Showing posts with label விளக்கம். Show all posts
Showing posts with label விளக்கம். Show all posts

Friday, August 21, 2015

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி :விளக்கம் (1-25)


அண்ணே வணக்கம்ணே !

எச்சரிக்கை:
இந்த விளக்கம் எனக்கு நானே கொடுத்துக்கிட்டது . இதை ஏற்பவர்கள் ஏற்கலாம்.ஏற்காதவர்கள் தங்கள் விளக்கத்தை கமெண்ட்ல தரலாம் .
நோ ப்ராப்ளம் !

1.அம்பிகாபுர வாசின்யை ஸ்வாஹா
சிவாஜி வசித்த சாலை சிவாஜி கணேசன் சாலையாகிறது , ஒய்.எஸ்.ஆர் வாழ்ந்த  மாவட்டம்  ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் ஆகிறது .அம்பிகை வசிக்குமிடம் அம்பிகாபுரம்.
அம்பரம் = வான். அம்பிகா = வானில் வசிப்பவள்? வான் போல் உயர்ந்த உள்ளங்களில் வசிப்பவள்னும் சொல்லலாமா?  நிலாவை அம்புலின்னு சொல்றம் .அம்பிகாங்கற வார்த்தைக்கு நிலவின் தேவதைன்னு கூகுள் சொல்லுது.
மனித உடலில் சூரிய மண்டலம் சந்திர மண்டலம்னு இருக்கு . இதெல்லாம் பின்னாடி விரிவா வருது அப்ப பார்த்துக்கலாம். இப்ப பாய்ண்டுக்கு வந்துருவம் .அம்பிகை வசிக்குமிடம் அம்பிகாபுரம். அம்பிகாபுரத்தில் வசிப்பவள் அம்பிகாபுர வாசினி .

2.அன்ன பூர்ணேஸ்வர்யை ஸ்வாஹா
கேடு கெட்ட அரசாங்கம், மனிதமற்ற பொருளாதார நிபுணர்கள் கூட உணவுப்பொருள் குறியீடு குறைஞ்சு போச்சுன்னு பதர்ராய்ங்க. உணவுப்பாதுகாப்பு ,இலவச அரிசி .ஏன்னா அன்னம் இல்லின்னா எமன் கன்னம் வச்சு உயிரை ஆட்டைய போட்டுக்கிட்டு போயிருவான்.
காந்தி,சசி பெருமாள் எல்லாம் எத்தனையோ நாள் உண்ணாவிரதம் இருந்தாய்ங்களேம்பிங்க. அந்த சக்திய கொடுத்தது மனோசக்தி. (சக்தி அண்டர்லைன்)
பூரணம் =முழுமை ,அன்ன பூரணம் பூரணமான அன்னம் .அதாங்க முழுமையான சத்துணவுங்கறாய்ங்களே.. அதுக்கு ஈஸ்வரி  ஆத்தா.
ஈஸ்வரன்னா பாஸ். ஈஸ்வரின்னா லேடி பாஸ். காசிருக்கேன்னு  365 நாளும் - 3 வேளையும்  அரிசி சோறு  சாப்டு ஷூகரு,பீசா பர்கரு சாப்டு  நெஞ்சுல எரிச்சல்,பைல்ஸ் வாங்கறதுல்ல. திட்டமிட்ட சரிவிகித சம உணவு . இதுக்கு பேருதான் முழுமையான உணவு . இந்த முழுமையான  உணவுக்கு  தலைவி ஆத்தா.

3.அகிலாண்டேஸ்வரி
அண்டம்னா உலகம், அகிலாண்டம் சகல உலகங்கள். சகல உலகங்களுக்கும் பாஸ்.

4.அம்ருத்தாயை
அம்ருதம் =அமுதம் , சாகாவரம் கொடுக்கிற லிக்விட்.  டீ சாப்பிடறவனோட நட்பு கிடைச்சா டீ கிடைக்கும். சரக்கு பார்ட்டியோட சேர்ந்தா சரக்கு கிடைக்கும்.ஆத்தா கூட டீல் வச்சுக்கிட்டா அமுதம் கிடைக்கும் பாஸ்.
அதுக்காவ 120 பூர்ணாயுசு  இருப்பம், சாவே வராதுன்னெல்லாம் கனவு காணாதிங்க. நொடிக்கு நொடி செத்து பிழைக்கிறோமே அந்த “பாவத்து” இருக்காது.  நம்ம பிறப்புக்கு முன்னே -இறப்புக்கு பின்னே எந்த டைமன்ஷன்ல இருந்தமோ -இருக்கப்போறமோ அந்த டைமன்ஷனை ஒரு தாட்டி அனுபவிச்சுடா சாவாவது இன்னொன்னாவது?

ஆக ஆத்தாள “கவர் பண்ணி “வச்சுக்கிட்டா உங்க எண்ணத்துல அமுதம் இருக்கும், எண்ணமெல்லாம் செயலாகும். உங்க  பேச்சுல அமுதம் இருக்கும், உங்க பேச்சு கவர்ன்மென்ட் ஜீ.ஓ வை விட பக்காவா அமலாகும். பிணத்துக்கு உயிரூட்டும்னு பீலா விட மாட்டேன்.ஆனால் செத்தவன் போல இருந்தவன் கூட துள்ளி எழுவான். வாக்கு பலிதம் உண்டாகும்.

5.ஆர்த்த ஜன ரக்ஷின்யை
ஆர்த்த = உதவி நாடி வந்த சனங்களை சேஃப் பண்றவ. அன்னார்த்துலு = சோத்துக்கு இல்லாதவுக

6.ஆத்யந்த சிவ ரூபாயை
ஆதி =ஆரம்பம், அந்தம் =முடிவு ,டாப் டு பாட்டம் சிவ ரூபமாக இருக்கிறவள். சிவம்னா ஒரு கேரக்டர் மட்டுமில்லிங்ணா. சிவம்னா மங்களம்/சுபம்/பாசிட்டிவ் இப்படி பல அருத்தம் இருக்கு. ஆத்தாவுல நெகட்டிவ்னு எதுனா இருக்குமா? டாப் டு பாட்டம் பாசிட்டிவ் எனர்ஜிதான்.
புருசன் பொஞ்சாதிகளை கவனிச்சு பாருங்க. கண்ணாலமான 6 மாசத்துலயே புருசன் கேரக்டர் பொஞ்சாதிக்கும் -பொஞ்சாதி கேரக்டர் புருசனுக்கும் லேசா ட்ரான்ஸ்ஃபர் ஆக ஆரம்பிச்சிருக்கும்.
அய்யனும் ஆத்தாளும் ஆதி தம்பதிகளாச்சே. அதான் சிவ ரூபமா இருக்கா ஆத்தா.

7.அஷ்டைஸ்வர்ய ப்ரதாயின்யை
ப்ரதாயினின்னா தருபவளேன்னு அருத்தம். எதை தருபவள்? அஷ்ட ஐஸ்வர்யங்களை தருபவள். அஷ்ட லட்சுமின்னு ஒரு கான்செப்ட் இருக்கில்லை. வித்யா லட்சுமி,தன லட்சுமி,வீர லட்சுமி,சந்தான லட்சுமி எட்செட்ரா..( ஷோடச லட்சுமின்னு ஒரு கான்செப்ட் கூட இருக்குப்போ – 16 லட்சுமியாம் -16 ம் பெற்று பெரு வாழ்வு வாழசொல்றாய்ங்களே அதுதான் போல)

லட்சுமியை படைச்சதே ஆத்தா தானே. நிலக்கரித்துறைக்கு அமைச்சரை போட்ட மன்மோகனார் நினைச்சா கோல் ப்ளாக் டைரக்டா அலாட் பண்ணலாம் தானே.

8.அபய வரத ஹஸ்தின்யை
அபயம்னா என்ன பயத்துக்கு எதிர்பதம். பயமில்லா நிலை. பயத்துல உள்ளவனுக்கு அபயம் கொடுத்தா பயமற்ற நிலை ஏற்படும். இப்படி அபயம் கொடுக்கிற கைக்காரி ஆத்தா.
வரதம்னா வரம் கொடுக்கிறன்னு அருத்தம்.

9.அனாமிகா
பெயரற்றவள். கொய்யா.. இந்த சத நாமாவளியிலயே 100 பேர் இருக்கு. இன்னம் சஹஸ்ர  நாமம்னா ஆயிரம் பேரு. ஆனால் அனாமிகான்னு ஒரு நாமம்.  மனித மூளை தர்கத்தின் அடிப்படையில இயங்கும். ஆனால் ஆன்மீகத்துல தர்கத்துக்கு "தாவே" கிடையாதுங்கோ.

10.அங்காள பரமேஸ்வர்யை
அம்=குளிர்ந்த ,காள (மேகம்?) மழைதரும் கரிய மேகங்களுக்கு தலைவி?

11.அனந்தமயீ
அந்தம் =முடிவு ,அனந்தம்= முடிவற்றவள்

12.ஆத்யந்த ரஹிதாயை
ஆரம்பமும் -முடிவும் அற்றவள்.

13.அருணாயை
அருணன் =சூரியன் இதுக்கு இன்னொரு அர்த்தமும் கொடுக்கலாம்.ருணம் =கடன் ,அருணா =எவனுக்கும் ஆத்தா பாக்கி கிடையாதுங்கோ.
நாமெல்லாம் ஆருக்கோ கடன் பட்டுத்தான் – அந்த கடனை தீர்க்கத்தான் பிறந்து வரோம்.  ஆனால் கடனை கூட்டிக்கிட்டே போறோம்.ஆனால் ஆத்தாவுக்கு கடனே கிடையாது. போனா போறதுன்னு பிச்சை போடறா தட்ஸால். ஆத்துக்காரருக்கே பிச்சை போட்ட கிராக்கியாச்சே.

14.பால பீட அதிரோஹின்யை
தச வித்யானு ஒரு சப்ஜெக்ட் இருக்கு.காளி , தாரா ,பகளாமுகி ,கமலாத்மிகா ,சின்னமஸ்தா, தூமாவதி, திரிபுரா, பைரவி ,சுந்தரி ,புவனேஸ்வரினுட்டு  பத்து ரூபங்கள்ள ஆத்தாளை வழிபடறது தான் கான்செப்ட்.
இதுல ஒரு  பெண் குழந்தையை அம்மனா பாவிச்சு வணங்கறதும் ஒரு மெத்தட். ( இந்த டாப்பிக் பத்தி பாலகுமாரன் ரெம்ப டீட்டெய்ல்டா ஒரு நாவல் எழுதியிருக்காரு படிச்சிருக்கிங்களா?) அந்த பெண் குழந்தையை உட்கார வைக்கிற மனைக்கு பெயர் பால பீடம். அதிரோஹணம்னா ஏறுவது. பால பீடத்தின் மீது ஏறுபவளேனு அருத்தம்.

15.பஹளா முக்கே
Net ல ப்ரவுஸ் பண்ணா வேற தகவல் கிடைக்கும். ஆனால் நமக்கு மாயா பீஜத்தை உபதேசம் பண்ண பார்ட்டி ,ஆத்தாவோட இந்த வடிவம் பேங்க்ல டெல்லர் மாதிரி. நாம எந்த சாமியை கும்பிட்டாலும் அதுக்கான பலனை தர்ரது இந்த உருவத்துலதான்னு சொன்னாரு.
பஹளா =பல ,முக்கே =முகங்கள். பல முகங்களை உடையவளே

16.பில்வ வன ப்ரியே
ஆத்தாவோட ஆத்துக்காரரு சிவனார். சிவனாருக்கு ரெம்ப பிடிச்சது வில்வம். மேலும் அர்த்த நாரீஸ்வர தத்துவம் தெரியுமில்லையா? திருவிளையாடல்ல சிவன் தன் பாடியிலயே இடபாகத்தை அலாட் பண்ணி மகளிர் ஒதுக்கீட்டுக்கு பிள்ளையார் சுழி போடறாரே ஞா வல்ல?
இதனால வில்வ மரங்கள் அடர்ந்த வனத்தை விரும்புபவள்னு அருத்தம்.

17.புவனேஸ்வர்யை
புவனம் =உலகம் ஈஸ்வரி =தலைவி

18.பிந்து ஸ்வரூபின்யை
ஆழ்ந்த தியானத்துல ஒரு ஒளி புள்ளி தெரியும் இதை பிந்துன்னு சொல்வாய்ங்க. அந்த பிந்து ஸ்வரூபமானவளே

19.சண்டிகாயை
சண்டன் ங்கற ராட்சனை போட்டு தள்ளியவளே.  நம்ம வீட்ல தாய்க்குலம் குழந்தைகளை "சண்டித்தனம் பண்ணாதே"ம்பாய்ங்களே ஞா வருதா?  ஆத்தாவுக்கு சண்டித்தனம் உண்டு.  ஆத்தா மேட்டர்ல எதுனா கமிட் ஆகி அதை டீல்ல விட்டாச்சுன்னா அது ஞா வர்ர வரை லைனுக்கே வராம சண்டித்தனம் பண்ணுவோ.

20.சாமுண்டேஸ்வர்யை
சாமுண்டன் ங்கற ராட்சனை போட்டு தள்ளியவளே

21.சந்திர மண்டல வாசின்யை
பால்வெளியில உள்ள சந்திரமண்டலத்துல இருப்பவளேன்னா அது ரெம்ப அற்பமா இருக்கும். ஹ்யூமன் பாடியில ஆண்களை பொருத்தவரை வலது பாகம் சூரிய மண்டலம், இடது பாகம் சந்திர மண்டலம். பெண்கள் விஷயத்துல இதுல உல்ட்டா.
ஆக ஒவ்வொரு பாடியில ஒரு பார்ட் ஆஃப் தி பாடியை கேப்சர் பண்ணி வச்சிருக்கிறவன்னு சொல்லலாம்.
ஆண்கள் தம் இடது  நாசியில் சுவாசம் நடக்கும் போது ஆத்தாவ தியானிக்கலாம். சுவாசத்தை அடுத்த பகத்துக்கு மாத்தற டெக்னிக் தெரிஞ்சவுகளுக்கு  பிரச்சினையே இல்லை.தூள் பண்ணுங்க.

22.சதுர் சஷ்டி கலாத்மிகா
சதுர் =4 , சஷ்டி =ஆறு நாலாறு 24 ஆ? 4+6 =10 ஆ? பண்டிதர்கள் ஆராவது க்ளாரிஃபை பண்ண கடவர்.. ஆக 24 /10 கலைகளின் ஆத்மாவாக இருப்பவளே

23.துர்காயை
துர்கா =கோட்டை , கோட்டைக்குள்ள எப்படி சேஃபா இருப்பமோ அப்படி ஆத்தா கஸ்டடிக்கு போய்ட்டா ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டில்லாம் தேவையே இல்லிங்ணா. பாதுகாப்பை தரும் கோட்டையே

24.தர்ம ரூப்பிண்யை
தர்மத்தின் வடிவானவள். தர்மம்னா நாலணா எட்டணா பிச்சை போடறது தர்மமில்லை. இந்து தர்மம்,புத்த தர்மம்னு வாய்ங்க அதெல்லாம் டுபுக்கு.கீதையில கிருஷ்ணர் சொல்றார் பாருங்க ஸ்வதர்மம்,பரதர்மம்னு அதை கூட என் மதம்,பிற மதம்னு அர்த்தப்படுத்திக்க கூடாது.
தர்மம்னா இயல்புன்னு அருத்தம். பள்ளத்தை நோக்கி பாய்வது ஜல தர்மம் . தலை கீழாய் பிடித்தாலும் மேல் நோக்கியே எரிவது நெருப்பின் தர்மம்.
ஆக உங்கள் இயல்பு எதுவோ அதுவாக இருப்பவளும் ஆத்தா தான்.

25.தேவ்யை
தேவனுக்கு பெண் பால் தேவி.

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி ( விளக்கம்) : 1

அண்ணே வணக்கம்ணே !
எந்த வித அப்டேட்ஸும் இல்லாம தினசரி 400+ ஹிட்ஸ் கொடுக்கிற ப்ளாக் இது . ஆகவே தான் இந்த  தொடரை அனுபவஜோதிடம் சைட்ல போடாம இங்கே போடறேன்.

ஆக்சுவலா இது மின் நூலா வெளி வரப்போகுது. அதுக்கு மிந்தி 6  பதிவுகளா இதை இங்கே தர்ரன்.

மொதல்ல இதுக்கு நண்பர் திரு.சொக்கலிங்கம் ராம நாதன் தந்திருக்கிற முன்னுரைய பார்த்துரலாம்.

அடுத்த பதிவுல நம்ம முன்னுரை .கடைசி 4 பதிவுகள்ள தலா 25 நாமாக்களுக்கான விளக்கம் வரும்.ஓகேவா.

இந்து சமயத்தில் இறைவனைத் தந்தையாக, தலைவனாக, தோழனாக,  தனயனாக என்று பல வழிகளில் அடியார்கள் அன்பு பாராட்டினாலும் இவற்றில் தலைசிறந்ததும், அந்நியோன்மானதுமான அன்பு முறை தாய்-பிள்ளையாகும். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு சக்தி வழிபாடாகும்.
பிள்ளையானவன் நன்றே செய்கினும், தீதே செய்திடினும் மாறாத தாய் அன்புக்கு; ஒப்பானது தெய்வத்தின் அன்பு, கூடவே தாயின் தன்மையுடைய  தெய்வத்தை வழிபடுவது யாருக்கும் எளிதாகிறது.

சக்தி என்பது என்ன? சக்திக்கும் சிவத்துக்கும் இடையே என்ன தொடர்பு? இதனை விளக்குவதே இந்து மதம். சிவம் என்பது மெய்ப்பொருள். பிரியாது இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு சக்தி என்று பெயர்.
சிவத்தினின்று சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம் யாவும் சிவசக்தி மயமானது. சக்தி பல்வேறு தொழில்களைப் புரியவும் பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்வேறு வடிவங்களை எடுக்கிறாள்.முத்தொழில்களை செய்யும் போது பிரம்மாணி, வைஷ்ணவி, உருத்ராணி என்று  பெயர் பெறுகிறாள். சிவத்திற்கு ஒப்பிடும்போது துர்க்கை என்றும், தீமையை அழிக்கும் போது காளியுமாகிறாள். வித்தை- கல்வியின் வடிவெடுக்கும் போது சரஸ்வதி என்றும், தனதானிய-செல்வம் என்று வடிவெடுக்கும் போது இலக்குமியாகவும் பெயர் பெறுகிறாள்.

பக்தி  வழிபாட்டு முறையில்  " சதநாமாவளி " ...பெயரை சொல்லி வேண்டி / வழிபடும் முறை முக்கியமானது .நாமாவளியில் வரும் 100 நாமங்களும் சாட்சாத் வழிபடும் தெய்வத்தை  குறிப்பது .

மனிதர்களின் பெயர்களே மட்டுமே ஒருவரை பிரதிநிதித்துவ படுத்துகின்றன .  திருவள்ளுவர் குறித்த செவி வழிக்கதைகள் முதல் அவர் எழுதிய 1330 குறள்கள் வரை அவர் பெயர் ஒன்றே  பிரதி நிதித்துவ படுத்துகிறது .
சிம்பிள் ஆக சொல்லணும்னா ...ரோட்டில் போறோம்  / ஒரே கூட்டம் ..எவனோ .. டேய்  தம்பி ன்னா..!!!  யாரையோ  கூப் பிடுறாங்கன்னு  நாம் பாட்டுக்கு  போய்டுவோம்  / டேய்  சொக்கா ன்னு கூப்பிட்டா ..( நம்ம பேருங்க) யாரடா அது நம்மை  பேரு சொல்லி கூப் பிடுறாங்கன்னு டக்குன்னு   திரும்பி பார்ப்போம் .30 - 40 வருடம் பழக்க பட்ட நம் பெயருக்கே  இந்த பவர் என்றால்  அனாதியா -அதாவது ஆரம்பம்னு ஒன்னே இல்லாத -எப்பவுமே இருக்கிற   " அன்னையின்" நாமங்ககளுக்கு என்ன  பவர்  இருக்கும்ன்னு  எண்ணி பாருங்கள் ..

சில விசயங்களை  அனுபவித்தால் தான் அதன் அருமை தெரியும் . வாழ்வியல் / ஆன்மீக நியதிகளை   அனுபவ/ அறிவியல்  பூர்வமாக சிந்திப்பவர் அண்ணன்  சித்தூர் S .முருகேசன். அவர் வாழ்வில்  " ஆத்தா "   நிகழ்த்திய லீலைகளை  பல கட்டுரைகளாக  " அவன் .அவள்.அது " என்ற  தலைப்பில் தான் வலைப்பூவில்  பதிவிட்டுள்ளார் . இன்றைய கார்ப்பரேட்  கலியுகத்தில்  ஆன்மிகம்  வியாபார பொருள் ஆகி விட்டது . காசு இல்லை  என்றால் கடவுளை கூட பற்றி தெரிந்துகொள்ளமுடியாத  ஒரு கையறு நிலை இன்னைக்கு இருக்கு.

 ஆனால் தான் கண்ட  / அனுபவித்த " ஆத்தாவின் " லீலைகளை  அவள் பாதம் பற்றி அனைவரும்  நன்மை அடைய வேண்டும் என்ற நோக்கில் தனது கட்டுரைகளில் அவர் பதிவிட்டுள்ளார் . அந்த வரிசையில்  தனது பக்தி மார்க்கத்தில் "ஆத்தா " வை  தினமும் அவளது நாமங்களின் மூலம் தொழுவதற்கு அவர் தொகுத்த ஒரு தொகுப்பு " ஸ்ரீஅம்மன் சதநாமாவளி ".   இந்த வழிபாடு அவர் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை தான் " அவன் அவள்  அது"  வரிசை வலைபதிவுகளில் குறிப்பிட்டு உள்ளார் .

எந்த  ஒரு  விசயத்திலும் யதார்த்த / அனுபவ  ரீதியான  அணுகுமுறை கருத்துக்கள் , இவரது எழுத்துக்கள் மீதான ஆர்வத்தை  எனக்கு ஏற்படுத்தின .
" அவன் , அவள் , அது "  இந்த தலைப்பை முதலில் அவர் வலைபதிவில் பார்த்தபோது  எதோ கில்மா  மேட்டர் போல  தோணிச்சு .  அந்த விசயத்துக்கு  நானும் விதி விலக்கல்ல ... நாக்க தொங்க போட்டுகொண்டு படித்தேன்

....என்னுள் உள்ள / உலகத்தின்   " சக்தியை " உணர்ந்தேன் .
சின்ன வயசில் விளையாடுவது கூட  " சாமி" வைச்சு தான் . ஒரு சூட டப்பா பிள்ளையார் . கோவிலில் கூட அப்படி அபிசேகம் பண்ணி இருக்க மாட்டாங்க... அந்த பிள்ளையாருக்கு  அப்படி பண்ணி .... கொஞ்சம்  வாலிப  வயதில்  வீட்டுக்கு  எதிரில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரிக்கு வெள்ளி / செவ்வாயில்  நேரம் கிடைக்கையில்  எடுபிடி வேலை .... மனசுக்கு  கஷ்டம்னா  அருகில் உள்ள முகாம்பிகை கோவிலில் அம்மன் கிட்ட" எல்லாத்தையும் "மனசால்  சொல்லி வேண்டுவது ..   இப்படி தொடரும்  என் ஆன்மீக பயணத்தில்  " அம்மன் சதநாமாவளி"  ஏற்படுத்திய வாழ்வியல் தெளிவுகள்  இத்தொகுப்பு  உருவாக காரணமாக அமைந்தது .

" வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே"  -

என்று  அபிராமி அந்தாதியில் வரும் . எந்த  ஒரு நிகழ்விற்கும்  "அவள்" அருளே காரணம்.

படிக்கிறப்ப  வாத்தியார்களும் சரி / வீட்டிலும்  சரி  வெறுமனே  மனப்பாடம் பண்ணாம  புரிஞ்சு படி ... படி... ன்னு சொல்லுவாங்க .அது இந்த நாமாவளிகளுக்கும் பொருந்தும் .  நாமாவளிகளை இயந்திரத்தனமா சொல்லிக்கிட்டிருக்கிறதால ஒரு புண்ணியமும் கிடையாது.பொருள் தெரிஞ்சு சொல்லுறப்ப  அது பற்றிய சிந்தனை எழும்  / சிந்தனையின் தொடர்ச்சி  அருள் நிலை அடைய செய்யும் .

அந்த  வகையில்  திரு .சித்தூர் முருகேசன்  தான்  தொகுத்த அன்னையின் நாமவளிக்கு  உரிய பொருள் விளக்கங்களை  அனுபவ ரீதியில்  எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் தன் வலைப்பூவில்  அளித்துள்ளார். அந்த வலைபதிவுகளின்  தொகுப்பே  இந்த  மின் நூல்.

பிறப்பு முதல்  / இறைநிலை வரை  அனைத்தையும் ஆட்கொண்டவள்  " சக்தி ". அம்மாவாக , அக்காவாக ,பாட்டியாக ,அக்காவாக ,தங்கையாக ,காதலியாக ,மனைவியாக நம் வாழ்வின்  ஓவ்வொரு பெண்ணின்  அம்சமும் " அவளே ".
சக்தியில்லைன்னா  சிவம்  இல்லைன்னு சொல்லுவாங்க ...எந்த ஒரு  நிலைக்கும்  " அவள் " அருள் அவசியம். அவள் அருளால்  அவள் அருள் வேண்டியே  இந்த மின்னூல் பகிர்வு.

" பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் " ன்னு சொல்லுவாங்க  ...நல்ல விசயங்களை  நாம மட்டும் அனுபவிச்சா போதுமா ...நான் மட்டும்  "ஆத்தாவின் " பிள்ளையில்லை ...நீங்களும் தானே ...அதனால்  தான் இந்த பகிர்தல் .

இந்த நூலை தொகுத்து வழங்க வாய்ப்பு அளித்த அண்ணன் .திரு .முருகேசன் அவர்களுக்கு நன்றி.

" அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே"

--- அம்மாவை  வணங்கி  அவள் அருள் பெறுவோம் .

அன்புடன்
சொக்கலிங்கம் இராமநாதன்

Monday, April 5, 2010

ஜோதிடம் மீதான விமரிசனங்கள்

காதல் தூயது. காதலர்கள் சுய நல மாசு கொண்டவர்களாயிருக்கலாம். நட்பு புனிதமானது சில நண்பர்கள் துரோகிகளாய் மாறலாம். அதே மாதிரி ஜோதிஷ்யம் புனிதமானது. சில ஜோதிடர்கள் டுபாகூர் பார்ட்டிகளாய் இருக்கலாம். ( நான் உட்பட)
ஜோதிஷ ஆர்வலர்கள் (ஜோசியம் பார்த்துக்கறவுக)  டுபாகூராய்  இருக்கலாம். ( உம். சரவணபவன் அண்ணாச்சி போன்றவர்கள்)

ஆனால் ஜோதிடம் டுபாகூர் இல்லே. மனித உடல்,மனசு மேல சூரிய ,சந்திரர்களோட எஃபெக்ட் என்னனு ஓரளவு தெரிஞ்சிருக்கும். நம்ம பங்குக்கு நாமளு ஒரு பாயிண்டை சொல்லிவைப்பம்.

இப்போ அனல் மின்சாரம், புனல் மின்சாரம், அது இதுனு நிறைய மின்சாரம் இருக்கு. சனம் பெருத்து போய் ,திருட்டு பயம் காரணமா போதிய வெளிச்சம்,காத்து வராம தீப்பெட்டி சைஸ்ல வீடுகளை கட்டிப்போட்டதாலா பவர் கட்டும் இருக்கு அது வேற விஷயம்.

சப்போஸ் வெறும் சோலார் பவர் மட்டும்தான் இருக்குதுனு வைங்க.பேட்டரில சேவ் ஆகியிருந்த பவர்   ராத்திரிக்கே காலியாயி  நில் பவராயிருச்சுனு வைங்க.டைரக்டா சூரியன்லருந்து ஜெனரேட் ஆகற பவர் மூலமாவே உலகம் ஓடிக்கிட்டிருக்குனு வைங்க. திடீர்னு சூரியன அணைஞ்சி போயிட்டாருனு வைங்க என்னாகும் ?

இதுவாச்சும் மனித உடலுக்கு வெளிய  இருக்கிற மின் உபகரணங்கள், உயிர்காக்கும் மருந்துகளை காப்பாத்தற ஃப்ரிட்ஜ் இத்யாதிய தான் பாதிக்கும். இந்த மனித உடல் எதை தின்னு வாழுது? தாவரங்கள் சூரிய ஒளியிலருந்து  தயாரிக்கிற ஸ்டார்ச்சை சாப்பிட்டு வாழுது. ஒருவாரம் சூரியனே உதிக்கலன்னா என்னாகும்? சூரியனுக்கும் மனித உடலுக்கும் இருக்கிற லிங்க் இது. இதை மறுக்க முடியுமா?

இப்போ  இதர கிரகங்களோட எஃபெக்ட் என்னனு  இப்ப பார்ப்போம்.

விந்துவுக்கு தெலுங்குல சுக்கிர கணாலு என்று பெயர். தெலுங்குக்கு தாய் வீடு சமஸ்கிருதம். அதுல விந்துவை என்ன சொல்றாங்கனு நமக்கு தெரியாது.  சிற்றின்பம், விந்து உற்பத்திக்கு சுக்கிரனே காரகன். இந்த லிங்க் எப்படி வந்தது?

ஏன் சூரிய கணாலுனு சொல்லலாமே, சந்திர கணாலுனு சொல்லலாமே சரிங்கப்பா இது வெறும் பெயர் விவகாரம்.

அந்த காலத்துல குஷ்ட ரோகத்தை க்யூர் பண்ண பச்சைக்கல்ல பஸ்மமாக்கி கொடுப்பாய்ங்களாம். பச்சைக்கல் புதனுக்குரியது. புதன் தான் தோல் வியாதிக்கெல்லாம் அதிபதி.

உலகத்துல நடந்த வெட்டு,குத்துக்கெல்லாம் காரணம் நிலப்பகுதிகளை பிடிக்கறதும்,காப்பாத்திக்கறதும்தான் இதெல்லாத்துக்குமே யுத்தகாரகனான செவ்வாய் தான் காரகத்வம் வகிக்கிறார்.

இப்படி நிறையவே சொல்லலாம். ஜோதிஷ ஆர்வலர்கள் இன்னும் நிறைய பேரு பைசா கொடுத்து பலன் தெரிஞ்சிக்கிட்டு இன்னும்  கொஞ்சமா  வசதியாயிட்டா இன்னும் நிறைய ரிசர்ச் பண்ணலாம் .  எழுதலாம்.

ஜோதிஷம் கேட்பதே தொழிலா?
யாராச்சும் ஜோதிஷம் சொல்றத தொழிலா வச்சிருந்தா அதை புரிஞ்சிக்கலாம். (என்னைக்கேட்டா கண்டதையும் ஸ்பான்சர் பண்ற கம்பெனிக என்னை மாதிரி ஆளை ஸ்பான்ஸர் பண்ணிட்டா காசு வாங்காமயே ஜோதிட ஆலோசனைவழங்கலாம். அப்பத்தான் இன்னும் சுதந்திரமா,முலாஜா இல்லாம வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா பலன் சொல்லமுடியும்.) ஜோதிஷம் பார்த்துக்கறதையே தொழிலா செய்றவங்களை என்ன செய்ய? இப்படியும் இருக்கு சனம்.

நான் என் முதல் ஜோதிடனை சந்தித்தது 1989, ஜனவரி.  ஜோதினாக அவதரித்தது 1990 மார்ச். அதாவது 15 மாதங்களில் ஜோதிடனாக மாறிவிட்டேன். இடைப்பட்ட காலத்தில் (இன்று வரை)  நான்  சந்தித்த ஜோதிடர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.ஆனால் மக்களில் நிறைய பேர் ஜோதிஷம் கேட்பதையே தொழிலாக கொண்டுள்ளனர்.

என்னிடம் இது போல் தொடர்ந்து வந்தால் கடுப்புல இருந்தா ஒரு நோயாளி தொடர்ந்து டாக்டரை பார்க்க வந்தா டாக்டருக்கு அவமானம்னு  முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிடுவேன். ஒன்பத் இடமும் குளிர்ந்திருந்தா இங்கே சனிபிடிச்சவங்க தான் வருவாங்க. நீங்க வராதிங்க. இப்படி வரது நல்லதில்லேனு கழட்டி விடுவேன்.

டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். ஜோசியங்கறது வருசத்துக்கு ஒரு தரமோ, தசை,புக்தி மாறும்போதோ இல்லே கோசாரத்துல சனி,குரு,ராகு ,கேது யார்னா மாறும் போதோ ,புதுசா எதுனா துவங்கும்போதோ மட்டும்தான் பார்க்கனும்.

குழந்தைங்க விஷயத்துல அதுக  பிறந்ததும்  என்ன மாதிரி நோய்கள் வரும், சுத்தப்பட்டவுகளுக்கு எதுனா சிக்கலிருக்கா இந்த மாதிரி தான் கேட்டு தெரிஞ்சுக்கனும். பத்தாம் கிளாஸ் முடிக்கிற வரை ஜாதகம் பார்க்கனுங்கற அவசியமே கிடையாது. பெரிசா ஏதும் பிரச்சினை தலைகாட்டற வரை (உ.ம் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்துர்ரது)

பத்தாம் கிளாஸ் முடிச்ச பிறகு இல்லே குண்டு போட்ட பிறகு ஜாதகத்தை கொண்டு வந்து காட்டி இன்டர்ல எந்த சப்ஜெக்ட் எடுக்கலாம். அகடமிக்கா, டெக்னிக்கலானு கேட்கலாம். இன்டர் முடிஞ்சி ஸ்பெஷலைசேஷன் பண்றப்பயும் கேட்கலாம். படிப்பு முடிஞ்ச பிறகு  வேலையா,தொழிலாங்கறத  பத்தி கேட்கலாம்.

அதை விட்டுட்டு மாசாமாசம்,வாராவாரம் வர்ரதும் கேட்கிறதும் கிரிமினல் வேஸ்ட். என்ன இருந்தாலும் ஜோஸ்யங்கறது தனிப்பட்ட வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கற ஃபீலிங் எல்லாருக்குமே இருக்கு.

ஆனால் கொஞ்சம் மாத்தி யோசிச்சா கொஞ்சம் மெனக்கெட்டு ஜோசியத்தை அப்ளை பண்ணா எத்தனையோ அசம்பாவிதங்களை தடுக்கலாம்.

உ.ம்
இப்போ ஸ்கூல் வேனெல்லாம் படக்கு படக்குனு கவுந்து போவுது.பிள்ளைங்க பொட்டு பொட்டுனு செத்து போவுது. கொஞ்சமா மெனக்கெட்டு கானென்ட்ல படிக்கிற பிள்ளைங்களோட பிறப்பு விவரங்களை சேகரிச்சு சனி,செவ்வாய் சேர்க்கை பார்வை ( 3,6,10,11 தவிர) இருக்கிற ஜாதகங்களை பிரிச்சு அவிகளை இன்னும் கொஞ்சம் கேர்ஃபுல்லா பார்த்துக்கலாம். அப்படியே கோசாரத்துல யார் யாருக்கு செவ்வாய் 8,12 மாதிரி இடத்துல இருக்காருனு பார்த்து கேர் எடுத்துக்கலாம். முக்கியமா ட்ரைவர்கள் விஷயத்துல கேர் எடுக்கலாம்.

அரசு போக்குவரத்துக்கழக ட்ரைவர்கள் விஷயத்தில் கேர் எடுத்தால் எத்தனையோ ஆயிரம் உயிர்களை காப்பாற்றலாம்.