

கேள்வி: ஜி... கூகுளாண்டவர் கிட்ட கேட்டா நிறைய நூல் “குண்டலி தியானம்” பற்றி கிடைக்கிறதே முயற்சிக்கலாமா?

பதில்: விபரம் கிடைத்தவரையில் சரி... அதன் படி நடக்கவேண்டாம்... குண்டலி உசுப்பேற்றல் முறையாக இயக்கப்பட வேண்டும், முறை தவறினால்... உடல், மன, எண்ண செயற்பாடுகள் தடுமாறும் வாய்ப்புகள் உண்டு...

சரி... இதன் மூலமாக என்ன கிடைக்கும்?

ஓட்டுக்கு பணம் வாங்குகிற மக்களல்லவா நாம்... ஏம்ப்பா... எதாவது கிடைச்சாத்தான் பண்ணனுமா? பண்ணிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க கூடாதா?

அப்பொ... வழிபாடு பண்ணா இதெல்லாம் நடக்காதா?

நடக்கும்... அமெரிக்காவிற்கு விமானத்தில் போவதற்கும், கப்பலில் போவதற்குமான வித்தியாசம்தான்.

அதான் தலைப்புல வச்சிருக்கேன்....  ஏக் மார், தோ துக்டா



வழிபாடு தொடரலாமா?

:)

குண்டலியின் தொடர்புடைய... திரு. முருகேசன் அவர்களின் பதிவு காண்க... இங்கே

Saturday, November 13, 2010

வேட்டி வரிஞ்சு கட்டி

அண்ணே ..வணக்கம்ணே,

ஹரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணுங்கறது பெரியவுக சொன்னது.

ஆத்திகமும் நாத்திகமும் ஒன்னு. இது ரெண்டுமே  நீசத்துல இருக்கும்போது கடவுளை பத்தி பேசும். (உளன் -இலன் விவாதம்) ,உச்சத்துக்கு போகும்போது மனிதனை பத்தி பேசும்.

அதனால அம்மன் அருள் வேண்டி நாம செய்த சாதனையை அதிலான நம்ம அனுபவத்தை ரிவீல் பண்றதுல நமக்கு எந்தவிதமான குற்ற உணர்வும் கிடையாது.  "அவாள்" மாதிரி சீக்ரெட் மெயின்டெய்ன் பண்றதுல எனக்கு சம்மதமில்லை.

தனி மனிதனுக்கு கிடைக்கிற காசு பணமே ஒட்டுமொத்த மனிதசமுதாயத்துக்குரியது. காந்தி நீ ஜஸ்ட் ஒரு கர்த்தா -டரஸ்டி தாங்கறார்.  இந்த நிலைல இந்த மாதிரி மிஸ்டிக் சைன்ஸ் எல்லாம் நிச்சயமா என் மூலமா மனித குலத்துக்கு வழங்கப்பட்டதாவே தான் நினைக்கிறேன்.


பைபிள் கூட பன்றிகள் முன் முத்துக்களை போடாதிருங்கள்னு சொல்லுது. என்னோட சித்தாந்தம் என்னன்னா நாம வீசறது ஒரிஜினல் முத்தா இருந்தா (அதுக்குரிய கிரகம் சந்திரன் - அவர் மனோகாரகன் - எனவே) பன்றியோட மனசும் மாறனும்.


சரிங்கண்ணா ..ஆத்தாளோட நமக்கேற்பட்ட உறவு -அதிலான திருப்பங்கள் எல்லாத்தையும் சொல்லிரனும்னு 10 வருஷ கதைய  நீட்டி முழக்கி சொல்லத்தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். ஆனால் கடந்த அத்யாயத்துலயே  2000 டு 2010 ன்னு லாங் ஜம்ப் அடிச்சுட்டன்.

இதுக்கும் காரணம் இல்லாம இல்லை. என்னங்கடா இது ஆத்தா ஆத்தான்னு கிட்டு ஒரே இம்சையா போச்சு .. ஓகே ஆத்தாள வச்சி என்னத்த கிழிச்சேனு கேட்டுருவாய்ங்களோனு ஒரு உதைப்பு அதனாலதான் இந்த ஜம்ப்.

தீபாவளிதினம் லட்சுமி பூஜைக்கு ஹெல்ப் பண்ணேன். ரூ 900 வாடகைக்கு வசந்த மாளிகை கிடைச்சுதுனு சொன்னா அதுக்கும் சப்பை கட்ட சனமிருக்கு.

நாம எதையாவது புதிதாய் பெற்றால் அதன் மதிப்பை கூட உணரமுடியாத அளவுக்கு நம்ம மனசு,புத்தி எல்லாமே மரத்து போயிருக்கு. எதையாவது இழந்தால் தான் உறைக்குது.

நாம பெற்றாலே இந்த கதி. மற்றவர் பெற்றால் கேட்கவே தேவையில்லை. இந்த kavithai07 வலைப்பூவையே எடுத்துக்கங்களேன். kavi -குரங்கு- ஆஞ்சனேயர்- "மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்" thai - தாய் (ஆத்தா) நீங்களே பார்த்திருப்பிங்க டஜனுக்கு மேல ப்ளாக் க்ரியேட் பண்ணி வச்சிருக்கேன். எதுவுமே பேர் சொல்லலை.
இது மட்டும் தான் ஒர்க் அவுட் ஆச்சு. எந்த ரேஞ்சுக்குன்னா ஆத்தாவுக்கு சர்வ ஸ்வதந்த்ராயை ஸ்வாஹானு ஒரு பேர் உண்டு. யத்பாவம் தத்பவதி. நானும் சுதந்திரனாயிட்டன்.

கருத்து சுதந்திரம் மட்டுமில்லே பொருளாதார சுதந்திரம் கூட தினத்தந்தியை விட்டாச்சு. வீட்டண்டை ஜோசியம் சொல்றதை 90% குறைச்சாச்சு. ஏதோ பக்தாள் ரேஞ்சுல  நம்மையே நம்பி உள்ளவுகளை மட்டும் அன்பு காரணமா வெட்டிவிடாம இருக்கேன். ஆன்லைன்ல கூட நமக்கு பிடிச்சிருந்தாதான் ஜோதிட ஆலோசனை. இல்லைன்னா இன்னொரு சமயம் பார்ப்போம்னு கழட்டிவிட்டுர்ரதான். செலக்ட் பண்ண க்ளையண்டுக்கு கூட கட் ரைட்டா சொல்லிர்ரன் ..வாரமாகலாம் பத்து நாளாகலாம் காத்திருக்கும் பொறுமையிருந்தா காசு போடுங்க.. இல்லாட்டி டாட்டா..

இப்படியெல்லாம் நடக்குமான்னு கனவு கண்டுக்கிட்டிருந்தேன். கனவு நனவாயிருச்சு.
இப்படி கனவு கண்டது என்னோட சுய நலத்துக்காக இல்லே. டு டூ பெட்டர் இன் மை ஜாப்.  நாட் ஒன்லி டு மை க்ளையண்ட்ஸ் பட் ஆல்சோ டு மை மதர் லேண்ட்.

ஆக கவிதை07 மூலமா ஆத்தா என்னை எக்கனாமிக்கலா சுதாரிச்சுக்க வச்சு சுதந்திரனாக்கி (அவிழ்த்து விட்ட மாடு மாதிரினு சொல்லலாம்) விட்டிருக்காள்.

நீ நீர்த்து போயிட்ட, கொண்ட கொள்கைய காத்துல விட்டுட்ட.. (ஆப்பரேஷன் இந்தியா2000) ன்னுட்டு யாரும் சொல்ல தேவையில்லை. நானே ஒத்துக்கிடறேன். ஆனால் காரணம் வேற..

1997ல வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கினப்ப  நாம சிங்கிள்.. போக போக ஆத்தா வந்து சேர்ந்துக்கிட்டா பாஸ்..2004ல ஆப்பரேஷன் இந்தியா2000 விஷயமா தலை நகருக்கு பாதயாத்திரை அறிவிச்சாச்சு. ( பட்டை உரியற ஏப்ரல்ல) BC,SC,ST அமைப்பினர் வந்து அன் கண்டிஷ்னல் சப்போர்ட் கொடுத்து பஸ் யாத்திரை ப்ளான் பண்ண சொன்னாய்ங்க. பாத யாத்திரை  ட்ராப் ஆயிருச்சு. அப்போ நான் பேசின காட்சியை பத்திரிக்கைகாரவுக ஃபோட்டோ பிடிச்சாய்ங்க. அதை பார்த்தா ஒரு இனிய அதிர்ச்சி.

நீங்களும் பாருங்க. ( நம்ம பின்னாலே ஒரு ஷக்தி இருக்கு)

நான் அந்த காலகட்டத்துல சனங்கிட்டே  நம்ம ப்ளானை பத்தி பேசறச்சே சனம் " நீ சிங்கிள் ஆளு என்னப்பா பண்ணமுடியும்" னு கேட்டா ஒரு பஞ்ச் விடறது வழக்கம் " "கண்ணா ..உன் கண்ணுக்கு நான் சிங்கிளா தெரியறேன். ஆனால் என் பின்னாடி ஒரு ஷக்தி இருக்குது . அது பார்த்துக்கும். யு டோண்ட் ஒர்ரி"

ஒய்.எஸ்.ஆர் ஜலயக்னம் ஆரம்பிச்சுட்டதால ஆ.இ க்கு அவசியமே இல்லாம போயிருச்சு.இப்ப உள்ள ரோசய்யாவுக்கு மனு கொடுக்கிறதை விட எதுனா கோவில் தெப்பக்குளத்துல போட்டா வெய்ய காலத்துல "அதுக்கானா" ஒதகும்.

ஆனாலும் ஆ.இ 2000 ஐ விடறதா இல்லை. நிச்சயம் கலக்குவம்ல. வெயிட் அண்ட் சீ!  மொதல்ல திட்டத்தை பத்தி ஆர்ட் பேப்பர்ல 16 பக்கத்துல  மன்மத மருந்துக்கான புக்லெட் கணக்கா கவர்ச்சியா  அச்சடிச்சு தில்லி, அல்லது ஹைதராபாத்ல ப்ரஸ் மீட் வைக்கறதா ஒரு ஐடியா இருந்தது. இப்ப ஜர்னலிசம் இருக்கிற இருப்புல ஸ்டார் ஹோட்டல்ல ப்ரஸ் மீட் ஃபாலோட் அபை லஞ்ச் வச்சாதான் வேலைக்காகும் போல.கொஞ்சம் போல காசு புரட்டிக்கிட்டு பார்ப்போம்.

விளக்கம்:

மந்திரோபதேசம் நடந்ததே டிசம்பர்23 ஆம் தேதிதான். கவிதை07 வலைப்பூ ஆரம்பிச்சது 2000,ஜூலை,31 ( தகவல்:அலெக்ஸா) இதெப்படி? அதான் சொன்னேனே..சாக்தேயத்துக்கான  விதைகள் ஏற்கெனவே தூவப்பட்டிருந்தன. சிவசக்தி பூசனை எட்செட்ரா.

"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே ..இன்பத்தில் ஆடுது என் மனமே" -ன்னுட்டு உடலின் ஒவ்வொரு  அணுவும் குதியாட்டம் போடுமாம். அப்ப அறிவு க்ராஸ் பண்ணி  இதனால என்ன லாபம்னு கேட்குமாம்.(ஓஷோ)  சனம் மட்டும் " இந்த பைத்தியக்காரனுக்கு வேற வேலையே இல்லப்பா" னுட்டு சந்தோஷ பலூன்ல ஊசி குத்திரும்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்புன்னாரு வள்ளுவரு. மனிதனோட எல்லையற்ற காலவெளியோட ஒப்பிடறப்ப பத்துவருசம்லாம் ச்சொம்மா ஜுஜுபி.

நான் கூட இவிகளை மாதிரியே அரச மரத்தை சுத்திட்டு அடி வயித்தை தொட்டுப்பார்த்துக்கன மாதிரி பிஹேவ் பண்ண பார்ட்டிதான். 2001 நவராத்திரிக்கே ஆத்தா இந்த ஒன்பது நாள்ள ஒன்பது ஃபீல்டுல நம்மை உச்சாணிக்கொம்புக்கு தூக்கிட்டு போகப்போறானு கனவு கண்ட பிக்காலிதான் நானு.


கடந்த பதிவுல ஒரு குரல்  "விஜயவாடா நித்யானந்தம்"னு காதுல சொன்னது.. "கொலுசு சத்தம் கேட்டது" தன்னோட  என்ட்ரியை அக்கம்பக்கத்து  போர்ஷன்ஸ்ல பெரிய ஜாமானா தள்ளி சத்தம் பண்ணி தெரிவிக்கிறது, சூல மேடைக்கு எதிர் வாசல்லயே நம்மை குடி வச்சது..மாதிரி  நூத்துக்கணக்கான அற்புதம்லாம் நடந்தது வாத்யாரே..எல்லாத்தயும் சொல்லத்தான் போறேன்"ன்னு பில்டப் கொடுத்திருந்தேன். அதுல சிலதை இப்பம் பார்ப்போம்.

மொதல்ல கொலுசு சத்தத்துக்கு வந்துருவம்.(ஒரு பார்ட்டி பாவம் இந்த கேள்விக்கான பதிலுக்காகவே இந்த பதிவை ஆவலா எதிர்ப்பார்த்துக்கிட்டிருக்கு.) கொலுசுங்கறது முத்தின கேஸு. அதுக்கு மிந்தி குழந்தை குவா குவானு கத்தற சத்தம் கேட்டிருக்கும்.( நமக்கு கேட்டுதுங்கண்ணா)

இதனோட தாத்பரியம் என்னடான்னா நம்மளோட மந்திரம்,ஜபம், தியானம் இத்யாதியோட பொட்டன்ஷியாலிட்டிய க்ராஸ்ப் பண்ணிக்கிட்டு ஆத்தா நமக்குள்ளயே பிறந்து வராங்கறதுதான்.

நாம நம்ம சாதனையில முன்னேற முன்னேற ஆத்தாளும் வளர்ரா வளர்ந்து சித்தாடை கட்டி நம்மை சுத்தி நடமாட ஆரம்பிச்சுர்ரா. நாம தியானத்துலயோ மந்திர ஜபத்துலயோ ஆழும்போது அவ நடமாடற கொலுசு சத்தம் கேட்குது. மனசுலாயி?

இந்த விஜயவாடா மேட்டரை பார்ப்போம்.

வாணியம்பாடி - முஸ்லீம் நண்பர் அனுப்பி வச்ச ஜின் (தேவதை) -கவுசருக்கும் நமக்கும் ஒத்துவராம பேக் டு தி பெவிலியன்லாம் ஞா இருக்கில்லை.

வேலையில சேர்ந்த புதுசுல மொதல்வாரம் கவுசர் கிட்டே பேட்டா வாங்கிக்கிட்டு சித்தூர் வந்தா பொஞ்சாதி சேமிப்பு வாரம் கொண்டாடி வீட்டை காலி பண்ணி சாமான் செட்டையெல்லாம் கொண்டு போய் அம்மா வீட்ல போட்டு வச்சிருந்தா. நாமதான் தன்மான சிங்கமாச்சே. உடனே காசு புரட்டி வீடு தேட ஆரம்பிச்சேன்

வாடகைக்கு வீடு தேடறது ஒரு கலை. பேசிக்கலாவே நமக்கு நெட் ஒர்க் உண்டு. ( அர்த ராத்திரில சுடுகாட்டுக்கே போனாலும் " சாமேய்! இன்னா இந்த நேரத்துல"ன்னு ரு குரல் வரும். மேலும் எங்கன காலியிருக்கும், எங்கன நம்ம ரேஞ்சுக்கு இருக்கும்ங்கற குன்செல்லாம் நமக்கு உண்டு. வீடு தேட ஆரம்பிச்சா மினிமம் அரை மணி நேரம்.. மேக்சிமம் ஒரு மணி நேரம் அட்வான்ஸ் தட்டிட்டு சாவி வாங்கிக்கிட்டு வந்துருவம்.

ஆனால் பாருங்க இந்த தாட்டி ஹார்ட் ஆஃப் தி டவுனெல்லாம் முடிச்சாச்சு. 1 கி.மீ தாண்டியாச்சு தேனபண்டானு ஒரு ஏரியா (தேன் பாறை). அங்கன ஒரு புராதன கோவில். கோவில் பக்கத்துல இடம் பிடிச்சு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் ஒரு கோவில் (?) கட்டியிருக்காய்ங்க. அதுக்கு எதிரே ஒரு மேடை அதுல சூலம். அங்கன வந்து உட்கார்ந்துட்டன். கூட பொஞ்சாதி வேற.

அப்போ ஒரு பொம்பளை வந்து விஜாரிக்க நான் மேட்டர் சொல்ல அந்த மாராஜி க்ளூ கொடுக்க வீட்டை பிடிச்சேன். தெற்கு வாசல்தான்.ஆனால் வடக்குல ஆறு.
( இழந்த ராஜ்ஜியத்தையே பிடிச்சுரலாமாம்)

நம்ம போர்ஷனுக்குள்ளார ஒரு ஆள் உள்ள உட்கார்ந்துக்கற மாதிரி சைஸ்ல ஒரு தொட்டி வேற.கவுசருக்கு உப்பு தீர்ந்த பிறவு இங்கனதான் சாதனைய முழுமூச்சா துவங்கினேன்.

அந்த காலகட்டத்துலதான் ஜெபம்,தியானம்லாம் முடிஞ்சு ஓஞ்சு சாஞ்சப்ப காதுல "விஜயவாடா நித்யானந்தம்"ங்கற வரி கேட்டுது. எப்படியெல்லாமோ அனலைஸ் பண்ணி பார்த்தும் இது ஒன்னுதான் இன்னைவரைக்கும் ரிசால்வ் ஆகல்லே.

ஆனால் அவாள் பண்ற அட்டூழியங்களை காரண காரியங்களோட விளக்கி நோண்டி நுங்கெடுத்து நான்  பதிவு போடற சமயங்கள்ள, உள்ளதை சொல்லிர்ரதால நொள்ளைக்கண்ணுக நோப்பாளத்துக்கு இலக்காகறப்ப நமக்கு கொஞ்சம் போல பேஸ்தடிச்சாப்ல ஆயிரும். அந்த மாதிரி சந்தர்ப்பத்துல ஓம் தும் துர்காயை ஸ்வாஹானு கொஞ்ச  நாழி ஜெபிச்சா ப்ராப்ளம் சால்வ். அடுத்து ஒரு வார காலத்துக்கு அந்த பிக்காலிங்க ரெட் மார்க்கோடயோ,புத்தூர் கட்டோடயோ எதிர்படறது வழக்கமா இருக்கு.(விஜயவாடால உள்ளது துர்காதானே)

அதுக்கு முந்தி சின்ன சுய விளக்கம். வழக்கமா இந்த அம்மன் விவகாரம்லாம் எங்கன போயி முடியும்டான்னா அருள் வாக்குலதான். பங்காரு அடிகளார்ல இருந்து நாராயணி பீடம் வரை பண்றது இந்த பிசினஸ்தான். ஆனால் நான் இந்த மேட்டர்ல மட்டும் பக்காவா இருக்கேன்.

நம்மகிட்டே பலன் கேட்டுக்கிட்ட பலர் "அப்படியே அருள் வாக்கு மாதிரி சொன்னிங்களே.. ஒரு வாக்கு அட அட"ன்னு ஜும் ஏத்தினாலும்  நாம மட்டும் "த பாரு இந்த டகுலெல்லாம் வேணா.. ஜோசியன் சொன்ன 100 மேட்டர்ல 96 நடந்திருக்காது. ஒரு நாலு குத்து மதிப்பா நடந்திருக்கும்.  ஆனா நீங்க   நடக்காததை எல்லாம் விட்டுருவிங்க .. நடந்ததை மட்டும் வச்சி அவனுக்குள்ள இருக்கிற நாலணா ஜோசியனை கூட காட் மேன் ரேஞ்சுக்கு கொண்டு போயிருவிக.
நான் சொன்னது ஜோசியம். வாட்ச் இருந்து  டைம் பார்க்க தெரிஞ்சா டைம் சொல்லலாம். பஞ்சாங்கம் இருந்து  நேரம் பார்க்க தெரிஞ்சா ஜோசியம் சொல்லலாம். வேணம்னா நீ வா ஜஸ்ட் 15 நாள்ள கத்து கொடுத்துர்ரன்..ஓடிப்பூடு"னுட்டு கழட்டிவிட்டுர்ரம்.

பின்னே என்ன ம..ருக்கு சாக்தேயம் ,,சால்னான்னு கேப்பிக. சொல்றேன். எந்தெந்த காலகட்டத்துல என்னோட தகுதி என்ன, எனக்கு கிடைச்ச அங்கீகாரம் என்னனு எனக்கு தெரியும். தகுதிக்கும் அங்கீகாரத்துக்கும் சம்பந்தமே கிடையாது.

நான் சந்திச்ச அவமானங்களுக்கோ, பெற்ற சன்மானங்களுக்கோ லாஜிக்கே கிடையாது. ஒரு ஆங்கிள்ள பார்த்தா என்ன மாதிரி சாதனையாளனை சரித்திரத்துல பார்க்க முடியாது. இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா என்னை மாதிரி சோம்பேரிய  துரதிர்ஷ்டம் பிடிச்சவனை பார்க்கவே முடியாது.

இப்படி ஒன்னுக்கொன்னு தொடர்பே இல்லாததையெல்லாம் நான் அனுபவிச்சிருக்கேன். அனுபவிச்சிக்கிட்டும் இருக்கேன். ஒரு ரூட்ல போயிருந்தா போதை ஊசி ரேஞ்சுக்கு வளர்ந்து புதைச்ச இடத்துல புல்லே முளைச்சிருக்கனும். இன்னொரு ரூட்ல போயிருந்தா என் கவுண்டரே ஆயிருக்கனும்.

ஒரு தனி மனிதனுக்கு இத்தனை நாலட்ஜ் தேவையில்லாத ஒன்னு.( மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ் இல்லேன்னாலும்.. எந்த சப்ஜெக்ட்ல நீங்க புலியா இருந்தாலும் அதே சப்ஜெக்ட்ல உங்க கண்லை விரலை விட்டு ஆட்டற கப்பாசிட்டி நமக்கு இருக்குதுங்கோ.

எப்படியோ என் மைண்ட்ல நான் ஒரு பொது சொத்துங்கற பாயிண்ட் விதைக்கப்பட்டுருச்சு.  நான் உயர்ந்தா இந்த நாடு உயரும்ங்கற ஓவர் கான்ஃபிடன்ஸ் பில்டப் ஆயிருச்சு.

பாபா படத்துல பேஸ்தடிச்ச ரஜினி "சக்தி கொடு"னு பாடறாரே அந்த மாரி கிடையாதுங்கோ..

நமக்கும் ஆத்தாளூக்கும் இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங்கே வேற "ஆத்தா நீ என்னப்பார்த்துக்க நான் இந்த நாட்டை பார்த்துக்கறேன்"

என் சிந்தனை,திட்டம்,செயல்பாடு மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை உண்டுதான். இல்லேங்கலை.இதையெல்லாம் வச்சு நான் ஒழுங்கு மரியாதையா என் சூ... மட்டும் கழுவியிருந்தா அம்பானி ரேஞ்சுக்கு இல்லைன்னாலும் நம்ம ஓம்கார் ஸ்வாமிகள் ரேஞ்சுக்கு அட்லீஸ்ட் டோண்டு ராகவன் ரேஞ்சுக்கு  இருந்திருப்பேன்.

ஆனால் நம்ம டிமாண்ட் ஒன்னுதான் "ஆத்தா நீ என்ன பார்த்துக்கலைன்னா நான் என்னை பார்த்துக்கறதுலயே பொயப்பு பூடும். என்னால எவனுக்கும் எந்த நன்மையும் நடக்காது. ஸோ நீ என்னைப்பாரு.. நான் இவிகளை பார்க்கிறேன்"

சுப்பிரமணிய பாரதி கேட்டாரே " வல்லமை தாராயோ நா( மா) நிலம் பயனுற வாழுதற்கே"ன்னுட்டு.. நாமளும் அதே டைப்தான்.

நவம்பர் எட்டாம் தேதி வீட்டை காலி பண்ணதால ஃபோன் ஷிஃப்ட் பண்ண வேண்டியதாயிருச்சு. மறு நாளே அப்ளை பண்ணியும் பிக்காலி பசங்க இன்னம் ஷிஃப்ட் பண்ணலை. இத்தனைக்கும் நாம ப்ரஸ் ரிப்போர்ட்டருனு பெத்த பேரு.
இந்த அழகுல ஊதிய உயர்வு,போனஸுனு ஸ்ட்ரைக் வேற பண்ணுவாய்ங்க. இந்த நாலு நாள்ள ஒரு நாளைக்கு ரூ 20 மேனிக்கு இன்டர் நெட் சென்டருக்கும் அழனும், நாளைக்கு இவிக பில் போடறச்ச இந்த 4 நாளை லெஸ் பண்ணப்போறதில்லை.

(625/30X4 லெஸ் பண்ணுவாய்ங்களா ? ம.......ரு கூட பண்ணமாட்டானுங்க. அதுவும் க்ஷவரம் தான்.யாரோ பண்ற தப்புக்கு  நாம தண்டம் அழவேண்டி வர்ரதான் பெரிய  சோகம்)

பதிவுகளோட தொடர்ச்சி, வேகம், இத்யாதில ஏற்பட்டிருக்கிற  இடைவெளிக்கு  இதான் காரணம் . அதுவும் இன்னைக்கு சால்வ் ஆயிரும்னு ஒரு ஜொள்.பார்ப்போம். உடு ஜுட்.

Thursday, November 11, 2010

விதவை மைத்துனி

சூ மந்திர காளி : ?
நான் கமெண்டுகளோட எண்ணிக்கைக்கு  முக்கியத்துவம் கொடுக்கிறதை விட்டு மாமாங்கமாச்சு. அதே போல மறுமொழிக்கு மறுமொழி கொடுக்கிறதையும் விட்டுட்டன். ஒரு சிலதுக்கு நிச்சயம் தேவைப்படும்..இதோட தொடர்ச்சி நின்னுரும்னு  நம்பிக்கை பிறந்தா மட்டும் ம.மொ போடறதை வழக்கமா வச்சிருக்கேன்.

இந்த தொடர்பதிவோட தலைப்புக்கு ஒரு பார்ட்டி "சரியான தலைப்பு"னு ம.மொ போட்டிருந்துச்சு. பார்த்திங்களா பத்தி பத்தியா பெரியார்லருந்து மேற்கோள் காட்டி கிழி கிழினு கிழிக்கிறதுல வர்ர எஃபெக்ட் ஒரே ஒரு வார்த்தையில வந்துருச்சு. ஐ லவ் தீஸ் டைப் ஆஃப் கமெண்ட்ஸ்.


ஓஷோ சொல்வாரு "நான் என்ன பேசனுமோ அதைத்தான் பேசிட்டிருப்பேன். தலைப்பெல்லாம் சொம்மா உளுவுளாக்காட்டிக்கு"

யத்பாவம் தத்பவதிங்கறாப்ல ஓஷோவோட எழுத்துக்களை படிச்சு படிச்சு நமக்கும் அந்த கப்பாசிட்டி வந்துட்டாப்ல கீது. என்னோட சாக்தேய சாதனைகளை சொல்றேன்னு தான் இந்த தொடர்பதிவை ஆரம்பிச்சேன். ஆனால் ஸ்ருதி கூட்டவே 4 அத்யாயம் தீர்ந்து போயிருச்சு. சரிங்கண்ணா பதிவுக்கு போயிரலாமா?


மந்த்ரோபதேசம்  நடந்ததென்னவோ 2000,டிசம்பர் 23 ஆம் தேதிதான். ஆனால் சாக்தேய சாதனைகளுக்கான  விதைகள் பால்யத்துலயே விதைக்கப்பட்டுட்டாப்ல இருக்கு. 1 ஆம் கிளாஸ்லருந்தே புவனேஸ்வரிங்கற க்ளாஸ் மெட் இருந்தது ஞா வருது.(1973) எங்கம்மாவுக்கு மார்ல கட்டி வந்தப்ப பார்த்து பயாப்சி பண்ணுங்கனு உசார் பண்ண கைனகாலஜிஸ்ட் பேரு புவனேஸ்வரி.(1984)

1991க்கு முந்தியே (1989க்கு பிறவு) நம்ம ஜாதகத்துல சிவசக்தியோகம் இருக்குன்னு சிவசக்தி உபாசனை ஆரம்பமாயிருச்சு.சைட் ஃபோஸ்ல சிவனும் சக்தியும் உள்ள டாலர் அணிய ப்ளான் பண்ணி ரெடிமேட் கிடைக்காம ஆஞ்சனேயர் டாலர் பின்னாடியே டை போட சொல்லி கழுத்துல   போட்டதும், கவர்,லெட்டர் பேட்ல எல்லாம் அந்த லோகோவை பொறிச்சிக்கிட்டதும்  ஞா வருது.

ச்சொம்மா ஃப்ளாஷ் பேக்கை சொல்லிக்கினிருந்தா கடுப்பாகத்தான் செய்யும். அதனால இந்த சாதனைகளோட   லேட்டஸ்ட் விளைவு  என்னனு பார்ப்போம்.

கடந்த 10 மாசமா ஆக்னேயத்துல பெரிய வேப்பமரம் இருக்கிற சிதிலமான ஓட்டுவீட்ல குடியிருந்ததும் ..  இந்த மழைக்கு எங்கே விழுந்து தொலைச்சுரப்போவுதோனு அவசர அடியா தேடிய இந்த சூப்பர் வீடு கிடைச்சதும்தான்.

மந்த்ரோபதேசம் நடந்த புதுசுல நானா சில கஸ்டம்ஸ் வச்சுக்கிட்டேனு சொல்லியிருந்தேனில்லையா.அதுல மஞ்ச தண்ணியோட வேப்பிலையையும் சொல்லனும்.

நாம என்னதான் நாமர்தா வேலைகள் செய்துக்கிட்டு இருந்தாலும் மாடியில தனியறை கொடுத்துத்தான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரிதான் அப்பா வச்சிருந்தாரு. அதுல கூட அட்டாச்ட் எல்லாம் கிடையாது.( 1984 டு 1991)

இப்ப உள்ளது மாதிரியான  வசதிகள் கொண்ட வீட்ல என் லைஃப் டைம்ல எப்பயும் குடியிருந்ததில்லை. இத்தனைக்கும் வாடகை ஜஸ்ட் ரூ900 தான் வாட்டர் சார்ஜஸ் ரூ 300.ஆனால் சொம்மா சொல்ல கூடாது தூள். ஒரு வராண்டா,அதையொட்டி சமையலறை, பெரிய ஹால், அதையடுத்து பெட் ரூம், அதையொட்டி அட்டாச்ட். ஒவ்வொரு அறையிலயும் பரண், சுவத்துல மானாவாரியா  அலமாரிங்க அட ஷோ கேஸ் கூட இருக்குன்னா பார்த்துக்கங்களேன்.

கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சுவத்துக்கு இடுப்புயரத்துக்கு  பச்சை அடிப்பாய்ங்களே அது மாதிரி இங்கன மெருன். இதையெல்லாம் ஏன் லிஸ்ட் அவுட் பண்றேன்னா..

நம்ம ஜாதகத்துல வீக் சுக்கிரன். ஏதோ சந்திரனோட சேர்ந்து சமாகமனம் பெற்றதால  மதியம் 3 மணிக்கு சோறு, ராத்திரி 12 மணிக்கு டிஃபனுன்னு தரார். ட்ரஸ் விஷயமும் இப்படித்தான்.

தினத்தந்தில நிருபரா இருக்கிறச்ச சொந்த பத்திரிக்கை,ஜோதிஷம், கன்ஸ்யூமர் டிஸ்ப்யூட்ஸுனு பத்துவழில பணம் வர்ர காலத்துல கூட நான் இருந்த வீட்டுக்கு பவர் கிடையாது.

அடுத்து வந்த வீட்ல எலி ராஜ்ஜியம். தெரு லெவலுக்கே ஃப்ளோரிங். தாளி வீட்ல படுத்தா ஃப்ளாட்ஃபாரத்துல படுத்திருக்கிறாப்லயே ஒரு ஃபீலிங் வரும்.

அதுக்கடுத்து வந்ததுதான் வேப்பமரத்து வீடு. வாஸ்து ரீதியில பார்த்தா நொந்து போயிருவிங்க. தெற்கு வாசல். அதுலயும் பக்கா நைருதிலதான் கேட். கிழக்கெல்லாம் கட்டிடம். மேற்கெல்லாம் காலியிடம். அகட விகடம்தான்.

ஆக்சுவலா இந்த வாஸ்துல 6 மாசம் குடியிருந்தா குடும்பத்தலைவன் காலி. அடுத்த 6 மாசத்துல தலைவி காலி. அடுத்த 6 மாசத்துல தலைவாரிசு காலி. உள்ளதெல்லாம் ஓடிப்போயிரனும்.

இந்த எஃபெக்டெல்லாம் வீட்டு ஓனருக்கு 100 சதவீதம் ஒர்க் அவுட் ஆகியிருக்கு. இதுக்கு முன்னாடி குடியிருந்தவுகளுக்கு ஆகியிருக்கு.  ஆனால் நமக்கு மட்டும் பேப்பே. இங்கதான் ஆத்தா நிக்கறா.. ஆத்தரை நிக்க வைக்கிறா.

மேலும் பழங்காலத்து ஓட்டு வீடு பக்கத்து போர்ஷன் விழுந்தே கிடக்க தேள்,பூரான் எல்லாம் லாட்ஜு வைத்தியர் மாதிரி ரெகுலர் விசிட். குடைக்குள் மழை மாதிரி வீட்டுக்குள் மழை. இத்தனை இம்சை இருந்தாலும், இத்தனை களேபரத்துக்கிடையிலயும்   வேப்பமரத்துல கேம்ப் அடிச்சிருந்த ஆத்தாளோட அருளால பொருள் எல்லாம் வந்து சேர்ந்தது. ( மூனு டிவி பாஸ் - ஒன்னை விதவையான என்  மைத்துனிக்கு இரவல் கொடுத்திருக்கேன்) . வைட் அண்ட் ப்ளாக்ல வந்துட்டிருந்த மாதமிருமுறை கலராச்சு. டோட்டல் இன்வெஸ்ட்மென்ட் அதுவரை அஞ்சாயிரம்னா கலருக்கு வந்ததும் 15 ஆயிரமாச்சு. வீட்டுக்கே நெட் கனெக்சன் வாங்கினேன். என் மகள் பீரோ வாங்கினா. 2.5 கொடுத்து எலக் ட்ரிக் ஸ்டவ் வாங்கினா. இன்னம் என்னென்னவோ கண்ட கசுமாலத்தையெல்லாம் வாங்கி சேர்த்தாய்ங்க.

தீபாவளியன்னைக்கு என் ஃப்ரெண்டு லட்சுமி பூஜை பண்றது வழக்கம். அவன் திவாலாகி ஊரை விட்டு ஓடிப்போயி வந்தப்ப மொதல் பூஜைக்கு நான் தான் கூட மாட இருந்தேன்.(2003)

அதோட 2010ல கூப்டான். போனேன். தாத்தா காலத்துல ஜாதிக்காய் பெட்டில காலண்டர் லட்சுமிய ( சிட்டிங்)  ஒட்டி வச்சிருப்பாய்ங்க. அதுக்குத்தான் 10 ஆயிரம் ரூ டெக்கரெஷன்.

இந்த தாட்டி.." லட்சுமிய  நிக்க வைக்கலாம்பான்னேன்" சாதில செட்டியாரா இருந்தாலும் தில்லு துரை. வச்சுத்தான் பார்ப்பமேன்னான். நெட்ல டவுன்லோட் பண்ணி ஃபோட்டோ ப்ரிண்ட் போட்டு பூஜை .

ஒரு அரை லி. பெட்ரோல் எரிச்சு அங்கன இங்கன சுத்தியிருப்பேன். தட்ஸால். ஷாட் கட் பண்ணா 3 ஆவது நாள் இந்த வசந்த மாளிகை.

சுக்கிரன் கிருக காரகன். சுக்கிரனுக்குரிய அதி தேவதை லட்சுமி.

இதுக்கு நான் கொடுக்கிற விளக்கம் என்னன்னா கர்ப காலம் பத்து மாசம். ஆத்தா வேப்பமரத்து நிழல்ல 10 மாசம் அல்லாட வச்சு ,  என் கருமத்தையெல்லாம் ஒழிச்சி கொடுத்த பரிசு இது.

மந்திரோபதேசம் நடந்து சரியா 10 வருஷம் முடியற நேரத்துல சினிமா செட் மாதிரி ஒரு வீடு. வீடுங்கறது உங்க மனசோட நீட்சினு சொல்லியிருக்கேன். வே ஆஃப் திங்கிங்கே மாறிரும். இதான் வாஸ்துவுக்கு அடிப்படை.

ஆத்தாளோட நமக்கேற்பட்ட உறவு -அதிலான திருப்பங்கள் எல்லாத்தையும் சொல்லனும்னா 10 வருஷ கதைய சொல்லனும். நான் 2000 டு 2010 ன்னு லாங் ஜம்ப் அடிச்சுட்டன்.

நோ ப்ராப்ளம் நாளைலருந்து வரிசையா பார்ப்போம். "விஜயவாடா நித்யானந்தம்"னு காதுல சொன்னது.. "கொலுசு சத்தம் கேட்டது" தன்னோட  என்ட்ரியை அக்கம்பக்கத்து  போர்ஷன்ஸ்ல பெரிய ஜாமானா தள்ளி சத்தம் பண்ணி தெரிவிக்கிறது, சூல மேடைக்கு எதிர் வாசல்லயே நம்மை குடி வச்சது.. நூத்துக்கணக்கான அற்புதம்லாம் நடந்தது வாத்யாரே..

எல்லாத்தயும் சொல்லத்தான் போறேன்..

Wednesday, November 10, 2010

மம்மி ! ஐ லவ் யு - 2

வால்மீகி ராமாயணம் எழுதிக்கிட்டிருக்காரு. அப்போ  ஒரு காண்டத்துக்கு ஆஞ்சனேயர் பேரை வைக்கனும்னு ஒரு தாட் வந்தது. நேர அவர்கிட்டே போய் மேட்டரை சொன்னாரு. ஆஞ்சனேயர் பில் குல் ஒத்துக்கல. (தன்னடக்கத்தின் மறு உருவமில்லையா?).

வால்மீகிக்கு படா  பேஜாரா போச்சு. சரிப்பா "சுந்தர காண்டம்னே வச்சுக்கறேன்"னுட்டு கழண்டுக்கினாரு.

இந்த பஞ்சாயத்தை முடிச்சுட்டு அனுமாரு அம்மாவை பார்க்க போயஸ் கார்டனுக்கு சாரி.. வீட்டுக்கு போனாரு. அஞ்சனாதேவி - அம்மா - "சுந்தரா! வந்தியா.. என்னப்பா..களைச்சுபோயிருக்கே.. இந்த பாலையாச்சும் குடின்"னாய்ங்க. ஆஞ்சனேயருக்கு கண்ணை கட்டுது..

சுந்தரான்னா "அழகா"ன்னு அர்த்தம் .அஞ்சனாதேவியோட கண்ணுக்கு அனுமார் கூட அழகுதான்.

இதே போல ஒரு மகனோட கண்ணுக்கு தாய் அழகுதான். அவள் பரட்டைதலையோட இருந்தாலும் சரி, சொறி சிரங்கோட இருந்தாலும் சரி.

என் அம்மா. மாநிறம்தான். ஆனால்  நல்ல களையான முகம்.  இதுக்கு எதுக்காகவும் மூக்கை சிந்தினதில்லைங்கறது தான் காரணம்னு நினைக்கிறேன்.  குடம் குடமா கண்ணீர் வடிப்பதற்கான அவகாசம் நிறைந்த லைஃப் தான். ஆனால் கலங்கினதில்லை.

பிறந்த வீட்லயே நிறைய கஷ்டப்பட்டு இதயமே காச்சுப்போயிருக்கும்னு நினைப்பிக. அதான் இல்லை.

அந்த காலத்திலேயே எஸ்.எஸ்.சி படிச்சு டீச்சராகவும் வேலைப் பார்த்திருக்காய்ங்க. மணியக்காரரின் மகள். என் அம்மாவுக்கான சீர் வரிசைகள் மாட்டு வண்டிகளில் வந்து இறங்கியதை இன்றைக்கும் கதை கதையாக சொல்ல ஆளிருக்கிறது.

அவிக பேக் கிரவுண்டே வேற . வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ வி.எம் தேவராஜ் கூட தூரத்து சொந்தம்னு கேள்வி. அண்ணன் மிலிட்டரி. அக்கா ரயில்வே ஊழியர் மனைவி. ஒரு தங்கை திருப்பதியில் வாழ்க்கைப்பட்டு வாழ்வாங்கு வாழ்ந்தவள்.

இந்த பேக்கிரவுண்டோட ஒப்பிட்டா எங்கப்பன், எங்கப்பன் சைடு சொந்தம்லாம் பிக்காலிங்க. என் அப்பாவைப் பெற்ற‌ தாத்தா எல்லா வியாபார‌ங்க‌ளையும் 6 மாத‌ங்க‌ளுக்கு அதிக‌மில்லாம‌ல் செய்துப் பார்த்து விட்ட‌ பார்ட்டி.

எங்க  பாட்டி இட்டிலி சுட்டுத்தான் என் அப்பாவை ப‌டிக்க‌ வைத்தாளாம். ம‌ணிய‌க்கார‌ரின் ம‌க‌ள்,இட்டிலி க‌டைக் காரியின் ம‌க‌ளை ம‌ண‌ந்த‌து எப்ப‌டி என்று நாளிது வ‌ரை யோசிக்கிறேன். ஏதும் ஸ்ட்ரைக் ஆக மாட்டேங்குது. இத்தனைக்கும் காதல் கீதல்லாம் கிடையாது.

அந்த காலத்துல கவர்மென்டு உத்யோகத்துக்கு அம்மாத்தம் மதிப்பு போல. அல்லது பெண்ணை பெத்தவுக சொத்து,பணம்,சம்பளம் இத்யாதியெல்லாம் பார்க்காம ஸ்பார்க் இருக்கா,பையன் துடியா இருக்கானா முன்னுக்கு வருவானா கட்டிவை பொண்ணைனு ரோசிச்சிருக்கனும். கண்ணாலத்தின் போது எங்கப்பாவோட போஸ்ட் என்னங்கறிங்க. அட்..டெ...ண்டர்.

எங்கம்மா கொண்டு வந்த சீர் வரிசைகளோட பிரம்மாண்டத்தை சொல்லனும்னா தத்தாரியா திரிஞ்ச காலத்துல அவிக பீரோல அடுக்கி வச்சிருந்த வெள்ளி தம்ளர்களை ஒவ்வொன்னா வித்தே என் தனிப்பட்ட செலவுகளை சமாளிச்சிருக்கேன். ( 1984 டு 1986)

1986 ல பிரம்மச்சரியத்துல குதிச்சப்ப மதிய நேரத்து மயக்கங்களை சமாளிக்க பரண்ல இருந்த அத்தனை பித்தளை ,செம்பு பாத்திரங்களையும் துலக்க ஆரம்பிச்சவன் மொத்தத்தையும்  துலக்கி முடிக்க  6 மாசமாச்சு.

இந்த ரேஞ்சு ஃபேமிலிலருந்து வந்த பொம்பளை என் பாட்டியின் அக்காள் மகனின் ('குடி' மகன்) தெரு நடையிலான‌ மூத்திரத்தைக் கூட கழுவித் தள்ளியிருக்கிறாள்.
பக்கத்து மைதானத்துல நடைபாதை வேர்கடலை வியாபாரிகள் குடிசைகள் போட்டு குடியேற எலிகள் (ஒவ்வொன்னும் நமீதா சைஸு) சுரங்கம்லாம் வெட்டிவச்சது உண்டு. ஓட்டு வீடுதான். ஃப்ளோரிங் எந்த அழகுல இருக்கும்னா ஒரு தம்ளரை கூட அசால்ட்டா நிக்கவைக்க முடியாது.

மைத்துன‌ர்க‌ள்,நாத்த‌னார் க‌ல்யாண‌ங்க‌ளுக்கெல்லாம் என் அப்பா வாரிவிட்ட‌ போதெல்லாம் ஒரு பேச்சு கூட‌ த‌டை சொன்ன‌தில்லை. மைத்துன‌ர்க‌ள் த‌னிக்குடித்த‌ன‌ம் போனார்க‌ளே த‌விர‌ என் அம்மா என்ன‌வோ அதே வீட்டில் வாழ்ந்து செத்தாள்.

என் அப்பாவின் பெரிய‌ப்பா ம‌க‌ன் வ‌ந்தாலும் எங்க‌ள் வீட்டில் தான் த‌ங்க‌ல். ஆர‌ணி நில‌ த‌க‌ராறு விஷ‌ய‌மாக‌ ஆண்டு க‌ண‌க்கில் லாட்ஜு வைத்திய‌ர் போல் வ‌ந்து போய் கொண்டிருந்தார். க‌டைசியில் கோர்ட்டு கேஸ் ஜெயித்து என் அப்பாவின் ப‌ங்கு வ‌ந்த‌ போது அதை கூட  த‌ன் த‌ங்கைக்குத் தான் தாரை வார்த்தார். அம்மா மட்டும் மூச்.

என் அப்பா தாய் சொல்லைத் தட்டாத‌ த‌ன‌ய‌ன். என் பாட்டி ச‌ரியான‌ அர‌சிய‌ல் வாதி. இன்னும் கேட்க‌ வேண்டுமா? கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மணையில வையின்னு ஒரே கூத்துதான்.

வாட‌கை வீடு சொந்த‌ வீடாறதுக்குள்ள மெனோஃபஸே வந்துருச்சு. அதுக்கும் காரணம் எங்கப்பன் வெளியூர்ல வெட்டி முறிச்சிக்கிட்டிருந்ததுதான். நாங்க குடியிருந்த வீட்டை ஓனர் விக்கப்போறதா சொன்னான்.

மேட்டர் அப்பாவுக்கு கன்வே ஆக அந்த ஆளு சிம்பிளா "காலி பண்ணிருங்க"ன்னு இண்லன்ட் லெட்டர் எழுதிட்டான்.

நண்டும்,சிண்டுமா, நாலு பசங்க,எட்டு வண்டி சாமான் செட்டு,ஒரு மாமியார்கிழவியை வச்சுக்கிட்டு எப்படி சட்டியை தூக்கிக்கிட்டு அலையறதுன்னு
அப்பாவின் நண்பர்கள்தான்  ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அந்த வீட்டை எங்கம்மா பேருக்கு பதிவு பண்ணிவச்சாய்ங்க. இதுக்கும் ஊர்லருந்து வந்ததும் நண்பர்கள் மேல எகிறி லந்து பண்ணிய கேரக்டர் எங்கப்பனோடது.

தாளி அந்த வீட்டை பத்தி சொல்லனும்னா தனிப்பதிவே போடனும். ஓட்டு வீடு, உத்தரமெல்லாம் செதிலடிச்சு, மண்ணும்,செதிலும் கொட்டிக்கிட்டு, ஓட்டுசந்துலருந்து அப்ப்போ தேள்,பூரானெல்லாம் கொட்டிக்கிட்டு கிடக்கும்.

ஒரு தாட்டி லேசான ம‌ழையில் இடிந்து வீழ்ந்த‌து. ஒரு மாவ‌ட்ட‌ க‌ருவூல‌ அதிகாரியின் வீடு ம‌ழைக்கு இடிந்து வீழ்ந்த‌து இந்திய‌ ச‌ரித்திர‌த்திலேயே முத‌லும் க‌டைசியும் இதுவாக‌த்தானிருக்க‌ வேண்டும். என் அப்பாவின் நேர்மை அப்ப‌டிப் ப‌ட்ட‌து.

இடிந்த‌ வீட்டுக்கு கோழிப் ப‌ண்ணைக்கு கூட‌ போட‌ த‌ய‌ங்கும் லைட் ரூஃப் போட்டு சாத‌னை ப‌டைத்தார் என் த‌ந்தை. சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து வீடு க‌ட்ட‌ ஆர‌ம்பித்தார். அது ஒரு கூத்து. சுவ‌ரை(ம‌ண்) இடிக்க‌க் கூடாது,ப்ளான் மாத்த‌க்கூடாது என்று ஆயிர‌த்தெட்டு நிப‌ந்த‌னைக‌ள். சிமெண்டு த்ராய்க‌ள் போட்டு,அத‌ன் மேல் சிமெண்டு ப‌ல‌கைக‌ள் போட்டு க‌ட்டினார். ஒரே நாளில் கூரை போட்ட‌ கின்ன‌ஸ் சாத‌னையும் என் அப்பாவுக்கே சொந்த‌மான‌து. ஏ.சி நாயக்கர் மொசைக் உபயம் செய்ய, தாசில்தார் ஓஞ்சு போவட்டும்னு சிமெண்ட் கோட்டா ரிலீஸ் செய்ய, இதெல்லாம் நடந்து முடியறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு. 

அப்பாவுக்கு 53 வயசு. ரெண்டுவருசத்துல ரிட்டையர்மென்ட். இந்த பீரியட்ல எப்படியோ கொஞ்சம் போல மேல் மாடி (மூளை)  வேலை செய்து  அம்மாவோட எல்.டி.சில சின்னதா ஒரு டூர் போய் வந்தாப்ல.

திஷ்டி ஆயிப்போயி அப்பனை ஹைதராபாதுக்கு தூக்கி போட்டுட்டாய்ங்க. மாசாமாசம் ஊருக்கு வரச்ச அங்கனருந்து காட்டன் புடவை, கேன் சேர், டின்னர் செட்டுனு வாங்கிட்டு வருவாப்டி.  ( எல்லாமே பிளாட்ஃபார ஐட்டம்தான்)

இதற்கிடையில  என் அம்மாவின் மார்பில் க‌ட்டி கிள‌ம்பி, நான் அது கேன்ஸ‌ராக‌ இருக்க‌லாம் என்று கூறி  நான்  வில்ல‌னான‌தும், அவளது க‌ருப்பையிலான‌ கேன்ஸ‌ர்,வ‌யிற்றுக்கு ப‌ர‌வி ப‌ரிதாப‌மாக‌ செத்த‌தும் த‌னிப்ப‌ட்ட‌ சோக‌ங்க‌ள்.

ஆள் போனாலும்  என் அம்மாவுக்கும் எனக்கும் இருந்த கம்யூனிகேஷன் மட்டும் சாகாம சிரஞ்சீவியா கிடக்கு. மாடியில துணி காயப்போட்டுக்கிட்டே என் கவிதையை கேட்டு கருத்து சொன்னது, பலான புஸ்தவத்துல  நான் அண்டர்லைன் பண்ணி வச்ச லைன்ஸை படிச்சுட்டு "என்னடா கருமம் ..இது"ன்னு தலையில அடிச்சிக்கிட்டது.

முந்தானை முடிச்சு சினிமாவுல "கண்ணை தொறக்கனும் சாமீ' பாட்டுக்கு அப்பாறம் பாக்யராஜ் ஏன் தலைக்கு குளிக்கிறாருனு சந்தேகம் கேட்டது. நான் அந்த நாள்ளயே மாத்ருபூதம் ரேஞ்சுல விளக்கம் சொன்னதுல்லாம் இன்னம் ஞா இருக்கு.

நம்முது கடகராசியாச்சா (ரெண்டே கால் நாளைக்கொருதரம் மைண்ட் செட்டே மாறிரும்) ஒரு மூட் இருந்தா வீட்டு பின்னாடி இருக்கிற தோட்டத்து மல்லிப்பூ கொடி,நுரை பீர்க்கன்,கனகாம்பரம் இத்யாதி இத்யாதி செடிகளுக்கெல்லாம் ட்ரிம்மிங் பண்ணி , சமையல் பாத்திரம்லாம் கழுவி , சமையல் மேடை,அலமாரி,கேஸ் ஸ்டவ்,சமையலறை எல்லாத்தையும் புரட்டுப்போட்டு ,துடைச்சு ,ஸ்டீல் குடம்லாம் விம் பவுடர் போட்டு கழுவி,துணி போட்டு பள பளக்க  வைப்பேன்.

மூட் இல்லைன்னா " டே முருகா.. முருகம்மா ..வெள்ளை .. வெள்ளையம்மா ! அந்த டம்ளரை எடுத்துக்கொடுத்துட்டு போடி"ன்னா சவுண்ட் பாக்ஸ் ஒயரை பிடுங்கிட்டு போயிட்டே இருப்பேன்.

இதென்ன முருகம்மா?

நான் வயித்துல இருந்தப்ப மொதல் 3ம் கடா குட்டியா போச்சே அட்லீஸ்ட் இதுவாச்சும் பெட்டையா பிறக்காதானு ஒரு ஜொள்ளு,பிறந்துட்டா என்னபண்றதுனு ஒரு பதைப்பு, கலர் கிலர் குறைஞ்சுட்டா நாஸ்தியாச்சேன்னு குங்குமப்பூ, காஷ்மீர் ஆப்பீளனு என்னென்னவோ தகிடுதத்தம்லாம் பண்ணியிருக்காய்ங்க.

அப்பாவோட கால்ஷீட் கிடைக்காம குல தெய்வத்துக்கு முடியிறக்கனு முடிய வளரவிட்டு கொண்டையெல்லாம் போட்டு அழகுப்படுத்தியிருக்காய்ங்க. அதனாலதான் முருகம்மா.

அதுசரி.. அதென்ன வெள்ளையம்மா?

அம்மா சாப்பிட்ட காஷ்மீர் ஆப்பிள், குங்குமப்பூ உபயத்துல அப்படி ஒரு கலர்ல பிறந்துட்டனில்லை. அதான் இந்த டைட்டில்.

அம்மா ஆரம்பத்துல பசி ஷோபா மாதிரி இருந்தாலும் போக போக பண்டரிபாய், புஷ்பலதா மாதிரி அக்மார்க் அம்மா ஃபிசிக்கு வந்துருச்சு.  ஏதாச்சும் ஃபங்க்சனுக்கு கிளம்பறச்ச " தா.. செத்த இரு" ன்னுட்டு அம்மா முன்னாடி முழங்காலிட்டு  புடவை கொசுவத்தை  நீவி விட்ட சந்தர்ப்பங்களை இப்ப நினைச்சாலும்  இயற்கையின் பிரதியா  - இயற்கையின் நிதியா - இயற்கையின் பிரதி நிதியா இருக்கிற பெண்ணின் பால், இயற்கையின் பால் நன்றி உணர்வு பொங்குது.

ஓகே ஓகே.. உணர்வு வழி பகிரல் போதும். சைன்டிஃபிக் அனலைஸ் ப்ளீஸ்னு நீங்க கேட்பிக. அதையும் பார்த்துருவம்.

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை, தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை, சொர்கம் தாயின் காலடியில் - அம்மாவை பத்தி இத்தனை பொன்மொழிகள் உதிக்க காரணம் நாம ஒரு காலத்துல தாய்வழி சமுதாயத்துல வாழ்ந்திருக்கனும். ( அதாவது இன்னைக்கு அப்பாக்கள் பண்ற வேலையையெல்லாம் அம்மாக்கள் செய்திருக்கனும். உ.ம்: வேட்டையாடுதல் - ஐ மீன் பொருளீட்டுதல் .)

எம்.ஜி.ஆர் தாய்க்கு தலைவணங்கு,தாய் சொல்லை தட்டாதேனு புலம்ப காரணம் அவர் வளர்ந்தது கேரளத்துல. அங்கன ஆண்கள் எல்லாம் - அப்பாக்கள் - பொருள் தேட பக்கத்து மானிலம் முதல் வெளி நாடு வரை போறது சாஸ்தி. இதனால குடும்பத்துல மதுரை ஆட்சி கொடிகட்டும் போல.

இன்னைக்கு ஆல் ஓவர் இந்தியாவுல காசு பொறுக்க வெளி நாட்டுக்கு போற ஆண்கள் அதிகமாயிட்டாய்ங்க. இங்கன உள்ள அந்த குடும்பங்கள்ள  மதுரை ஆட்சி கொடி கட்டி பறக்குது. இதனோட விளைவு என்னன்னா ..

தாயின் ஓவர் ஆல் கண்ட்ரோல்ல வளர்ர ஆண் குழந்தைகள் முக்கியமா அப்பங்காரனின் தர்கமற்ற,பொருளற்ற, பொறுப்பற்ற அமெரிக்காதனமான வீட்டோ பவரை பற்றி அறியாது தாயின் "வானளாவிய அதிகாரத்துக்கு" தலைவணங்கி வளரும் ஆண் குழந்தைகளின் பெண் குறித்த பார்வை சற்று மாறுபட வாய்ப்பிருக்குங்கண்ணா..

ஆனால் 43 வருசத்துக்கு முந்தியே அப்பங்காரன் மாவட்டம் மாவட்டமா பந்தாடப்பட  தாயின் ஓவர் ஆல் கண்ட்ரோல்ல   வாழக்கூடிய ஒரு கொடுப்பினை  நமக்கு அமைஞ்சதுங்கண்ணா.. பெண் குறித்த உணர்ச்சி வசப்படாத அறிவுப்பூர்வமான என்  பார்வைக்கு இதுவும் ஒரு காரணம்னு நான் நம்பறேன்.

 உடலளவுலயோ , மன அளவுலயோ  தாயை விட்டு விலகி, அப்பனோட கமாண்ட்ல வாழற ஆண்குழந்தைகளின் மனம் தாயை தெரு முனை பிள்ளையார் மாதிரி ஆக்கிரும்போல. அவளை ஒரு சூப்பர்ஸ்டிஷியஸ் மித் ஆக்கிரும்போல.  இவன் என்னவோ அப்பனை இம்மிட்டேட் பண்ண ஆரம்பிச்சுருவான். தன் மனைவி தன்னோட தாயின் ரோலை ப்ளே பண்ணனும்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுருவான்.

இந்த உணர்வுகள் இதர பெண்கள் விஷயத்தில் வரும்போது  ஜஸ்ட் ஒரு க்யூரியாசிட்டியாக , உறித்து பார்க்கும் மனோபாவமாக மாறும்போல.

என்ன பாஸ்.. பதிவின் இந்த பகுதி  ரெம்ப ..ஹார்டாயிட்டாப்ல இருக்கா.. மனசை லேசாக்கிக்க அம்மாவுக்கு முட்டி வலி இருந்தா ஐயோடெக்ஸ் தேச்சு விடுங்க. பாதத்துல சேத்துப்புண் இருந்தா கடுக்காய் உரசிபோடுங்க.. அட அவிக மனசு குளுர்ராப்ல எதாச்சும் செய்ங்க தலை..

ஒரு வேளை அவிக உசுரோட இல்லையா .. அந்த உறவுல ஆரிருந்தாலும் சரி,அதுவும் இல்லியா அந்த வயசுல ஒரு பெண் போதும் அவிகளை போய் பாருங்க அவிக வழியா உங்க தாய்க்கு நன்றி சொல்லுங்க.

எச்சரிக்கை:
மதர் சென்டிமென்ட் சினிமால்லாம் சூப்பர் ஹிட் ஆக காரணம் என்ன தெரியுமா? நாம அம்மா உசுரா இருக்கிறச்ச அவிகளை அலட்சியப்படுத்திர்ரதான். அவிக போய் சேர்ந்த பிற்பாடு சினிமா அம்மா இடத்துல நம்ம அம்மாவையும், ஹீரோ இடத்துல நம்மையும் கற்பனை பண்ணிக்கிட்டு உதவாக்கரை சினிமாவ எல்லாம் ஹிட் ஆக்கறோம்.